10th Std Social Science Solution in Tamil | Lesson.1 Outbreak of World War I and Its Aftermath

பாடம் 1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

10th Standard Social Science Solution முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

பாடம் 1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

முற்றுரிமைMonopolyexclusive possession or control
பேரழிவுDevastatinghighly destructive or damage
கண்மூடித்தனமான நாட்டுப்பற்றுJingoismblind patriotism, especially in the pursuit of aggressive foreign policy
அதிதீவிரப்பற்றுChauvinismextreme patriotism
ஜெர்மானியக் கலாச்சாரத்தை மிக உயர்வாக நினைப்பதுKulturthinking highly of German civilization and culture
எதிரியை விரட்டி அடித்தல்Repulsedrive back
மூழ்கடிTorpedoattack or sink (a ship) with a torpedo
முதலாளித்துவம்Bourgeoischaracteristic of the middle class, typically with reference to its perceived materialistic values or conventional attitudes
அறிவுஜீவிகள், நுண்ணறிவாளர்கள்Intelligentsiaintellectuals or highly educated people as a group, especially when regarded as possessing culture and political infuence

சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  1. ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
  2. ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா
  3. ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
  4. ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

விடை: ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

2. எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

  1. டெல்வில்லி
  2. ஆரஞ்சு நாடு
  3. அடோவா
  4. அல்ஜியர்ஸ்

விடை: அடோவா

3. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் எனக் கூறியவர் யார்?

  1. லெனின்
  2. மார்க்ஸ்
  3. சன் யாட் சென்
  4. மா சே துங்

விடை: லெனின்

4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

  1. ஆகாயப் போர்முறை
  2. பதுங்குக் குழிப்போர்முறை
  3. நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
  4. கடற்படைப் போர்முறை

விடை: பதுங்குக் குழிப்போர்முறை

5. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  1. பிரிட்டன்
  2. பிரான்ஸ்
  3. டச்சு
  4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை: பிரிட்டன்

6. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

  1. ஜெர்மனி
  2. ரஷ்யா
  3. இத்தாலி
  4. பிரான்ஸ்

விடை: ரஷ்யா

7. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

  1. சீனா
  2. ஜப்பான்
  3. கொரியா
  4. மங்கோலியா

விடை: ஜப்பான்

8. எந்தநாடு முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கைக்கொண்டது

  1. பிரிட்டன்
  2. பிரான்ஸ்
  3. ஜெர்மனி
  4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை: அமெரிக்க ஐக்கிய நாடுகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ________ ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

விடை: 1894

2. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட _________ உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.

விடை: இலண்டன்

3. _________ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது

விடை: 1902

4. பால்கனில் _________ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

விடை: மாசிடோனியா

5. டானென்பர்க் போரில் _________ பேரிழப்புகளுக்கு உள்ளானது

விடை: ரஷ்யா

6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் _________ ஆவார்.

விடை: கிளெமன்கோ

7. _________ ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

விடை: 1925

7. லெனின் போல்ஷ்விக் அரசை நிறுவுவதற்கு முன்னர், தாராளவாதிகள், மிதவாதிகள், ஷலிஸ்ட்டுகள் ஆகியோரின் புதியக் கூட்டணிக்கு _________ பிரதமராக தலைமை ஏற்றார்

விடை: கெரன்ஸ்கி

சரியான கூற்றைத் தேர்வுசெய்யவும்

  1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.

ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.

iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.

iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது

  1. i), ii) ஆகியன சரி
  2. i), iii) ஆகியன சரி
  3. iv) சரி
  4. i), ii), iv) ஆகியன சரி

விடை ; i), ii), iv) ஆகியன சரி

2. கூற்று : ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.

காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது

  1. காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
  2. கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
  3. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
  4. காரணம் சரி ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

விடை: காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.

3. கூற்று : ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.

காரணம் : இரு நாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன

  1. கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
  2. கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
  3. கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
  4. காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை

விடை: கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல

4. i) முதல் உலகப்போர் வெடித்தபோது இத்தாலி நடுநிலைமை வகிக்கும் நாடாக இருந்தது.

ii) வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கையில் இத்தாலி பெரும் ஏமாற்றமடைந்தது.

iii) செவ்ரஸ் உடன்படிக்கை இத்தாலியுடன் கையெழுத்திடப்பட்டது.

iv) சிறிய இடங்களான ட்ரைஸ்டி, இஸ்திரியா, தெற்கு டைரோல் போன்றவை கூட இத்தாலிக்குமறுக்கப்பட்டது.

  1. i), ii) ஆகியன சரி
  2. iii) சரி
  3. iv) சரி
  4. i), iii), iv) ஆகியன சரி

விடை: i), ii) ஆகியன சரி

பொருத்துக

1. பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கைஅ. வெர்செய்ல்ஸ
2. ஜிங்கோயிசம்ஆ. துருக்கி
3. கமால் பாட்சாஇ. ரஷ்யாவும் ஜெர்மனியும்
4. எம்டன்ஈ. இங்கிலாந்து
5. கண்ணாடி மாளிகைஉ. சென்னை
விடை: 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – ஊ, 5 – அ

சுருக்கமாக விடையளிக்கவும்

1. சீன ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

  • சீன-ஜப்பானிய போரில் (1894-1895) சீனாவை சிறய நாடான ஜப்பான் தோற்கடித்தது.
  • ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக் கொண்டது
  • இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்பித்தது.

2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக

இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா

3. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?

  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று.
  • பிரான்சின் – அதி தீவிரப்பற்று
  • ஜெர்மெனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று.

4. பதுங்குக்குழிப் போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  • போர் வீரர்களால் தோண்டப்பபடும் பதுங்குக்குழிகள் எதிரிகள் சுடுதலில் இருந்து தங்களை காத்துகொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின.
  • பிரதானப் பதுங்குக்குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும்.
  • அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்து சேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.

5. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

  • துருக்கி மீண்டும் ஒருநாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார்.
  • கமால் பாட்சா துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்தும் மாற்றி அமைத்தார்.

6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களை பட்டியலிடுக

  • சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை.
  • பன்னாட்டுச்சங்கம் முதல் உலகப்போரில் வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாகவே காணப்பட்டது.

விரிவாக விடையளிக்கவும்

1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி

ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிர் அணி சேர்க்கைகளும்

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
  • ஒரு முகாம் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • இரண்டாவது முகாம் நேச நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு ஊருவாக்கப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம்

  • தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.
  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று (jingoism), பிரான்சின் அதி தீவிரப்பற்று (chauvinism), ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று (kultur) ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு

  • ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே
    உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
  • ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது .
  • இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை

  • பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
  • 1871இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
  • ஜெர்மன் பேரரசர் இரண்டாம்கெய்சர்வில்லியம்மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு

  • 1908இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீனஅரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
  • ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.

பால்கன் போர்கள்

  • பால்கன் நாடுகள் 1912-ல் துருக்கியை தாக்கி தோற்கடித்தது.
  • 1913-ல் இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா நாடு உருவாக்கப்பட்டது.
  • மாசிடோனியாவை பிரித்துக்கொள்வதில் பல்கேரியா, செல்பியாவையும், கீரிஸ்சையும் தாக்கியது.
  • இரண்டாம் பால்கன் போரில் பல்கேரியா எளிதில் தோற்கடிக்கபட்டு புகாரேஸ்ட் உடன்படிக்கை உடன் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்

  • 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற
    பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
  • ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
  • செர்பியாவிற்கு ஆதரவாகத் தலையிட ரஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்னும் வதந்தியால் ஜெர்மனி முதல் தாக்குதலைத் ரஷ்யா மீது போர் தொடுத்தது.

2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.

  • போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும். எனவும் மைய நாடுகள் அனைத்தும் போர் இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் வலியுறுத்தப்பட்டன.
  • ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது. சிறிய கப்பற்படையொன்றை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
  • ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது.
  • ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன.
  • ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
  • அல்சேஸ்-லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.
  • முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியன சுதந்திரநாடுகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
  • வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன.
  • போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
  • நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின்கீழ் ரைன்லாந்து இருக்கும் என்றும், ரைன்நதியின் கிழக்குக்கரைப் பகுதி படை நீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

3. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.

  • முதல் உலகப்போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட தோல்வி ரஷ்ய பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்தது.
  • இதனால் கோபமுற்ற ரஷ்ய மக்கள் மன்னருக்கு எதிராக பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 1917, மார்ச்-15ம் நாள் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகினார்

தற்காலிக அரசு

  • அரசு நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள ஒன்றுக்கொன்று இணையான இரண்டு அமைப்புகள் இருந்தன.
  • ஒன்று பழைய டூமா சோவியத்.
  • சோவியத் அமைப்புகளின் ஒப்புதலோடு டூமாவால் ஒரு தற்காலிக அரசை நிறுவ முடிந்தது.

தற்காலிக அரசின் தோல்வி

  • புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
  • “அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே” என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது. போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பெருந்துயரத்தால் மக்கள் “ரொட்டி, அமைதி, நிலம்” எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
  • தற்காலிக அரசு எடுத்த தவறான முடிவுகளால் போல்ஷவிக்குகள் தலைமயில் நடைபெற்ற எழுச்சி மேலும் வலுப்பெற்றது.
  • அரசு ‘பிரவ்தா’ வை தடை செய்து போல்ஷ்விக்குகளைக்
    கைதுசெய்தது. டிராட்ஸ்கியும் கைதுசெய்யப்பட்டார்.

லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுதல்

  • அக்டோபர் திங்களில், உடனடிப் புரட்சி குறித்து முடிவுசெய்யக் கேட்டுக்கொண்டார். டிராட்ஸ்கி ஒரு விரிவானதிட்டத்தைத் தயாரித்தார்.
  • நவம்பர் 7இல் முக்கியமான அரசுக்கட்டங்கள், குளிர்கால அரண்மனை, பிரதமமந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை அனைத்தும் ஆயுதமேந்திய ஆலைத் தொழிலாளர்களாலும், புரட்சிப் படையினராலும் கைப்பற்றப்பட்டன.
  • 1917 நவம்பர் 8இல் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப் பெயரிடப்பட்டது.

4. பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக

  • பின்லாந்தின் மேற்குக்கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
  • போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்துவைத்தது.
  • கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்தபோது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
  • விசாரணைக்குப்பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்கவேண்டுமெனத் தீர்மானித்தது.
  • 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
  • லொக்கார்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகியநாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
  • ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment