Tamil Nadu 11th Standard Tamil Book யுகத்தின் பாடல் Solution | Lesson 1.1

பாடம் 1.1. யுகத்தின் பாடல்

11ஆம் வகுப்பு தமிழ், யுகத்தின் பாடல் பாட விடைகள்

கவிதைப்பேழை > 1.1. யுகத்தின் பாடல்

நூல்வெளி

கவிஞர். சு.வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புடுங்குதீவில் பிறந்தவர்.

இவருடைய கவிதைகள் மொத்தமாக “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் 2001-ல் தொகுக்கப்ட்டுள்ளன.

இவர் கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாக பாடும் திறனும் கொண்டவர்.

வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம்பெறுகின்றன.

புதுக்கவிதை – விளக்கம்

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளிலிருந்து இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.

படிப்போரின் ஆழ்மனத்தில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது.

இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது.

எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாயப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரிலிலாத மரம்; கூடில்லாத பறவை

– இரசசூல் கம்சதாவ்

I. பலவுள் தெரிக

1. கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்
அடிமோனையை தெரிவு செய்க

  1. கபாடபுரங்களை – காவுகொண்ட
  2. காலத்தால் – கனிமங்கள்
  3. கபாடபுரங்களை – காலத்தால்
  4. காலத்தால் – சாகாத

விடை : கபாடபுரங்களை – காலத்தால்

II. குறு வினா

1. “என் அம்மை ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! –
இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

  • தொழுதவர்
  • உழுதவர்
  • விதைத்தவர்
  • வியர்த்தவர்

2. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக

“தன் இனத்தையும், மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை”

III. சிறு வினா

சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எற்றைக் குறிப்பிடுகிறார்?

  • பல தலைமுறை கடந்தும் தனது திருவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவர். தமிழ் மொழியாகிய வயலினை அறிவு கொண்டு உழுது, நற்பருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உதவியவள்.
  • ஒலிக்கும் கடலையும், நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை, தொன்மையான கபாடபுரங்களைப் பலி கொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமைச் சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி எழுதக் கற்பித்தவள்.
  • ஆதலால், தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என பாடத்தான் வேண்டும் என்கிறார் சு.வில்வரத்தினம்

கூடுதல் வினாக்கள்

I. இலக்கணக்குறிப்பு

  • வழிவழி – அடுக்குத்தொடர்
  • தீட்டித்தீட்டி – அடுக்குத்தொடர்
  • தொழுதவர் – வினையாலணையும் பெயர்
  • உழுதவர் – வினையாலணையும் பெயர்
  • விதைத்தவர் – வினையாலணையும் பெயர்
  • வியர்த்தவர் – வினையாலணையும் பெயர்
  • நிறைமணி – வினைத்தொகை
  • கனைகடல் – வினைத்தொகை
  • சாகாத – பெயரச்சம்
  • எழுகின்ற – பெயரச்சம்
  • உரமெல்லாம்  – தொகுத்தல் விகாரம்
  • மலைமுகடு (மலையின்கண் உள்ள முகடு) – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • விரல் முனை (விரலினது முனை) – ஆறாம் வேற்றுமைத் தொகை

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. தீட்டி = தீட்டு + இ

  • தீட்டு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. எழுகின்ற = எழு + கின்று + அ

  • எழு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

III. புணர்ச்சி விதிகள்

1. ஒற்றியெடுத்த = ஒற்றி + எடுத்த

  • “இ, ஈ, ஐ வழி யவ்வும்” விதிப்படி ஒற்றி + ய் + எடுத்த என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஒற்றியெடுத்த என்றாயிற்று.

2. காற்றிலேறி = காற்றில் + ஏறி

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி காற்றிலேறி என்றாயிற்று.

3. பல்லாண்டு = பல + ஆண்டு

  • “பல சில எனும் இவைமுன் பிறவரின் அகரம் ஏகலும்” விதிப்படி பல் + ஆண்டு என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” விதிப்படி பல்ல் + ஆண்டு என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பல்லாண்டு என்றாயிற்று.

4. உரமெலாம் = உரம் + எலாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி உரமெலாம் என்றாயிற்று.

5. சுவரமெலாம் = சுவர் + எலாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி சுவரமெலாம் என்றாயிற்று.

IV. பலவுள் தெரிக

1. கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைத்தொகுப்பு ____________

  1. இசையமுது
  2. அழகின் சிரிப்பு
  3. உயிர்த்தெழும் காலத்துக்காக
  4. மூங்கில் காடு

விடை : உயிர்த்தெழும் காலத்துக்காக

2. கவிஞர் சு.வில்வரத்தினம் பிறந்த புங்குடுத்தீவு _______________ உள்ளது

  1. இங்கிலாந்தில்
  2. யாழ்ப்பாணத்தில்
  3. வங்கதேசத்தில்
  4. ஆப்கானிஸ்தானில்

விடை : யாழ்ப்பாணத்தில்

3. _______________ மனித இனத்தின் ஆதி அடையாளம்.

  1. இனம்
  2. மதம்
  3. கொள்கை
  4. மொழி

விடை : மொழி

II. குறு வினா

1. “கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றி எழுதுக

  • இவர் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்
  • கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்
  • இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன

2. புதுக்கவிதை என்பதன் விளக்கம் யாது?

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதை என்பர்.

3. பன்முகத்தன்மை கொண்டது எது? எவ்வாறு?

  • பன்முகத்தன்மை கொண்டது புதுக்கவிதை
  • படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது.

4. அந்நிய தேசத்தின் நம் நாட்டு மக்களின் நிலை என்ன?

தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை மற்றும் உதற முடியாத நிலை, உரக்க குரல் எடுக்க முடியாத நிலை

III. சிறு வினா

1. மொழி – குறிப்பு வரைக

  • மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உருவானது.
  • ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவதும் மொழியே. அது, நம் இருப்பின் அடையாளம்.

2. தமிழ் மொழியின் வேர்,  எக்காலங்களிலிருந்து உயர்தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது?

நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வேர், சங்கத்தில் தொடங்கி இன்றையகாலம் வரையும் இடர் பல களைந்து, உயர்தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது.

3. சு.வில்வரத்தினம் தமிழ்தாய்க்கு எவ்வாறு பல்லாண்டு பாடுகிறார்?

  • “என் அம்மையே” எனத் தமிழ்த்தாயை அழைத்து, “வழிவழி உனது அடியைத் தொழுதவர், உழுதவர், விதைத்தவர், உழைத்து வியர்த்தவர் என அனைவருக்கும் நிறைமணி தந்தவளே! உனக்குப் பல்லாண்டு பாடத்தான் வேண்டும்” என்று சு.வில்வரத்தினம் பாடுகிறார்.

4. சு.வில்வரத்தினம் தமிழன்னையை எவ்வாறு பாட வேண்டுமென்கிறார்?

  • சுழன்றடிக்கும் காற்றையும், வீசும் அலை கடலையும், எழுமம் நெருப்பையும், மலையளவு எழும் பகைகையும் வென்று தமிழ்தாயின் தொன்மத்தைக் காலத்தான் அழியா வகையில் வலிமை சேர்க்க பாட வேண்டும் என்கிறார் சு.வில்வரத்தினம்

 

சில பயனுள்ள பக்கங்கள்