Tamil Nadu 11th Standard Tamil Book இதழாளர் பாரதி Solution | Lesson 4.5

பாடம் 4.5 இதழாளர் பாரதி

11ஆம் வகுப்பு தமிழ், இதழாளர் பாரதி பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 4.5 இதழாளர் பாரதி

பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?

பாரதியின் பன்முகம்

பாரதியார் கவிஞர் மட்டும் அல்லர்! சிறந்த பேச்சாளர்; பாடகர்; கட்டுரையாளர்; கதாசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் ஞானி; ஆன்மிகவாதி; அனைத்திற்கும் மேலாக சிறந்த இதழாளர்.

இதழாளர் பாரதி

பாரதி, “சுதேசிமித்திரன்” இதழில் உதவி இதழாசிரியராகச் சேர்ந்தார். அதனால் அவரது உலகாளாவிய பார்வை கூர்மைப்பட்டுச் சிறந்த இதழாளரானார். தொடர்ந்து சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, விஜயா, கர்மயோகி எனப் பல இதழ்களில் பணியாற்றித் தம் வாழ்க்கைப் பேராட்டத்திற்கு இடையிலேயும் பாரதி, உலகப் பார்வை கொண்டு செயல்பட்டார்.

படைப்பில் புதுமை

“தான்” என்பதை ஒழித்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், விடுதலை வேட்கையைத் தூண்டப் பல புனைப்பெயர்களில் எழுதினார். தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துடன் காட்சியும் இடம்பெற வேண்டும் எனக் கருதிக் கருத்துப் படங்களைக் கேலிச் சித்திரங்களாக வெளியீட்டுத் தமிழ் இதழ்களில் “கார்ட்டூன்” என்பதை அறிமுகப்படுத்தினார்.

வழித்தடம் அமைத்தவர்

இதழியல் துறையில் பலர் பாரதியைப் பின்பற்றிச் செயல்பட்டனர். தமிழ் இதழ்களில் ஆண்டு, திங்கள், நாள் என நல்ல தமிழை முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியே. அவர் மூச்சும், பேச்சும் இளைஞருக்காகவும், பெண்களுக்காகவும் ஆனவையாக இருந்தன. “சக்ரவர்த்தினி” என்னும் தம் இதழில் குறள் வெண்பாவை எழுதிப் பெண் விடுதலைக்குப் பாடுபட்டார். புரட்சியையும், விடுதலையையும் குறிக்க “இந்தியா” இதழை சிவப்பு வண்ணத்தில் வெளியட்டார்.

புனைப்பெயர் பயன்படுத்தல்

தான் மட்டுமன்றித் தம் நண்பர்களும் ஆங்கிலேயர் கெடுபிடிக்கு ஆளாகக் கூடாதென விரும்பி நண்பர் பெயர்களையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும் கூடப் புனைபெயர்களிலேயே சுட்டி வந்தார். பாரதியார் பயன்படுத்திய புனைப்பெயர்களில் அவரின் இதழியல் அறத்தைக் காண முடியும்.

புதுமை விரும்பி பாரதி

இதழ்களில் தேதி குறிப்பிடல், கருத்துப்படம் வெளியிடல், “மகுடமிடல்” என்னும் தலைப்பிடல் ஆகியவை நிலைகளில் முன்னோடியாக விளங்கினார். ஆங்கிலேயர் அளித்த பல கெடுபிடிகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையிலும் இதழியல் பணியைக் கைவிடாது செயல்படுத்தினார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தான் என்ற ஒன்றை ஒழித்தவர்

  1. பாரதி
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. பிச்சமூர்த்தி

விடை: பாரதி

2. தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.

  1. கண்ணதாசன்
  2. பாரதிதாசன்
  3. பாரதியார்
  4. பிச்சமூர்த்தி

விடை: பாரதியார்

3. பாரதியார் தமிழில் _______ என்ற பெயரில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றையும் நடத்த விரும்பினார்.

  1. இந்தியா
  2. சித்திராவளி
  3. விஜயா
  4. பாலபாரதி

விடை: சித்திராவளி

4. பாரதியார் ________ இதழில் கருத்துப் படங்களை வெளியிட்டுள்ளார்.

  1. இந்தியா
  2. சித்திராவளி
  3. விஜயா
  4. பாலபாரதி

விடை: a மற்றும் c

5. பாரதியார் பெண்களுக்காகத் _______ இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்.

  1. இந்தியா
  2. சித்திராவளி
  3. விஜயா
  4. சக்ரவர்த்தினி

விடை: சக்ரவர்த்தினி

6. பாரதியார் _______ இதழைச் சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்

  1. கர்மயோகி
  2. சூர்யோதயம்
  3. விஜயா
  4. இந்தியா

விடை: இந்தியா

சிறுவினா

1. எதை பாரதி ஒழித்தார்?

  • தன் பெயரையும், தன்னையும் முன்னிலைபடுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கு இடையில் “தான்” என்ற ஒன்றை ஒழித்தவர் பாரதி

2. விடுதலை வேட்கையூட்டும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைந்தால் போதும் என்று எண்ணி எழுதிய புனைப்பெயர்கள் யாவை?

  • இளசை சுப்பிரமணியன்
  • சாவித்திரி
  • சி.சு.பாரதி
  • வேதாந்தி
  • நிந்திய தீரர்
  • உத்தமத் தேசாபிமானி
  • ஷெல்லிதாசன்
  • காளிதாசன்
  • சக்திதாசன்
  • ரிஷிகுமாரன்
  • காசி
  • சரஸ்வதி
  • பிஞ்சுக்காளிதாசன்
  • செல்லம்மா
  • கிருஷ்ணன்

3. பெண்களுக்காக சக்ரவரத்தினி இதழில் எழுதிய குறள் வெண்பாவினை எழுது

பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
ஒண்மை யுறஓங்கும் உலகு

4. பாரதி இந்தியா இதழை ஏன் சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்தார்?

சிவப்பு வண்ணமானது புரட்சியையும், விடுதலையும் குறிக்கிறது என்பதால் அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பாரதி இந்தியா இதழை சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்தார்.

சில பயனுள்ள பக்கங்கள்

Exit mobile version