Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 1.1 – இளந்தமிழே!

பாடம் 1.1. இளந்தமிழே!

12ஆம் வகுப்பு தமிழ், இளந்தமிழே! பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 1.1. இளந்தமிழே!

நூல்வெளி

இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்;

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்;

மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்;

இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்;

மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்;

சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

இலக்கணக் குறிப்பு

  • செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்
  • சிவந்து – வினையெச்சம்
  • வியர்வைவெள்ளம் – உருவகம்
  • முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

1. சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆ ன்

  • சாய் – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. விம்முகின்ற = விம்மு + கின்று + அ

  • விம்மு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.

3. வியந்து = விய + த் (ந்) + த் + உ

  • விய – பகுதி, த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

4. இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய்

  • இரு – பகுதி,
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

1.செம்பரிதி = செம்மை + பரிதி

  • ஈறு போதல்” என்ற விதிப்படி “செம்பரிதி” என்றாயிற்று

2. வானமெல்லாம் = வானம் + எல்லாம்

  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வானமெல்லாம்” என்றாயிற்று

3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்

  • இஈஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “உன்னை + ய் + அல்லால்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உன்னையல்லால்” என்றாயிற்று

4. செந்தமிழே = செம்மை + தமிழே

  • ஈறு போதல்” என்ற விதிப்படி “செம் + தமிழே” என்றாயிற்று
  • முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “செந்தமிழே” என்றாயிற்று

பலவுள் தெரிக

2. மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

௧) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
௨) பொதிகையில் தோன்றியது
௩) வள்ளல்களைத் தந்தது

  1. க மட்டும் சரி
  2. ௧, ௨ இரண்டும் சரி
  3. ௩ மட்டும் சரி
  4. ௧, ௩ இரண்டும் சரி

விடை : ௧, ௩ இரண்டும் சரி

குறுவினா

1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் வீற்றிருக்கும் வியர்வை முத்துகளைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

சிறுவினா

1. ’செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

  • கதிரவன் தன் கதிர்களை சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை
  • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலை முகட்டில் தன் தலை சாய்க்கிறான்.
  • கதிரவனின் கதிரொளிபட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

2. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.

– நன்னூல்

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

– சிற்பி பாலசுப்பிரமணியம்

நன்னூல்சிற்பி பாலசுப்பிரமணியம்
பழையவற்றை ஒதுக்கி புதியவற்றைப் புகுத்த வேண்டும்பழமை செல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுக்க வேண்டும்
தேவையற்ற சொல், பொருள், வழக்கம் எல்லாம் கால மாறுதலுக்கு ஏற்ப புதிய சொல், பொருள் வழக்கம் தேவைதமிழ்த்தாயின் பழமைமிகு செயல்பாடுகளுக்கு புதிய வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட வா.

நெடுவினா

தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக

இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.

  • செம்மைமிகு சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது
  • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய்க் காணப்டுகிறது.
  • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே என் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாகும் இருக்கும் தமிழே!
  • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
  • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
  • என் பழமையான நலன்களை எல்லாம் புதுபித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல வா.
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • வியந்து, ஈன்று, கூவி, உடைத்து – வினையெச்சங்கள்
  • தமிழ்க்குயில் – உருவகம்

உறுப்பிலக்கணம்

தாந்தாய் = தா (த) + த் (ந்) + த் + ஆய்

  • தா – பகுதி
  • த – ஆனது விகாரம்
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

1. வீற்றிருக்கும் = வீற்று + இருக்கும்

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “ வீற்ற் + இருக்கும்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வீற்றிருக்கும்” என்றாயிற்று

2. எம்மருமை = எம் + அருமை

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “ எம்ம் + அருமை” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “எம்மருமை” என்றாயிற்று

3. செந்நிறம் = செம்மை + நிறம்

  • ஈறு போதல்” என்ற விதிப்படி “செம் + நிறம்” என்றாயிற்று
  • முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “செந்நிறம்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. “பொதிகை” என்பது எந்த மலையைக் குறிக்கும்?

  1. விந்திய மலை
  2. குற்றால மலை
  3. இமய மலை
  4. சாமி மலை

விடை : குற்றால மலை

2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?

  1. அக்கினி சாட்சி
  2. அக்கினி
  3. சாட்சி
  4. சூரியநிழல்

விடை : அக்கினி சாட்சி

3. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்பு

  1. ஒரு கிராமத்தின் கதை
  2. ஒரு புளியமரத்தின் கதை
  3. ஒரு நகரத்தின் கதை
  4. ஒரு கிராமத்தின் நதி

விடை : ஒரு கிராமத்தின் நதி

4. பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்

  1. கோப்பெருந்தேவி
  2. தமிழன்னை
  3. வேண்மார்
  4. ஒளவையார்

விடை : தமிழன்னை

5. எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ- என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. சிற்பி பாலசுப்பிரமணியம்

விடை : சிற்பி பாலசுப்பிரமணியம்

குறுவினா

1. தொழிலாளர்களின் கைகள் எதனைப் போலச் சிவந்துள்ளதாக கவிஞர் சிற்பி கூறுகிறார்?

மாலையில் மறையும் கதிரவனின் கதிரொளி போல தொழிலாளரின் கைகள் சிவந்துள்ளதாக கூறுகிறார்.

2. தமிழ்மொழியின் பழமை நலம் எவை?

  • தமிழ்மொழி பாண்டியர்களின் அவையிலே தன்னிகரற்ற செம்மொழியாய் ஆட்சி செய்தது.
  • பாரி போன்ற வள்ளல்கள் பலரை தமிழ் மண்ணிற்கு தந்த பழமை நலம் கொண்ட மொழி.

3. முத்தமிழ் ஈன்று தந்த வள்ளல்கள் யாவர்?

அதியன், பாரி, காரி, பேகன், ஆய், ஓரி, நள்ளி

4. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் ஆசை என்ன?

தமிழ் பல புதிய உள்ளங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பழங்சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். என்பதே கவிஞர் பால சுப்பிரமணியத்தின் ஆசை ஆகும்.

5. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூல்களை யாவை?

ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி

6. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?

இலக்கியச் சிந்தனைகள், மலையாளக்கவிதை, அலையும் சுவரும்

7. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எம்மொழிகளெல்லாம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன?

  • கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றியவர்.
  • மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
  • இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளர், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய கவிதை நூல்களை படைத்துள்ளளார்.
  • இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.
  • மலையாளத்திலிருந்து கவிதைகளையும், புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்