Tamil Nadu 10th Standard Tamil Book சித்தாளு Solution | Lesson 9.2

பாடம் 9.2. சித்தாளு

அன்பின் மொழி > 9.2. சித்தாளு

முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்;

இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.

கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர்.

மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.

மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

I. பலவுள் தெரிக.

1. இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும் இவ்வடிகளில் கற்காலம் என்பது

  1. தலைவிதி
  2. பழைய காலம்
  3. ஏழ்மை
  4. தலையில் கல் சுமப்பது

விடை : தலையில் கல் சுமப்பது

II. குறு வினா

‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

‘வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர்கள் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து ‘தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்

III. சிறு வினா

1. “சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

இடம் சுட்டல்:-

“சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம் பெற்றுள்ளது

பொருள்:-

சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை

விளக்கம்:-

அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம் கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும்.

பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நாகூர் ரூமி இயற்பெயர் __________

விடை : முகம்மதுரஃபி.

2. நாகூர் ரூமி __________ பிறந்தவர்.

விடை : தஞ்சை மாவட்டத்தில்

3. __________ என்ற நாவலை நாகூர் ரூமி எழுதியுள்ளார்.

விடை : கப்பலுக்குள் போன மச்சான்

4. நாகூர் ரூமி __________ என்னும் இதழில் முதலில் எழுத தொடங்கினார்.

விடை : கணையாழி

5. தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது __________ ஆகும்.

விடை : செங்கற்கள்

II. குறு வினா

1. நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களை கூறுக

  • மீட்சி
  • சுபமங்களா
  • புதிய பார்வை
  • குங்குமம்
  • கொல்லிப்பார்வை
  • குமுதம்
  • இலக்கிய வெளிவட்டம்

2. நாகூர் ரூமி எவ்வகை தளங்களில் இயங்கி வருபவர்?

  • கவிதை
  • குறுநாவல்
  • சிறுகதை
  • மொழிபெயர்ப்பு

என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்

3. நாகூர் ரூமியின் கவிதை தொகுதிகள் யாவை?

  • நதியின் கால்கள்
  • ஏழாவது சுவை
  • சொல்லாத சொல்

ஆகிய கவிதை தொகுதிகள் இதுவரை வெளியாகி உள்ளன

4. நாகூர் ரூமி படைப்புகள் யாவை?

  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • சிறுகதைத் தொகுதிகள்
  • கப்பலுக்குள் மச்சான் என்ற நாவல்

5. சித்தாள் கற்கள் சுமக்க காரணம் யாது?

வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும். அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.

III. சிறு வினா

சித்தாளின் இன்னல்களை விளக்குக

பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்

தன் வாழ்வை தொலைத்து விடாமல் காத்துக் கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.

வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.

அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குத்தான். இவள இறந்தால் கூட சலனம் சிறிதளவு தான்.

இந்த சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கு செங்கற்கள் அறியாது.

சித்தாளு – பாடல் வரிகள்

பொற்காலமாக இருந்தாலும்
இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்.
தொலைந்ததே வாழ்வு என
தலையில் கைவை த்து
புலம்புவார் பூமியிலே
தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய்
தலையில் கைவைக் கிறாள் இவள்.
வாழ்வில் தலை க்கனம்
பிடித்தவர் உண்டு.
தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு.
அடுக்குமாடி அலுவலகம்
எதுவாயினும்
அடுத்தவர் கனவுக்காக
அலுக்காமல் இவள் சுமக்கும்
கற்களெல்லாம்
அடுத்தவேளை உணவுக்காக.
செத்தாலும் சிறிதளவே
சலனங்கள் ஏற்படுத்தும்
சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது.

சில பயனுள்ள பக்கங்கள்