பாடம் 2.3 மேகம்

உயிரின் ஓசை > 2.3 மேகம்
நூல் வெளி
| முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் எண்பதுகளில் கணையாழி என்னும் இதழில் எழுத தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். சுயமுன்னேற்றம் பற்றி எழுதியும் பேசியும் வருபவர். இவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத் தொகுதிகள் ஆகியவற்றுடன் கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலையும் படைத்துள்ளார். |
பாடநூல் வினாக்கள்
குறு வினா
மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
- மென்மையான மேகங்கள் துணிச்சலாக தமது முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கின்றன.
- கருணையுடன் தாகம் தீர்க்கின்றன.
- தாகம் தீர்க்கும் போதே தண்ணீரும் இல்லாமல் தன்னுயிரும் போகாமல் வான் வெளியில் மிதந்து செல்கின்றன.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. நாகூர் ரூமி இயற்பெயர்
- முகம்மதுரஃபி.
- முகம்மது மீரான்
- முகம்மது இஸ்மாயில்
- முகம்மது ரசூல்
விடை : முகம்மதுரஃபி
2. எண்பதுகளில் கணையாழி என்னும் இதழில் எழுத தொடங்கியவர்.
- நாகூர் ரூமி
- குணங்குடி மஸ்தான் சாகிபி
- முகம்மது இஸ்மாயில்
- முகம்மது ரசூல்
விடை : முகம்மதுரஃபி
3. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
- நெல்லை
- மதுரை
- திருச்சி
- தஞ்சை
விடை : தஞ்சை
4. நாகூர் ரூமி எண்பதுகளில் ________ இதழில் எழுதத் தொடங்கினார்.
- குங்குமம்
- கணையாழி
- தென்றல்
- புதிய பார்வை
விடை : கணையாழி
5. நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்)
- சொல்லாத சொல்
- ஏழாவது சுவை
- கப்பலுக்குப் போன மச்சான்
- சுபமங்களா
விடை : கப்பலுக்குப் போன மச்சான்
6. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று
- கப்பலுக்குப் போன மச்சான்
- நதியின் கால்கள்
- கொல்லிப்பாவை
- மீட்சி
விடை : நதியின் கால்கள்
குறு வினா
1. நாகூர் ரூமி எவ்வகை தளங்களில் இயங்கி வருபவர்?
- கவிதை
- குறுநாவல்
- சிறுகதை
- மொழிபெயர்ப்பு
2. நாகூர் ரூமியின் கவிதை தொகுதிகள் யாவை?
- நதியின் கால்கள்
- ஏழாவது சுவை
- சொல்லாத சொல்
3. நாகூர் ரூமி படைப்புகள் யாவை?
- மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- சிறுகதைத் தொகுதிகள்
- கப்பலுக்குப் போன மச்சான் என்ற நாவல்
சிறு வினா
நாகூர் ரூமி பற்றி குறிப்பு வரைக
| இயற்பெயர் – முகம்மதுரஃபி பிறப்பு – தஞ்சை மாவட்டம் எழுத தொடங்கிய இதழ் – கணையாழி இயங்கிய தளம் – கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு கவிதை தொகுதிகள் – நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் எழுதிய நாவல் – கப்பலுக்குப் போன மச்சான் |
சில பயனுள்ள பக்கங்கள்