10th Std Social Science Solution in Tamil | Lesson.10 Social Transformation in Tamil Nadu

பாடம் 10. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

10th Standard Social Science Solution - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
பாடம் 10. >
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. 1709இல் தரங்கம்பாடியில் ______________________ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்

  1. கால்டுவெல்
  2. F.W. எல்லிஸ்
  3. சீகன்பால்கு
  4. மீனாட்சி சுந்தரனார்

விடை ; சீகன்பால்கு

2. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ______________________ நிறுவினார்.

  1. இரட்டைமலை சீனிவாசன்
  2. B.R. அம்பேத்கார்
  3. ராஜாஜி ஈ) எம்.சி. ராஜா

விடை ; இரட்டைமலை சீனிவாசன்

3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ______________________ இல் உருவாக்கப்பட்டது.

  1. 1918
  2. 1917
  3. 1916
  4. 1914

விடை ; 1918

4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ______________________ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.

  1. பணியாளர் தேர்வு வாரியம்
  2. பொதுப் பணி ஆணையம்
  3. மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
  4. பணியாளர் தேர்வாணையம்

விடை ; பணியாளர் தேர்வு வாரியம்

5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  1. எம்.சி. ராஜா
  2. இரட்டை மலை சீனிவாசன்
  3. டி.எம். நாயர்
  4. பி.வரதராஜுலு

விடை ;  எம்.சி. ராஜா

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி __________ ஆகும்

விடை ; தமிழ்

2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் _____________ ஆவார்

விடை ; F.W. எல்லிஸ்

3. __________________ தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

விடை ; மறைமலை அடிகள்

4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ____________________ ஆகும்

விடை ; நீதிகட்சி

5. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் ________________ என மாற்றம் பெற்றது

விடை ; பரிதிமாற் கலைஞர்

6. _______________ தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்

விடை ; ஆபிரகாம் பண்டிதர்

7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்  _________________ ஆவார்.

விடை ; முத்துலெட்சுமி அம்மையார்

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது

ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுதி

iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

  1. (i), (ii) ஆகியன சரி
  2. (i), (iii) ஆகியன சரி
  3. (iv) சரி
  4. (ii), (iii) ஆகியன சரி

விடை ; (i), (iii) ஆகியன சரி

2. கூற்று: சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம்: இக்காலக்கட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

  1. காரணம், கூற்று ஆகியவை சரி
  2. கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல
  3. காரணம், கூற்று இரண்டுமே தவறு
  4. காரணம் சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

விடை ; காரணம், கூற்று ஆகியவை சரி

IV) பொருத்துக:-

  1. திராவிடர் இல்லம் – மறைமலையடிகள்
  2. தொழிலாளன் – இரட்டைமலை சீனிவாசன்
  3. தனித் தமிழ் இயக்கம் – சிங்காரவேலர்
  4. ஜீவிய சரித சுருக்கம் – நடேசனார்

விடை ; 1-அ, 2-இ, 3-அ, 4-ஆ

V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

  • காலனியத்தின் பண்பாட்டு ஆதிக்கமும் மனிதநேயத்தின் எழுச்சியும் இந்தியத் துணைக் கண்டத்தின் சமூகப் – பண்பாட்டு வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.
  • நவீன தமிழ்நாடும் அத்தகைய வரலாற்று மாற்றத்தை அனுபவித்தது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அவர்களின் அடையாள கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன.
  • அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின.
  • அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன.
  • நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின. சமயச்சார்பற்ற எனச் சொல்லத்தகுந்த நூல்களும் வெளியிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

2. தென்னிந்திய மொழிகளுக்காககால்டுவெல்லின் பங்களிப்பினை நன்குப் புலப்படுத்துக.

  • தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக் குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.
  • ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.
  • திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

3. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.

  • சி.வை. தாமோதரனார்
  • உ.வே. சாமிநாதர்
  • பரிதிமாற்கலைஞர்
  • மறைமலையடிகள்
  • சுப்பிரமணிய பாரதி
  • ச.வையாபுரி
  • கவிஞர் பாரதிதாசன்

ஆகியோர் தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்தன

4. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

  • நீதிக்கட்சி 1926ல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
  • எந்தவொரு தனிநபரும், சாதி வேறுபாடின்றி கோயில்களின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகலாம்
  • கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்க வழிவகை செய்யப்பட்டது.

5. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • தமிழில் – திராவிடன்
  • ஆங்கிலத்தில் – ஜஸ்டிஸ்
  • தெலுங்கில் – ஆந்திர பிரகாசிகா

6. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

  • 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கினார்
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • “திருமணம் செய்து கொடுப்பது” எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன
    என்றார். அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.
  • முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்றார்.

VI  விரிவாக விடையளிக்கவும்

1. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.

  • காலனியாதிக்கத்தின் போது இந்திய துணைக்கண்டத்தில் தமிழ் மறுமலர்ச்சியின் போது பண்பாடு, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.
  • நவீீன தமிழ்நாடும் அத்தகைய வரலாறு மாற்றத்தை அனுபவித்தது.
  • இது தமிழ்மொழி கலாச்சாரத்தையும், அதன் அடையாளத்தையும் மாற்றி அமைத்தது.
  • அச்சு இயந்திரத்தின் வருகையும், தமிழ்மொழி மீது மேற்கொளப்பட்ட ஆய்வுகளும் தமிழ் மறுமலர்ச்சி வித்திட்டது.
  • ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய முதல்மொழி தமிழ்மொழியே என் சிறப்புக் கிடைத்தது.
  • 1578இல் தம்பிரான் வணக்கம் எனும் நூல் கோவாவில் வெளியிடப்பட்டது. திருக்குறள் 1812இல் புத்தமாக வெளிவந்து.
  • பண்டைய தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே புத்தெழுச்சி ஏற்பட்டது.
  • சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை அச்சு வடிவில் கொண்டு வர அரும்பாடு பட்டனர்
  • பழம்பெரும் நூல்கள் வெளியிட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
  • தமிழர்களின் அடையாளங்களை பண்டைய தமிழ் நூல்கள் அச்சு வடிவில் வெளிக்கொணர்ந்தது.
  • இராபர்ட் கால்டுவெல் தமிழின் தொன்மையை நிலைநாட்டினார்
  • பி.சுந்தரனார், திரு.வி.க., பாரதிதாசன், பரிமாற் கலைஞர், மறைமலையடிகள் தமிழ் மறுமலர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பங்கெடுத்த தமிழ் அறிஞர்கள்

2. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்.

நீதிக்கட்சியின் தோற்றம்:-

  • தமிழக அரசியில் களங்களில் பிராமணர் ஆதிக்கம் தொடர்ந்ததால் பிராமணர் அல்லாத டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை 1916 நவம்பர் 20இல் உருவாக்கினர்.
  • தமது கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.
  • ஜஸ்டிஸ் என்ற ஆங்கில பத்திரக்கையின் பேரில் 1920 நீதிகட்சியாக பெயரமாற்றம் பெற்றது.
  • 1920இல் சென்னை மாகாண தேர்தலில் வெற்றி பெற்று A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.

சமூக நீதி பங்களிப்பு:-

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கியது.
  • சாதி மறுப்புத் திருமணங்களிற்கு தடையாக இருந்து சட்டச் சிக்கல்களை அகற்றியது.
  • பொது இடங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்டுத்த நடவடிக்கை எடுத்தது.
  • 1921இல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதன் முலாக கொண்டு வந்தது.
  • 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை அறிமுகப்படுத்தி இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது.
  • 1926இல் இந்து அறநிலையத்துறை சட்டத்தை கொண்டு வந்து கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க வழி செய்தது.
  • ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட இலவச மனைப்பட்டாகள் வழங்கியது.
  • மதிய உணவுத் திட்டம் சென்னையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது..
  • தேவதாசி முறையை ஒழித்தது

3. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.

  • பெரியார் ஈ.வெ.ராமசாமி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
  • ஆரம்ப காலங்களில் மத பற்றாளராக இருந்து பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  • காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தை வெறுத்து 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

பெரியாரின் பங்களிப்பு

  • பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.
  • குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) போன்ற பலசெய்தித்தாள்களையும் இதழ்களையும் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
  • பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்.
  • ஓடுக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார்
  • மது குடிப்பதை தவிர்க்க தனது தோட்த்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டினார்.
  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
  • குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.
  • முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்றார்.
  • கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர் முறையை எதிர்த்து அனைத்து நபர்களும் அர்ச்சகர் ஆகலாம் என வாதிட்டவர்
  • சுயமரியாதை திருமணங்களைப் பரிந்துரைத்து செயல்படுத்தியவர்
  • சேரன்மகாதேவி குருகுலப் பள்ளியில் நடைபெற்ற சாதி வேறுபாடுகளை களைய முற்பட்டவர்

 

சில பயனுள்ள பக்கங்கள்