Tamil Nadu 10th Standard Tamil Book விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Solution | Lesson 4.4

பாடம் 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

10ஆம் வகுப்பு தமிழ், விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை பாட விடைகள் - 2023

நான்காம் தமிழ் > 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

ஸ்டீபன் ஹாக்கிங் நூல்கள்

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

1988ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.

முன்தோன்றிய மூத்தகுடி 

கரூர் மாவட்டத்தின் கருவூர் (கரூர்)

“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திருமாவியல் நகர்க் கருவூர் முன்துறை”

அகநானூறு, 93 : 20-21

அறிஞர்களும் கூற்றும்

“அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தை யும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது”

– ஐன்ஸ்டைன்

“வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்”

– ஸ்டீபன் ஹாக்கிங்

III. குறு வினா

1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சிறு குறிப்பு வரைக

பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு, பத்துக் காட்சிக் கூடங்கள் உள்ளன. பரிணாம வளர்ச்சிப் பூங்கா, புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா முதலியவை இங்கு உள்ளன. மேலும் குழந்தைகள் விளையாடத்தக்க பொம்மைகளைக் கொண்ட பூங்காவும் இங்குள்ளது.

2. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கோளரங்கம் பற்றிய சிறப்பினை எழுதுக

இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரை வட்ட வானத்திரை இங்குதான் உள்ளது. இது 2009ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

3. ‘ஸ்டீபன் ஹாக்கிங் படத்தின் கீழ் தோன்றிய தொடர்களை எழுதுக

“மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக் கூர்மை”

“அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே”

4. பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகளை கூறுக

பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் ( Big Bang Theory) உருவானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார். இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை’ என்றார்.

5. தலை விதி பற்றிய ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கருத்துகள் யாவை?

தலை விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன்
இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?

III. சிறு வினா

1. ‘ஹாக்கிங் கதிர் வீச்சு’ என்பது யாது?

1. கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வரமுடியாது.

2. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து (Event Horizon) கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

3. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்துவிடும்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் இந்த ஆராய்ச்சி முடிவு ‘ஹாக்கிங் கதிர் வீச்சு’ என்று அழைக்கப்படுகிறது.

2. ஸ்டீபன் ஹாக்கிங்கின் முயற்சிக்குக் கிடைத்த விருதுகளை பட்டியலிடுக

  1. அமெரிக்காவின் உயரிய விருதான, அதிபர் விருது
  2. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
  3. உல்ஃப் விருது
  4. காப்ளி பதக்கம்
  5. அடிப்படை இயற்பியல் பரிசு

3. ஸ்டீபன் ஹாக்கிங், கலீலியோ, ஐன்ஸ்டைன் மூவருக்கும் உள்ள ஒப்புமைகளை எழுதுக

ஹாக்கிங், கலீலியோ வின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தது அறிவியலைப் பொறுத்தவரை ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம்.

ஆனால் அந்தத் தற்செயலிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது.

இம்மூன்று அறிவியலாளர்களும் அவரவர் காலத்தில் இந்தப் பேரண்டத்தை ப் பற்றி இருந்த புரிதலைப் பலமடங்கு வளர்த்தவர்கள்;

பேரண்டத்தைப் பற்றி மனிதஇனம் நம்பியதைப் புரட்டிப் போட்டவர்கள்.

ஹாக்கிங்குடைய துணிச்சல், உறுதி, அறிவாற்றல், நகைச்சுவை உணர்வு முதலானவை உலக மக்களால் என்றும் நினைவு கூரப்படும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்