Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 4.1 – பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

பாடம் 4.1. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

12ஆம் வகுப்பு தமிழ், பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 4.1. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

இப்பாடப்பகுதி உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சா.வின் இலக்கியக்
கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.’தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப் பெருங்கடல்; சிறந்த எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.

‘மகாமகோபாத்தியாய,’ ‘திராவிட வித்தியா பூஷணம்’, ‘தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்;

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

1932இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ. வே. சா. நூலகம் அமைந்துள்ளது.

பலவுள் தெரிக.

1. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

 1. வசம்பு
 2. மணத்தக்காளியிலைச் சாறு
 3. கடுக்காய்
 4. மாவிலைக்கரி

விடை : கடுக்காய்

2. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?

 1. இலக்கியம்
 2. கணிதம்
 3. புவியியல்
 4. வேளாண்மை

விடை : கணிதம்

குறுவினா

அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

 • தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
 • கணித்தில் : கீழவாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள்
 • “தலைகீழ்பாடம்” என்ற முறையும் உண்டு
 • ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.

சிறுவினா

1. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

 • மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு, செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.
 • கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன். மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்தற்கான காரணத்தைக் கண்ட அவனைத் தேற்றுவேன்.
 • கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றிலில் இடர்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.
 • எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன்.
 • தகாத வாரத்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.
 • மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான் வார்த்தைகளைக் கூறுவேன்.
 • மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல்; துன்புறுத்தல், மனம் நோக நடத்ல் என்பன போன்ற மன வேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.
 • நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.

2. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க

 • முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன்மேல் பிள்ளைகள் எழுதினர். மணிலில் எழுதிப் பழகுவர்.
 • எழுத்துக்கள் வரிசையாகவும், நன்றாகவும் அமைந்திருந்தன
 • பழங்காலத்தில், கல், களிமண்பலகை, உலோகத் தகடு, துணி, இலை, பனை ஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டடுள்ளன.
 • இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை.
 • மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதி கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கின.
 • கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. களிமண பலகைகக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினார்.
 • எழுத்துக்களின் உருவம் பலகாலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் முறையைக் கறு்றுக்கொண்டனர்.

நெடுவினா

1. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

முன்னுரை

ஓரு நாட்டின் முன்னேற்றம், கல்வி மேம்பாட்டுன் தொடர்புடையது. கல்வியின் நோக்கமும், அமைப்பு முறைகளும் மாற்றமடைந்து வந்துள்ளன. இலக்கிய, இலக்கணங்கள், காலநிலை வளர்ச்சியைக் காட்டுகின்றன.

கற்றலும் கற்பித்தலும்

பண்டைக்காலத்தில் கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றமாகும். திண்ணைப் பள்ளிக்கூடங்களில், ஆசிரியரே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பார். சரளமாக எழுத, பேசுகின்ற மொழித்திறன் மிக்கவராய் இருப்பார். ஆசிரியரே கற்பித்தல் தன்மையை முடிவு செய்வார்.

முதலில் நெடுங்கணக்கு முறைகளிலே கற்பித்தல் நிகழும். இலக்கியம், இலக்கணம், வாய்பாடு ஆகிய அனைத்தையும் முழுமையாக மனனம் செய்து, தெளிவு பெறச் செய்வார். வினாக்கள் கேட்பதன் வாயிலாக மாணவர்களிடம் மதிப்பீடும் செய்வார். மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்பப் பாடத் திட்டங்களும் மாற்றம் பெறும். மாணவர்ககளின் ஆரவத்திற்கேற்ப வியாபாரம் பற்றிய செய்திகளும், கணித முறைகளும் கற்பிக்கப்படும்.

கற்றல் செயல்பாடுகள்

மாணவரது கற்றல் தன்மைக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். மொழித்திறனும், செயல்திறனும் கண்காணிக்கப்படும். மாணவர்கள் குழுவாசக் சேர்ந்து செயல்பட வாய்ப்புக்கள் அளிக்கப்படும். மாணவர்கள், வினாக்கள் கேட்கும் விடைகள் கூறியும் கற்று வருவார்கள். அடிப்படையான நூல்கள் எல்லாம், மனனமாகவே இருக்கும். நிகண்டு, வாய்ப்பாடுகளை எல்லாம் தலைகீழ்ப் பாடமாக மனனம் செய்வர்.

அகராதி, அந்தாதி, எதுகை, மோனை வகையில் செய்யுட்களை ஞாபகத்தில் கொள்வர். ஞாபசக்தி அதிகரிப்பதற்காகப் பூ, மிருகம், ஊர் போன்ற பெயர்களை மறுநாள் வந்து சொல்லுவர். கற்றல் என்பது பள்ளியில் மட்டுமே எனற்றில்லாமல், வாழ்நாள் முழுவது இருக்கும். “குருவை மிஞ்சிய சீடர்” என்று சொல்லும் வகையில் மாணவர்கள், புதியன படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன?

 1. 20-ம் நூற்றாண்டு
 2. 19-ம் நூற்றாண்டு
 3. 18-ம் நூற்றாண்டு
 4. 17-ம் நூற்றாண்டு

விடை : 19-ம் நூற்றாண்டு

2. குருகுலம் என்பது …………………

 1. ஆசிரியரின் அறை
 2. குருக்கள் தங்குமிடம்
 3. ஆசிரியரின் வீடு
 4. துறவியரின் குழல்

விடை : ஆசிரியரின் வீடு

3. மன்றத்திற்கு வழங்கும் பெயர்

 1. அம்பலம்
 2. சபை
 3. சங்கம்
 4. கோட்டை

விடை : அம்பலம்

4. ஜைன மடங்களுக்கான பெயர்

 1. அம்பலம்
 2. மன்றம்
 3. திண்ணை
 4. பள்ளி

விடை : பள்ளி

5. பள்ளியென்னும் பெயர் எவற்றிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்

 1. பாடசாலை, ஆலயம்
 2. பாடசாலை, மடங்கள்
 3. பாடசாலை, விருந்தினர் கூடும் இடம்
 4. பாசறை, மடங்கள்

விடை : பாடசாலை, மடங்கள்

6. நெடுங்கணக்கு என்பது

 1. அரிச்சுவடி
 2. நீண்ட கணக்கு
 3. பெருக்கல் கணக்கு
 4. ஓலைச்சுவடி

விடை : அரிச்சுவடி

7. அக்ஷராப்பியாசம் என்பது

 1. பாடம் படித்தல்க்ஷ
 2. மனனம் செய்தல்
 3. எழுத்தறிவித்தல்
 4. ஏடு எழுதுதல்

விடை : எழுத்தறிவித்தல்

8. எழுத்தானணிக்கு வழங்கும் வேறுபெயர்

 1. ஊசி
 2. மடக்கெழுத்தாணி
 3. குண்டெழுத்தாணி
 4. எழுதுகோல்

விடை : ஊசி

9. கணக்காயர் என்பவர் …………..

 1. உரையாசிரியர்
 2. நூலாசிரியர்
 3. உபாத்தியாயர்
 4. மொழிபெயர்ப்பாளர்

விடை : உபாத்தியாயர்

10. பள்ளிக்கு முதலில் வருபவரை …………….. என்று சொல்வார்கள்

 1. வேத்தான்
 2. முதலான்
 3. சட்டாம்பிள்ளை
 4. சிசியான்

விடை : முதலான்

11. “தமிழ்த்தாத்தா” என அழைக்கப்பட்டவர் ……………………

 1. திரு.வி.க
 2. மா. பொ. சிவஞானம்
 3. மறைமலை அடிகளார்
 4. உ. வே. சாமிநாதர்

விடை : உ. வே. சாமிநாதர்

12. சென்னையில் உ.வே.சா. பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம் …………

 1. திருவான்மியூர்
 2. அடையாறு
 3. அண்ணாநகர்
 4. மயிலாப்பூர்

விடை : திருவான்மியூர்

13. பொருத்துக

1. உபாத்தியாயர்அ. தாழைமடல்
2. குழிமாற்றுஆ. ஆசிரியர்
3. சீதாளபத்திரம்இ. எழுத்துப்பயிற்சி
4. அக்ஷராப்பியாசம்ஈ. பெருக்கல் வாய்ப்பாடு
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

14. வெள்ளைக்கால் சுப்பிரமணியானார் என்பார் ………….. ஆவார்

 1. உயிரின மருத்துவர்
 2. வழக்கறிஞர்
 3. பொறியாளர்
 4. நீதியரசர்

விடை : உயிரின மருத்துவர்

குறுவினா

1. நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்? அவர் எங்கு யாரிடம் திண்ணைக் கல்விக் கற்றார்?

நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி

அவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார்.

2. இன்றைய பள்ளிக்கூடங்களில் வளர்க்கப்படும் செடி கொடிகளுக்கு ஆசிரியர் கூறும் உவமை என்ன?

நாடகத்தில் வனங்களை திரையில் எழுதித் தொங்கவிடுவது போலப் பள்ளிக்கூடங்களில் சட்டியிலும் வாயில்களும் செடி கொடிகளை வளர்ப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.

3. மன்றம் என்பது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்? அதன் வேறு பெயர்கள் என்ன?

பெரிய மரத்தடியில் மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். அம்பலம் என்றும் மன்றம் என்றும் அழைப்பர்.

4. “முறை வைப்பு” என்றால் என்ன?

உபாத்தியாயர் (ஆசிரியர்) ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வது “முறை வைப்பது” என்று அழைக்கப்படும்.

5. கையெழுத்து எவ்வாறு இருக்க வேண்டுமென்று பழைய வெண்பா பாடல் குறிப்பிடுகிறது.

 • எழுத்துகளில் கொம்பு, சுழி போன்றவை கோணக் கூடாது.
 • வரிசையாக எழுதும் எழுத்துக்கள் சாயக் கூடாது.
 • துணைக்கால் எழுத்துகள் சாயாமல் அம்புபோல் அசையாமல் எழுத வேண்டும்.

6. வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?

புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள்

7. “கிளிமூக்கு” என்பது என்ன?

 • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்திரித்து அமைப்பது பார்பதற்கப் கிளிமூக்கு போன்று இருக்கும்.
 • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் அமைப்பு “கிளிமூக்கு” என்றழைக்கப்படும்.

8. எழுத்தாணியின் வகைகள் எத்தனை? அவை யாவை?

எழுத்தாணியின் வகைகள் மூன்று

 • மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி

9. சட்டம், தூக்கு இவை எவற்றை உணர்த்துகின்றன?

சட்டம்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக வர தினமும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாங்கள் மேலே எழுதி அதைப் போன்று எழுதி வரச் சொல்வர். இதற்குச் “சட்டம்” என்று பெயர்

தூக்கு

சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் கருவிக்குத் “தூக்கு” என்று பெயர். இதற்கு “அசை” என்ற வேறு பெயரும் உண்டு.

10. தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ள அரசாணையால் அறியப்படும் செய்தி யாது?

தஞ்சாவூரில் வாழ்ந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரிடம் பல நாட்டைச் சார்ந்த மாணாக்கர்கள் கல்வி கற்க வந்திருந்தார்கள் என்ற செய்தி, முதல் இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ளது.

11. “வேதத்தான்” – இச்சொல்லால் அழைக்கப்பட்டவர் யார்? இதன் பொருள் என்ன?

 • பள்ளிக்கூடத்திற்கு காலை 5 மணிக்கே வர வேண்டும்.
 • பள்ளிக்கூடத்திற்கு முதலிலே வரும் மாணக்கரே “வேத்தான்” என்று அழைக்கப்பட்டார்.
 • மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பதே “வேத்தான்” என்பதன் பொருள்.

12. “தமிழ்த்தாத்தா” – பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?

 • மகாமகோபாத்தியாய
 • திராவிட வித்தியா பூஷணம்
 • தாக்ஷிணாத்திய கலாநிதி
 • 1932-ல் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்

13. “வித்தியாரம்பம்” என்பது யாது?

முதன் முதலில் ஐந்து வயதில் கல்வி கற்பதற்காகக் குழந்தைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுப்பதே விதியாரம்பம் என்பர்.

14. “நாராசம்” என்றால் என்ன?

இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியை செருகிக் கட்டுவார்கள் அதற்கு “நாராசம்” என்று பெயர்.

சில பயனுள்ள பக்கங்கள்