10th Std Social Science Solution in Tamil | Lesson.11 India – Location, Relief and Drainage

பாடம் 11. இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

10th Standard Social Science Solution - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
பாடம் 11. >
இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

  1. 2500 கி.மீ
  2. 2933 கி.மீ
  3. 3214 கி.மீ
  4. 2814 கி.மீ

விடை ; 3214 கி.மீ

2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

  1. நர்மதா
  2. கோதாவரி
  3. கோசி
  4. தாமோதரர்

விடை ; கோசி

3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது.

  1. கடற்கரை
  2. தீபகற்பம்
  3. தீவு
  4. நீர்ச்சந்தி

விடை ; தீபகற்பம்

4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா __________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

  1. கோவா
  2. மேற்கு வங்காளம்
  3. இலங்கை
  4. மாலத்தீவு

விடை ; இலங்கை

5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ___________

  1. ஊட்டி
  2. ஆனைமுடி
  3. கொடைக்கானல்
  4. ஜின்டா கடா

விடை ; ஆனைமுடி

6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___________.

  1. பாபர்
  2. தராய்
  3. பாங்கர்
  4. காதர்

விடை ; பாங்கர்

7. பழவேற்காடு ஏரி ___________________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

  1. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
  2. கர்நாடகா மற்றும் கேரளா
  3. ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
  4. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்

விடை ; தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்

II. பொருத்துக

  1. சாங்போ – கங்கை ஆற்றின் துணை ஆறு
  2. யமுனை – இந்தியாவின் உயர்ந்த சிகரம்
  3. புதிய வண்டல் படிவுகள் – பிரம்மபுத்ரா
  4. காட்வின் ஆஸ்டின் (K2) – தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
  5. சோழ மண்டலக்கடற்கரை – காதர்

விடை: 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

III காரணம் கூறுக

1. இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.

இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு மடிப்புமலை உருவாகின. எனவே இமயமலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன.

2. வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்

கோடைகாலத்தில் பனி உருகி நீராகவும் குளிர் காலத்தில் மழையினா நீராகவும் இருப்பதால் வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள் ஆகும்.

3. தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப் பாயும் நதிகள்

  • தென்னிந்திய நதிகள் பெரும்பாலனவை மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தோன்றியவை
  • மேற்கு பக்கத்தின் உயரம் கிழக்குப் பக்கத்தை விட அதிகமாக உள்ளது.
  • எனவே தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கி பாயும் நதிகளாகும்.

4 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை

  • மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் பீடபூமி பகுதியிலிருந்து தோனறி கடலை நோக்கி பாய்கின்றன.
  • மேற்கு கரையோர சமவெளிக்கு அருகில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக அவை செல்கின்றன.
  • எனவே மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை

IV. வேறுபடுத்துக

1. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்

இமயமலை ஆறுகள்

  • இமயமலையில் உற்பத்தியாகின்றன
  • நீளமானவை மற்றும் அகலமானவை
  • வற்றாத நதிகள்
  • மின் உற்பத்தி செய்ய முடியாது
  • ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப் பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது

தீபகற்ப இந்திய ஆறுகள்

  • மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன
  • குறுகலானவை மற்றும் நீளம் குறைந்தவை
  • வற்றும் நதிகள்
  • மின் உற்பத்தி செய்ய முடியும்
  • நீர்வழி போக்குவரத்திற்கு ஏற்றதல்ல

2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

  • இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது.
  • மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
  • தொடர்ச்சியான மலைகள்
  • இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு தொடர்ச்சி மலைகள்

  • கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
  • கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
  • தொடர்ச்சியற்ற மலைகள்
  •  இம்மலைத்தொடர் பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது.

3. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி

மேற்கு கடற்கரைச் சமவெளி

  • மேற்கு கடற்கரைச் சமவெளி மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ளது.
  • இது வடக்கில் உள்ள ரானா ஆப் கட்ச் முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது.
  • மேற்கு கடற்கரையின் வடபகுதி கொங்கணக் கடற்கரை எனவும். மத்திய பகுதி கனரா கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
  • இதன் தென்பகுதி மலபார் கடற்கரை என அழைக்கப்படுகிறது.
  • பல காயல்கள், உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ்
    போன்றவை இக்கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன.
  • வேம்பநாடு ஏரி இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாகும்.

கிழக்கு கடற்கரைச் சமவெளி

  • கிழக்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே அமைந்துள்ளது.
  • மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
  • இதன் வடபகுதியான மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், தென் பகுதியான கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழமண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
  • சிலிகா ஏரி, கொல்லேறு ஏரி, பழவேற்காடு (புலிகாட்) ஏரி ஆகியன இச்சமவெளியில் முக்கியமான ஏரிகளாகும்.
  • புதிய வண்டல் படிவுகளால் நன்கு வரையறுக்கப்பட்ட கடற்கரையைக் கொண்டது.

V. சுருக்கமாக விடையளி

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

  • மேற்கு – பாகிஸ்தான்
  • வடமேற்கு – ஆப்கானிஸ்தான்
  • வடக்கு – சீனா, நேபாளம், பூடான்
  • கிழக்கு – வங்காளதேசம், மியான்மர்
  • தெற்கு – இலங்கை

2. இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

  • இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
  • இதனால் இந்த இரண்டு பகுதிகளுக்ககும் உள்ள தல வேறுபாடு 1மணி 57 நிமிடம் 12 வினாடிகள் ஆகும்
  • இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக, இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30’ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது.
  • இந்திய திட்ட நேரமானது கீரீன்வீச் திட்ட நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது

3. தக்காண பீடபூமி – குறிப்பு வரைக.

  • தக்காண பீடபூமி, தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டதாகும்.
  • இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.
    • வடமேற்கு திசையில் விந்திய, சாத்பூரா மலைத் தொடர்களையும்
    • வடக்கில் மகாதேவ், மைக்காலா குன்றுகளையும்,
    • வடகிழக்கில் இராஜ்மகால் குன்றுகளையும்,
    • மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளையும்,
    • கிழக்கில் கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் எல்லைகளாகக் கொண்டது.
  • சுமார் 7 லட்சம் சதுர கி.மீ பரப்பளவையும் கடல் மட்டத்தில் இருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.

4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.

மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை, தபதி மற்றும் மாஹி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன.

நர்மதை

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் 1057 மீ உயரத்தில் உற்பத்தியாகி 1312 கி.மீ நீளத்தையும் 98796 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தையும் கொண்டது.
  • இது 27 கி.மீ நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
  • இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
  • பர்னா, ஹலுன், ஹெரன், பஞ்சர், தூதி, சக்கார், டவா, மற்றும் கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.

தபதி

  • தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி 724 கி.மீ நீளத்தையும் 65145 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
  • மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 752 மீ உயரத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
  • காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.
  • வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.

மாஹி

  • மத்திய பிரதேசத்தில் தோன்றி குஜராத் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது

5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.

  • இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
  • இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.
  • இலட்சத்தீவுக்கூட்டங்களை 8° கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது.
  • இங்கு மனிதர்கள் வசிக்காத பிட் தீவு (Pitt Island) பறவைகள்
    சரணாலயத்திற்கு பெயர் பெற்றது.
  • இலட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் 1973ஆம் ஆண்டு முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது

VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்

1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. ட்ரான்ஸ் இமயமலைகள் (The Trans Himalayas or Western Himalayas)
  2. இமயமலைகள் (Himalayas or Central Himalayas)
  3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் (Eastern Himalayas or Purvanchal Hills)

1. ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)

  • இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
  • இதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை ’’திபெத்தியன் இமயமலை‘’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
  • இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.

2. இமயமலை

  • இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
  • இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
  • இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

  1. உள் இமயமலைகள் / இமாத்ரி
  2. மத்திய இமயமலை / இமாச்சல்
  3. வெளி இமயமலை / சிவாலிக்

(i) உள் இமயமலை அல்லது இமாத்ரி (Greater Himalayas/Himadri)

  • உள் இமயமலை, மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது.
  • இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. அதில் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
  • இம்மலையில் எப்போதும் நிரந்தரமாக பனிசூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன.

(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)

  • இது இமய மலையின் மத்திய மலைத் தொடராகும்.
  • வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள், மற்றும் மணற்பாறைகள் இத்தொடரில் காணப்படுகின்றன.
  • புகழ் பெற்ற கோடை வாழிடங்களான சிம்லா, முசெளரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங் போன்றவை இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.

(iii) வெளி இமயமலை / சிவாலிக்

  • இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.
  • குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள், சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன.
  • இவை கிழக்கு பகுதியில் டூயர்ஸ் (Duars) எனவும் மேற்கு பகுதியில் டூன்கள் (Duns) எனவும் அழைக்கப்படுகிறது.
  • இப்பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.

3. பூர்வாஞ்சல் குன்றுகள்

  • இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
  • இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
  • பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
  • மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.
  • டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றது.

இமயமலையின் முக்கியத்துவம்

  • தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.

2. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.

  • தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன.
  • பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
  • இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும்.
  • நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது.
  • இவ்வாறுகள் செங்குத்து சரிவுடன் கூடிய பள்ளத்தாக்கு வழியே பாய்கிறது.
  • தீபகற்ப ஆறுகளை அவைபாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை

1) கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள், 2) மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்

அ. மகாநதி

  • இந்நதி சத்தீஸ்கார் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 851 கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது.
  • சீநாத், டெலன், சந்தூர், சித்ரட்லா, கெங்குட்டி மற்றும் நன் ஆகியவை இதன் முக்கிய துணையாறுகளாகும்.
  • மகாநதி பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது. இந் நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஆ. கோதாவரி

  • தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறான (1465 கி.மீ) கோதாவரி, மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
  • இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது 3.13 இலட்சம் சதுர.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டது.
  • இது ஆந்திரப்பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
  • பூர்ணா, பென்கங்கா, பிரனிதா, இந்திராவதி, தால் மற்றும்
    சாலாமி போன்றவை இவற்றின் துணையாறுகள் ஆகும்.
  • இந்நதி ராஜமுந்திரிக்கு அருகில் கவுதமி மற்றும் வசிஸ்தா என இரண்டு கிளைகளாகப் பிரிந்து பெரிய டெல்டாவை உருவாக்குகிறது.

இ. கிருஷ்ணா

  • மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகா பலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகி சுமார் 1400 கி.மீ நீளம் வரையும் 2.58 இலட்சம் ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டிருக்கிறது.
  • இது தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதியாகும். கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு போன்றவை இவ்வாற்றின் முக்கிய துணையாறுகளாகும்.
  • இந்நதி ஆந்திரப்பிரதேசத்தின் வழியாக பாய்ந்து
    ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஈ. காவிரி

  • காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகி சுமார் 800 கி.மீ நீளத்துக்கு பாய்கிறது.
  • இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
  • கர்நாடகாவில் இரண்டாக பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய புனித ஆற்றுத் தீவுகளை உருவாக்குகிறது.
  • பின்பு தமிழ்நாட்டில் நுழைந்து தொடர்ச்சியான மற்றும் குறுகலான மலையிடுக்குகள் வழியாக ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியாக பாய்கிறது.
  • பின்பு திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம், மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இறுதியில்
    பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.

மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

அ. நர்மதை

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் 1057 மீ உயரத்தில் உற்பத்தியாகி 1312 கி.மீ நீளத்தையும் 98796 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தையும் கொண்டது.
  • இது 27 கி.மீ நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
  • இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
  • பர்னா, ஹலுன், ஹெரன், பஞ்சர், தூதி, சக்கார், டவா, மற்றும் கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.

ஆ. தபதி

  • தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும்.
  • இந்நதி 724 கி.மீ நீளத்தையும் 65145 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
  • இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
  • பின்பு காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.
  • தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை, தபதி மற்றும் மாஹி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன.
  • வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.

3. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

  • கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும்.
  • கங்கை சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகவும் உள்ளன.
  • கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 7010 மீ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
  • இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும்.
  • வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டக், கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
  • வங்கதேசத்தில், கங்கை “பத்மா” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
  • கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

 

சில பயனுள்ள பக்கங்கள்