Tamil Nadu 11th Standard Tamil Book புறநானூறு Solution | Lesson 3.4

பாடம் 3.4 புறநானூறு

11ஆம் வகுப்பு தமிழ், புறநானூறு பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 3.4 புறநானூறு

இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

புறபொருள் சார்ந்த 400 பாடல்களை கொண்டது.

புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்

அகவற்பாக்களால் ஆனது.

புறநானூற்றுப் பாடல்கள் சங்க காலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர்.

ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர்.

கடற்பயணம் ஒன்றில் இறந்து போனமையால் இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார்.

இவரது பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம்
பெற்றுள்ளன.

I. சொல்லும் பொருளும்

  • தமியர் – தனித்தவர்
  • முனிதல் – வெறுத்தல்
  • துஞ்சல் – சோம்பல்
  • அயர்வு – சோர்வு
  • மாட்சி – பெருமை
  • நோன்மை – வலிமை
  • தாள் – முயற்சி

II. இலக்கணக்குறிப்பு

  • அம்ம – அசைநிலை
  • துஞ்சல் – தொழிற்பெயர்
  • முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. துஞ்சல் = துஞ்சு + அல்

  • துஞ்சு – பகுதி
  • அல் – தொழிற்பெயர் விகுதி

2. முனிவிலர் = முனி + வ் + இல் + அர்

  • முனி – பகுதி
  • வ் – உடம்படுமெய், சந்தி
  • இல் – எதிர்மறை இடைநிலை
  • அர் –  பலர்பால் வினைமுற்று விகுதி

IV. புணர்ச்சி விதிகள்

இயைவதாயினும் = இயைவது + ஆயினும்

  • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி இயைவத் + ஆயினும் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இயைவதாயினும்  என்றாயிற்று.

V. பலவுள் தெரிக

1. பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க

1. வெள்ளிவீதியார்அ. புறநானூறு
2. அண்ணாமலையார்ஆ. வாடிவாசல்
3. சு.ச. செல்லப்பாஇ. குறுந்தொகை
4. இளம்பெருவழுதிஈ. காவடிச்சிந்து
  1. அ, ஆ, இ, ஈ
  2. ஆ, ஈ, அ, இ
  3. இ, ஈ, ஆ, அ
  4. இ, ஈ, அ, ஆ

விடை : இ, ஈ, ஆ, அ

2 இனிதென இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக

  1. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
  2. தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
  3. “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
  4. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

விடை : உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

VI. குறு வினா

தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

புகழ்

  • புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்

பழி

  • பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

VII. சிறு வினா

புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களை குறிப்பிடுக

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழ தவர்

(பழி நீங்கிப் புகழோடு வாழ்பவரே வழ்பவராவார்; புகழன்றிப் பழியோடு வாழ்பவர் வாழதவரே ஆவர்)

அஞ்சுவது அஞ்சாமி பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

(உலகம் அஞ்சம் செயல்களைச் செய்வது அறியாமை; உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல்)

கூடுதல் வினாக்கள்

I. இலக்கணக்குறிப்பு

  • உண்டு, இனிது – குறிப்பு வினைமுற்று
  • ஆல் – தேற்றம்
  • உண்டல், அஞ்சல் – தொழிற்பெயர்கள்
  • உலகம் – இடவாகு பெயர்
  • இந்திரர் அமிழ்தம் (இந்திரர்க்கு உரிய அமிழ்தம்) – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • அஞ்சுவது அஞ்சி – வினையாலணையும் பெயர்
  • உயிரும் கொடுக்குவர் – உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
  • கொடுக்குவர் – படர்க்கைப் பலர் பால் எதிர்கால வினைமுற்று
  • நோன்தாள் – உரிச்சொற்றொடர்
  • அனையர் – வினையாலணையும் பெயர்
  • அயர்விலர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. கொடுக்குவர் = கொடு + க் + கு + வ் + அர்

  • கொடு – பகுதி
  • க் – சந்தி
  • கு- சாரியை
  • வ் – எதிர்கால இடைநிலை
  • அர் –  பலர்பால் வினைமுற்று விகுதி

2. அஞ்சி = அஞ்சு + இ

  • அஞ்சு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

III. புணர்ச்சி விதிகள்

1. முனிவிலர் = முனிவு + இலர்

  • “உயிர் வரின்….  முற்றும் அற்று” என்ற விதிப்படி முனிவ் + இலர் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி முனிவிலர் என்றாயிற்று.

2. அஞ்சுவதஞ்சி = அஞ்சுவது + அஞ்சி

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி அஞ்சுவத் + அஞ்சி என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி அஞ்சுவதஞ்சி என்றாயிற்று.

3. பழியெனின் = பழி + எனின்

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” விதிப்படி பழி + ய் + எனின் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பழியெனின் என்றாயிற்று.

4. உலகுடன் = உலகு + உடன்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி உலக் + உடன் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி உலகுடன் என்றாயிற்று.

5. தமெக்கென = தமக்கு + என

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி தமக்க் + என என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி தமெக்கென என்றாயிற்று.

4. பிறர்க்கென = பிறர்க்கு + என

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி பிறர்க்க் + என என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பிறர்க்கென என்றாயிற்று.

IV. பலவுள் தெரிக

1. தமிழரின் வாழ்வியல் கருவூலமாகக் கருதப்படுவது ___________

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. கலித்தொகை
  4. பதிற்றுப்பத்து

விடை : புறநானூறு

2. புறம், புறப்பாட்டு என வழங்கப்படும் நூல் ___________

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : புறநானூறு

3. “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” பாடிய மற்றொரு பாடல் அமைந்துள்ள நூல் ___________ 

  1. நற்றிணை
  2. பரிபாடல்
  3. கலித்தொகை
  4. அகநானூறு

விடை : பரிபாடல்

4. “உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும் புறப்பாடல் ___________ வகையைச் சார்ந்தது

  1. நேரிசை ஆசிரியப்பா
  2. இன்னிசை ஆசிரியப்பா
  3. நிலைமண்டில ஆசிரியப்பா
  4. அடிமறி மண்டில ஆசிரியப்பா

விடை : நேரிசை ஆசிரியப்பா

V. குறுவினா

1. தமிழர் எதனை உண்ணார், எதற்கு அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது?

  • இந்திரனுக்குரிய அமிா்தமே கிடைப்பதாயினும், தமிழர் தனித்து உண்ணமாட்டார்.
  • பிறர் அஞ்சுவனவற்றுக்குத் தாமும் அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது.

2. இளம்பெருவழுதி பாடல் எவ்விழுமியம் பற்றி பேசுகிறது?

புறநானூற்றில் அமைந்த இளம்பெருவழுதி பாடல் வீரத்தையும், ஈரத்தையும் பற்றிப் பேசாமல் வாழ்வின் விழுமியமான, தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்னும் கருத்தைப் பேசுகிறது.

3. பொதுவியில் திணை என்றால் என்ன?

புறப்பொருள்களாகிய வெட்சித் திணை முதல் பாடாண் திணை வரை கூறப்பெறாத செய்திகளையும், பிற பொதுச் செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல்  திணையாகும்.

4. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?

மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும்.

5. புறநானூறு – குறிப்பு வரைக?

  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
  • புற்பொருள் சார்ந்த் 400 பாடல்களை கொண்டது.
  • சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், படைத்தலைவர்கள் எனப் பலரின் சமூக வாழ்வைப் பற்றி பல்வேறு புலர்களால் பாடப்பெற்ற பாடல்களை உள்ளடக்கியது.
  • இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது.

6. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி – குறிப்பெழுதுக

  • பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள் போற்றினர்
  • கடற்செலவு ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என அழைக்கப் பெற்றார்.
  • இவர் பாடியனவாகப் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள் காணப்படுகின்றன.
  • புறநானூற்றுப் பாடலில் வீரத்தைப் பேசாமல், “தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பிறவிப் பயன்” பற்றிப் பேசுகிறார்.

7. இவ்வுலகமே நிலைத்திருப்பதற்கான காரணங்களாக இளம்பெருவழுதி கூறுவனற்றை எழுதுக

  • அமிழ்தமே கிடைத்தாலும், அஃது இனிமையானது என எண்ணித் தனித்து உண்ணாதவர்கள்.
  • எவரையும் வெறுக்காதவர்கள்; சோம்பலின்றிச் செயல்படுபவர்கள்.
  • பிறர் அஞ்சுவனவற்றிற்குத் தாமும் அஞ்சுபவர்கள்.
  • புகழோடு வருவதாயின், உயிரையும் கொடுக்க கூடியவர்கள்.
  • பழியுடன் வருவதாயின், உலகமே கிடைத்தாலும் ஏற்க விரும்பாதவர்கள். எதற்கும் மனம் தளராதவர்கள்.
  • தமக்கென உழைக்காமல் பிறர்க்காகப் பெருமுயற்சிகளை மேற்கொண்டு உழைப்பவர்கள் எனப பல சிறப்புகளைப் பெற்றோர் இருப்பதனால் தான், இவ்வுலகம் இன்றளவும் நிலைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி தம் பாடலில் கூறியுள்ளார்.

சில பயனுள்ள பக்கங்கள்