Tamil Nadu 10th Standard Tamil Book உரைநடையின் அணிநலன்கள் Solution | Lesson 1.4

பாடம் 1.4. உரைநடையின் அணிநலன்கள்

நூல்வெளி

எழில்முதல்வன் எழுதிய ‘புதிய உரைநடை’ என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது.

மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.

குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர்.

மரபுக் கவிதை , புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர்.

இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.

புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.

முன்தோன்றிய மூத்தகுடி

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை

“வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”

சிலப்பதிகாரம், காடுகாண் காதை: 53-55

II. குறு வினா

1. ஆசிரியப்பா இயற்றுபவர் _______________

விடை : குன்றூர்க் கிழார்

2. குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் _______________

விடை : கபிலர்

3. குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் _______________

விடை : நா.பார்த்தசாரதி

4. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை _________ என்கிறோம்.

விடை : இணை ஒப்பு (analogy)

5. இரா.பி.சேதுபிள்ளை எழுதிய நூல் ___________

விடை : தமிழின்பம்

6. கலப்பில்லாத பொய் ___________ என்கிறோம்

விடை : சொல்முரண் (Oxymoron)

7. முதல் தமிழ்க் கணினி உருவாக்கப்ட்ட ஆண்டு

விடை : 1983

8. முதல் தமிழ்க் கணினிக்கு இடப்பட்ட பெயர் ___________ 

விடை : திருவள்ளுவர்

9. புதிய உரைநடை நூலின் ஆசிரியர்___________ 

விடை : மா.இராமலிங்கம்

10. எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி ___________ 

விடை : மாநிலக்கல்லூரி

11. எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துவதை ___________ என்று அழைப்பர்

விடை : இணை ஒப்பு

III. குறு வினா

1. உருவகம் பற்றி தண்டி என்பவரின் கூற்றினை எழுதுக

‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்’ என்பது தண்டியின் கூற்றாகும்.

2. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” என்று எழுத்தாளர் வ.ராமசாமி எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” என்று எழுத்தாளர் வ.ராமசாமி ‘மழையும் புயலும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

3. இலக்கணை என்றால் என்ன?

உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வது ‘இலக்கணை’ எனப்படும்.

4. முரண்படு மெய்ம்மை’ என்பது என்ன?

உண்மையில் முரண்படாத – மெய்ம்மையைச் சொல்லுவது ‘முரண்படு மெய்ம்மை’ (paradox) எனப்படும்.

5. எதிரிணை இசைவு என்பதன் விளக்கம் தருக

சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை  அமைத்து எழுதுவது எதிரிணை இசைவு (Antithesis) என்கிறோம்.

III. சிறு வினா

1. முதல் தமிழ்க்கணினி – குறிப்பெழுதுக

முதல் தமிழ்க் கணினி தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது.

இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது.

சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி ஆகும்.

2. பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா பேசியதினை எழுதுக

“அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக் கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?… எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்.”

சில பயனுள்ள பக்கங்கள்