Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 5.6 – படிமம்

பாடம் 5.6. படிமம்

12ஆம் வகுப்பு தமிழ், படிமம் பாட விடைகள்

கவிதைப்பேழை > 5.6. படிமம்

இலக்கணத் தேர்ச்சிகொள்

1) படிமம் என்பதன் பொருள்

  1. சொல்
  2. செயல்
  3. காட்சி
  4. ஒலி

விடை : காட்சி

2) காலை இளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில் இக்கவிதையில் _________ பயின்று வந்துள்ளது.

  1. பயன் படிமம்
  2. வினைப்படிமம்
  3. மெய்ப்படிமம்
  4. உருப்படிமம்

விடை : வினைப்படிமம்

3) கூற்று : உவமை உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.

  1. கூற்று சரி, காரணம் தவறு
  2. கூற்று தவறு, காரணம் சரி
  3. கூற்றும் சரி, காரணமும் சரி
  4. கூற்றும் தவறு, காரணமும் தவறு

விடை : கூற்று சரி, காரணம் தவறு

4) மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க

  1. நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு…
  2. கட்டில் நிணக்கும் இழிசினன் கையது…
  3. பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்…
  4. வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப…

விடை : பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்…

5) மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது  இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?

  • இப்பாடலடிகளில் மெய் (வடிவப்) படிமம் வெளிப்படுகிறது.
  • மாந்தோப்பு பருவ காலத்தின் அழகு பட்டையாக மரத்தைப் போர்த்தியிருப்பது பூக்களும் தளிர்களும் பட்டாடையாயை உடுத்திய பெண்ணின் தோற்றத்தை அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு ஒப்பிட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்…

பலவுள் தெரிக

1. வெயில் மழைக்குச்
   சொரணையற்ற எருமை
   குத்திட்ட பாறையாக
   நதிநீரில் கிடக்கும் என்று எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துபவர்

  1. ஆ.வே.முனுசாமி
  2. ந.பிச்சமூர்த்தி
  3. தேவதேவன்
  4. கல்யாண்ஜி

விடை : தேவதேவன்

2. கத்தல்களின் நெருக்கடியில்
   தத்துவங்கள்
   குழந்தைகள் போல்
   அடிக்கடி தொலைந்துபோகும் என்று எழுதியவர்

  1. ஆ.வே.முனுசாமி
  2. ந.பிச்சமூர்த்தி
  3. தேவதேவன்
  4. கல்யாண்ஜி

விடை : ஆ.வே.முனுசாமி

3. எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்

  1. அதியமான்
  2. பேகன்
  3. நல்லியகோடன்
  4. நளங்கிள்ளி

விடை : நல்லியகோடன்

4. அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்

  1. பெரும்பாணாற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. மலைப்படுகடாம்
  4. அகநானூறு

விடை : சிறுபாணாற்றுப்படை

5. மாந்தோப்பு வசந்தத்தின்பட்டாடை உடுத்தியிருக்கிறது  என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்

  1. ஆ.வே.முனுசாமி
  2. தேவதேவன்
  3. கல்யாண்ஜி
  4. ந.பிச்சமூர்த்தி

விடை : ந.பிச்சமூர்த்தி

6. கட்டில் நிணக்கும் இழிசினன் கையது என்னும் புறநானூற்றில் அமைந்துள்ள படிமம்

  1. பயன்படிமம்
  2. மெய்ப்படிமம்
  3. வினைப்படிமம்
  4. உருப்படிமம்

விடை : வினைப்படிமம்

7. காலை இளம் வெயில்
   நன்றாக மேய
   தும்பறுத்துத்
   துள்ளிவரும்
   புதுவெயில்
 என்று கல்யாண்ஜி கவிதையில் படிமப்படுத்தப்படுவது

  1. காலை இளம்வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்
  2. கன்றின் செயல், காலை இளம் வெயிலின் அழகோடு ஒப்பிடுதல்
  3. கன்றின் செயல் இளைஞரோடு ஒப்பிடுதல்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : காலை இளம்வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்

9. யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
   குன்றுபுகு பாம்பின் தோன்றும் என்னும் அகநானூறு பாடலில் இடம் பெறும் படிமம்

  1. பயன்படிமம்
  2. மெய்ப்படிமம்
  3. வினைப்படிமம்
  4. உருப்படிமம்

விடை : மெய்ப்படிமம்

10. கோவைப்பழ மூக்கும்
      பாசிமணிக் கண்ணும்
      சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
      வேப்பிலை வாலும் என்னும் ந.பிச்சமூர்த்தியின் கவிதையில் அமைந்துள்ள படிமம்

  1. பயன்படிமம்
  2. மெய்ப்படிமம்
  3. வினைப்படிமம்
  4. வடிவப்படிமம்

விடை : வடிவப்படிமம்

11. வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப என்னும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்

  1. உருப்படிமம்
  2. பயன்படிமம்
  3. மெய்ப்படிமம்
  4. வினைப்படிமம்

விடை : பயன்படிமம்

12. பொருத்துக

தாழைமலர்பொன்
செருந்தி மலர்அன்னம்
முள்ளி மலர்முத்துக்கள்
புன்னை மலர்நீலமணி
  1. 2, 1, 4, 3
  2. 4, 3, 2, 1
  3. 3, 1, 2, 4
  4. 2, 4, 3, 1

விடை : 2, 1, 4, 3

12. என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது என்று சோமசுந்தர பாரதியாரை குறிப்பிட்டவர்.

  1. பெரியார்
  2. வ. உ. சி.
  3. உ.வே.சா.
  4. அண்ணா

விடை : வ. உ. சி.

13. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் பொருந்தாதது

  1. தசரதன் குறையும் கைகேயி நிறையும்
  2. திருவள்ளுவர்
  3. சோழர் தாயமுறை
  4. தமிழும் தமிழரும்

விடை : சோழர் தாயமுறை

14. வ. உ. சி. சுப்பிரமணிய சிவா ஆகியாேர் மீதான வழக்குகளில் வாதாடியர்

  1. சோமசுந்தர பாரதி
  2. சி.சுப்பிரமணியார்
  3. டி.முத்துசாமி
  4. அம்பேத்கர்

விடை : சோமசுந்தர பாரதி

15. அகமும் புறமும் கலந்த எட்டுத்தொகை நூல்

  1. புறநானூறு
  2. பதிற்றுப்பத்து
  3. பரிபாடல்
  4. ஐங்குறுநூறு

விடை : பரிபாடல்

16. புறம் சார்ந்த பத்துப்பாட்டு நூல்

  1. மதுரைக்காஞ்சி
  2. திருமுருகாற்றுப்படை
  3. கூத்தராற்றுப்படை
  4. மேற்கூறிய அனைத்தும்

விடை : மேற்கூறிய அனைத்தும்

17. பத்துப்பாட்டு நூல்களில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் எண்ணிக்கை

  1. 5
  2. 4
  3. 3
  4. 6

விடை : 6

குறுவினா

1. படிமம் என்றால் என்ன?

  • படிமம் (Image) என்றால் காட்சி என்பது பொருள்.
  • விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி

2. படிமத்தின் பண்புகள் யாவை?

  • காட்சித்தன்மை கொண்ட ஒன்றை அப்படியே காணும் வகையில் வெளியிடுவதன் மூலம் தெளிவை ஏற்படுத்தலாம்;
  • புதிய முறையில் தோற்றக் கூறுகளை எடுத்துக் காட்டலாம்.
  • கருத்துத் தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டிக் காட்சித்தன்மை தரலாம்;
  • கருத்துகளைப் புரிய வைக்கலாம்.
  • காட்சிக்குத் தெளிவு தருவதும் கருத்தைக் காட்சிப்படுத்துவதும் படிமத்தின் பணிகள்.

3. படிமத்தை உருவாக்க எவையெவை பயன்படுகின்றன?

படிமத்தை உருவாக்க உவமை, உருவகம், சொல்லும்முறை போன்றவை பயன்படுகின்றன

4.காட்சிப் படிமத்தை சான்றுடன் விளக்குக

வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்.

எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துகிறார் கவிஞர். இது, ஒரு காட்சிப் படிமம் ஆகும்.

4. வினைப் படிமத்தை சான்றுடன் விளக்குக

கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவானது, ஊரைக் கைப்பற்ற எண்ணி வந்த வீரனுடன், இந்நெடுந்தகை நடத்திய பெரும்போர், என வினையைக் காட்சிப்படுத்துகிறது

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

5. பயன் படிமம் விளக்குக

நோம்என் நெஞ்சே ! நோம்என் நெஞ்சே !
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே !

இனியசெய்தல், இன்னா செய்தல் என்ற பயன்களை (இனிய) நெருஞ்சிப்பூ, (இன்னா) முள் என்ற காட்சிப்பொருள்களால் படிமப்படுத்தியுள்ளார் கவிஞர்.

6. யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
   குன்றுபுகு பாம்பின் தோன்றும் – இப்பாடலில் பயின்று வரும்படிமத்தை விளக்குக

இப்பாடலில் மெய்ப்படிம் பயின்று வந்துள்ளது.

மதங்கொண்ட யானையானது தன் வாய்க்குள் பெரிய துதிக்கையின் மூலம் உணவை வைக்கிறது. யானையின் வாய் மலைக்குகையின் வாயினைப் போல உள்ளதாகவும், உணவை எடுத்துச்செல்லும் துதிக்கை, மலைக்குகையில் நுழையும் பாம்பினைப் போல உள்ளதாகவும் வடிவத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்

7. புதுக்கவிதையில் கையாளும் உத்திகள் யாவை?

உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை

8. படிமத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை?

வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்)

சிறுவினா

சங்கப்பாடலில் காணப்பெறும் உவமைகளில் படிமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – விளக்குக.

நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஒய்மா நாட்டின் காட்சி

“அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்”

என்னும் பாடலில்

“தாழை மலர் அன்னம் போலவும்
செருந்தி மலர் பொன்னைப் போலவும்
முள்ளி மலர் நீலுமணியைப் போலவும்”

புன்னை மரத்து அரும்பு முத்துப் போலவும் காட்சிப்படுத்துவதால் இப்பாடல் படிமங்களாகிறது. சங்கப்பாடலில் உவமை, உள்ளுறை மிகுதியா காண முடிகிறது.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

சோமசுந்தர பாரதியார் (1879 – 1959)

ஒருமுறை எட்டயபுரம் அரண்மனைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்த அப்புலவர், இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.

பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ. உ. சி. யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். ‘என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ. உ. சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை,தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகிேயார் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது.

அவருடைய தீந்தமிழுக்குச் சான்று: “கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு”.

(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூல்தொகுதி 4 – ‘நற்றமிழ்’ என்னும் கட்டுரையிலிருந்து.)

வினாக்கள்

1. பாரதி பட்டம் பெற்ற இருவர் யார்?

சுப்பிரணிய பாரதியார், சோம சுந்தர பாரதியார்

2. பின்வரும் தொடருக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக

எளிமையும் தெளிவும் – எண்ணும்மை

3. புணர்ச்சி விதி தருக

வழக்கறிஞர் = வழக்கு + அறிஞர்

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “வழக்க் + அறிஞர்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வழக்கறிஞர்” என்றாயிற்று

4. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் ஒன்றினை எழுது

தசரதனன் குறையும் – கைகேயின் நிறையும்

5. சோமசுந்தர பாரதியார் ஈடுபட்ட போராட்டம் எது?

இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

தமிழாக்கம்

பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்துப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அது மட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சனைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது.

இலக்கிய நயம் பாராட்டுக.

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா!

நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார் !

தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார் !

– கவிமணி தேசிக விநாயகம்

தலைப்பு

தீண்டாமையை விரட்டுவோம்

ஆசிரியர் குறிப்பு

இப்பாடலினை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம். இவரின் பெற்றோர் சிவதாணு – ஆதிலட்சுமி ஆவார். கன்னியாகுமாரி மாவட்டம், தேரூரில் 1976 முதல் 1954 வரை வாழ்ந்துள்ளார். ஆசியஜோதி, மலரும் மாலையும் இவர் இயற்றிய நூல்களாகும்.

திரண்ட கருத்து

மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான பகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும், தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார்.

தொடை நயம்

தொடையற்ற பாக்கள் நடையற்று போகும்

என்பதற்கேற்ப இப்பாடலில்  மோனை, எதுகை, இயைபு, அளபெடை நயங்கள் அமைந்துள்ளது.

மோனை

குயவனக்கு யானை, செய்யுளுக் மோனை

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : ன்மை – நாடும், தின்மை – தீண்ட

எதுகை

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

சான்று : நன்மை – தின்மை, சிப்பு – பிப்பினால்

இயைபு

இறுதி எழுத்தோ, ஓசையோ ஒன்றி வரத்தொடுப்பது இயையு

சான்று : வாராதப்பா – வேண்டுமப்பா, மேற்குலத்தார் – ஒண்ணாதார்

அணி நயம்

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, செய்யுளுக்கு அணி அழகு

என்பதற்கு இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது

முடிவுரை

கற்றாரும், கல்லாருக்கும் ஏற்ற வகையில எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழியோடு விளையாடு…

பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

1. இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ.

  • இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்

2. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.

  • நிலத்தை உழுதால்தான் உயிறு நிறையும்

3. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.

  • அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான்

4. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.

  • வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக் கொண்டு போனார்.

5. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது.

  • பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.

6. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.

  • இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்

ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

12ஆம் வகுப்பு தமிழ், படிமம் பாட விடைகள் - 2022

1. பூட்டியவீட்டிலும் பூத்துச் சிரிக்கிறது

விடை : முல்லை

2. விழும் மரங்கள் அழியும் காடு _________

விடை : வீடு

3. அப்படியென்ன சொல்லியது காற்று குதித்தாடுகிறது மேகம் __________

விடை : இடி

4. பூத்த மலரொன்று பறக்கிறது _______

விடை : தென்றல்

5. வானம் அழுகிறது பூமி சிரிக்கிறது _________

விடை : மழை

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.

12ஆம் வகுப்பு தமிழ், படிமம் பாட விடைகள் - 2022

பத்தி அமைத்தல்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம், அகமும் புறமும் என மூன்று வகையாக பிரிப்பர். அகம் சார்ந்த நூல்கள் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை நூல்களாகும். புறம் சார்ந்த நூல்கள் புறநானூறு, பதிற்றுப்பத்து நூல்களாகும். அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஒன்றே ஆகும்.

பத்துப்பாட்டு அகம், புறம் சார்ந்த நூல்கள் என இரண்டு வகையாக பிரிப்பர். அகம் சார்ந்த நூல்கள் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய நூல்களாகும். புறம் சார்ந்த நூல்கள் மதுரைக்காஞ்சி திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,  பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய நூல்களாகும் இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.

செய்து கற்போம்

நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.

திருநெல்வேலி

நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம் நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப்பெயர் பெற்றது.

மேலும் இந்து பழங்கதையின்படி சிவபெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குற்றாலம்

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகப் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் எனப் பெயர் பெற்றது. சங்க காலத்தில் தேனூர் என்ற பெயருடன் திகழ்ந்து.

சிவகாசி

தென் மதுரையை ஆண்ட ஹரிகேசரிபராக்கிரம பாண்டியன் வரானாசியிலிருந்து (வாரனாசி என்பது காசி) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் காசி சிவலிங்கம் பெயராலே சிகவாசி ஆயிற்று.

சிதம்பரம்

இறைவன் நடசராசர் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும் அதுவே சிதம்பரம் என்றாயிற்று என்பர். சித் + அம்பரம் =  சிதம்பரம் என்றாயிற்று. சித் என்றால் அறிவு. அம்பரம் என்றால் ஆகாயம் அல்லது வெட்டவெளி. வெட்டவெளிக்கு எல்லை கிடையாது. அதுபோல எல்லையற்ற அறிவைக் கொண்டவராலும் புரிந்து கொள் முடியாதவர் நடராசர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். சென்னையின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுகிறது. முன்பு இங்கு நீர்நிலைகளில் செங்கழுநீர் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என்றானது.

பிறமொழிச் சொற்களை தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தது.

விடை : 

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் பொய்த்தோற்றம்; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த தோற்றம் வேறு. தான் இந்தப் உலகத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு தோற்றம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது உயிர் அடையாளத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனிதனுக்கோ நேரம் கிடைத்ததில்லை. மனித வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தது.

நிற்க அதற்குத் தக

படிப்போம் பயன்படுத்துவோம் (நீதி மன்றம்)

  • Affidavit – ஆணையுறுதி ஆவணம்
  • Allegation – சாட்டுரை
  • Conviction – தண்டனை
  • Jurisdiction – அதிகார எல்லை
  • Plaintiff – வாதி

அறிவை விரிவு செய்

  • ஒரு குட்டித்தீவின் வரைபடம் (சிறுகதைத் தொகுப்பு) – தோப்பில் முகமது மீரான்
  • ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
  • சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
  • இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்

 

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment