Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 6.3 – சிலப்பதிகாரம்

பாடம் 6.3. சிலப்பதிகாரம்

12ஆம் வகுப்பு தமிழ், சிலப்பதிகாரம் - புகார்காண்டம் பாட விடைகள்

கவிதைப்பேழை > 6.3. சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.

அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது குடிமக்கள் காப்பியம் எனப்படுகிறது.

புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் மூவேந்தர் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.

முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் புரட்சிக் காப்பியம் எனப்படுகிறது;

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் முத்தமிழ்க் காப்பியம் எனப்படுகிறது.

செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படுகிறது.

மேலும், இந்நூல் பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.

சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

சொல்லும் பொருளும்

  • புரிகுழல் – சுருண்ட கூந்தல்
  • கழை – மூங்கில்
  • கண் – கணு
  • விரல் – ஆடவர் கைப் பெருவிரல்
  • உத்தரப் பலகை – மேல் இடும் பலகை
  • பூதர் – ஐம்பூதங்கள்
  • ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
  • நித்திலம் – முத்து
  • விருந்து – புதுமை
  • மண்ணிய – கழுவிய
  • நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
  • தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
  • ஓடை – முக படாம்
  • அரசு உவா – பட்டத்து யானை
  • பரசினர் – வாழ்த்தினர்
  • பல்இயம் – இன்னிசைக் கருவி
  • குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
  • தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
  • வாரம் – தெய்வப்பாடல்
  • ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
  • இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
  • கழஞ்சு – ஒரு வகை எடை அளவு

இலக்கணக் குறிப்பு

  • ஆடலும் பாலும் – எண்ணும்மை
  • தொல்நெறி – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

தாெழுதனர் = தாெழு + த + அன் + அர்

  • தாெழு – பகுதி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

தலைக்காேல் = தலை + கோல்

  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “தலைக்காேல்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்… தொடர்களில் வெளிப்படும் செய்திகள்

1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.

2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

அ) 1 சரி 2 தவறு ஆ) 1 தவறு 2 சரி
இ) 1 தவறு 2 தவறு ஈ) 1 சரி 2 சர

  1. 1 சரி, 2 தவறு
  2. 1 தவறு, 2 சரி
  3. 1 தவறு, 2 தவறு
  4. 1 சரி, 2 சரி

விடை : 1 சரி, 2 சரி

2. பொருத்துக.

அ) ஆமந்திரிகை1) பட்டத்து யானை
ஆ) அரசு உவா2) மூங்கில்
இ) கழஞ்சு3) இடக்கை வாத்தியம்
ஈ) கழை4) எடை அளவு
  1. 3, 1, 4, 2
  2. 4, 2, 1, 3
  3. 1, 2, 3, 4
  4. 4, 3, 2, 1

விடை : 3, 1, 4, 2

குறுவினா

1. ஒருமுக எழினி, பொருமுக எழினி – குறிப்பு எழுதுக.

ஒருமுக எழினி

நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்லுமாறு அமைக்கப்படும் முகத்திரை

பொருமுக எழினி

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

சிறுவினா

நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.

சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம்

“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர்”

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காக தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல்

பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களை கொண்டு வந்தனர்.

ஆடல் ஆரங்கம் அமைந்தல்

“நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்”

நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவு கொண்டு அரங்கம் அமைத்தல்.

மூங்கில் அளவுகோல்

கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கில வெட்டினார். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும், எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கபட்டது.

கூடுதல் வினாக்கள்…

இலக்கணக் குறிப்பு

  • காட்டல் – தொழிற்பெயர்
  • புரிகுழல், சூழ்சுழல்,சூழ்கடல் – வினைத்தொகைகள்
  • வழாஅது, வழாஅ – செய்யுளிசை அளபெடைகள்
  • பெற்றான் – படர்க்கை பெண்பால் இறந்தகால வினைமுற்று
  • பெருந்தேர், நெடுவரை, நெடுங்கழை, அருந்தொழில், பேரிசை, வெண்குடை, நன்னீர், நல்நூல் – பண்புத்தொகைகள்
  • வருகிறோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
  • நின்று – வினையெச்சம்
  • நூல்நெறி, தூண்நிழல் – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்

உறுப்பிலக்கணம்

1. வளர்ந்து = வளர் + த் (ந்) + த் + அ + து

  • வளர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – சாரியை
  • து – படர்க்கைப் ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

2. எழுந்து = எழு + த் (ந்) + த் + உ

  • எழு – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

3. இயம்ப = இயம்பு + அ

  • இயம்பு – பகுதி
  • அ – பெயரெச்ச விகுதி.

4. பெற்றனள் = பெறு (பெற்று) + அன் +அள்

  • பெறு– பகுதி
  • பெற்று – என ஒள்று இரட்டித்து, இறந்தகாலம் காட்டியது
  • அன் – சாரியை
  • அள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி.

5. கொடுப்ப = கொடு + ப் + ப் + அ

  • கொடு – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி.

6. வைத்து = வை + த் + த் + உ

  • வை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

1. வழக்கென= வழக்கு + என

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்”  என்ற விதிப்படி “ வழக்க் + என” என்றாயிற்று.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “வழக்கென” என்றாயிற்று.

2. மண்ணகம் = மண் + அகம்

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “மண்ண் + அகம்” என்றாயிற்று.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “மண்ணகம்” என்றாயிற்று.

3. கண்ணிடை = கண் + இடை

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “கண்ண் + இடை” என்றாயிற்று.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “கண்ணிடை” என்றாயிற்று.

4. பொன்னியல் = பொன் + இயல்

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “பொன்ன + இயல்” என்றாயிற்று.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “பொன்னியல்” என்றாயிற்று.

5. வலக்கை =  வலம் + கை

  • மவ்வீறு ஒற்றுஅழிந்த உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “வல + கை” என்றாயிற்று.
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “வலக்கை” என்றாயிற்று.

6. புறப்பட = புறம் + பட

  • மவ்வீறு ஒற்றுஅழிந்த உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “புற + பட” என்றாயிற்று.
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “புறப்பட” என்றாயிற்று.

7. வலத்தூண் = வலம் + தூண்

  • மவ்வீறு ஒற்றுஅழிந்த உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “வல + தூண்” என்றாயிற்று.
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “வலத்தூண்” என்றாயிற்று.

8. இடத்தூண் = இடம் + தூண்

  • மவ்வீறு ஒற்றுஅழிந்த உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “இட + தூண்” என்றாயிற்று.
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “இடத்தூண்” என்றாயிற்று.

9. தடக்கை = தடம் + கை

  • மவ்வீறு ஒற்றுஅழிந்த உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “தட + கை” என்றாயிற்று.
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “தடக்கை” என்றாயிற்று.

10. பூங்கொடி = பூ + கொடி

  • பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி “பூங்கொடி” என்றாயிற்று.

11. பூங்கோதை = பூ + கோதை

  • பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி “பூங்கோதை” என்றாயிற்று.

12. நெடுவரை = நெடுமை + வரை

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “நெடுவரை” என்றாயிற்று.

13. பெருந்தோள் = பெருமை + தோள்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + தோள்” என்றாயிற்று.
  • இனமிகல்” என்ற விதிப்படி “பெருந்தோள்” என்றாயிற்று.

13. நெடுங்கழை = நெடுமை + கழை

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “நெடு + கழை” என்றாயிற்று.
  • இனமிகல்” என்ற விதிப்படி “நெடுங்கழை” என்றாயிற்று.

14. அருந்தொழில் = அருமை + தொழில்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “அருமை + தொழில்” என்றாயிற்று.
  • இனமிகல்” என்ற விதிப்படி “அருந்தொழில்” என்றாயிற்று.

15. தொன்னெறி = தொன்மை + நெறி

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “தொன் + நெறி” என்றாயிற்று.
  • இனமிகல்” என்ற விதிப்படி “தொன்னெறி” என்றாயிற்று.

16. நன்னூல் = நன்மை + நூல்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + நூல்” என்றாயிற்று.
  • இனமிகல்” என்ற விதிப்படி “நன்னூல்” என்றாயிற்று.

17. தொன்னெறி =  தொன்மை + நெறி

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “தொன் + நெறி” என்றாயிற்று.
  • னலமுன் றன்ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “தொன்னெறி” என்றாயிற்று.

18. நன்னூல் = நன்மை + நூல்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + நூல்” என்றாயிற்று.
  • னலமுன் றன்ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “நன்னூல்” என்றாயிற்று.

19. நன்னூல் = நன்மை + நீர்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + நீர்” என்றாயிற்று.
  • னலமுன் றன்ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “நன்னீர்” என்றாயிற்று

20. பேரிசை = பெருமை + இசை

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + இசை” என்றாயிற்று.
  • உயிர்வரின்…..  முற்றும் அற்று”  என்ற விதிப்படி “ பேர் + இசை” என்றாயிற்று.
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “பேரிசை” என்றாயிற்று.

21. இந்நெறி = இ + நெறி

  • எகரவினா முச்சுட்டின் முன்னர்… பிறவரின் அவையும் தோன்றுதல் நெறியே” என்ற விதிப்படி “இந்நெறி” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம்

  1. வஞ்சி
  2. மதுரை
  3. புகார்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : புகார்

2. இரட்டைக்காப்பியங்கள் எனப்படுவை

  1. சிலப்பதிகாரம், மணிமேகலை
  2. சிலப்பதிகாரம், குண்டலகேசி
  3. சிலப்பதிகாரம், வளையாபதி
  4. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி

விடை : சிலப்பதிகாரம், மணிமேகலை

3. சேரன் தம்பி சிலம்பை இசைத்தும் எனறு குறிப்பிடுபவர்

  1. ம.பொ.சி
  2. பாரதி
  3. பாரதிதாசன்
  4. திரு.வி.க

விடை : பாரதி

4. இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதைக் குறிப்பிட்டிருக்கும் காதை

  1. ஊர்சூழ்வரி
  2. மங்கல வாழ்த்து
  3. அரங்கேற்றுகாதை
  4. வரந்தருகாதை

விடை : வரந்தருகாதை

5. நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்லுமாறு அமைக்கப்படும் முகத்திரை

  1. பொரு முகத்திரை
  2. ஒரு முகத்திரை
  3. கரந்துவால் நிரை
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : ஒரு முகத்திரை

6. மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

  1. பொரு முகத்திரை
  2. ஒரு முகத்திரை
  3. கரந்துவால் நிரை
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : பொரு முகத்திரை

7. அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்கு அளிக்கப்டுவது

  1. செங்கோல்
  2. வைரமணி
  3. தலைக்கோல்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : தலைக்கோல்

8. இந்திரனின் மகன்

  1. சயந்தன்
  2. சனகன்
  3. அபிநந்தன்
  4. மாயன்

விடை : சயந்தன்

9. மன்னனிடமிருந்து மாதவி பெற்ற பரிசு

  1. ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
  2. நூற்றெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
  3. ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் வைரமாலை
  4. நூற்றெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை

விடை : ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை

10. பொருத்துக

1.பேரியாழ்அ. 7 நரம்புகளை கொண்டது
2. மகரயாழ்ஆ. 16 நரம்புகளை கொண்டது
3. சகோடயாழ்இ. 17 நரம்புகளை கொண்டது
4. செங்கோட்டியாழ்ஈ. 21 நரம்புகளை கொண்டது
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

11. பொருத்துக

1. கழைஅ. பந்தல்
2. விதானம்ஆ. புதுமை
3. நித்திலம்இ. மூங்கில்
4. விருந்துஈ. முத்து
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

12. பொருத்துக

1. நாவலம்பொலம்அ. இசைக்கருவிகள் வாசிப்போர்
2. அரசு உவாஆ. நாடகக் கணிகையர் பெறும்பட்டம்
3. குயிலுவமாக்கள்இ. பட்டத்துயானை
4. தலைக்கோல்ஈ. சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

13. பொருத்துக

1. புரிகுழல்அ. ஒரு வகை எடை அளவு
2. பல்அயம்ஆ. இடக்கை வாத்தியம்
3. வாரம்இ. தெய்வப்பாடல்
4. ஆமந்திரிகைஈ. இன்னிசைக்கருவி
5. கழஞ்சுஉ. சுருண்ட கூந்தல்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – அ

14. கழை என்பதன் பொருள்

  1. மூங்கில்
  2. கணு
  3. முத்து
  4. புதுமை

விடை : மூங்கில்

15. வாரம் என்பதன் பொருள்

  1. பட்டத்து யானை
  2. இன்னிசைக் கருவி
  3. பட்டம்
  4. தெய்வப்பாடல்

விடை : தெய்வப்பாடல்

16. ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னிடமிருந்து பரிசாகப் பெற்றவள்

  1. மாதவி
  2. கண்ணகி
  3. குந்தவை
  4. மணிமேகலை

விடை : மாதவி

குறுவினா

1. தலைக்கோள் பட்டம் பெற்றவள் யார்? ஏன்?

தலைக்கோள் பட்டத்தை வென்றவள் மாதவி.

தன் ஆடல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்ததன் காரணமாகச்ச சிறப்பிக்கப்பட்டாள்.

2. சிலப்பதிகாரம் – ஓர் புரட்சிக் காப்பியம் எங்ஙனம் விளக்குக.

முதன் முதலாகப் பெண்ணை முதன்மை பாத்திரமாக கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியததால் புரட்சிக்காப்பியம் எனப்படுகிறது.

3. பாரதியார் இளங்கோவையும், சிலம்மையும் எப்படி புகழ்கிறாா்?

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதி இளங்கோவையும், சிலம்பையும் புகழ்கிறார்.

4. இளங்கோவடிகள் எங்கு தன்னை அறிமுகம் செய்கிறாா்?

வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றி தான் செங்குட்டுவன் தம்பி என்று தன்னை அறிமுகம் செய்கிறார்.

5. மாதவியின் நாட்டியப் பயிற்சி பற்றி விளக்கு.

  • மாதவி அழகிய தோள்களை உடையவள்.
  • தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த கூந்தலை உடையவள்.
  • ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் கற்றவர்கள்.
  • ஏழு ஆண்டுகள் ஆடல் கலையைப் பயின்றவள்.
  • 12-வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.

6. மங்கல வாழ்த்துப் பாடலில் இசைக்கருவிகள் ஒலித்த முறைகளை விளக்குக.

  • குழலின் வழியே யாழிசை நின்றது.
  • யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தலம் ஒலித்தது.
  • தண்ணுமையோடு இயைந்து முடிவு ஒலித்தது.
  • முதுவுடன் இடைக்கை வாத்தியம் கூடிநின்று வாழ்த்தியது.

7. மங்கல வாழ்த்துப் பாடலில் இசைக்கருவிகள் ஒலித்த முறைகளை விளக்குக.

இரட்டைக் காப்பியம்குடிமக்கள் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்பொதுமைக் காப்பியம்
புரட்சிக்காப்பியம்வரலாற்றுக் காப்பியம்
முத்தமிழ் காப்பியம்ஒற்றுமைக் காப்பியம்
நாடகக் காப்பியம்உரையிட்ட பாட்டுடைச் செய்யுள்

8. யாழின் வகைகள் யாவை?

  • பேரியாழ் 21  நரம்புகளை கொண்டது.
  • மகரயாழ் 17 நரம்புகளை கொண்டது.
  • சகோடயாழ் 16 நரம்புகளை கொண்டது
  • செங்கோட்டியாழ் 7 நரம்புகளை கொண்டது

8. குடிமக்கள் காப்பியம் பெயர்க்காரணம் தருக

அரசக்குடி அல்லாதவர்களை காப்பியத்தின் தலைமக்களாக வைத்து பாடியதால் குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றது.

9. இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்
   தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
   விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – இடம் சுட்டி பொருள் விளக்குக.

இடம்

சிலப்பதிகாரம் – புகார்க்காண்டம் அரங்கேற்ற காதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்

விளக்கம்

பொன்னால் செய்யப்பட்ட பூங்கொடி போல மாதவி நடனமாடியது கண்டு அகமகிழ்ந்த மன்னன் “தலைக்கோலி” என்ற பட்டத்தையும் “ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையையும்” பரிசாக அளித்தான்.

9. சிலப்பதிகாரம் குறிப்பு வரைக

  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் கால் சிலம்பால் உருவான கதை
  • மூன்று காண்டங்கள், முப்பது காதைகள் கொண்டது. அவை முறையே புகார் காண்டம் – 10, மதுரைக் காண்டம் – 13, வஞ்சிக்காண்டம் – 7, என 30 காண்டங்களை கொண்டது.
  • இரட்டைக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், பொதுமைக் காப்பியம், புரட்சிக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம், உரையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பன இதன் வேறுபெயர்கள்
  • அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினைய உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் ஆகிய சிலப்பதிகாரம் கூறும் உண்மைகள் ஆகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்