11th Tamil Public Exam Question Papers with Answer Key March 2024

Exciting News for 11th Standard Students! Get ready, dear students! The question paper and answer key for the 11th Tamil Public Exam 2024 are now available for download. This invaluable resource includes the official question paper and a comprehensive answer key providing detailed solutions to all the questions in the Tamil paper.

11th Tamil Public Exam Question Paper 2024 with Answer Key

Download the 11th Tamil Question Paper PDF

You can now easily download the PDF of the 11th Tamil Public Exam Question Paper that was conducted today. You can also access the Answer Key of the same exam on this page. Both the Question paper and Answer Key are provided in PDF format.

Exam DateQuestion Paper DetailsPDF Link
4th March 2024Tamil Original Question PaperDownload PDF
4th March 202411th Tamil Answer Key PDFDownload PDF
4th March 202411th Tamil Answer Key by Sura GuideDownload PDF

11th Tamil Public Exam Answer Key 2024

Tamil Nadu State Board 11th Standard Students who took the Tamil Subject Exam 2024 can find the answers to all the questions asked in the exam here. The subject matter experts have prepared an 11th Tamil Answer Key that provides correct Answers and Explanations for each question. Students can use the answer key to verify their responses and evaluate their performance in the exam.

பகுதி I – அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக.

1. துன்பப்படுபவர் _______

(அ) பொருளைக் காக்காதவர்
(ஆ) தீக்காயம் பட்டவர்
(இ) நாவைக் காக்காதவர்
(ஈ) தீயினால் சுட்டவர்

விடை: (இ). நாவைக் காக்காதவர்

2. ‘புல்லின் இதழ்கள்’ – நூலின் ஆசிரியர்

(அ) பாப்லோ நெருடா
(ஆ) ஸ்டெஃபான் மல்லார்மே
(இ) ரவி வர்மா
(ஈ) வால்ட் விட்மன்

விடை: (ஈ) வால்ட் விட்மன்

3. தவறான இணையை தேர்வு செய்க

(அ) கடல் + அலை = உயிர் + மெய்
(ஆ) மொழி + ஆளுமை = உயிர் + மெய்
(இ) மண் + வளம் = மெய் + மெய்
(ஈ) தமிழ் + உணர்வு = மெய் + உயிர்

விடை: (அ) கடல் + அலை = உயிர் + மெய்

4. கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.

(1) தஞ்சை பெரிய கோயில் (i) திருச்சாழல்
(2) சிங்கன சிங்கி (ii) காலத்தை வென்ற கலை
(3) பெண்கள் விளையாட்டு(iii) இசைத் தமிழர் இருவர்
(4) சிம்பொனித் தமிழர்(iv) குற்றாலக் குறவஞ்சி

(அ) (1) – (iv), (2) – (iii), (3) – (i), (4) – (iii)
(ஆ) (1) – (ii), (2) – (iv), (3) – (i), (4) – (iii)
(இ) (1) – (ii), (2) – (iii), (3) – (iv), (4) – (i)
(ஈ) (1) – (iv), (2) – (iii), (3) – (ii), (4) – (i)

விடை: (இ) (1) – (ii), (2) – (iii), (3) – (iv), (4) – (i)

5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு

(அ) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்
(ஆ) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்
(இ) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு
(ஈ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்

விடை: (அ) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்

6. உலக சிட்டுக்குருவிகள் நாள்

(அ) ஆகஸ்ட் 9
(ஆ) ஜனவரி 18
(இ) மார்ச் 20
(ஈ) செப்டம்பர் 16

விடை: (இ) மார்ச் 20

7. உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக்குறிப்பு

(அ) வினையெச்சம், வினைத்தொகை
(ஆ) உரிச்சொல் தொடர், ஈற்றுப்போலி
(இ) பெயரெச்சம், பண்புத்தொகை
(ஈ) வினைத்தொகை, இடவாகுபெயர்

விடை: (ஆ) உரிச்சொல் தொடர், ஈற்றுப்போலி

8. கூற்று: “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம்: கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.

(அ) கூற்று தவறு, விளக்கம் சரி
(ஆ) கூற்று சரி, விளக்கம் தவறு
(இ) கூற்று தவறு, விளக்கமும் தவறு
(ஈ) கூற்றும் சரி, விளக்கமும் சரி

விடை: (ஈ) கூற்றும் சரி, விளக்கமும் சரி

9. புலி போலப் பாய்ந்தான் – எவ்வகை உவமை

(அ) மெய்
(ஆ) வினை
(இ) உரு
(ஈ) பயன்

விடை: (ஆ) வினை

10. ஒர் ஆண்மகனின் ஒழுக்கலாறுகளை பற்றிப் பாடும் திணை

(அ) பாடாண் திணை
(ஆ) பொதுவியில் திணை
(இ) குறிஞ்சித் திணை
(ஈ) வெட்சித் திணை

விடை: (அ) பாடாண் திணை

11. நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது

(அ) கனி முன் நிரை
(ஆ) காய் முன் நேர்
(இ) மா முன் நேர்
(ஈ) காய் முன் நிரை

விடை: (இ) மா முன் நேர்

12. மனோன்மணீயத்தின் கிளைக்கதை

(அ) சிவகாமியின் சரிதம்
(ஆ) சிவகாமியின் சபதம்
(இ) பஞ்சாலி சபதம்
(ஈ) இரகசிய வழி

விடை: (ஈ) இரகசிய வழி

13. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை

(i) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்
(ii) நேரடிப் பொருள்கள்

(அ) இரண்டும் சரி
(ஆ) (i) மட்டும் சரி
(இ) இரண்டும் தவறு
(ஈ) (ii) மட்டும் சரி

விடை: (ஈ) i மட்டும் சரி

14. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்

(அ) 22
(ஆ) 48
(இ) 18
(ஈ) 24

விடை: (அ) 22

பகுதி – II

பிரிவு – 1

குறிப்பு : எவையேனும்‌ மூன்று வினாக்களுக்கு விடை தருக.

15. ”வளருங்‌ காவில்‌ முகில்‌ தொகை ஏறும்‌ – பொன்‌
        மாடம்‌ எங்கும்‌ அகிற்புகை நாறும்‌’”
      – அடிக்கோடிட்ட தொடர்‌ குறிப்பிடுவது என்ன ?

  • தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும்.
  • நிலவளம், நீர்வளம் மிக்க நாடு தெனகரை நாடு எனக் குறிப்பிடுகின்றார் பெரியவன் கவிராயர்

16. படைக்குப்‌ பாதுகாப்பாக இருப்பவை எவை?

வீரம், மானம், முன்னோர் வழி நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்ற நான்கும் பாதுக்காப்பாக இருப்பவை ஆகும்.

17. அகநானூறு எத்தனைப்‌ பிரிவுகளைக்‌ கொண்டது? அவை யாவை?

அகநானூற்றின் பிரிவுகள் மூன்று. அவை : களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை

18. “ஒழுக்கமும்‌ பொறையும்‌ உனைப்போல்‌ யார்க்குள”’
      – இவ்வடி எதனைக்‌ குறிப்பிடுகிறது?

எம்மண்ணையும் நன்மண்ணாக்கும் நாங்கூழ்ப் புழுவின் செயல்பாடுகளை இவ்வடி குறிப்பிடுகிறார்.

பிரிவு – 2

குறிப்பு : எவையேனும்‌ இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்‌.

19. பேச்சு மொழி, எழுத்து மொழியைக்‌ காட்டிலும்‌ உணர்ச்சி வெளிப்பாட்டுச்‌ சக்தி மிக்கது ஏன்‌?

20. தட்சிண மேரு – குறிப்பு வரைக.

  • கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உயரமானதும் பெயரிதம் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டப்பட்ட கோவிலாகும்.
  • ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்டது.
  • இக்கோவில் கருவறை விமானம் 216 அடி உயரத்தையும், 13 தளங்களையும் கொண்டுள்ளது,
  • இதனை இராசராசன் “தட்சிணமேரு” எனப் பெருமையுடன் அழைத்தான்

21. சங்ககாலத்தில்‌ தமிழ்மொழியின்‌ நிலைபற்றி இராசமாணிக்கனார்‌ கூற்று யாது?

சங்க காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் தமிழ் விளங்கியுள்ளது. மேலும், தமிழ் மொழியே சமயம், வாணிகம் முதலான எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது” என இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

பிரிவு – 3

குறிப்பு : எவையேனும்‌ ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும்‌. 

1. மொழிக்கு இறுதியில்‌ வரும்‌ எழுத்துகள்‌ எத்தனை ? அவை யாவை ?

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22

  • உயிரெழுத்துகள் பன்னிரெண்டு (அ முதல் ஒள)
  • மெய்யெழுத்துக்கள் மெய் வடிவிலேயே சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன.
  • மெய்களில் க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும்

23. ஏதேனும்‌ ஒன்றனுக்குப்‌ பகுபத உறுப்பிலக்கணம்‌ தருக.

(அ) ஈன்ற

ஈன்ற – ஈன் + ற் + அ

  • ஈன் – பகுதி
  • ற் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி.

(ஆ) முளைத்த

முளைத்த – முளை + த் + த் + அ

  • முளை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி.

24. ஏதேனும்‌ ஒன்றனுக்குப்‌ புணர்ச்சி விதி தருக.

(அ) அரும்பொருள்‌

அரும்பொருள் – அருமை + பொருள்

  • ஈறு போதல் – அரு + பொருள்
  • இனமிகல் – அரும்பொருள்.

(ஆ) மணிக்குலம்‌

மணிக்குலம் – மணி + குலம்

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் – மணிக்குலம்

25. மரபுப்‌ பிழைகளை நீக்கி எழுதுக.

(அ) குயில்‌ கத்த நாய்‌ ஊளையிட்டது.

குயில்‌ கூவ நாய்‌ குரைத்தது.

(ஆ) சோறு சாப்பிட்டு, நீர்‌ பருகினான்‌.

சோறு உண்டு, நீர்‌ பருகினான்‌.

26. மயங்கொலிச்‌ சொற்களை ஒரே தொடரில்‌ அமைத்து எழுதுக.

குரை, குறை

தற்போது எங்கள் வீட்டருகில் தற்போது நாய்கள் குரைக்கும் ஓசை குறைந்து விட்டது.

27. வல்லின மெய்களை இட்டும்‌ நீக்கியும்‌ எழுதுக.

(அ) கல்வி கேள்விகளில்‌ சிறந்தவர்‌ நன்மைத்‌ தீமைகளை புரிந்து பேசுவர்‌.

கல்வி கேள்விகளில் சிறந்தவர், நன்மை தீமைகளை புரிந்து பேசுவர்.

(ஆ) தமிழர்‌ ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய்‌ வெட்டிப்‌ பாசனம்‌ செய்தனர்‌.

தமிழர் ஆற்று தண்ணீரைத் தேக்கி சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.

28. திருத்தக்‌ குறியீடுகளின்‌ வகைகளைக்‌ கூறுக.

  • பொதுவானவை
  • நிறுத்தக்குறியீடுகள் தொடர்பாவை
  • இடைவெளி தரவேண்டியவை
  • இணைக்க வேண்டியவை
  • எழுத்து வடிவம்

29. கலவைத்‌ தொடராக மாற்றுக.

மூன்று நாள்கள்‌ கல்லூரிக்கு விடுமுறை. மாணவர்கள்‌ தஞ்சாவூர்‌ பிரகதீஸ்வரர்‌ கோவிலுக்குச்‌ சென்றனர்‌. சிற்பங்களைக்‌ கண்டு மகிழ்ந்தனர்‌.

மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறையென்பதனால் மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

30. சொல்லைப்‌ பிரித்தும்‌ சேர்த்தும்‌ தொடரமைக்கவும்‌.

வைகை அல்லது நஞ்சிருக்கும்‌

வைகை

  • வைகை – மதுரையை வைகை நதி வளம்கொழிக்க செய்கிறது
  • வை கை – பணப்பையில் “வை கை”யை உதைப்பேன் என்றார் தந்தை

நஞ்சிருக்கும்‌

  • நஞ்சிருக்கும் வாழைப்பழத்தை நஞ்சிருக்கும் போது தின்னக்கூடாது
  • நஞ்சு இருக்கும் பாம்புக்கு பல்லில் நஞ்சு இருக்கும்

Useful Links