10th Std Social Science Solution in Tamil | Lesson.14 India – Resources and Industries

பாடம் 14. இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

10th Standard Social Science Solution - இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

பாடம் 14. > இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

  1. சேமிப்பு மின்கலன்கள்
  2. எஃகு தயாரிப்பு
  3. செம்பு உருக்குதல்
  4. பெட்ரோலிய சுத்திகரிப்பு

விடை : எஃகு தயாரிப்பு

2. ஆந்த்ரசைட் நிலக்கரி ______________ கார்பன் அளவை கொண்டுள்ளது

  1. 80% – 95%
  2. 70% க்கு மேல்
  3. 60% – 70%
  4. 50%க்கும் குறைவு

விடை : 80% – 95%

3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் __________

  1. ஆக்ஸிஜன்
  2. நீர்
  3. கார்பன்
  4. நைட்ரஜன்

விடை : கார்பன்

4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்.

  1. சேலம்
  2. சென்னை
  3. மதுரை
  4. கோயம்புத்தூர்

விடை : கோயம்புத்தூர்

5. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்.

  1. குஜராத்
  2. இராஜஸ்தான்
  3. மகாராஷ்டிரம்
  4. தமிழ்நாடு

விடை : மகாராஷ்டிரம்

6. மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்

  1. உயிரி சக்தி
  2. சூரியன்
  3. நிலக்கரி
  4. எண்ணெய்

விடை : சூரியன்

7. புகழ் பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்

  1. ஜார்கண்ட்
  2. பீகார்
  3. இராஜஸ்தான்
  4. அசாம்

விடை : ஜார்கண்ட்

8. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது

  1. போக்குவரத்து
  2. கனிமப்படிவுகள்
  3. பெரும் தேவை
  4. மின்சக்தி சக்தி கிடைப்பது

விடை : கனிமப்படிவுகள்

II) பொருத்துக

1. பாக்சைட்சிமெண்ட்
2. ஜிப்சம்வானூர்தி
3. கருப்பு தங்கம்மின்சாதனப் பொருட்கள்
4. இரும்பு தாதுநிலக்கரி
5. மைக்காமேக்னடைட்
விடை: 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – இ

III. சுருக்கமாக விடையளி

1. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக

  • இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ‘இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • காற்று, நீர், மண், தாதுக்கள், புதைப்படிம எரிபொருள், தாவரங்கள், வன விலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும்.

இதன் வகைகள்

  1. புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
  2. புதுப்பிக்க இயலா வளங்கள்

2. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?

  • ஒரு குறிப்பிட்டவேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
  • வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
  1. உலோகக் கனிமங்கள்
  2. அலோகக் கனிமங்கள

3. மெக்னீசியத்தின பயன்களை குறிப்பிடுக

  • உருகிய இரும்புக் குழப்போடு மக்னீசியத்தை சேர்க்க இரும்பின் பயன்பாடு மேம்படுகிறது. அதனால் இரும்பின் கட்டமைப்பு பட்டறைப் பயன்பழடு மேலும் சிறப்பாகிறது.
  • மக்னீசியம் அணு உலைகளின் உட்சுவர்களை கட்டமைக்கப் பயன்படுகிறது.
  • தூய சிலகான் மற்றும் போரானை அவற்றின் நிலையான ஆக்ஸைடுகளிலிருந்தும் பிரித்தெடுக்கு மெக்னீசியம் உதவுகிறது.

4. இயற்கை எரிவாயு என்றால் என்ன?

  • ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மட்குவதன் மூலம் உண்டாக்கக் கூடிய
    ஒரு வாயு.
  • இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
  • இது வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும், மின் உற்பத்திக்கும்  வாகனங்களுக்கு எரிபொருளாகவும் விளங்குகிறது.

5. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக

  • நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது.
  • ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்சசிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது கருப்பு தங்கம் (Black gold) என அழைக்கப்படுகிறது.
ஆந்திரசைட்80 முதல் 90%
பிட்டுமினஸ்60 முதல் 80%
பழுப்பு நிலக்கரி40 முதல் 60%
மரக்கரி40%த்திற்கும் குறைவு.

6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளை குறிப்பிடுகசணல் உற்பத்திபகுதிகள்

  • மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரை நெடுகிலும் அமைந்துள்ளது.
  • டிட்டகார், ஜகட்டட், பட்ஜ்-பட்ஜ், ஹவுரா மற்றும் பத்ரேஸ்வர் முதன்மை சணல் பொருள்கள் உற்பத்தி மையங்களாகும்.
  • ஆந்திரப்பிரதேசம் , பீகார், அசாம், உத்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற பிற மாநிலங்களாகும்.

7. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.

மேற்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்

  • பேஸ்ஸைம் எண்ணெய் வயல்
  • மும்பை ஹை
  • குஜராத் கடற்கரை
  • அங்கலேஸ்வர்
  • காம்பே-லூனி பகுதிகள்
  • அகமதாபாத் – கலோல் பகுதி

கிழக்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்

  • பிரமபுத்திரா பள்ளதாக்கு (அசாம்)
  • திக்பாய்
  • நாகர்காட்டியா
  • மோரான் ஹக்ரிஜன்
  • ருத்ரசாகர் – லாவா
  • சாமர் பள்ளத்தாக்கு
  • அந்தமான், நிகோபோரின் உட்பகுதிகள்
  • மன்னார் வளைகுடா
  • பலேஷ்வர் கடற்கரை

IV. வேறுபடுத்துக

1. புதுபிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்

புதுபிக்க இயலும் வளங்கள்

  • பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வளங்கள் புதுப்பிக்க இயலும் வளங்களாகும்.
  • சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரின கழிவு வாயு வளிமம், ஓதசக்தி, அலைசக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.

புதுபிக்க இயலாத வளங்கள்

  • பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும்.
  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவை புதுப்பிக் இயலாத வளங்கள் ஆகும்.

2. உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்

உலோகக் கனிமங்கள்

  • உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும்.
  • உலோகக் கனிமப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காரியம், தங்கம் போனற உலோகங்கள் காணப்படுகின்றன.

அலோகக் கனிமங்கள்

  • அலோகக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை.
  • மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நைட்ரேட், பொட்டஷ், டோலமைட், நிலக்கரி, பெட்ரோலியம் ஆகியன முக்கிய அலோகங்க கனிமங்களாகும்

3. வேளாண் சார்ந்த மற்றறும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்

வேளாண் சார்ந்த தொழிலகங்கள்

  • வேளாண் சார்ந்த தொழிலகங்கள் வேளாண் துறையிலிருந்து மூலப்பொருள்களை பெறுகின்றது
  • பருத்தி நெசவாலைகள், சணல் ஆலைகள், பட்டு நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள் முக்கிய சான்றுகள்

கனிமம் சார்ந்த தொழிலகங்கள்

  • இத்தொழில்கள் உலோகம் மற்றும் உலோகமற்ற பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.
  • இரும்பு எஃகு தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், இரசாயன உரத் தொழிற்சாைலைகள் இதற்கு சான்றுகளாகும்.

4. சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்

சணல் ஆலைகள்

  • சணல் ஆலைகள் என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய சணலிலிருந்து பொருடகள் தயாரிக்கும் ஆலைகளாகும்.
  • சணல் உற்பத்தியில் உலகில் வங்கதேசத்திற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
  • இந்தியாவில் சணல் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம் பெறுகிறது.
  • மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பீகார், அசாம், உத்திரப்பிரதேசம்,சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா முதலியன சணல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆகும்.

சர்க்கரை ஆலைகள்

  • சர்க்கரை ஆலைகள் என்பது கரும்பு, சர்க்கரை கிழங்குகள் ஆகியவற்றிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளாகும்.
  • கரும்பு உற்பத்தியில் உலகில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
  • இந்தியாவில் சணல் உற்பத்தியில் உத்திரப்பிரதேசம் முதலிடம் பெறுகிறது.
  • உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சர்க்கரை  ஆலைகள் உள்ளன.

5. மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி

மரபு சார் எரிசக்தி

  • மரபுசார் எரிசக்தி புதுபிக்க இயலாத வளங்களாகும்
  • பெரும்பாலன வளங்கள் பயன்பாட்டின்போது மாசுக்கள் ஏற்படக் காரணமாகின்றன
  • அனல் மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியன இவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.

மரபு சார் எரிசக்தி

  • மரபுசார் எரிசக்தி புதுபிக்க கூடிய வளங்களாகும்
  • பயன்பாட்டின்போது மாசுக்கள் ஏற்படக் வாய்ப்புகளில்லை.
  • நீர்மின்சக்தி,  சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரி சக்தி இவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.

V. ஒரு பத்தியில் விடையளி

1. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக

இந்திய பருத்தி நெசவாலைகள்

  • பருத்தி நெசவாலைகள் நம் நாட்டின் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.
  • தற்போது இந்தியா, பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகளிலும், நூற்பு கருவிகளின எண்ணிக்கையிலும் முதன்மை நாடாகவும் உள்ளது.
  • தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிகப்பெரிய நவீன தொழிலகப் பிரிவாக உள்ளது.

பருத்தி நெசவாலைகளின் பரவல்

  • மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றன
  • தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்கடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகிய முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
  • இந்தியாவில் இப்போது 1719 பருத்தி நெசவாலைகள் உள்ளன.

மும்பை – இந்தியாவின் மான்செஸ்டர்

  • மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செரிந்து காணப்படுவதால் மும்பை இந்தியாவனின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது
  • காரணம் மகாராஷ்டிரம் மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பதக்கால நிலை, மும்பை துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர் மின் சக்தி, சந்தை வசதி மற்றும்ச சிறந்த போக்குவரத்து வசதி ஆகியனவாகும்.

கோயம்புத்தூர் – தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.

2. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக

  • மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
  • தொழிலகங்கள் நிறுவுவதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
  • கடன் பெறுவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
  • கடனுக்கான அதிக வட்டி விகிதம்
  • மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை
  • ஊழியகர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்முறை பயிற்சிகள் இல்லாமை
  • தொழில்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை

 

சில பயனுள்ள பக்கங்கள்