Tamil Nadu 11th Standard Tamil Book யானை டாக்டர் Solution | Lesson 2.5

பாடம் 2.5. யானை டாக்டர்

11ஆம் வகுப்பு தமிழ், யானை டாக்டர் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 2.5. யானை டாக்டர்

நூல்வெளி

ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்

விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
இயற்கை ஆர்வலர்.

யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார்.

இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள குறும்புதினம் ஜெயமோகன் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.

நெடுவினா

யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை உயிரினம் பாதுகாப்பு குறித்து நீவிர் அறிந்ததை தொகுத்கு எழுதுக

முன்னுரை

காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகள் காட்டின் மூலவர் என்பர். மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றை கொண்டதுமான யானைகள் நமது பண்பாடு, கலைகளில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்குகின்றன, அவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நாம் பல்வேறு இன்னல்களை இழைக்கிறோம் என்பதையறிய “வானத்து நிலவும் மண்ணுலகத்துக் கடலும் போல்” என்றும் அலுக்காத யானைகளின் பேருருக் காட்சியைக் காண அவற்றின் தடத்தை பின் தொடர்வோம்.

இயற்கை பாதுகாப்பு

இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர்நிலைகள் என இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. நில ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் நதி நீர் மாசுபட்டு வருகிறது. தட்பவெப்ப நிலையில் உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழைவளம் குறைந்து விட்டது. நதிகள் இன்றைய சூழலில் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி வருவததான் வேதனையானது. பெருநகரங்களில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்காக பெருமளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், நிழலில் ஒதுங்கும் விலங்கினங்கள் தங்க இடமின்றி அழிந்து போகின்றன. மரங்கள் குறைந்தால் வெப்பம் அதிகரித்து உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் இன்று அளவுக்கு அதிகமான வெப்பத்தை உணருகிறோம்.

இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளரச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது. இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர்வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. எனவே இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

உயிரினப் பாதுகாப்பு

இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகளை பாதுகாப்பது அவசியம். மரங்கள், தாவரங்கள் பெருக்கத்துக்கும், தட்ப வெப்ப நிலை சமன்பாட்டிற்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், மரங்கள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன.

உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியாதான். 1972-ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. விலங்குகள் வாழ ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதியில் 25% ஒதுக்கப்பட வேண்டும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நமது மாநிலத்தில் மொத்த வனப்பரப்பில் 29.32 பரப்பளவில் வன உயிரின காப்பங்கள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

I. குறுவினா

1. நிகண்டுகளில் உள்ள யானையக் குறிக்கும் வேறு சொற்கள் யாவை?

1. கயம்12. அரசுவா
2. வேழம்13. அல்லியன்
3. களிறு14. அனுபமை
4. பிளிறு15. ஆனை
5. களபம்16. இபம்
6. மாதங்கம்17. இரதி
7. கைம்மா18. குஞ்சுரம்
8. வாரணம்19. வல்விலங்கு
9. அஞ்சனாவதி20. கரி
10. அத்தி21. அஞ்சனம்
11. அத்தினி

2. அதிக நாள் வாழும் விலங்கு எது?

மனிதர்கள் தவிர்த்து அதிக நாள் வாழும் விலங்கு யானை ஆகும்.

3. அஞ்சும் வலிமை கொண்ட விலங்குகள் எவை?

சிங்கம், புலி முதலியன நெருங்க அஞ்சும் வலிமை கொண்ட விலங்குகள் ஆகும்

4. யானைகள் சிறப்பியல்புகள் பற்றி எழுதுக

 • யானைகள் குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை
 • அதிக ஞாபக சக்தி கொண்டவை
 • உலகில் மூன்று சிற்றினங்கள் உஞ்சியுள்ளன.
 • அவை ஆப்பிரிக்க புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும்
 • பொதுவாக எல்லா யானைகளும் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

5. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பற்றி குறிப்பு வரைக

 • யானை டாக்டர் என்ற சிறப்பு பெயரினை பெற்றவர்.
 • தமிழகத்தின் முக்கிய காட்டியல் வல்லுநர்களில் ஒருவர்
 • யானைகளுக்காகத் தம் வாழ்நாளையே அர்பணித்தவர்
 • உலகப்புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.
 • 2000-ம் ஆண்டில் வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான “வேணுமேனன் ஏலீஸ்” விருதினை பெற்றார்.
 • தமிழக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர்.

6. ஜெயமோகன் – குறிப்பு வரைக

 • ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்
 • விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
 • இயற்கை ஆர்வலர்.
 • யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார்.
 • இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள குறும்புதினம் ஜெயமோகன் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.

சில பயனுள்ள பக்கங்கள்