Tamil Nadu 10th Standard Tamil Book கோபல்லபுரத்து மக்கள் Solution | Lesson 3.4

பாடம் 3.4 கோபல்லபுரத்து மக்கள்

10ஆம் வகுப்பு தமிழ், கோபல்லபுரத்து மக்கள் பாட விடைகள்

கூட்டாஞ்சோறு > 3.4 கோபல்லபுரத்து மக்கள்

நூல்வெளி

கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்.

ஆசிரியர் தன் சொந்தஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல்.

இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.

இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன;

இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இவர் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.

எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.

முன்தோன்றிய மூத்தகுடி 

திருச்சி மாவட்டத்தின் உறையூர்
“கறங்கு இசை விழவின் உறந்தை …..”

அகநானூறு, 4:14

கரிசல் இலக்கியம்

கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.

காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை ச் சார்ந்து வாழ்கிற மானா வாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.

கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.

கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.

அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக…

பாடப்பகுதியிலுள்ள வட்டார வழக்குச் சொற்களை எழுதுக

  • பாச்சல் – பாத்தி
  • பதனம் – கவனமாக
  • நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
  • கடிச்சு குடித்தல் – வாய் வைத்துக் குடித்தல்
  • மகுளி – சோற்றுக் கஞ்சி
  • வரத்துக்காரன் – புதியவன்
  • சடைத்து புளித்து – சலிப்பு
  • அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)
  • தொலவட்டையில் – தொலைவில்

2. கிராமத்து விருந்தோம்பல் – சிறுகுறிப்பு வரைக

கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் மனசுக்குள் எப்பவும் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்து வந்த களைப்பை மறக்கடிக்கச் செய்யும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.

 

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ________ எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.

விடை: கி.ராஜநாராயணன் 

2. கி.ராஜநாராயணன் ________ ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்

விடை: 1991

சில பயனுள்ள பக்கங்கள்

Exit mobile version