Tamil Nadu 11th Standard Tamil Book செவ்வி Solution | Lesson 8.5

பாடம் 8.5 செவ்வி

 11ஆம் வகுப்பு தமிழ், செவ்வி பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 8.5 செவ்வி

நெடுவினா

நர்ந்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க

வேதனையில் சாதனை

திருநங்கையருக்கு இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி காட்டியவர் நர்த்தகி நடராஜ். அமெரிக்காவில் இரண்டு வார நிகழ்ச்சியை எதிர்பாரத்துச் சென்றவர். ஒருநாள் நிகழ்ச்சியாக மாற்ப்பட்டதை அறிந்து வேதனையுற்றார். எனினும் தம் கால் சதங்கை ஒலியை அரங்கில் நிறைந்தது காண்பவரை வியக்கவைத்து இரு மாதங்கள் தொடர்ந்து தம் ஆற்றலை வெளிப்படுத்திய நிகழ்வே அவர்தம் ஆற்றலை விளக்கப் போதுமான சான்று.

நாட்டியத்தில் ஈடுபாடு

பெண்மையை உணரத் தொடங்கிய குழந்தைப் பருவத்தில் திரைப்பட நடனங்கள் தன்னை ஈர்த்ததையும் ஆடத் தொடங்கிய பின் நாட்டியத்தின் உட்கூறுகளை அறிய முயற்சி செய்தது, ராக தாளத்துடன் நாட்டியத்திற்கான கருத்தை அறிமுகம் செய்து கொண்டது ஆகியவற்றை வெளிப்டுத்தியுள்ளார்.

நடனத்திற்கு கருதேர்வு

எதிர்கொள்ளும் பிரச்சனைக்காக மட்டுமன்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் மரபில் தோன்றிய தான் பரதத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், தமிழ் இலக்கியங்களில் அதன் இடத்தை தெரிந்து  நம் கலையை நாம் ஆடவேண்டும் என்ற உறுதியோடு சங்க இலக்கியம் தொடங்கி நவீன கவிதை வரை தக்கவற்றைத் தம் நடனத்தில் கருவாக எடுத்துக் கொண்டு விழிப்புணர்வை ஆயுதமாகக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உலகைக் கவரும் பரதம்

ஜப்பானின் ஒசாகா நகரில் திருவாசக தேவாரப் பண்களுக்குத் தாம் நிகழ்த்திய பரத அபிநயங்களைக் கண்டு கண்கலங்கி மெளனத்தோடு கரஒலி எழுப்பியுள்ளதைக் கூறி, பரதத்தை உலகின் எப்பகுதியினரும் முழுமையாக உள்வாங்கிப் புரிந்து கொள்வர் என்பதை விரித்துள்ளார்.

நம் பண்பாட்டைத் தேடவைத்தல்

நம் பண்பாடு, வாழ்வாங்கு வாழந்த் மரபு சார்ந்தது. அதை எப்பண்பாட்டாலும் புறக்கணிக்க முடியாது. நார்வேயில் திருக்குறளை மையப்படுத்தி நிகழ்த்திய நிகழ்ச்சி அம்மக்ளைத் திருக்குறளைத் தேடிக் கற்கத் தூண்டியது நம் பண்பாடுப் புலமை என விளக்கியுள்ளார்.

தமிழ்வழிக் கல்வி பயின்று, வழக்கறிஞராக எண்ணியவர். இன்று மேடையேறிப் பல்வேறு இலக்கிய மேடைகளில் பேசுவதையும், தமிழ் இலக்கியங்களை  வாசிப்பதையும், அவரை குறித்த ஆய்வு செய்வதையும் பணியாகக் கொண்டுள்ளதைக் தெளிவுபடுத்தினார்.

சோதனை வென்று சாதனை

நடனக்கலைக்கூடம் வாயிலாகப் பலர் தம்மை அம்மா என அழைப்பதை எண்ணிக் கருணையில் நெகிழ்வதை உணர்வதாகக் கூறியுள்ளார். நர்த்தகி நடராஜ் இன்றைய உலகில் பல உயரங்களைத் தொட்டு சாதனை படைத்து வருகிறார்.

கூடுதல் வினாக்கள்

1. நர்த்தகி நடராஜ் பற்றிய குறிப்பு வரைக

  • முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தவர்
  • தம் நாட்டியத் திறமையினால் எண்ணற்ற ரசிகர்களை பெற்றவளர்.
  • தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி கொண்டு நாட்டியக் கலையில் தமெக்கென தனி இடம் பெற்றவர்.
  • சிறுபான்மையிலும் சிறுபான்மயிராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகிற்கு காட்டியவர்.

2. நர்த்தகி நடராஜ் நடனம் யாரிடம் கற்றார்?

நர்த்தகி நடராஜ் நடனம் வைஜெயந்திமாலாவின் குருவான கிட்டப்பாவிடம் கற்றார்

3. நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகளை கூறு

  • தமிழக அரசின் “கலைமாமணி விருது”
  • இந்திய அரசின் “சங்கீத நாடக அகாதெமி விருது”
  • இந்திய அரசுத் தொலைக்காட்சியின் “ஏ கிரேடு கலைஞர்”
  • இந்திய வெளியுறவுத்தறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்
  • பெரியார் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு “முனைவர் பட்டம்”

3.திருமங்கையாகப் பிறந்து சாதித்தவர்கள் சிலரைக் கூறுக

  • யாஷினி – இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்
  • ஜேயிதா மோண்டல மாஹி – இஸ்லாம்பூர் லோக் அதாலத் நீதிபதி
  • தாரிகாபானு – 2017-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்

4.திருமங்கைகள் சாதித்த துறைகளை விவரி

காவல்துறை

சேலத்தில்  பிறந்த பிரித்திகா யாஷினி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே 2011-ம் ஆண்டு “கணினி” பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர்க் காவல் துறையில் பயிற்சி பெற்றுத் தற்போது சென்னையில் காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு “இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்” என்னும் பெருமை கிடைத்துள்ளது.

நீதித்துறை

ஜேயிதா மோண்டல மாஹி என்பவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருமங்கை. இவர் திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் “லோக் அதாலத்” நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். லோக் அதாலத் நீதிபதி பதவிக்குத் திருநங்கை ஒருவரை நியமித்து இந்திய நாட்டில் இதுவே முதல் முறையாகும்.

சித்த மருத்துவம்

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவரான தாரிகாபானு திருவள்ளூவர் மாவட்டம் அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், அறிவியல் பாடப்பிரிவில் பயின்றார். 2017-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். சாதனை புரிவதற்குப் பாலினம் தடையில்லை என்பதை இவர்கள் திறமையின் செயல்களால் தெளிவு பெற வேண்டும்.

சில பயனுள்ள பக்கங்கள்