Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 7.1 – இலக்கியத்தில் மேலாண்மை

பாடம் 7.1. இலக்கியத்தில் மேலாண்மை

12ஆம் வகுப்பு தமிழ், இலக்கியத்தில் மேலாண்மை பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 7.1. இலக்கியத்தில் மேலாண்மை

இப்பாடப்பகுதி வெ. இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.

1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.

தமிழ் இலக்கியப் பற்றுடைய இவர், தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்;

பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகங்களிலும் பங்களிப்பைச் செய்து வருபவர்.

இவர் எழுதிய ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல், 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.

சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவர் படைப்புக்களம் விரிவானது.

பலவுள் தெரிக.

பலர் துஞ்சவும் தாம் துஞ்சான் விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்

 1. சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
 2. சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
 3. கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
 4. கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்

விடை : சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்

குறுவினா

1. பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.

 • சரியான காலத்தில் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.
 • “பருவத்தே பயிர் செய்” என்பது அனுபவச் சொல்.
 • ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும்.
 • பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.

2) எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக

 • நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை “நா” அறியாது.
 • ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை “நா” உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற்று நம்மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
 • அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

குறுவினா

1. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.

வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு. சரியான பயிர்த் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல், அறுவடைக்குப் பின் பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல்

ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால் தான் வேளாண்மை செழிக்கும்.

மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை.

நெடுவினா

1. நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

நாலடியார் கூறும் நிருவாக மேலாண்மை

 • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
 • யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும்.
 • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
இதையே நாலடியார்

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

– என்று பக்குவமாய் கூறுகிறது.

 • நிருவாகத்தில் வரவே செலவை த் தீர்மானிக்க வேண்டும்.
 • வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நிதி மேலாண்மை

 • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது.
 • அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேச வருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
 • ஒரு கட்டத்தில் கடன் நெரித்தது. ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை.
 • அவன் தான் அளித்த விருந்தை உ ண்டவர்கள் , உதவி செய்வார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டான்.
 • அவனுடைய சேவகரர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும் வெளிறிய முகத்தோடும் திரும்புகிறாரர்கள்.
 • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.

ஒளவையாரின் நிருவாக மேலாண்மை

தாம் ஈட்டும் பொருளினை விட அதிகமாகச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும் இழப்பார்கள்.

அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவார்கள்.

எத்துணைப் பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போலவே நடத்தப்படுவர்.

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

என்ற பாடல் மூலம் ஒளவையார் நிதி நிருவாக மேலாண்மையை விளக்குகிறார்.

கூடுதல் வினாக்கள்…

பலவுள் தெரிக.

1. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர் அட்டவணையைத் தருவதாக அமையும் அதிகாரம்

 1. வெஃகாமை
 2. மடியின்மை
 3. ஊழ்
 4. வெகுளாமை

விடை : மடியின்மை

2. சீனத்தில் வழங்கும் யாங்செள கதை ………………….. பற்றியது

 1. இவ்வுலக வாழ்வை
 2. கொல்லாமையை
 3. நேர மேலாண்மையை
 4. சொர்க்கத்தை

விடை : நேர மேலாண்மையை

3. இன்சொல் விளைநிலனோ ஈதலே வித்தாக…. என்று கூறுவது

 1. மூதுரை
 2. ஆத்திச்சூடி
 3. நளவெண்பா
 4. அறநெறிச்சாரம்

விடை : அறநெறிச்சாரம்

4. உரோபுரிச் சிப்பாய்கள் பாணடியப் போர்படையில் இடம் பெற்றிருந்தர்கள என்ற குறிப்பினை உடைய நூல்

 1. மூதுரை
 2. சிலப்பதிகாரம்
 3. நளவெண்பா
 4. அறநெறிச்சாரம்

விடை : சிலப்பதிகாரம்

5. “நீரின் வந்த நிமிர்பரிப் பரவியும்” என்று குதிரைகள் இறக்குமதி பற்றிக் குறிப்பிடும் நூல்

 1. பட்டினப்பாலை
 2. பரிபாடல்
 3. பதிற்றப்பத்து
 4. புறநானூறு

விடை : பட்டினப்பாலை

6. காவிப்பூம்பட்டினத்துக்கு வந்த பொருள்களுக்கு சுங்கம் வசூலித்தபின் அவற்றின் மீது அதிகாரி பொறித்த சின்னம்

 1. வில்
 2. புலி
 3. மீன்
 4. சிங்கம்

விடை : புலி

7. சங்க இலக்கியங்களின் வாயிலாக மிகப்பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கும் இடமாகவும் அறியப்படுவது

 1. கொற்கை
 2. தொண்டி
 3. வஞ்சி
 4. முசிறி

விடை : முசிறி

8. ஹிராக்ளிடஸ் என்பவர் ………….. நாட்டவர் 

 1. இத்தாலி
 2. அமெரிக்க
 3. ஆப்கானிய
 4. கிரேக்க

விடை : கிரேக்க

9. “இரண்டு முறை ஒருவன் ஒரு நதியில் இறங்க முடியாது” என்று எழுதியவர்

 1. ஷேக்ஸ்பியர்
 2. ஹிராக்ளிடஸ்
 3. பெர்னாட்ஷா
 4. அரிஸ்டாட்டில்

விடை : ஹிராக்ளிடஸ்

10. “ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது” என்று கூறியவர்

 1. ஹிராக்ளிடஸ்
 2. ஷேக்ஸ்பியர்
 3. பெர்னாட்ஷா
 4. அரிஸ்டாட்டில்

விடை : ஹிராக்ளிடஸ்

11. அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தவர்

 1. அதியன்
 2. பேகன்
 3. பாரி
 4. ஓரி

விடை : அதியன்

குறுவினா

1. நேர மேலாண்மையை வள்ளுவர் வழி நின்று விளக்குக

செயல் செய்வதற்கு ஏற்ற காலத்தையும், ஏற்ற இடத்தையும் அறிந்து செயல்பட்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும் என்பதை

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் 

வள்ளுவர் இக்குறள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

2. மடியின்மை என்னும் அதிகாரத்தின் வாயிலாக ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிறார்?

“மடிஇலா மன்னவன் அய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு”

என்ற குரலில் உலகம் அனைத்தும் அளந்த இறைவன் சோம்பல் இன்றி பாதுகாப்பது போல அரசனும் சோம்பல் இல்லாமல் தன் பெரு முயற்சியால் மக்களை பாதுகாக்க வேண்டும்.

3. கடலைக் குறிக்கும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக

அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆழி, ஈண்டுநீர், உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, தென்நீர், பெளவம், முந்நீர், வரி, ஓதம், வலயம்

4. சங்க இலக்கியங்கள் காட்டும் மிகப்பெரிய துறைமுகம் எது? யாருடைய கப்பல்கள் அங்கு இருந்தது?

சங்க இலக்கியங்கள் காட்டும் மிகப்பெரிய துறைமுகம் முசிறி ஆகும் அங்கு யவணர்களின் கப்பல்கள் இருந்தது.

5. பதிற்றுப்பத்து காட்டும் வணிக மேலாண்மை விளக்குக.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான், பகை நாட்டுச் செல்வங்களைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன.

6. வணிக மேலாண்மை விதி யாது?

 • யாரும் போட்டி போடக்கூடாது.
 • போட்டிக்கு வரும் அனைவரையும் அழித்துவிட வேண்டும் என எண்ணக் கூடாது.
 • போட்டியாளர்களே நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது மேலாண்மை விதி.

7. மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை விளக்குக.

“இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்”

என்ற பாடலடிகளில் விளைநிலமாக இன்சொல்லும், விதையா ஈதலும், வன்மையான சொல் களையாகவும் உண்மை என்ற எருவை விட்டு அன்பு நீர் பாய்ச்சி வேளாண்மை செய் வேண்டும் அறநெறிச்சாரம் விளக்குகிறது.

8. மேலாண்மையில் புலி – பூனை ஒப்பிடுக

புலியை பூனைப்போல் தொடந்து நடத்தினால் அது பூனையாகவே ஆகிவிடும்.

புத்திசாலிகள் பூனைகளையும் புலியாக்குவார்கள் அவசரக்காரர்கள் புலிகளையும் எலியாக்குவார்கள் என்பதே புலி – பூனை மேலாண்மைக் கருத்தாகும்.

9. நாலடியார் கூறும் நிர்வாக மேலாண்மையை விளக்குக

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்…

என்கிறார் நாலடியார்

10. வெ. இறையன்புவின் படைப்புக்களம் எதனை அடிப்படையாகக் கொண்டது?

சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல்

11. வெ. இறையன்புவின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூலினை எழுதுக.

வெ. இறையன்புவின் வாய்க்கால் மீன்கள் 1995-ம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்றது.

சிறுவினா

1. சீனக்கதை வாயிலாக நேர மேலாண்மையை விளக்குக

சீனத்தில் யாங்செள என்கிற பகுதியில் பல இளைஞர்கள் நீச்சலில் தீரராக இருந்தனர்.

நீச்சல், தன்னம்பிக்கையைத் தருவதோடு வாழ்வில் எதிர்நீச்சல் போடவும் கற்றுத் தருகிறது.

அங்கு ஆழமான நதியைச் சில இளைஞர்கள் கடக்கும்போது, மழைப் பிடிப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட, படகு கவிழ்ந்தது.

அனைவரும் நதியில் விழுந்து நீச்சலடிக்க ஆரம்பித்தனர்.

அவர்களில் மிகச்சிறந்த நீச்சல் வீரன் ஒருவனும் இருந்தான். ஆனால் அவன் அன்று சரியாக நீந்தாமல் தத்தளித்தான்.

“ஏன் இவ்வளவு பின் தங்குகிறாய்? நீ அதிசிறந்த நீச்சல் வீரனாயிற்றே” என்று மற்றொருவர் வினவினார்.

“நான் என்னுடைய கச்சையில் ஆயிரம் பொற்காசுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னால் வேகமாக நீந்த முடியவில்லை”,

“அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, நீந்திக் கரைசேர்” என மற்றவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவற்றை விட மனமில்லாமல் அவன் தன் அரிய உயிரை நீத்தான்.

எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதுவே சிறந்த மேலாண்மை என்பதைத்தான் தொன்மை மிகுந்த இந்தச் சீனக்கதை சொல்கிறது.

2. வணிக மேலாண்மை பற்றி பட்டினப்பாலை கூறுவனவற்றை விளக்குக.

காவிரிப் பூம்பட்டினத்தில் மாரிக் காலத்து மழை மேகம் போல, கடல் வழியே வேறு நாட்டு மரக்கலங்கள் வந்தன

அதில் வந்த பொருட்களை இறக்குமதி செய்தும், நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

“வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்” – பட்டினப்பாலை 126 – 132

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

3. காவிரிப் பூம்பட்டினத்து துறைமுகம் பற்றிக் குறிப்பு வரைக

 • பல நாடுகளில் மரக்கலங்கள் வந்தன.
 • ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
 • சுங்கவரி வசூலிக்கப்பட்டன.
 • வரி வசூலித்த பின் புலிச்சின்னம் பொறித்தனர்.
 • வரி ஏய்ப்பவர்களை கண்காணிக்க வலிமை மிக்ககவர்கள் இருந்தனர்.

4. மேலான மேலாண்மை என்பது என்ன?

 • மேலாண்மை என்பது வெறும் புத்தக அறிவுடன் முடிந்துவிடுவதல்ல.
 • நொடிக்கு நொடி சூழல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.
 • ஏற்கெனவே தயாரித்து வைத்த அறிவுக் கூறுகளைக் கொண்டு நாம் புதிய நெருக்கடியை நேர்கொள்ள முடியாது.
 • அதனால்தான் இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் ‘முன் அனுபவம்’ என்பது எதிர்மறையாகிவிட்டது.
 • அனுபவசாலிகள் செக்குமாடாக இருப்பார்கள். ஆனால் நமக்குத் தேவை ஜல்லிக்கட்டுக்காளைகள்.

5. வெ. இறையன்பு குறிப்பு வரைக.

 • தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்ணி அலுவராகப் பணியாற்றி வருகிறார்.
 • ஐ.ஏ.எஸ் தேர்வினை தமிழில் எழுதி வெற்றிப் பெற்றவர்.
 • தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
 • இவர் எழுதிய “வாய்க்கால் மீன்கள்” என்ற நூல் 1995-ல் தழிக வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான சிறந்த விருதினை பெற்றது.
 • சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவருடைய படைப்புக்களம் விரிவானது.

 

சில பயனுள்ள பக்கங்கள்