10th Std Social Science Solution in Tamil | Lesson.15 India – Population, Transport, Communication and Trade

பாடம் 15. இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

10th Standard Social Science Solution - இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

பாடம் 15. > இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு __________

  1. வரைபடவியல்
  2. மக்களியல்
  3. மானுடவியல்
  4. கல்வெட்டியல்

விடை : மக்களியல்

2. __________ போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது

  1. ரயில்வே
  2. சாலை
  3. வான்வழி
  4. நீர்வழி

விடை : சாலை

3. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்

  1. 5846 கி.மீ
  2. 5847 கி.மீ
  3. 5849 கி.மீ
  4. 5800 கி.மீ

விடை : 5846 கி.மீ

4. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் __________

  1. பெங்களூர்
  2. சென்னை
  3. புது டெல்லி
  4. ஹைதராபாத்

விடை : ஹைதராபாத்

5. எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து

  1. சாலைப்போக்குவரத்து
  2. இரயில் போக்குவரத்து
  3. வான்வழிப் போக்குவரத்து
  4. நீர்வழிப் போக்குவரத்து

விடை : வான்வழிப் போக்குவரத்து

6. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

  1. ஏர் இந்தியா
  2. இந்தியன் ஏர்லைன்ஸ்
  3. வாயுதூத்
  4. பவன்ஹான்ஸ்

விடை : பவன்ஹான்ஸ்

7. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

  1. சிமெண்ட்
  2. ஆபரணங்கள்
  3. தேயிலை
  4. பெட்ரோலியம்

விடை : பெட்ரோலியம்

II. பொருத்துக

1. எல்லைபுறச் சாலைசெயற்கைக்கோள் தகவல் தொடர்பு
2. INSAT (இன்சாட்)நகரமயமாக்கலின் தாக்கம்
3. மேசகான் கப்பல்கட்டும்1990 தளம்
4. புறநகரப் பரவல்மும்பை
5. கொங்கண் இரயில்வே1960
ஹைதராபாத்
விடை :- 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – இ

III. குறுகிய விடையளி

1. இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதாகும்.

அதன் வகைகள்

  1. இது உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள்)
  2. சர்வதேச இடப்பெயர்வு (நாடுகளுக்கு இடையே)

2. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

  • மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது.
  • இந்திய தரைவழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது.
  • இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
  • வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது.
  • வேளாண்துறையில் எளிதில் அழுகக்கூடிய பொருள்களை வர்த்தகம் செய்ய விரைவான போக்குவரத்தை அளித்து உதவி புரிகிறது.

3. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது.
  • முன்னதாக இவை நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது திடப் பொருள்களும் குழம்பாக்குதல் மூலம் குழாய் வழியே கொண்டு செல்லப்படுகிறது.
  • குழாய் போக்குவரத்து அமைப்பதற்கு ஆரம்பகால செலவுகள் அதிகம். ஆனால் பின்னர் இதனை பராமரிப்பதற்கான செலவு மிகவும் குறைவு.
  • இவற்றை கடினமான நிலப்பகுதிகளிலும், நீருக்கு அடியிலும் அமைக்க இயலும். இது தடங்கலற்ற, குறைந்த செலவுடைய, காலதாமதமற்ற மற்றும் ஆவியாதலற்ற போக்குவரத்து ஆகும்.

4. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக.

தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண் – 1

இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ நீளத்தை கொண்டு, கங்கை-பாகிரதி –
ஹுக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண் – 2

இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது.

தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண் – 3

இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு 205 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து வசதியை அளிக்கக்கூடிய இந்தியாவின் முதல் தேசிய நீர்வழி போக்குவரத்து இதுவாகும்

5. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்பு துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.

தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

  1. தனிமனித தகவல் தொடர்பு
  2. பொதுத்தகவல் தொடர்பு

6. பன்னாட்டு வணிகம் – வரையறு.

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியன பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும்.
  • பொருள்கள் மற்றும் சேவைகள் அந்நிய நாடுகளுக்கு விற்பது ஏற்றுமதி எனப்படும்.
  • அந்நிய நாடுகளிலிருந்து பொருள்களையும், சேவைகளையும் பெறுவது இறக்குமதி எனப்படும்.
  • ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும், இறக்குமதி மதிப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடு வணிகச் சமநிலை எனப்படும்

7. சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக.

  • சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது குறுகிய, மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு மிகவும் ஏற்றது
  • இது குறுகிய, தூர பயணத்திற்கு மிகவும் உகந்தது.
  • சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும் பொழுது மலிவானதாகும்.
  • சாலைப் போக்குவரத்து அமைப்பு மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிக்கு இடையில் எளிதில் தொடர்பை ஏற்படுத்த முடியும்.
  • இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக் கூடிய மலிவான போக்குவரத்தாகும்.

IV. வேறுபடுத்துக

1. மக்களடர்த்தி மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி

மக்களடர்த்தி

  • மக்களடர்த்தி என்பது சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கம் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது.
  • மக்களடர்த்தி, நிலத்தோற்றம், காலநிலை, இயற்கைத் தாவரம், மதம், கலாச்சாரம், பொருளாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்புகள் போன்ற பெளதிக மற்றும் சமூகக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் மக்களடர்த்தி மிகுத்த மாநிலம் பீகார்

மக்கள்தொகை வளர்ச்சி

  • மக்கள் தொகை வளர்ச்சி என்பது சராசரியாக ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது.
  • பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் புலம் பெயர்தல் ஆகியவற்றினால் தீர்மானிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் மக்கள் தொகை மிகுத்த மாநிலம் உத்திரப்பிரதேசம்

2. தனி நபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு

தனி மனித தகவல் தொடர்பு

  • தனி நபர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் தனிமனித தகவல் தொடர்பு என அழைக்கப்படுகிறது.
  • இது அஞ்சல் சேவை, தந்தி, தொலைப்பேசி, கைப்பேசி, குறுந்தகவல் பிரதிகள், இணையதளம் மற்றும் மின் அஞ்சல் போன்றவைகளை உள்ளடக்கியது.
  • பயனாளிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துகிறது
  • தகவல் மற்றும் செய்திகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது

பொதுத் தகவல் தொடர்பு

  • பொதுத் தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும்.
  • வானொலி, தொலைக்காட்சி, இணையம், செய்த்திதாள் போன்றவைகளை உள்ளடக்கியது.
  • பயனாளிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவது இல்லை
  • கல்வி, பொழுதுபோக்கு, தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

3. அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்

அச்சு ஊடகம்

  • எல்லோராலும் பயன்படுத்தப்படும் செய்தாள்கள் ஒரு சக்தி வாய்ந்த அச்சு ஊடகமாகும். மேலும் இது தகவல் தொடர்பு சாதனமாகும்
  • அச்சு ஊடகம் இந்தியாவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக் கூடீய பல செய்தாள்கள் உள்ளன

மின்னணு ஊடகம்

  • வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் மின்னணு ஊடகங்களாகும்
  • இது கல்வி, செய்திதாள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகிறது

4. சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழிபோக்குவரத்து

சாலை வழிபோக்குவரத்து

  • சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது குறுகிய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குளை கொண்டு செல்லக மிகவும் உகந்தது.
  • சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும் பொழுது மலிவானதாகும்.
  • உலகின் இரண்டாவது நீண்ட சாலை வலைப்பின் அமைப்பை இந்தியா பெற்றுள்ளது.

இரயில் வழிபோக்குவரத்து

  • இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய நாடியாக அமைந்துள்ளது.
  • மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது.
  • அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதிகம் செலவாகும்.
  • ஆசியாவில் மிகப்பெரியதும், உலகளவில் இரண்டாவது பெரியதுமான இரயில்வே அமைப்பை இந்தியா பெற்றுள்ளது

5. நீர்வழிப்போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து

சாலை வழிபோக்குவரத்து

  • நீர்வழிப் போக்குவரத்து இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்திற்கு முக்கியமான ஒன்றாகும்
  • நீர் நிலைகளில் மட்டுமே இப்போக்குவரத்து நடைபெறும்.
  • கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது நீர்வழிப் போக்குவரத்தாகும்.
  • எரிபொருள், செலவினம் குறைவு
  • சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது

வான்வழிப் வழிபோக்குவரத்து

  • வான்வழிப் வழிபோக்குவரத்து நவீன வசதியான மற்றும் செலவு மிகுந்த ஒரு போக்குவரத்தாகும்.
  • இது உயர்ந்த மலைகள், பாலைவனங்கள் மற்றும் அடர்ந்த காடுகளையும் எளிதில் கடந்து செல்ல உதவுகிறது.
  • இது பயணிகள், அஞ்சல்கள் மற்றும் குறைந்த எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல ஏற்றது.
  • எரிபொருள், செலவினம் அதிகம்.
  • சுற்றுச்சூழலுக்கு மாசுபடுகிறது

6. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.

உள்நாட்டு வணிகம்

  • ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் உள்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
  • இது உள்ளூர் வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • உள்நாட்டு வணிகத்தில் நிலவழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது.
  • இவ்வணிக முறையில் உள்நாட்டு நாணயம் பயன்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு வணிகம்

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது
  • இது அயல்நாட்டு வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • பன்னாட்டு வணிகத்தில் நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது.
  • இவ்வணிக முறையில் அயல்நாட்டு நாணயம் பயன்படுத்தப்படுகிறது.

V. ஒரு பத்தியில் விடையளிக்கவும்

1. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?

கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.

நகரமயமாக்களின் தாக்கங்கள்

  • நகரமயமாக்கலும் மக்கள் தொகை அடர்த்தியும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
  • நகர்புறமயமாக்கலின் விரைவான வளர்ச்சியான சமூக-பொருளாதார அபிவிருத்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.
  • இந்தியா போனற் வளரும் நாடுகளின் நகரமாயமாக்கம் விரைவாக அதிகரித்து வருகிறது
  • கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இடப்பெயர்தல் நகர்பகுதிகளில் மக்கள் தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கிறது.
  • மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி போன்ற பெருநகரங்கள் தங்கள் கொள்ளளவை விட அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படுகின்றன.
  • 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர்புற மக்கள் தொகை 377 மில்லியன்களைக் கடந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதத்றிகும் அதிகமான மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
  • நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
  • குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
  • போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
  • குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
  • வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
  • திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்கிறது.
  • குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

2. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக.

  • செயற்கைக்கோளானது தொடர்ச்சியாக மிகப்பெரும் பரப்பிலான பதிமம் மற்றும்தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது.
  • செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு, இயற்கைபேரழிவு கண்காணிப்பு, எல்லை பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • 1969ஆம் ஆண்டு இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத்தொடர்பு பரிமாற்றத்தில் செயற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக்கொண்டது.

  1. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)
  2. இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு (IRS)
  • 1983இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலைத்தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.
  • இன்சாட் வரிசை செயற்கைக்கோள், கைபேசி, தொலைப்பேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப பயன்படுகிறது.
  • மேலும் இது வானிலையை கண்டறியவும், இராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1, ஹேம்சாட், எஜுசாட் (Edusat) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கியசெயற்கைக்கோள்களாகும்.
  • டிசம்பர் 19, 2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 7A தகவல் தொடர்புக்காக சமீப காலத்தில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும்.
  • ஆகஸ்ட் 30, 1983ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும்.

3. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.

இந்திய சாலைகளின் வகைகள்

  1. தேசிய நெடுஞ்சாலைகள் (NH)
  2. மாநில நெடுஞ்சாலைகள்
  3. மாவட்டச் சாலைகள்
  4. கிராமச் சாலைகள்
  5. எல்லைப்புறச் சாலைகள்
  6. தங்க நாற்கரச் சாலைகள்

தேசிய நெடுஞ்சாலைகள் (NH)

  • தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிகமுக்கியமான அமைப்பாகும்.
  • இது நாட்டின் எல்லைகளையும், மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள், தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பொறுப்பாகும்.
  • இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH 44 ஆகும். இது உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 2,369 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும்.
  • குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH 47 A ஆகும். இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக் கொண்ட கொச்சின் துறைமுகத்தை (வில்லிங்டன் தீவு) இணைக்கிறது.

மாநில நெடுஞ்சாலைகள்

  • மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களை, மாநில தலைநகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும் அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன.
  • இந்தச் சாலைகள் மாநில பொதுப்பணித்துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

மாவட்டச் சாலைகள்

  • மாவட்டச் சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
  • மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப் பணித்துறையால்
    அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

கிராமச் சாலைகள்

  • இச்சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பாங்காற்றுகின்றது.
  • இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது.
  • இவைகளை கிராம பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படுகின்றன.

எல்லைப்புறச் சாலைகள்

  • எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலை வகைகளாகும்.
  • இவைகள் எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இவ்வமைப்பு 1960இல் நிறுவப்பட்டது.
  • இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
  • எல்லைப்புறச் சாலை நிறுவனம் உலகிலேயே உயரமான எல்லைப்புறச் சாலையை லடாக்கில் உள்ள லேவில் இருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது.
  • இச்சாலை கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,270 மீட்டர்
    உயரத்தில் உள்ளது.

தங்க நாற்கரச் சாலைகள்

  • இது 5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
  • இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி – கொல்கத்தா – சென்னை – மும்பை – புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது.
  • இத்திட்டம் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

சில பயனுள்ள பக்கங்கள்