Tamil Nadu 11th Standard Tamil Book தாகூரின் கடிதங்கள் Solution | Lesson 8.1

பாடம் 8.1 தாகூரின் கடிதங்கள்

11ஆம் வகுப்பு தமிழ், தாகூரின் கடிதங்கள் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 8.1 தாகூரின் கடிதங்கள்

‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும் ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரசி’ என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தம் இளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

1913-ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

1919 நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் வருந்திய தாகூர் அவர்கள் வழங்கிய ‘சர்’ பட்டத்தை திரும்ப அளித்தார்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக்குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார்.

அவற்றுடன் அவருடைய ஓவியப் படைப்புகள், பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார்.

அவற்றுடன் அவருடைய ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டார் அவருடைய ஆளுமையின் பேருருவை அறிய முடியும்.

குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்படு வேண்டும் என்ற எண்ணம் கொண்டு 1921-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். ‘குருதேவ்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ‘ஜனகணமன’ என்னும் பாடல் இந்தியாவின் நாட்டுப் பண்ணாகவும் ‘அமர் சோனார் பங்களா’ என்னும் பாடல் தேசத்தின் நாட்டுப் பண்ணாகவும் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘தாகூரின் கடிதங்கள்’ என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் த.நா. குமாரசாமி.

அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்.

வங்க அரசு, தமிழ்-வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.

பலவுள் தெரிக

பூஐை, விஷயம், உபயோகம் என்பவை முறையே ………………………… என்று தமிழில் வழங்கப்படும்

  1. வழிபாடு, செய்தி, பயன்பாடு
  2. பயன்பாடு, வழிபாடு, செய்தி
  3. வழிபாடு, பயன்பாடு, செய்தி
  4. செய்தி, வழிபாடு, பயன்பாடு

விடை : வழிபாடு, செய்தி, பயன்பாடு

குறுவினா

1. நாட்டுபுறத்திலும், பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்கிறது.
  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.

2. பராம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீக்கதரசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் – நிறுத்தக்குறியிடுக

“பராம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” என்றும். “கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீக்கதரசி” என்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

சிறுவினா

“தாமஸிகம்” என்றால் என்ன?

  • நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை, இதனைத் தாமஸிகம் என்பர்.
  • ஸதூலப் பொருள்களுக்கு அப்பால் செல்ல இயலாமல், நம் மனம் திகப்படைந்து நின்றுவிடுகின்ற நிலை. அதாவது பூஜைக்கு தேவையான மலர்களைத் தவிர வேறு எந்தப் பூக்களுடன் நமக்கு அவசியம் எதுவும் இல்லை என்பதாம்.

நெடுவினா

“சிதறிய கடிதங்கள்” உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக

“சிதறிய கடிதங்கள்” உணர்த்தும் கருத்துகள்

தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகின்றன. ஆற்று வெள்ளத்தில் இறந்து மிதந்து வந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் தாகூர் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்துத் தம் சிதறிய கடிதத்தில் கூறுகிறார்.

பறவை மரணம்

எதிர்க்கரை புலப்படாத வகையில் தளும்பிய நீரோடு பெருக்கெடுத்த “பத்மா” ஆறு ஒரு புறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறுபறவை கீழே விழுந்தது, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் குறிப்பிடுகிறார். சிறு பறவையின் அழகு, கூட்டின் அழகு, உழைப்பின் சிறப்பு, ஓய்வு எடுக்கும் நிலை ஆகியவற்றை அந்தப் பறவையின் வரலாறாகச் சுட்டி, அந்த மரணத்தில் முடிக்கிறார்.

தம் சிந்தனைக்கான காரணம்

மனிதன் தன் சுகத்திற்குமுன், பிற உயிர்களின் சுகதுக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மற்றப் பிராணிகளை அற்பமாக நினைப்பதையும் காட்டுகிறார். பிற உயிர்களிடம் கருணை காட்டுவதை, நடக்க முடியாத அதிசயமாக நம் சரித்திரம் விட்டுவிடவில்லை. அதனால் ஒரு பறைவயின் சின்னஞ்சிறு வாழக்கைக் களிப்பு, எத்துணை அளவு இருக்கும் என்பதைத் தம்மால் சிந்திக்க முடிவதாகத் தாகூர் கூறுகிறார்.

அலட்சிய மனப்பான்மை

மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. இலக்கியங்களில் கூறப்பட்ட பல மலர்களின் பெயர்களை மட்டுமே அறிவோம். அவை, எவை எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். ஆனால், ஆப்பெயருக்குரிய மமலர் எது என அறியோம். பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர், ஆறுககளை மட்டும் நினைவில் கொள்கின்றனர்.

தோல்விகளுக்குக் காரணம்

நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போகப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் திகைத்து நின்று விடுகிறது. இதனைத் “தாமஸிகம்” என்பர். அதாவது “மெடீரியலிஸம்” உலகில் எத்தனையோ நேர்த்தியான புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம். இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையே நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் என்னும் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தாகூரின் கடிதங்கள் ……………….. என்பர்

  1. கற்பபனையானவை
  2. நகைச்சுவையானவை
  3. அறிவுரை வழங்குபவை
  4. கவித்துவ இயல்பு கொண்டவை

விடை : கவித்துவ இயல்பு கொண்டவை

2. பாரம்பரயத்தின் வேரூன்றிய மனிதர்”, “கிழக்கையும், மேற்கையும் இணைத்த தீர்க்கத்தரசி” என்று குறிப்பிடப்படுபவர்  ……………….. 

  1. இரவீந்திரநாத தாகூர்
  2. த.நா.குமாரசுவாமி
  3. தேவந்திரநாத தாகூர்
  4. பூபேந்திரநாத தாகூர்

விடை : இரவீந்திரநாத தாகூர்

3. தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் ……………….. 

  1. கல்கத்தா பல்கலைக்கழகம்
  2. சாந்திநிகேதன் பல்கலைக்கழகம்
  3. விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
  4. வங்க பல்கலைக்கழகம்

விடை : விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

4. தாகூரின் கடிதங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது ………………. 

  1. சாகித்திய அகாதெமி
  2. தமிழ்நாடு அரசு
  3. மேற்கு வங்க அரசு
  4. மியூசிக் அரசு

விடை : ஆக்கப்பெயர்

5. த.நா. குமாரசுவாமிக்கு வங்க அரசு செய்த சிறப்பு ………………. 

  1. தாகூர் இலக்கிய விருது
  2. நேரு இலக்கிய விருது
  3. நேதாஜி இலக்கிய விருது
  4. ஜோதிபாசு இலக்கிய விருது

விடை : நேதாஜி இலக்கிய விருது

6. பத்மா என்பது ……………….

  1. கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
  2. இறந்துபோன பறவையின் பெயர்
  3. பெள – கதா – கேவா என்னும் புறா இனம்
  4. ஒரு வகையின் மலரின் பெயர்

விடை : கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி

7. தாமஸிகம் என்பது ……………….

  1. ஒருவகைப் பறவை
  2. ஒரு புறா இனம்
  3. மெடீரியலிஸம்
  4. ஒரு நதி

விடை : மெடீரியலிஸம்

8. விருப்புடைவள் என்பதைக் குறிக்கும் சொல் ……………….

  1. ஸேவுந்தி
  2. இச்சாமதி
  3. கபோதாக்ஷி
  4. மயூராக்ஷி

விடை : இச்சாமதி

குறுவினா

1. ஒரு பறவையின் வாழ்க்கை பற்றித் தம்மால் எதனால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்?

ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்துக்குள்ளும் வாழ்க்கையின் களிப்பு. எத்துணை அதிகமா இருக்கு என்பது பற்றி தம்மால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் குறிப்பிடுகிறார்.

2. அலட்சிய மனப்பான்மை குறித்து தாகூர் கூறியுள்ளதென்ன?

நம் தோல்விகள் அனைத்திற்கும் மூலகாரணம், இயற்கையிடம் நாம் காட்டும் அலட்சிய மனப்பான்மை தான். இந்தச் சுபாவம் காரணமாகத்தான், நம் அலட்சிய மனப்பான்மை நாட்டு மக்களிடமும்தீவிரமாகத் தலை தூக்குகிறது எனத் தாகூர், அலட்சிய மனப்பான்மை குறித்து கூறுகிறார்

3. விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை ஏன் தாகூர் நிறுவினார்

  • குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையா வளர்க்கப்பட வேண்டும்.
  • தங்கள் வேலைகளைத் தாங்களே கவனித்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் நிறுவினார்.

சிறுவினா

1. கடித இலக்கியம் குறித்து எழுதுக

  • “கடிதம் என்பது குறிப்பிட்ட செய்தியை உரியவருக்குத் தெரிவிக்க எழுதி அனுப்புவதாகும்.
  • உரிய வடிவுடன் அமைந்த கடிதம். பொருள் செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும் இலக்கிய வடிவம் பெறுகிறது.
  • கடித இலக்கியத்தின் காலத் தொன்மையைக் காப்பியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் காணப்பெறும் கடிதங்கள் விளக்கும். தாகூரின் கடிதங்கள் கற்பனை, நகைச்சுவை, ஆழ்ந்த சிந்தனை முதலானவற்றை உள்ளடக்கிய கவித்துவ இயல்பு கொண்டவை.

2. ஆற்றில் செத்து மிதந்த வந்த பறவையின் வரலாறாகத் தாகூர் கூறியது ஏன்?

  • எங்கோ ஓர் ஊரின் எல்லையில் அமைந்த தோப்பின் மரக்கிளையில் பறவையின் கூடு ஈரந்திருக்கும். இருளுக்கும் பின் கூடு திருப்பித் தன் துணையுடன், விரிந்த சிறகுகளின் வெம்மை தணிய உடல் சோர்ந்து உறங்கி இருக்கலாம்.
  • இரவில் மாமரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழ, கூட்டை விட்டுப் பறவை சிதறி விழந்திருக்கும். அதன் பின் ஒரு கணம் விழித்த பறவை, மீண்டும் விழிக்க அவசியம் இல்லாமல் போய்விட்டது என ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாற்றை தாகூர் கூறியுள்ளார்.

3. நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்களை மனிதன் எவ்வாறு ஏற்கிறான்?

  • மரத்தின் கிளையில் பூ மலர்கிறது, அற்குப் புகலிடம் மரக்கிளைதான்
  • மனிதன் அதற்குப் பெயரிட்டுத் தன் உள்ளத்தில் இடம் அளிக்கிறான்.
  • நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்கள் பல உள்ளன.
  • அவை அனைத்தையும் மனிதன் மனத்தினுள் எற்றுக் கொள்வதில்லை
  • மலரிடம் இவ்வளவு அலட்சிய மனப்பான்மை, வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்.

4. தாகூர் எதனை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார்?

  • தேர்வில் தேர்ச்சி பெறச் சரித்திரப் பாடத்தை புறக்கணிக்க முடியாது.
  • நம் தேசப்பற்று என்பது அப்புத்தக மூட்டைகளால் உருவானது.
  • தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்றுதலால் உண்டானதன்று.
  • சிந்தித்துப் பார்த்தால், நம் உலகம் எத்தனை குறுகலானது எனபது புலப்படும்.

5. தாகூர் குறித்து நீ அறிவன யாவை?

  • தாகூர், தம் 16ஆம் வயதில் கவிதைகள் எதினார். இசைப்பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், குறுநாடகங்கள், பெருநாவல்கள், சிறுகதைகள், எனப் பல எழுதி இலக்கியப் பணியாற்றினார்.
  • பயணக் கட்டுரைகள் எழுதினார். ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் பல ஏழுதினார். ஓவியங்கள் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினார்.
  • “கீதாஞ்சலி” கவிதை நூலுக்கு 1913-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். “பாரமபரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” என்றும் “கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி” என்றும் போற்றப்பட்டார்.
  • “ஜாலியன் வாலாபாக் (1919) படுகொலையால் மனம் வருந்தி, ஆங்கில அரசைக் கண்டித்துத் தமக்கு அளித்த “சர்” பட்டத்தை துறந்தார். 1921-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
  • “குருதேவ்” என அனைவராலும் அழைக்கப்பட்டார். இவரது “ஜனகணமன” பாடல், இந்தியாவிலும் “அர் சோனார் பங்களா” பாடல் வங்கதேசத்திலும், நாட்டுப் பண்களாகப் போற்றப்படுகின்றன.

6. த.நா. குமாரசுவாமி பற்றி அறிவன யாவை

  • த.நா. குமாரசுவாமி தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். “தாகூரின் கடிதங்கள்” என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்.
  • அதனைச் சாகித்திய அகாதெமி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்-வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி வங்க அரசு “நேதாஜி இலக்கிய விருது” அளித்துச் சிறப்பித்துள்ளது.

சில பயனுள்ள பக்கங்கள்