பாடம் 5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

பாடம் 5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
கலைச்சொற்கள்
| சொல்லப்படும் | Alleged | stated but not proved |
| பரவசமான | Ecstatic | in a state of extreme happiness |
| அதிகப் பரிமாணமுள்ள | Voluminous | bulky |
| வலியுறுத்துதல் | Reiterated | repeat a statement for emphasis |
| உருவ வழிபாடு | Idolatry | the practice of worshipping idols |
| சிறு நூல் | Tract | a small booklet |
| திருவெளிப்பாடு | Revelation | disclosure |
சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
- 1827
- 1829
- 1826
- 1927
விடை: 1829
2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
- ஆரிய சமாஜம்
- பிரம்ம சமாஜம்
- பிரார்த்தனை சமாஜம்
- ஆதி பிரம்ம சமாஜம்
விடை: ஆரிய சமாஜம்
3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
- ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
- ராஜா ராம்மோகன் ராய்
- அன்னிபெசன்ட்
- ஜோதிபா பூலே
விடை: ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
4. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்?
- பார்சி இயக்கம்
- அலிகார் இயக்கம்
- ராமகிருஷ்ணர்
- திராவிட மகாஜன சபை
விடை: பார்சி இயக்கம்
5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
- பாபா தயாள் தாஸ்
- பாபா ராம்சிங்
- குருநானக்
- ஜோதிபா பூலே
விடை: பாபா ராம்சிங்
6. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
- M.G. ரானடே
- தேவேந்திரநாத் தாகூர்
- ஜோதிபா பூலே
- அய்யன்காளி
விடை: M.G. ரானடே
7. சத்யார்த்தபிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்?
- தயானந்த சரஸ்வதி
- வைகுண்டசாமி
- அன்னி பெசன்ட்
- சுவாமி சாரதாநந்தா
விடை: தயானந்த சரஸ்வதி
8. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?
- சுவாமி விவேகானந்தரின் சீடர்
- இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
- ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
- சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
விடை: ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _________ சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்
விடை: இராமலிங்க அடிகளார்
2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் _________
விடை: மகாதேவ் கோவிந் ராணடே
3. குலாம்கிரி நூலை எழுதியவர் _________
விடை: ஜோதிபா பூலே
4. ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி _________ ஆல் நிறுவப்பட்டது
விடை ; விவேகானந்தர்
5. _________ அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
விடை: சிங்சபா
6. ஒரு பைசா தமிழன் பத்திரிகையைத் துவக்கியவர் _________ ஆவார்
விடை: அயோத்தி தாசர்
7. சத்யசோதக் சமாஜத்தைத் தொடங்கியவர் _________ ஆவார்
விடை ; ஜோதிபா பூலே
8. _________ கேரளாவின் சாதியக் கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வந்தது.
விடை: நாராயண குரு மற்றும் அய்யன் காளி
9. சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல் _________ நேர்மறைக் கொள்கைகளைப் பட்டியலிடுகிறது.
விடை: ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்
iv) ராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.
- i சரி
- i , ii ஆகியன சரி
- i, ii, iii ஆகியன சரி
- i, iii ஆகியன சரி
விடை: i , iv ஆகியன சரி
2. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக் கலப்புத்
திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
- i சரி
- ii சரி
- i, ii ஆகியன சரி
- iii, iv ஆகியன சரி
விடை: i, ii ஆகியன சரி
3. i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணாமிஷனை ஏற்படுத்தினார்.
iv) ராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.
- i சரி
- i மற்றும் ii சரி
- iii சரி
- iv சரி
விடை: i மற்றும் ii சரி
4. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
- கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை
- கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
- இரண்டுமே தவறு.
- காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
விடை: கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை
பொருத்துக
| 1. அய்யா வழி | விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் |
| 2. திருவருட்பா | நிரங்கரி இயக்கம் |
| 3. பாபா தயாள்தாஸ் | ஆதி பிரம்மசமாஜம் |
| 4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் | வைகுண்ட சுவாமிகள் |
| 5. தேவேந்திரநாத் | ஜீவகாருண்யப் பாடல்கள் |
| விடை: 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ | |
சுருக்கமான விடையளிக்கவும்.
1. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக
- தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
- அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர், அவருக்கிணையாருமில்லை.
- நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்தபிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
- அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
2. சமூக சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானேடயின் பங்களிப்பினைக் குறிப்பிடுக
- நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய இருவருமாவர். இவ்விருவரும் சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்.
- விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.
3. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
- இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
- 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?
- உடன்கட்டை ஏறுதல் (சதி)
- குழந்தைத் திருமணம்
- பலதார மணம்
- விதவைப்பெண்கள் மறுமணம்
5. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
- 1852ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
- சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார்.
- பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
- ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
- ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
விரிவாக விடையளிக்கவும்
1. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
- சமூகத்தில் நிலவி வந்த சதி எனும் உடன்கட்டை ஏறுதல்
- குழந்தைத் திருமணம் மற்றும் பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள்
- விதவைப் பெணகள் மறுமணம் செய்ய உரிமை மறுக்கப்பட்டது.
- பெண் அடிமைத்தனம், ஆணை விட பெண் கீழானவர் எனும் நடைமுறைகள்
- வரதட்சணைகள்
- பெண் கல்வி மறுப்பு நடைமுறைகள்
- எல்லையற்ற உபநிடதங்கள், போதனைகள்
- பிராமணர் மேலாதிக்கம் செய்யும் சடங்கு
- மூட நம்பிக்கைகள், பழக்க வழங்கங்களின் அதிக தாக்கங்கள்
- பயங்கரமான சாதிக் கொடுமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள்
- மேலை நாட்டு பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்க மறுத்தது
2. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க
இராமகிருஷ்ண பரமஹம்சர்
- கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர்
- புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
- அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும்.
- மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.
சுவாமி விவேகானந்தர்
- நடைமுறை வேதாந்தமான மனித குலத்திற்குத் தொண்டு செய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
- பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்
- இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
- இந்து சமயச்சடங்குகளில் கலந்துகொள்ளக்கூடாதென
ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக்
கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்.
- விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது.
- வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.
3. பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக
பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள்
இராஜா ராம்மோகன் ராய்
- சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார்.
- விதவைப்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.
- பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார்.
- 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் ‘சதி’ எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றியதில் இராஜா ராம்மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார்.
- ராம்மோகன் ராய் பெண்ணடிமைத்தனத்தைக் கண்டனம் செய்தார்.
- இராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமயச்சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார்.
ஜோதிபா பூலே
- குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
- விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
- ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
- ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
இராமகிருஷ்ண பரமஹம்சர்
- மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.
சுவாமி விவேகானந்தர்
- இந்து சமயச்சடங்குகளில் கலந்துகொள்ளக்கூடாதென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக் கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்.
- விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது.
- வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.
சில பயனுள்ள பக்கங்கள்