பாடம் 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
பாடம் 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
கலைச்சொற்கள்
| ஒற்றுமை உணர்வு, பொதுக் காரியத்திற்கான ஆதரவு | Solidarity | a bond of unity, support for a common cause |
| விலைவீழ்ச்சி, சரிவு | Slump | a sudden severe or prolonged fall in the price |
| திவால், கடன் தீர்க்க முடியா நிலை | Bankruptcy | insolvency, financial ruin |
| பணமதிப்புக் குறைதல் | Devaluation | a decrease in the value of a country’s currency |
| மிரட்டல, அச்சுறுத்தல் | Intimidation | threat, the act of making fearful |
| வலுப்படுத்தினர் | Bolstered | strengthened |
| மனத்தளர்ச்சி அடைதல், நம்பிக்கை இழத்தல் | Demoralized | having lost confidence or hope, disheartened |
| கெட்டிக்காரத்தனமாய் அல்லது சூழ்ச்சியாய் கையாளு | Manipulate | control or influence a person or situation cleverly, unfairly to achieve a specific purpose |
| செல்லாதாக்கல, ரத்து செய்தல் | Annulling | declaring invalid or null and void |
சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
- ஜெர்மனி
- ரஷ்யா
- போப்
- ஸ்பெயின்
விடை: போப்
2. யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
- ஹெர்மன் கோர்ட்ஸ்
- பிரான்சிஸ்கோ பிசாரோ
- தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
- முதலாம் பெட்ரோ
விடை: ஹெர்மன் கோர்ட்ஸ்
3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
- ஆங்கிலேயர்
- ஸ்பானியர்
- ரஷ்யர்
- பிரெஞ்சுக்காரர்
விடை: ஸ்பானியர்
4. லத்தீன் அமெரிக்காவுடன் நல்ல அண்டை வீட்டுக்காரன் எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
- ரூஸ்வெல்ட்
- ட்ரூமன்
- உட்ரோவில்சன்
- சீனா
விடை: ரூஸ்வெல்ட்
5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
- ஐரோப்பா
- லத்தீன் அமெரிக்கா
- இந்தியா
- சீனா
விடை: லத்தீன் அமெரிக்கா
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் ________
விடை: பெர்டினன்ட் லாஸ்ஸல்லி
2. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ________
விடை: ஜோசப் கோயபெல்ஸ்
3. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ________ இல் நிறுவப்பட்டது.
விடை: 1927
4. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ________ என அழைக்கப்பட்டது
விடை: கெஸ்ட்போ
5. தென்னாப்பிரிக்க ஒன்றியம் ________ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது
விடை: 1910
6. ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ________ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடை: 27
7. போயர்கள் ________ என்றும் அழைக்கப்பட்டனர்.
விடை: ஆப்பிரிக்க நேர்கள்
சரியான கூற்றைத் தேர்வு செய்க:-
1. i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் நாளில் எற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
- i), ii) ஆகியவை சரி
- iii) சரி
- iii), iv) ஆகியவை சரி
- i), ii), iii) ஆகியவை சரி
விடை: i), ii), iii) ஆகியவை சரி
2. கூற்று: தற்காப்பு பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல்
இருந்ததனால் இந்நிலை உண்டானது
- கூற்று, காரணம் இரண்டுமே சரி
- கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
- கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
- காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.
விடை: கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
3) கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
காரணம் : ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர்
இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
- கூற்று, காரணம் இரண்டுமே சரி
- கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல
- கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு
- கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை.
விடை: கூற்று, காரணம் இரண்டுமே சரி
பொருத்துக
| 1. டிரான்ஸ்வால் | ஜெர்மனி |
| 2. டோங்கிங் | ஹிட்லர் |
| 3. ஹின்டன்பர்க் | இத்தாலி |
| 4. மூன்றாம் ரெய்க் | தங்கம் |
| 5. மாட்டியோட்டி | கொரில்லா நடவடிக்கைகள் |
| விடை: 1 – ஈ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – இ | |
சுருக்கமாக விடையளிக்கவும்
1. இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை பயங்கரம்’ குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
- 1929-ல் வியட்நாம் வீரர்கள் ராணுவப் புரட்சி செய்தனர்.
- பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியிலும் தோல்வி அடைந்தது.
- இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது.
- இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடரந்து வெள்ளை பயங்கரவாதம் என்பது அரங்கேறியது.
- புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்
2. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
- 1922 ஆக்டோபரில் முசோலினி பாசிஸ்டுகளின் ரோமாபுரியை நோக்கிய மாபெரும் அணிவகுப்பு ஒன்றை நடத்தினார்.
- முசோலியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார்.
2. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.
- இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932 நடைபெற்ற ஒட்டவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
- இம் மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக் கொண்டன.
3. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும், உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
எ.கா: வேளாண் உற்பத்தி பொருள்களின் விலை பாதியாக குறைந்தது.
5. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக.
இச்சொல் தொலை தூர நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும் தக்க வைத்துக் கொள்ளவும் அமெரிக்கா பின்பற்றியக் கொள்கை ஆகும்.
6. 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக.
- காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
- ஆனால் ஆங்கிலேயருக்கும், தென்னாப்பிரிக்க போயர்களுக்கும் இடையே நடைபெற்றப் போர் இத் தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.
விரிவான விடையளிக்கவும்
1. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
- 1919ஆம் ஆண்டில், ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி சுருக்கமாக நாசி (Nazi) கட்சியை நிறுவியது.
- ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
- முதல் உலகப்போரின் போது பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
- அவரின் ஆற்றல் மிக்க உரை வீரர்களைத் தட்டி எழுப்பியது. 1923இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் முயற்சியை மேற்கொண்டார்.
- மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர் மேற்கொண்ட தேசியப்புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது. சிறையில் இருந்தபோது தனது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein kampf – எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார்.
- 1932இல் நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 6,000,000 வாக்குகளைப் பெற்றனர்.
- முதலாளிகள், சொத்து உரிமையாளர்கள் நாசிசத்தை ஆதரிக்க தொடங்கினர்.
- இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஹிட்லர் தவறான வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
2. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.
மாகாணங்களில் இரட்டையாட்சி
இந்தியாவில் காலனிய நீக்கச்செயல்பாடானது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1905இல் சுதேசி இயக்கத்தோடுத் துவங்கியது. முதல் உலகப்போரானது விரைவான அரசியல் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. 1919இல் இந்திய அரசுச்சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.
இந்தியாவைத் தொழில்மயமாக்குவதில் நடவடிக்கைக் குறைபாடுகள்
காலனியப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்கள் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு கிட்டியது. புதிய துறைகள் தொடர்பாக முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது. ஆனால் ஆங்கிலேய நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின் போது இந்தியா
1929ஆம் ஆண்டுப் பொருளாதாரப் பெருமந்தம் ஆங்கிலேயே வணிக வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும்சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும் இழப்பை சரி செய்ய வரிகள் விதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து போராட்டங்களும் வெடித்தன. வரவு-செலவு கணக்குகளை சமன்படுத்து கொள்கையை கட்டாயப்படுத்த இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்தியத் தாக்கம்
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும் உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரணஅடியைக் கொடுத்தது. எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலை பாதியாகக் குறைந்தது. பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியை பெற்றது.
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
1935 இந்திய அரசுச் சட்டம். இச்சட்டம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.
3. தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
- தென்னாப்பிரிக்காவில் இருமுக்கிய அரசியல்கட்சிகள் செயல்பட்டன.
- அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களைக் கொண்ட யூனியனிஸ்ட் கட்சி மற்றும் ஆப்பிரிக்க நேர்கள் என்றழைக்கப்பட்ட போயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த தென்ஆப்பிரிக்கக் கட்சி.
- முதல் பிரதமமந்திரியான போதா, தென்ஆப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர்
- ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
- தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தபோராடும் குணமிக்க ஒருபிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக்கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
- 1920ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சி நாற்பத்து நான்கு இடங்களைக் கைப்பற்றியது.
- தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்மட்ஸ் என்பாரின் தலைமையில் நாற்பத்தொன்று இடங்களில் வெற்றி பெற்றது.
- இத்தருவாயில் ஆங்கிலேயர் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது.
- போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.
சில பயனுள்ள பக்கங்கள்
