Tamil Nadu 11th Standard Tamil Book ஆறாம் திணை Solution | Lesson 1.4

பாடம் 1.4. ஆறாம் திணை

11ஆம் வகுப்பு தமிழ், ஆறாம் திணை பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 1.4. ஆறாம் திணை

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.

பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுருக்கின்றார்.

வம்சவிருத்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1996-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர்.

வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்திய பரிசையும் பெற்றுருக்கின்றார்.

I. நெடுவினா

தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது.

இலங்கை,  மவுண்லவினாவில் வாடகை வீட்டில் தமிழ்க் குடும்பம் ஒன்று. இனக்கலவரத்தின் போது வீட்டுக்காரரான சிங்களவரால் அன்று இரவு காப்பாற்றப்பட்டு, மறுநாள் அகதிகள் முகாமுக்கு சென்றது. அங்கே யாரோ அணிந்த மேல்சட்டையை மட்டும் ஒருவர் மாற்று உடையாகப் பெற்றார். உணவுக்காகத் தட்டு ஏந்தி நின்றபோது, இப்படி ஒருகணம் தம் வாழ்வில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து, உறுதியாக இருந்துள்ளார். பல வருடம் பல தேசங்களில் சுற்றி அலைந்துள்ளார்.

புலம்பெயர்தல் காரணம்

புலம்பெயர்தல் என்பது, புதிதன்று, சங்ககாலத்தில் ஐந்நிலத்தில் வாழ்ந்த தமிழர், புலம் பெயர்ந்து வாழ்ந்ததை, இலக்கியங்களில் காண முடிகிறது. அவர்கள் உயிர்க்காகவும், பொருள் தேடவும் புலம்பெயர்ந்தபோதும், வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்பாழ் எனத் தனிமகானர் பாடியுள்ளார். அக்காலத்தில் அரசனின் சீற்றத்திற்கு அஞ்சி புலம் பெயர்ந்ததுபோலச் சமீப காலங்களில் தம்மைப் போன்றோர் புலம் பெயர நேரிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீய சிந்தனையைச் சாக அடித்தவர்கள்

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், சிலவருடங்களில் தமிழ்ப் பத்திரிகைகள் தொடங்கி கோரிக்கைகளை வெற்றி பெறாதநிலையில் நிரந்தர வேலையும் அடுத்தவேளை உணவும் நிச்சயமில்லா நிலையிலும், தங்கள் புதுவாழ்வைப் பதிவு செய்கின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சாதனை

புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழைக்கைவிடும் என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கி, கணினி யுகத்தில் தமிழ்கற்று உயர் இலக்கியங்களைப் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துகிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை புலம் பெயர்ந்த தமிழர்கள், பத்துலட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள். ஒரு காலத்தில சூரியன் மறையாத பிரட்டிஷ் ராச்சியம் என்று சொன்னதுபோல், இன்று சூரியன் மறையாத தமிழ்புலம் என்று புலம் பெயரந்த தமிழர்கள் தோற்றுவித்தனர்.

கனடாவில் சாலை ஒன்றுக்கு வன்னிவீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பெயரை மாற்றவோ, சிதைக்கவோ முடியாது. 2012 முதல் ஆண்டுதோறம் ஜனவரி 14-ம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகனப் படுத்தப்பட்டுள்ளது. இவை ஈழத் தமிழரின் புலம்பெயர்ந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

ஆறாம் திணையும் ஆறுமணிக் குருவியும்

ஆசிரியரின் ஈழத்துக் கொக்குவில் கிராமத்தில் காகமும் ஆறுமணிக் குருவியும் இருந்தன. காகம் பறக்க இரண்டு மைல் தூரமே எல்லை. ஆறுமணிக்குருவி. இமயத்தை கடந்தும் சென்று திரும்புமாம். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்த ஆறுமணிக் குருவிபோல, அவர்களுக்கு எல்லை கிடையாது. இனி அந்தத் தமிழர்களின் புலம், பனிசார்ந்த நிலமும், அதுவே ஆறாம் திணை என அ.முத்துலிங்கம் பாகுபடுத்திக் கூறியுள்ளது சிறப்பாகும்.

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. அ.முத்துலிங்கம் பிறந்த இடம் ____________ 

 1. இந்தியா
 2. பாகிஸ்தான்
 3. வங்கதேசம்
 4. இலங்கை

விடை : இலங்கை

2. ராபின்சன் குருசோ நூலின் ஆசிரியர் _______________ 

 1. பாரதியார்
 2. டேனியல் டிஃபோ
 3. சாண்டில்யன்
 4. சுரதா

விடை : டேனியல் டிஃபோ

3. கடல்புறா நூலின் ஆசிரியர் ______________

 1. பாரதியார்
 2. டேனியல் டிஃபோ
 3. சாண்டில்யன்
 4. சுரதா

விடை : சாண்டில்யன்

4. ஒரு இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூலை எரித்தால் போதும் – என்று குறிப்பிடும் நூல் எது?

 1. கடல்புறா
 2. ராபின்சன் குருசோ
 3. பறவை
 4. ஃபாரன்ஹீட் 451

விடை : ஃபாரன்ஹீட் 451

5. தமிழர் பாரம்பரிய நாள்  __________ 

 1. ஜனவரி 13
 2. பிப்ரவரி 13
 3. ஜனவரி 14
 4. பிப்ரவரி 14

விடை : ஜனவரி 14

6. ஆறாம் திணை என்பது __________ ஆகும்

 1. காடும் காடு சார்ந்த இடமும்
 2. மலையும் மலை சார்ந்த இடமும்
 3. பனியும் பனி சார்ந்த இடமும்
 4. கடலும் கடல் சார்ந்த இடமும்

விடை : பனியும் பனி சார்ந்த இடமும்

சில பயனுள்ள பக்கங்கள்