Tamil Nadu 11th Standard Tamil Book காவடிசிந்து Solution | Lesson 3.2

பாடம் 3.2. காவடிசிந்து

11ஆம் வகுப்பு தமிழ், ஏதிலிக்குருவிகள் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 3.2. காவடிசிந்து

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழைத் தாக்கததால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.

இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும்.

தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்;

18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.

இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

I. சொல்லும் பொருளும்

 • ஜகம் – உலகம்
 • புயம் – தோள்
 • வரை – மலை
 • வன்னம் – அழகு
 • கழுகாசல் – கழுகு மலை
 • த்வஜஸ்தம்பம் – கொடி மரம்
 • சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
 • விலாசம் – அழகு
 • நூபுரம் – சிலம்பு
 • மாசுணம் – பாம்பு
 • இஞ்சி – மதில்
 • புயல் – மேகம்
 • கறங்கும் – சுழலும்

II. இலக்கணக்குறிப்பு

 • தாவி – வினையெச்சம்
 • மாதே – விளி

III. பகுபத உறுப்பிலக்கணம்

வருகின்ற = வா (வரு) + கின்று + அ

 • வா – பகுதி
 • வரு – வா – வரு எனத் திரிந்தது விகாரம்
 • கின்று – நிகழ்கால இடைநிலை
 • அ –  வினையெச்ச விகுதி

IV. புணர்ச்சி விதிகள்

1. திருப்புகழ் = திரு + புகழ்

 • “இயல்பினம் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி திருப்புகழ் என்றாயிற்று.

2. உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்

 • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி உயர்ந்த் + ஓங்கும் என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி கரையெல்லாம் என்றாயிற்று.

V. பலவுள் தெரிக

1. காவடிச் சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?

 1. பாரதிதாசன்
 2. அண்ணாமலையார்
 3. முருகன்
 4. பாரதியார்

விடை : அண்ணாமலையார்

VI. குறு வினா

காவடிச்சிந்து என்பது யாது?

 • தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே “காவடிச்சிந்து எனப்படும்.

VI. சிறு வினா

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக

 • “காவடி” என்பது தமிழ்ப்பண்பாடுக் கூறுகளுள் ஒன்று. உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள், குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகனின் கோவிலை நோக்கி வழிபடச் செல்வர்
 • அப்போது முருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருளகளைக் காவடிகளில் கொண்டு செல்வர். அப்படிச் செல்லும்போது வழிநடைக் களைப்புப் போக, முருகப் பெருமானின் புகழைச் சிந்துவகைப் பாடலாகப் பாடுவர்.

VII. நெடு வினா

காவடிச்சிந்து ஒரு வழிநடைப்பாடல் – இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க

முருக வழிபாடு

குன்றுதோறும் கோவில் கொண்டிருக்கும் தமிழ்கடவுள் முருகன். அந்த முருகப்பெருமானை வழிபடச் செல்வோர் பால் முதலான வழிபாட்டு பொருள்களைக் காவடிகளில் வைத்துத் தோள்களில் சுமந்து செல்வர். இது தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள் ஒன்றாகும்

காவடி எடுத்தல்

காவடி எடுத்துச் செல்வதைச் சுமையாகக் கருதாமல், சுகமாக எண்ணி, வழிநடையில் மணிகளை ஒலித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாதசாரிகள் செல்வர். இது, தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் “நாட்டார் வழக்கியல்” என்னும் இசைமரபோடு கூடியதாக அமைந்துள்ளது.

முருகன் பெருமை

காவடிச்சிந்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் சென்னிகுளம் அண்ணாமலையார். இவர் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ் தந்த தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.

கழுகுமலை முருகனை வழிபடக் காவடி எடுத்துவரும் அடியவர்கள் பாடும் பாடல் முழக்கம், வானுலகத்திலுள்ள தேவர்களின் செவியைச் சென்றடையும் என்கிறார். அண்ணாமலையார் சிந்தில் கழுகுமலை முருகன் சிறப்புகள், அருள்புரியும் திறம், பக்தர்கள் வழிபடும் முறை எனப் பலவும் சிறப்பித்துக் கூறப்பெற்றள்ளன.

வழிநடைக் களைப்பின்றி, முருகன் அருள்பெற நல்வழி காட்டுவதற்காக, அண்ணாமலையார் காவடிசிந்து அமைந்துள்ளத. பயணக் களைப்பைப் போக்குவதோடு, வழி இடையே விலங்குகளின் தொல்லைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளக் காவடிச்சிந்து

கூடுதல் வினாக்கள்

I. இலக்கணக்குறிப்பு

 • மேவி, உயர்ந்து, போற்றி, ஏற்றி – வினையெச்சம்
 • நுண்ணிடை, கொழங்கனல் – இருபெயரொட்டு பண்புத்தொகை
 • உயர்ந்தோங்கும் – ஒருபொருட்பன்மொழி
 • நகர்வாசன் – ஐந்தாம் வேற்றுமைத்தொகை
 • புயவரை – உருவகம்
 • புனைதீரன், தருகழுகாசலம், இடுமுழவோசை – வினைத்தொகை
 • பதம்பணி (பத்தைப்பணி), கொடி சூடிய (கொடியைச் சூடிய) – இரண்டாம் வேற்றுமைத் தொகை
 • குறவள்ளி – ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
 • மொழிபோதினில் (மொழியைக் கூறும் போதினில்) – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
 • நூபுதத்துத் தொனி (நூபுரத்தினது தொனி), அடியார் கணம் – (அடியாரது கணம்) – ஆறாம் வேற்றுமைத் தொகை
 • தங்கக்காவடி (தங்கத்தால் ஆகிய காவடி) – மூன்றாம் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
 • பூண்டார் – வினையாலணையும் பெயர்

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. ஏறிய = ஏறு + இ(ன்) + ய் + அ

 • ஏறு – பகுதி
 • இன் – இறந்தகால இடைநிலை, “ன்” புணர்ந்து கெட்டது
 • ய் – சந்தி (உடம்மெய்)
 • அ –  பெயரெச்ச விகுதி

2. சொல்வன் = சொல் + வ் + அன்

 • சொல் – பகுதி
 • வ் – எதிர்கால இடைநிலை
 • அன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

3. மேவி = மேவு + இ

 • மேவு – பகுதி
 • இ – வினையெச்ச விகுதி

4. போற்றி = போற்று + இ

 • போற்று – பகுதி
 • இ – வினையெச்ச விகுதி

5. ஏற்றி = ஏற்று + இ

 • ஏற்று – பகுதி
 • இ – வினையெச்ச விகுதி

6. காண்பார் = காண் + ப் + ஆர்

 • காண் – பகுதி
 • ப் – எதிர்கால இடைநிலை
 • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

III. புணர்ச்சி விதிகள்

1. நுண்ணிடை = நுண்மை + இடை

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி நுண் + இடை என்றாயிற்று.
 • “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி நுண்ண் + இடை என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி நுண்ணிடை என்றாயிற்று.

2. முழுவோசை = முழவு + ஓசை

 • “உயிர்வரின… முற்றும் அற்று” என்ற விதிப்படி முழுவ் + ஓசை என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி முழுவோசை என்றாயிற்று.

3. கொழுங்கனல் = கொழுமை + கனல்

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி கொழுங்கனல் என்றாயிற்று

4. தங்கத்தூபி= தங்கம் + தூபி

 • “மவ்வீறு ஒற்றிழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி தங்கம் + தூபி என்றாயிற்று.
 • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப “ விதிப்படி தங்கத்தூபி என்றாயிற்று.

5. செகமெச்சிய = செகம் + மெச்சிய

 • “மவ்வீறு ஒற்றிழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி செகமெச்சிய என்றாயிற்று.

6. பொன்னாட்டு = பொன் + நாட்டு

 • “னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி பொன்னாட்டு என்றாயிற்று.

7. தங்கக்காவடி = தங்கம் + காவடி

 • “மவ்வீறு ஒற்றிழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி தங்கம் + காவடி என்றாயிற்று.
 • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப “ விதிப்படி தங்கச்காவடி என்றாயிற்று.

8. மின்னிக்கறங்கும்= மின்னி + கறங்கும்

 • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப “ விதிப்படி தங்கச்காவடி என்றாயிற்று.

9. இமையோர் = இமை + ஓர்

 • “இ ஈ ஐ வழி யவ்வு “ விதிப்படி இமை + ய் + ஓர் என்றாயிற்று.
 • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இமையோர் என்றாயிற்று.

IV. பலவுள் தெரிக

1. கூற்று 1 : வழிநடைப் பாடல் வகையிலிருந்து தோன்றிய பா வடிவம் சிந்து
கூற்று 2 : நாட்டார் வழக்கியில் இசைமரபு சிந்து

 1. கூற்று 1 சரி, 2 தவறு
 2. கூற்று 1 தவறு, 2 சரி
 3. இரண்டு கூற்றும் சரி
 4. இரண்டு கூற்றும் தவறு

விடை : இரண்டு கூற்றும் சரி

கூற்று 1 : காவடிச் சிந்துக்கு மெட்டு அமைத்தவர் அருணகிரியார்
கூற்று 2 : அண்ணாமலையார் காவடிச்சிந்துக்கு மெட்டுகள் அமைத்தார்

 1. கூற்று 1 சரி, 2 தவறு
 2. கூற்று 1 தவறு, 2 சரி
 3. இரண்டு கூற்றும் சரி
 4. இரண்டு கூற்றும் தவறு

விடை : கூற்று 1 தவறு, 2 சரி

3. ஊற்றுமலை இருதயாலய மருதப்பத் தேவரின் அவைப்புலவராக இருந்தவர் ___________

 1. அருணகிரியார்
 2. உமறுப்புலவர்
 3. பாரதியார்
 4. அண்ணாமலையார்

விடை : அண்ணாமலையார்

4. காவடிஎடுக்கும் அடியார் பாடிய திருப்புகழ் முழக்கம்  ___________ தேவர்களின் செவியை அடைகிறது.

 1. அமராவதிப் பட்டினம்
 2. சென்னைப் பட்டினம்
 3. கைலாயம்
 4. வைகுண்டம்

விடை : தகப்பன் கொடி

VI. பொருத்துக

1. ஏதிலிக்குருவிகள்பேயனார்
2. திருமலை முருகன் பள்ளுஜெயமோகன்
3. ஐங்குறுநூறுஅழகிய பெரியவன்
4. யானை டாக்டர்பெரியவன் கவியார்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

VII. குறுவினா

1. தன் காவடிச்சிந்தின் சிறப்பாக அண்ணாமலைதாசன் குறிப்பிடுவது யாது?

நான் பாடியது உலகம் போற்றும் காவடிச்சிந்து என்றும், இனிமையான தன் கவிமாலையை மலைபோல் அகன்ற தோள்களில் முருகன் சார்த்திக் கொள்கிறான் என்றும் கூறுகிறார்.

2. கழுகுமலை முருகன் கோவில் அமைப்பை அண்ணாமலையார் எவ்வாறு கூறியுள்ளார்?

கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புக் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க கழுகுமலை முருகன் கோவில் திகழ்வதாக அண்ணாமலை கூறுகிறார்.

3. திருப்புகழ் முழக்கம் எங்கு சென்றடைவதாகக் காவடிச்சிந்து கூறுகிறது?

அமராவதிப் பட்டினத்திலுள்ள தேவர்களின் செவிகளைச் சென்று அடைவதாகக் காவடிச்சிந்து கூறுகிறது.

4. முருகன் அருள்பெற்று அடியார் எவ்வாறு இன்பம் அடைவர்?

காவடியைச் தோளில் தூக்கிக் கொண்டு, கனலில் உருகிய மெழுகென முருகனை நோக்கிப் பக்தியோடு பாடி ஆடி வரும் அன்பர்கள் அனைவரும் முருகனின் அருளைப் பெற்று இன்பம் அடைவர்

5. அண்ணாமலையார் – குறிப்பு வரைக?

 • சென்னிகுளம் என்னும் ஊரினரான அண்ணாமலையார், தம் 18-ம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான “இருதயாலய மருதப்பத்தேவர்” அரசவைப் புலவராக இருந்தார்
 • இவர் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.
 • காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவை ஆகும். எனவே “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார்.
 • இவர் இந்நூலைத் தவிர வீரைத் தலபுராணம், வீரைநவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்

சில பயனுள்ள பக்கங்கள்