Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 6.7 – திருக்குறள்

பாடம் 6.7. திருக்குறள்

12ஆம் வகுப்பு தமிழ், திருக்குறள் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 6.7. திருக்குறள்

கற்பவை கற்றபின்…

1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.

12ஆம் வகுப்பு தமிழ், திருக்குறள் பாட விடைகள் - 2021

அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
      திண்ணியர் ஆகப் பெறின்

ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
      அச்சாணி அன்னார் உடைத்து.

இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
      மற்றைய எல்லாம் பிற.

விடை :

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

2. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.

மனமோ மாட்டுவண்டி
பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு
இப்படி இருந்தால் எப்படி நகரும்
வாழ்க்கைச் சக்கரம்
ஊர் போகும் பாதையில்
சக்கரம் உருண்டால்
அதுவே அறிவு; அதுவே தெளிவு.

அ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
      அவ்வது உறைவது அறிவு.

ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
       நன்றின்பால் உய்ப்பது அறிவு.

இ) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
      உள்ளழிக்கல் ஆகா அரண்.

விடை :

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் – மாரி
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரியார் நட்பு.

அ) பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும்
      கெழுதகைமை கேடு தரும்

ஆ) எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
       அதிர வருவதோர் நோய்.

இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
      அல்லல் படுப்பதூஉம் இல்.

விடை :

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.

4. அல்லல் படுப்பதூஉம் இல் எவரோடு பழகினால்?

 1. வாள்போல் பகைவர்
 2. மெய்ப்பொருள் காண்பவர்
 3. எண்ணியாங்கு எய்துபவர்
 4. தீயினத்தார்

விடை : தீயினத்தார்

5. திண்ணியர் என்பதன் பொருள்

 1. அறிவுடையவர்
 2. மன உறுதியுடையவர்
 3. தீக்காய்வார்
 4. அறிவினார்

விடை : மன உறுதியுடையவர்

6. ஆராய்ந்து சொல்கிறவர்

 1. அரசர்
 2. சொல்லியபடி செய்பவர்
 3. தூதுவர்
 4. உறவினர்

விடை : தூதுவர்

7. பொருத்துக.

அ) பாம்போடு உடன் உறைந்தற்று1) தீக்காய்வார்
ஆ) செத்தார்2) சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது3) கள் உண்பவர்
ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார்4) உடம்பாடு இலாதவர்
 1. 1, 2, 3, 4
 2. 2, 3, 4, 1
 3. 4, 1, 3, 2
 4. 4, 3, 2, 1

விடை : 4, 3, 2, 1

8. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்

 1. வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்.
 2. மனத்திட்பம் உடையவர்
 3. அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
 4. சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்.

விடை : வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்.

9. எளியது, அரியது என்பன

 1. தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
 2. சொல்வது – சொல்லியபடி செய்வது
 3. சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
 4. மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது

விடை : சொல்வது – சொல்லியபடி செய்வது

குறுவினா

1. மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?

 • சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
  நன்றின்பால் உய்ப்பது அறிவு.
 • மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடக்கூடாது.
 • மேலும் மனத்தினை தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில்
  செலுத்துவதே அறிவாகும்.

2. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.

உவமை : ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது.

உவமேயம் : பெரிய தேர்க்குச் சிறு அச்சாணிதான் இன்றியமையாதது.

பொருத்தம் : சிறு அச்சாணிதான் என்று எளிமையாக எண்ணக் கூடாது. ஆதுபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து எளிமையாக எண்ணக்கூடாது.

3. மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது?

நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்; மற்றவை எல்லாம் பயன்படா.

4. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?

கள்ளுண்பவரை வள்ளுவர் “நஞ்சுண்பவர்” என இடித்துரைக்கிறார்.

5. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?

அரசரோடு நட்பு பராட்டினாலும், அப்பழக்கம் காரணமாக அதிகமாக எல்லை மீறி பாராட்டுவது, நற்பலனைத் தராது; கேட்டினையே செய்யும்.

6. பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?

பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்பது அறிவு உடைமையாகும்.

7. அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

8. வறுமையும் சிறுமையும் தருவது எது?

வறுமையும் சிறுமையும் தருவது ஒருவருக்கு துன்பம் பல உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கினற் சூதுவாகும்.

9. நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பிடித்தற்கு காரணம்

ஒருவர் என்ன சொன்னாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்நது செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் அது நமக்கே தீமையில் முடியும் என்பதாகும்.

10. உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை.

நல்ல இனத்தைவிடத் துன்பத்தைத் தரும் பகையும் இல்லை.

11. இலக்கணக் குறிப்புத் தருக.

 • ஒரீஇ – சொல்லிசை அளபெடை
 • படுப்பதூஉம் – இன்னிசை அளபெடை
 • சொல்லுதல் – தொழிற்பெயர்

12. கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக.

நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

13. பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக.

பெருந்தேர் = பெருமை + தேர்

 • ஈறுபோதல்” என்ற விதிப்படி “மை” கெட்டு “பெரு + தேர்” என்றாயிற்றது.
 • இனமிகல்” என்ற விதிப்படி “பெருந்தேர்” என்றாயிற்றது

சிறுவினா:

1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

இக்குறட்பாவில் பயின்று வரும் அணி தொழில் உவமை அணி ஆகும்.

அணி விளக்கம்:

ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை அணி எனப்படும்.

உவமை:

தீயில் குளிர் காய்பவர் போல

உவமேயம்:

அரசனைச் சார்ந்திருப்பவர் விலகாமலும் நெருங்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

அணிப்பொருத்தம்:

அரசனைச் சார்ந்திருப்பவர் குளிர்காய்பவர்களைப் போல தீயிலிருந்து அகலாது அணுகாது இருத்தல் வேண்டும். இதில் அகழுதல், அணுகுதல் போன்ற தொழில் ஒப்புமை எதிர்மறையில் வந்துள்ளதால் தொழில் உவமை அணி எனப்படும்.

2. அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்.

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

ஒரு பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மையத் தன்மையை காண்பதே அறிவாகும்.

3. எடுத்துக்காட்டு உவமையணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக.

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்

அணி விளக்கம்:

உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு மறைந்து வருவதால் எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

உவமை:

துஞ்சினார் செத்தாரின் வேறு.

உவமேயம்:

நஞ்சுஉண்பார் கள்உண் பவர்

உவம உருபு:

மறைந்துள்ளது

அணிப்பொருத்தம்:

உறங்கியவர்கள், இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர். அதுபோல கள் உண்பவரும் நஞ்சு உண்பவருக்குச் சமமே என்பதை விளக்குவதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

4. மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

மனவலிமை

செயலின் வலிமை என்பது அதனைச் செய்பவனின் மனவலிமையே ஆகும். ஏனைய வலிமைகள் எல்லாம் மனவலிமையிலிருந்து வேறுபட்டவை.

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியது. ஆனால் சொல்லியபடி செய்து முடித்தல் அரிது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணத்தில் வலிமை

எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

உருவம் பொருட்டல்ல

ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது. பெரிய தேர்க்குச் சிறு அச்சாணிதான் இன்றியமையாதது.

5. சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.

இனத்தால்தான் தகுதி

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.

நல்லவர் தீயவர் நட்பு

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.

6. வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்?

வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

7. சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.

சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.

சூதின் சிறுமை

ஒருவருக்குத் இழிவைத் தந்து புகழை கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

சூதால் செல்வம் அழியும்

சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

கள்ளும் விஷமும் ஒன்றே

உறங்கினவர் இறந்தாரோடு வேறுபாடு உடையவர் அல்லர். அதுபோல எப்போதும் கள் உண்பவர் விஷம் உண்பவர் ஆவார்.

திருத்த முடியாது

கள்ளுண்டு மயங்கியவனை நல்லன சொல்லித் திருத்த முடியாது. அது நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும்.

நெடுவினா

1. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்.

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

ஒரு பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மையத் தன்மையை காண்பதே அறிவாகும்.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

இறுதியாக, அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடிய அறிவு, உண்மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்கு துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம்.

2. திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக

தொடக்கமாக

வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒருங்கே தொகுத்து மானுடத்திற்கு அளித்து மங்காப் புகழ் பெற்றவன் மாதானுபாங்கி. வள்ளுவரின் கோட்பாடுகளுள் யாதானும் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.

அறிவுடமை

 • இந்த அதிகாரத்தில் அறிவானது ஒருவனுக்கு ஆழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
 • மனதைப் போகும் போக்கில் விடாமல், தீமையிலிருந்து நம்மை விலக்குவது அறிவு ஆகும்.
 • ஒரு பொருளைப் பற்றி எவர் கூறக்கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்வதே அறிவு என்கிறார் வள்ளுவர்.

மன உறுதி வேண்டும்;

அதிகாரத்தில் ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், எண்ணியவாறே நடக்கும் என்று மனதில் உறுதி வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மன்னரைச் சார்ந்து ஒழுகுதல் என்னுமிடத்தில், நான் அரசரிடம் நட்புக் கொண்டவன் என்று தகுதி அல்லாதவற்றை செய்தால் கேடு உண்டாகும் என்னும் நல்லது அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும் என்றும் நல்லது அல்லாவற்றை செய்தல் துன்பம் என்று வள்ளுவர் கண்டிக்கிறார்.

உட்பகை என்ற நிலையில் வெளிப்படையாகத் துன்பம் செய்பவரை விட உறவு போல் நடித்து உட்பைகயாடுவார் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.

கள் உண்ணாமையைக் கூறும் போது கள் உண்பவர் நஞ்சு உண்பரே என்றும் கள் உண்பவனைத் திருத்துவது நீரில் மூழ்கியவை தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

இறுதியாக ஒரு மனிதன், பின்னால் வரப்போவதை முன்னால் அறிக்கூடிய அறிவுடையவனாகவும், சிற்றினம் சேராமலும் திண்ணிய மனமுடையவராகவும், தீயில் குளிர் காய்பவர் போல மன்னனோடு சார்ந்திருக்க வேண்டும் என்றும், உட்பகை இன்றி, கள்ளுண்ணாமலும் வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவர் நம்மை வழிப்படுத்துகிறார்.

கூடுதல் வினாக்கள்…

இலக்கணக்குறிப்பு

 • யார் யார் – அடுக்குத்தொடர்
 • சொல்லுதல் – தொழிற்பெயர்
 • அஞ்சுக – வியங்கோள் வினைமுற்று
 • ஒரிஇ, தீத்துரீஇ – சொல்லிசை அளபெடை
 • செல்வமும்  பண்பும் – எண்ணும்மை
 • படப்பதூஉம் – இன்னிசை அளபெடை

புணர்ச்சி விதி

1. துணையில்லை = துணை + இல்லை

 • இ ஈ ஐ வழியவ்வும்” என்ற விதிப்படி “துணை + ய் + இல்லை” என்றாயிற்றது.
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “துணையில்லை” என்றாயிற்றது.

2. உறைந்தற்று =  உறைந்து + அற்று

 • உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “உறைந்த் + அற்று” என்றாயிற்றது.
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உறைந்தற்று ” என்றாயிற்றது.

சிறுவினா

1. சொற்பொருள் பின்வரும் நிலையணியை சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்:

செய்யுளில் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளினைத் தருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

சான்று:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அணி விளக்கம்:

இச் செய்யுளில் பொருள் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளினைத் தருவதால் சொற்பொருள் பின்வரு நிலையணியாகும். எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அந்தபாெருளின் உண்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்வதே அறிவாகும்.

2. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – இப்பாடலில் பயின்று வரும் அணியினை விளக்குக

இப்பாடலில் பயின்று வருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

அணி விளக்கம்:

செய்யுளில் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளினைத் தருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

விளக்கம்:

இச் செய்யுளில் “எண்ணிய” என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளினைத் தருவதால் சொற்பொருள் பின்வரு நிலையணியாகும். எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

3. உவமையணியை சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்:

உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு வெளிப்படையாகவும் வந்தால் உவமையணி ஆகும்.

சான்று

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று.

உவமை:

உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை

உவமேயம்:

குடங்களுள் பாம்போடு

உவம உருபு:

அற்று (வெளிப்படை)

அணிப்பொருத்தம்:

அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது.

 

சில பயனுள்ள பக்கங்கள்