Tamil Nadu 10th Standard Tamil Book புதிய நம்பிக்கை Solution | Lesson 5.4

பாடம் 5.4 புதிய நம்பிக்கை

10ஆம் வகுப்பு தமிழ், புதிய நம்பிக்கை பாட விடைகள் - 2023

மணற்கேணி > 5.4 புதிய நம்பிக்கை

நூல்வெளி

புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது.

’’உனக்குப் படிக்கத் தெரியாது’’ என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது.

உலகெங் கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்.

இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை ’’உனக்குப் படிக்கத் தெரியாது’’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன்.

இவரின் இயற்பெயர் வே.குணசேகரன்.

வயதுவந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

முன்தோன்றிய மூத்தகுடி

தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை

“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை”

ஐங்குறுநூறு 188 : 2

நெடு வினா

’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

முன்னுரை:-

வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த வகையில் கல்வி அறிவற்ற, இருட்சமூகத்தில் ஒற்றைச் சுடராய் பிறந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றி, மேர் மெக்கலியோட் பெத்யூர் கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமை வாழ்க்கை:-

மேரி தன் தாய் தந்தையோடு பருத்திக் காட்டில் வேலை செய்யும் கல்வி அறிவற்ற உழைக்கும் குடும்பம், அச்சூழலிலும் மேரி தனக்கென்ற தனிபாதை வகுப்பாள். அது, எதுவாகினும் தான் முதலில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவாள்.

மேரிக்கு எற்பட்ட அவமானம்:-

மேரி ஓருநாள் தாயுடன் வில்சன் வீட்டிற்கு செல்கிறாள். அங்கு குழந்தைகள் விளையாடுவதை கண்டு வியப்புற்றாலும் அவள் கண்கள் அங்கு இருந்த புத்தகத்தின் மீதே சென்றது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்றபோது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி உன்னால் படிக்க முடியாது என்று கூறினாள். அந்த வார்த்தை அவள் மனதைக் கிழித்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறினாள்

மேரியின் ஏக்கம்:-

வில்சன் வீட்டில் நடந்த அவமானங்களை எண்ணி கண்ணீர் வடித்தத் தன் தந்தையிடம் நான் படிக்க வேண்டும். படித்தால்தான் இச்சமூகம் மதிக்கும் என்று கூறுகிறாள்.

தந்தையின் அறிவுரை:-

மேரி நாம் பள்ளி செல்ல முடியாது. நமக்கென்று தனியாகப் பள்ளிக்கூடம் இல்லை. வெளியூரில் பள்ளியில் வெள்ளைக்காரர்கள் படிக்கும் பள்ளிதான் இருக்கிறது. அதிலும் நம்மைச் சேர்க்கமாட்டார்கள் என்றான்

மேரியின் தன்னம்பிக்கை:-

பதினொரு வயது நிரம்பி மேரி வயல்காட்டிலிருந்து பருத்தி மூட்டையைச் சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தாள். அப்போது வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத பெண் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, நீ படிக்க வேண்டும்; உன் வேலைகளை முடித்தக் கொண்டு சீக்கிரம் வரவேண்டும் என்றனர். மேரிக்கு நா எழவில்லை. வாயடைத்து நின்று வாசிக்கப் புறப்பட்டாள்; படிக்கத் தொடங்கினாள்

புதிது புதிதாக கற்றாள். தன் பாதையை மெல்ல மெல்ல உயர்த்தினாள். இறுதி வகுப்பு படித்த சான்றிதழ் பெற்றாள்.

பட்டமளிப்பு விழா:-

தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்த மேரி, வில்சனின் இளைய மகள் என்னை அவதிக்கா விட்டால் இந்த ஊக்கம் கிடைத்திருக்காது. அச்சிறுமியின் செயல் எனக்கி நேராவிட்டால் இந்த விருது பெற இயலாது என்று எண்ணி பெருமிதம் அடைந்த மேரிக்கு எழுத படிக்கத் தெரியும் எனப் படடம் அளித்து சிறப்பித்தது.

மேற்படிப்பு:-

பட்டமளிப்பு விழாவின்போத வில்சன் தோளில் மேரியை அணைத்து “நீ என்ன செய்யப்போகிறாய்” என்றார். “மிஸ் நான் மேலும் படிக்க விரும்புகிறேன்” என்றார். ஆனால் அலைகடலில் அகப்பட்ட கப்பல் கரைசேர இயலாத நிலைபோல் இருந்தாள்.

புதியதோர் பயணம்:-

மீண்டும் தன் பணியினைப் பருத்திக்காட்டில் தொடங்கினார்கள். அப்போது மிஸ் வில்சன் அங்கு வந்து, வெள்ளைக்காரப் பெண்மணி ஒரு கருப்பின குழந்தையின் படிப்பிற்கா பணம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள். நீ மேற்படிப்பிற்காக டவுனக்கு போக வேண்டும் தயாராகு என்றார் மேரியிடம்.

ஊரே கூடுதல்:-

மேரி மேல்படிப்பிற்குச் செல்ல தொடர்வண்டி நிலையத்தில் ஊரே ஒன்று கூடியது. அனைவரும் குட்பை மேரி, குட்பை வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி விடை கொடுத்தனர்.

முடிவுரை:-

சாதாரணப் பெண்ணாக பிறந்து சாதனைப் பெண்ணாக மாறியது மேரியின் வாழ்வு. மேலும் சமுதாயத்தின் அறியாமை இருளைப் போக்க தோன்றிய மேரிஜென்னின் வாழ்வியில் நிகழ்வுகளைப் போல நாமும் அவமானங்களை வெகுமானமாக மாற்ற முயற்சிப்போம்.

’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’

என்பதனை உணர்வோம்! வெற்றி பெறுவோம்!!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

கொற்கை அமைந்துள்ள மாவட்டம் ……………………

  1. திருநெல்வேலி
  2. கன்னியாகுமரி
  3. மதுரை
  4. தூத்துக்குடி

விடை : தூத்துக்குடி

குறுவினா

கமலாலயன் குறிப்பு வரை

  • மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாக படைத்துள்ளார் கமலாலயன்.
  • இவரின் இயற்பெயர் வே.குணசேகரன்.
  • வயதுவந்தோர் கல்வி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்