10th Std Social Science Solution in Tamil | Lesson.4 The World after World War II

பாடம் 4. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

10th-Std-Social Science-Answers-in-Tamil-The World after World War II

பாடம் 4. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

கலைச்சொற்கள்

பகையுணர்வு கொண்டAntagonisticacting against or indicating
நழுவுதல்Wriggleout to avoid doing something
வளர்ச்சி, உயர்வுAscensionthe act of rising to an important position or a higher level, a movement upward
அதிருப்திDisillusioneddisappointed on finding out something is not as good as hoped
விலகியிருத்தல், ஒதுங்கியிருத்தல்Abstainingrestrain oneself from doing something
வெறுப்புணர்ச்சி, கசப்புணர்வுEmbittercause to feel bitter – to make hateful
திறனற்றதாக்குதல், முடமாக்குதல்Incapacitatedlacking in or deprived of strength or power
நுண்ணுயிரியல் ஆயுதங்கள்Bacteriological weaponsthe use of harmful bacteria as a weapon

சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

  1. உட்ரோ வில்சன்
  2. ட்ரூமென்
  3. தியோடர் ரூஸ்வேல்ட்
  4. பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்

விடை: ட்ரூமென்

2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

  1. செப்டம்பர் 1959
  2. செப்டம்பர் 1949
  3. செப்டம்பர் 1954
  4. செப்டம்பர் 1944

விடை: செப்டம்பர் 1949

3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ________ ஆகும்.

  1. சீட்டோ
  2. நேட்டோ
  3. சென்டோ
  4. வார்சா ஒப்பந்தம்

விடை: நேட்டோ

4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

  1. ஹபீஸ் அல் -ஆஸாத்
  2. யாசர் அராபத்
  3. நாசர்
  4. சதாம் உசேன்

விடை: யாசர் அராபத்

5. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

  1. 1975
  2. 1976
  3. 1973
  4. 1974

விடை: 1976

6. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

  1. 1979
  2. 1989
  3. 1990
  4. 1991

விடை: 1991

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் _______ ஆவார்.

விடை: டாக்டர் சன்யாட்வசன்

2. 1918இல் ________ பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.

விடை: பீகிங்

3. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் ________ ஆவார்.

விடை: ஷியாங்-கை-ஷேக்

4. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ________ ஆகும்

விடை: சென்டோ/பாக்தாத் ஒப்பந்தம்

5. துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ________ ஆகும்

விடை: வெர்செயில்ஸ்

6. ஜெர்மனி நேட்டோவில் ________ ஆண்டு இணைந்தது.

விடை: 1955

7. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ________ நகரில் அமைந்துள்ளது

விடை: ஸ்ட்ராஸ்பர்க்

8. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ________ ஆகும்.

விடை: மாஸ்டிரிக்ட் – நெதர்லாந்து

சரியான வாக்கியம்/வாக்கியங்களைத் தெரிவு செய்க:-

1. i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.

ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.

iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.

iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்குதன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.

  1. ii, iii மற்றும் iv சரி
  2. i மற்றும் ii சரி
  3. iii மற்றும் iv சரி
  4. i, ii மற்றும் iii சரி

விடை: i மற்றும் ii சரி

2. கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.

காரணம்: அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வர நினைத்தது

  1. கூற்றும் காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
  2. கூற்றும் காரணமும் தவறானவை
  3. கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றைத் துல்லியமாக விளக்குகிறது
  4. கூற்று தவறு ஆனால் காரணம்

விடை: கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றைத் துல்லியமாக விளக்குகிறது

3. i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1878) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறிப்படுகிறது.

ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.

iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.

iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.

  1. i மற்றும் ii சரி
  2. ii மற்றும் iii சரி
  3. i மற்றும் iii சரி
  4. i மற்றும் iv சரி

விடை: i மற்றும் iii சரி

பொருத்துக

1. டாக்டர் சன் யாட் சென்தெற்கு வியட்நாம்
2. சிங்மென் ரீகோமிங்டாங்
3. அன்வர் சாதத்கொரியா
4. ஹோ சி மின்எகிப்து
5. நிகோ டின் டியம்வடக்கு வியட்நாம்
விடை: 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ, 5 – அ

சுருக்கமாக விடை தருக

1. சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்றுகாரணிகளைக் குறிப்பிடுக.

  • மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது.
  • புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர்.
  • உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911ஆம்ஆண்டு அக்டோபரில் ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது.

2. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

  • 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
  • ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 100,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934இல் கிளம்பினர். அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
  • இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களைக் கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.

3. பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக.

  • துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் 1955-ல் ஏற்படுத்திய ஒப்பந்தம் பாக்தாத் ஒப்பந்தம் ஆகும்.
  • அமெரிக்க ஐக்கிய நாடுக்ள் இவ்வுடன்படிக்கையில் 1958-ல் இணைந்ததோடு இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு என்று மாற்றியழைக்கபட்டது.

4. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக்கொள் ஐக்கிய அமெரிக்க நாடு மார்ஷல் திட்த்தை உருவாக்கியது. இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கா அமெரிக்க டாலர்களை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்தது

5. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

ஐக்கிய அமெரிக்க நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகளை உலக அரசியலில் முதலாம் உலக நாடுகள் என்றும் சோவியத் நாட்டின் தலைமயில் கூடிய பொதுவுடைமை நாடுகளை இரண்டாம் உலக நாடுகள் என்று வழங்கப்பட்டன். இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்டன.

6. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?

  • காஸ்ட்ரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கோடு அதன் விமான தளங்களை அமெரிக்க ஐக்கிய நாடுகள் குண்டு வீசித் தாக்கியது.
  • அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் கியூபாவைச் சுற்றிவளைத்தன.
  • சோவியத்நாடு கியூபாவில் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை இரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
  • இறுதியாக சோவியத்நாட்டின் குடியரசுத்தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப்பெற உறுதியளித்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

விரிவான விடை தருக

1. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.

தென்கிழக்குச் சீனாவில் உள்ள ஹுனான் நகரில் மா சே-துங் பிறந்தார். தன் இளவயதில் புரட்சிப்படை ஒன்றை ஆரப்பித்தார். நூலகர்-கல்லூரி பேராசிரியர் என அவரது வாழ்க்கை மலர்ந்தது. ஹனான் நகரை மையமாகக் கொண்டு தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் முழு பொதுவுடைமைவாதியாக மாறியிருந்தார்.

  • சீனா முழுவதும் நீடித்த சச்சரவுகள் முடிவிற்கு வந்த பின் 1949-ல் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பீகிங் நகரில் கூடியது.
  • பொதுவுடைமை மற்றும் இடதுசாரி அமைப்புகள் மா து துங்கை தலைவராக தேர்ந்தெடுத்து நடுவண் அரசு ஆட்சி பொறுப்பேற்றது.
  • இவர்  தலைமையில் ஐந்தாண்டுகள் ஆட்சி நடைபெற்றது
  • இவரின் தலைமையில் உருவான சீன மக்கள் குடியரசு செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
  • மே சே துங்கின் இளமைப்பருவ நீண்ட பயணம், இராணுவப்படை மற்றும் கொரில்லாப் போர் முறை அவரை சிறந்த தலைமைப் பண்பை தந்தது
  • இன்று உலகில் சீனா பெரும் சக்தியாய் உருவானதற்கு மா சே துங்கின் அரிய பணியே காரணமாகும்

2. ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.

ஐரோப்பியக் குழுமம்

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியில் பொருளாதார ஒற்றுமையே ஐரோப்பியா நாடுகளை ஒன்றிணைக்க முடிந்தது. அதன் விளைவே பத்துநாடுகள் லண்டனில் மே 1949இல் கூடி ஐரோப்பியசமூகத்தை உருவாக்க கையொப்பமிட்டன.

ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்

ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் (பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், ஹாலந்து, லக்ஸம்பர்க்) கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

ஐரோப்பியப் பொருளாதார சமூகம்

சந்தைப்போட்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது. பொதுவான விவசாயக் கொள்கையையும் பொதுவான வெளிநாட்டு வணிகத்தையும் இவ்வமைப்பு உருவாக்கியது. ஐரோப்பிய பொதுச்சந்தை என்பது ஒரு வெற்றிகரமான முயற்சியாகும்.

ஒற்றை ஐரோப்பியச் சட்டம்

ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1 ஜூலை 1987இல் நடைமுறைக்கு வந்தது. அது ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்டவடிவம் கொடுத்தது

ஐரோப்பிய ஒன்றியம்

1992 பிப்ரவரி 7இல் கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிக்ட் (நெதர்லாந்து) ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது. பொதுவான நிதிக் கொள்கையும் நாடுகள் வழங்கிய பணத்தை மீறிய பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமும் (யூரோ) முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நிர்வகிக்கும் பொதுநிறுவனங்களும் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. பிரெஸெல்ஸ் (பெல்ஜியம்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment