Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 1.3 – தன்னேர் இலாத தமிழ்

பாடம் 1.3. தன்னேர் இலாத தமிழ்

12ஆம் வகுப்பு தமிழ், தன்னேர் இலாத தமிழ் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 1.3. தன்னேர் இலாத தமிழ்

நூல்வெளி

தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. பாடப்பகுதி பொருளணியியல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.

இவர் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது;

இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம்.

இலக்கணக் குறிபபு

  • உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
  • வெங்கதிர் – பண்புத்தொகை
  • இலாத – (இல்லாத) இடைக்குறை விகாரம்; எதிர்மறைப் பெயரெச்சம்

உறுப்பிலக்கணம்

1.வந்து = வா(வ) + த் (ந்) + த் + உ

  • வா – பகுதி ;
  • வ – எனக் குறுகியது விகாரம்
  • த் – சந்தி ;
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

2. உயர்ந்தோர் = உயர் + த் (ந்) + த் + ஓர்

  • உயர் – பகுதி ;
  • த் – சந்தி ;
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் – பலர் பால் வினைமுற்று விகுதி
  • ஆர் – என்பதன் ஈற்றயலெழுத்தான “ஆ” “ஓ” ஆகத்திரியும் (நன்.353)

3. விளங்கி = விளங்கு + இ

  • விளங்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

1. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “ஆங்க் + அவற்றுள்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “ஆங்கவற்றுள்” என்றாயிற்று

2. தனியொழி = தனி + ஆழி

  • இஈஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “தனி + ய் + ஆழி” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தனியொழி” என்றாயிற்று

3. வெங்கதிர் = வெம்மை +கதிர்

  • ஈறு போதல்” என்ற விதிப்படி “வெம் + கதிர்” என்றாயிற்று
  • முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “வெங்கதிர்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
    தன்னேர் இலாத தமிழ் இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

  1. அடிமோனை, அடிஎதுகை
  2. சீர்மோனை, சீர்எதுகை
  3. அடிஎதுகை, சீர்மோனை
  4. சீர்எதுகை, அடிமோனை

விடை : அடிஎதுகை, சீர்மோனை

சிறுவினா

1. ’ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்

இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்

பொருள்

மக்களால் போற்றப்பட்டு , உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு எம்மொழியும் இல்லை என்பதாகும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • வந்து, தொழ, விளங்கி – வினையெச்சங்கள்
  • ஒலிநீர் – வினைத்தொகை
  • இருளகற்றும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. இலாத = இலா + (ஆ) + த் +அ

  • இலா – பகுதி ;
  • ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

1. ஓங்கலிடை = ஓங்கல் + இடை

  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “ஓங்கலிடை” என்றாயிற்று

2. இருளகற்றும் = இருள் + அகற்றும்

  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “இருளகற்றும்” என்றாயிற்று

3. கதிரொன்று = கதிர் + ஒன்று

  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “கதிரொன்று” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் நூல்

  1. மாறனலங்காரம்
  2. முத்துவீரியம்
  3. வீரசோழியம்
  4. இலக்கண விளக்கம்

விடை : மாறனலங்காரம்

2. தண்டியலங்காரம் …………………. என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி இயற்றப்பட்டது.

  1. முத்துவீரியம்
  2. குவலயானந்தம்
  3. மாறனலங்காரம்
  4. காவியதர்சன்

விடை : காவியதர்சன்

3. தண்டியலங்கார இலக்கண நூலின் ஆசிரியர் …………………….

  1. தண்டி
  2. முத்துவீரியம்
  3. குவலயானந்தம்
  4. மாறனலங்காரம்

விடை : தண்டி

4. “தமிழ் விரிவை” உணர்த்தப் புலவர் கையாளும் தொடர் ………………… 

  1. வானிலும் உயர்ந்தன்று
  2. வலிமைமிக்கது
  3. நிலத்தினும் பெரிது
  4. கடலினும் ஆழமானது

விடை : வானிலும் உயர்ந்தன்று

5. தமிழ் தோன்றிய மலை

  1. பொதிகை மலை
  2. குடகு மலை
  3. இமய மலை
  4. விந்தியமலை

விடை : பொதிகை மலை

6. காவியதர்சம் என்பது

  1. புராண நூல்
  2. வரலாற்று நூல்
  3. வடமொழி இலக்கணநூல்
  4. நாடக நூல்

விடை : வடமொழி இலக்கணநூல்

7. தண்டி …………….. ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்

  1. கி.பி. 11
  2. கி.பி. 13
  3. கி.பி 12
  4. கி.பி. 14

விடை : கி.பி 12

8. தண்டியலங்காரத்தின் பெரும் பிரிவுகள்

  1. 6
  2. 5
  3. 4
  4. 3

விடை : 3

குறுவினா

1. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

2. அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம்

3. தண்டியலங்காரத்தின் பெரும் பிரிவுகள் யாவை?

பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது;

4. புற இருளை போக்குவது எது?

மக்களால் போற்றப்பட்டு , உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகின் இருளைப் போக்கும் கதிரவனாகும்

5. பொருள் வேற்றுமை அணி என்றால் என்ன?

இருவேறு பொருள்களுக்கிடைேய ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

6. தண்டியலங்காரம் சிறு குறிப்பு வரைக 

  • தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.
  • காவியதர்சம் என்னும் வடமொழி இலககண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
  • இந்நூலின் ஆசிரியர் தண்டி (கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்)
  • இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது;
  • இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.

7. பொருள் வேற்றுமை அணியினை சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்

இருவேறு பொருள்களுக்கிடைேய ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

சான்று

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!

அணி பொருத்தம்

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று . இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

கதிரவன் புற இருளை அகற்றும்

தமிழ்மொழி அக இருளை அகற்றும்

விளக்கம்

கதிரவன்

எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்

தமிழ்மொழி

குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றி தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும் அத் தமிழ் மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இல்லை

8. தன்னேர் இலாத தமிழின் சிறப்புக் குறித்துத் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் உணர்த்தும் செய்தி என்னவென்று கூறுக

  • இந்நில உலகில் வாழும் மக்கள் அனைவராலும் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, எப்போதும் ஒலித்து கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவன்.
  • குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றி தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றுவதும் எதனோடு ஒப்பிட்டுக் கூறமுடியாததுமானது தமிழ் மொழி
  • புற இருளை போக்கும் கதிரவனைப் போல் அக இருளைப் போக்கும் தமிழ் மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்று தண்டியலங்கார உணர மேற்கோள் பாடல் உணர்த்துகிறது.

சில பயனுள்ள பக்கங்கள்