பாடம் 2.1. பெருமழைக்காலம்
கவிதைப்பேழை > 2.1. பெருமழைக்காலம்
பலவுள் தெரிக
1. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
- பருவநிலை மாற்றம்
- மணல் அள்ளுதல்
- பாறைகள் இல்லாமை
- நிலத்தடிநீர் உறிஞ்சப்படுதல்
விடை : மணல் அள்ளுதல்
2. உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் இத்தொடர் உணர்த்துவது
- கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
- பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
- காலநிலை மாறுபடுகிறது
- புவியின் இயக்கம் வேறுபடுகிறது
விடை : கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
குறுவினா
1. ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்
v மழைக்கு ஆதாரம் மரம்
v உயிர்வளிக்கு உதவுவது மரம்
v மண் அரிப்பை தடுக்கும் மரம்
v மரம் தரும் நிழல் குளிச்சி என்று கூறுவேன்
2. மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் – இரு தொடர்களாக்குக.
- மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்.
- மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியன் விளைவை இன்று சந்தித்து கொண்டிருக்கிறான்.
சிறுவினா
1. மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
- வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
- நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும்
- இயல்பாகவே பெருமழையைத் தாங்கக்கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகளைச் தூர் வார்தல் வேண்டும்.
- சூறாவளி, புயல், வெள்ளம் குறித்த போதிய விழிப்புணர்வை அனைத்துப் பொதுமக்களும் பெறும் விதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.
2. பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக
- நடுவண் அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
- புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது. இதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
- இக்குழுக்ககள் மாநிலம், மாநிலம், மாவட்டம், ஊராட்சி ,
சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் குழுக்கள் அமைத்துப் பேரிடர்க் காலங்களில் செயலாற்ற ஆணையம் வழிவகை செய்துள்ளது.
- அரசு, தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
நெடுவினா
1. நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
பெருமழைக்காலம்
அயோத்திதாசர் : வணக்கம் ஐயா! நான் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பசுமைதாசர் : வணக்கம் மிக்க மகிழ்ச்சி.
அயோத்திதாசர் : நெகிழி என்றால் என்னங்க ஐயா!
பசுமைதாசர் : நெகிழி என்பது திடப்பொருள். இச்சொல்லை பிளாஸ்டிக் என்றும் அழைப்பர். பிளாஸ்டிக்கோஸ் என்ற கிரேக்க சொல்லில் உருவானது.
அயோத்திதாசர் : நெகிழி தோன்றியதன் வரலாறு கூறமுடியுமா ஐயா.
பசுமைதாசர் : நெகிழி செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது. இது 1862-ல் இலண்டனைச் சேரந்த அலெக்சாண்டர் பாக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அயோத்திதாசர் : நெகிழியின் பயன்பாடுக்ள் பற்றிசி சில கூறுங்கள் ஐயா
பசுமைதாசர் : பொதுவாக நெகிழி பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் தீமைகளே அதிகம்.
இன்றும் நாம் கையாளும் பொருள்கள் அனைத்திலும் நெகிழி உதவி இல்லாமல் இல்லை. காலை கண் விழித்து பல்துலக்கப் பயன்படுத்தும் பொருள் முதல் இரவு படுக்கைக்கு செல்லும்போது படுக்கும் பாய் வரை ஒவ்வொன்றும் நெகிழியால் உருவாக்கப்பட்டது.
அயோத்திதாசர் : நல்லது ஐயா! அப்ப நெகிழி இல்லாமல் நாம் இல்லை.
பசுமைதாசர் : அப்படி சொல்லக்கூடாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் நெகிழி இல்லையே!
அயோத்திதாசர் : சரிங்க ஐயா! நெகிழியால் ஏற்படும் தீமைகள் பற்றி எனக்கு விரிவாக விளக்குங்கள் ஐயா!
பசுமைதாசர் : நெகிழியைப் பயன்படுத்துவதால் மண்வளம் குன்றி தாவர இனம் அழிகிறது. தாவர இனம் அழிவதால் மழை வளம் குறைகிறது. மழை இல்லை என்றால் மனிதர் இல்லையே.
அயோத்திதாசர் : மேலும் அறிந்து கொள்ள விழைகிறேன் ஐயா!
பசுமைதாசர் : உறுதியாகச் சொல்கிறேன்!
நீர் செல்லும் கால்வாய்களில் நெகிழி அடைக்கப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. நெகிழியை எரிப்பதால் டையாசீன் என்ற நச்சு வெளிப்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. சூடான பொருள்கள் நெகிழிப்பையில் வாங்கி உண்பதால் புற்றுேநாய் உருவாகிறது. அவற்றை சில விலங்குகள் உண்பதால் அவைகளும் மடிகின்றன.
அயோத்திதாசர் : நன்றி ஐயா!
பசுமைதாசர் : “துணிப்பை எளிதானது. தூர எறிந்தால் எருவாகும்…” “நெகிழிப்பை அழகானது. தூர எறிந்தால் விட(ஷ)மாகும்…. ” என்பதற்கு எற்ப நாம் நெகிழியைப் பயன்படுத்துவதைச் சிறிது சிறிதாக குறைப்போம
மண்வளம் காப்போம்! மழை வளம் பெருக்குவோம்!
மரம் நடுவோம்! மனித குலம் தளைப்போம்!
வாழ்க வளமுடன் நன்றி!
அயோத்திதாசர் : நன்றி!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. உலகப் புவி நாள் ………………….
- ஏப்ரல் 25
- மார்ச் 25
- ஏப்ரல் 22
- மார்ச் 22
விடை : ஏப்ரல் 22
2. மாமழை போற்றுதும் என்னும் பாடல் வரியின் ஆசிரியர்
- இளங்கோவடிகள்
- திருவள்ளுவர்
- ஒளவையார்
- கம்பர்
விடை : இளங்கோவடிகள்
3. நீரின்றி அமையாது உலகு என்னும் பாடல் வரியின் ஆசிரியர்
- ஒளவையார்
- திருவள்ளுவர்
- நக்கீரர்
- கம்பர்
விடை : திருவள்ளுவர்
4. 2005-ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் பெய்த மழையளவு
- 994 மி.மீ
- 994 செ.மீ
- 995 மி.மீ
- 995 செ.மீ
விடை : 994 மி.மீ
5. ஒக்கி என்பதன் தமிழ்ச்சொல் ……………..
- வாயு
- காற்று
- வாய்
- கண்
விடை : கண்
6. புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே என்றவர்
- டேவிட் கிங்
- ஜான் டேவிட்
- ஜார் மார்ஷல்
- ஹென்றி
விடை : டேவிட் கிங்
7. நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு
- 2005 டிசம்பர் 26
- 2005 டிசம்பர் 25
- 2005 டிசம்பர் 24
- 2005 டிசம்பர் 23
விடை : 2005 டிசம்பர் 23
8. ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
- டெல்லி
- மும்பை
- குஜராத்
- கொல்கத்தா
விடை : குஜராத்
9. உலகச் சுற்றுச்சூழல் நாள்
- மே 4
- ஜீலை 4
- ஜீன் 4
- ஆகஸ்ட் 4
விடை : ஜீன் 4
10. வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் எட்டு நாடுகளில் பொருந்தாது
- நேபாளம்
- இலங்கை
- மியான்மர்
- மாலத்தீவு
விடை : ஜீன் 4
11. ஐக்கிய நாடுகள் அவை 1992 ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய இடம்
- ஹைத்தி
- ரியோடிஜெனிரோ
- ஹாமில்டன்
- நியூயார்க்
விடை : ரியோடிஜெனிரோ
12. UNFCCC – என்பதன் விரிவாக்கம்
- United Nations Framework Conventer on Climate Changes
- United Nations Framework Convention on Climate Changes
- United Nations Firework Convention on Climate Changes
- Union Nations Framework Convention on Climate Changes
விடை : United Nations Framework Convention on Climate Changes
13. உலகச் சுற்றுச்சூழல் நாள்.
- ஜூலை 5
- ஜூன் 15
- ஜூன் 5
- ஜூலை 15
விடை : ஜூன் 5
குறுவினா
1. இயற்கை சமநிலை என்றால் என்ன?
மழைப்பொழிவு காரணமாக மண்பரப்பில் நீர் நிறைந்து தாவர உயிரினங்களும், விலங்கினங்களும் தோன்றின. இவ்வாறு சார்ந்து வாழும் இந்த உயிரினங்கள் அனைத்தும் ஒரு குழுவாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இவற்றிற்கான உணவுக் சங்கிலியே இயற்கைச் சமநிலை எனப்படும்.
2. சார்க் அமைப்பில் இருக்கும் நாடுகள் யாவை?
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து
3. கார்பன் அற்ற ஆற்றல்கள் யாவை?
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல், தாவர ஆற்றல் போன்றவை அற்ற ஆற்றல்கள் எனப்படும்.
4. பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகள் யாவை?
குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால், வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகள் போன்றவையே பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகள் ஆகும்.
5. பசுமைக்குடில் வாயுக்கள் என்பன யாவை?
கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், நீர்வாயு போன்றவை பசுமைக்குடில் வாயுக்கள் ஆகும்.
6. UNFCCC என்பதன் விரிவாக்கம் என்ன?
UNFCCC – United Nations Framework Convention on Climate Changes)
7. மழையைக் கணிக்கும் அறிகுறிகள் பற்றி எழுதுக
- கார்மேகங்கள்
- சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல்
- செம்மை நிற மேகங்கள்
- திடீர்ப் புயல்
- காற்றின் திசை
- இடி, மின்னல்
- பலமான காற்று
- வானவில், முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள்
- பறக்கும் பருந்து, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்
- வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை
- தூசுப் பனிமூட்டம்.
8. பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
- பேரிடர்க் காலங்களில் தாங்கக்கூடியவையாகப் புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
- நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைபடம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
- சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
- கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை வளர்த்தல் வேண்டும்
9. வெள்ளச் சமவெளி என்றால் என்ன? அதன் பயன் யாது?
வெள்ளச்சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரணாகும்.
- ஆற்றின் ஓரங்களில் படியும் பொருட்களை ஆற்றங்கரை படிவு என்பர்.
- படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மேற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
- அப்படிவம் வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீலை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும்
- நீர் மாசடைவதைத் தடுக்கும்; வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்து விட்டால் பாதுகாக்கும்.
- உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் பயன் அடையும்.