பாடம் 7.5. சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
கவிதைப்பேழை > 7.5. சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
ஐராவதம் மகாதேவன் எழுதிய இக்கட்டுரை ‘கல்வெட்டு’ இதழில் வெளிவந்தது.இவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார். தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார். சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவருடைய ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்பட்டுள்ளன. ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970), இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை இவர் கண்டுபிடித்தது, இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது. பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி இவர் தந்தது, இமயப் பணி. |
நெடுவினா
சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? – விளக்குக.
முன்னுரை:-
இலக்கியங்கள் அவை உருவான காலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள்.
இப்பகுதியல் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
எழுத்து வடிவம்:-
கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் சங்ககால எழுத்து வடிவமான “தமிழ்” பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
புகளூர் கல்வெட்டு:-
சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளில் காண முடிகிறது.
ஆறுநாட்டான் குன்று:-
ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்;
“யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகன் (இ)ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்”
என்று பொறிக்கப்பட்டுள்ளன. “கோ அதல் செல் இரும்பொறை” என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்குதிகள் “செல்வக் கடுங்கோ வாழி அதன்” என்றும் 7-ம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதை காண முடிகிறது. இவர் மகன் பெயர் “பெருங்கடுங்கோ” பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன் “இங்கடுங்கோ” என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத் துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையல் உள்ளது. “பிரிட்டன்” “கொற்றன்” என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.
கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:-
சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய “பெருங்கடுங்கோ” இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் “நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்” (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறிய முடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்ற தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6, 7, 8வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று மகாதேவன் ஆய்வு மூலம் அறிய முடிகிறது.
முடிவுரை:-
புகளூர் கல்வெட்டு மூலம் சேர மன்னர்களின் வாழ்க்கை, பாலை, மருதம் பாடியவர்கள் பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.
கூடுதல் வினாக்கள்….
பலவுள் தெரிக
1. சங்ககாலக் கட்வெட்டுகளும் என் நினைவுகளும்” என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்
- எழுத்து
- கல்வெட்டு
- தென்றல்
- கணையாழி
விடை : கணையாழி
2. ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்ட ஆண்டுகள்
- 10
- 20
- 30
- 40
விடை : 30
3. …………… எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பதை ஏற்படுத்தியது.
- சிந்துவெளி
- பிராகிருத
- பாரசீக
- ஒரிய
விடை : சிந்துவெளி
4. ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகளையும் ஆண்டுகளையும் பொருத்திக் காட்டுக
அ) ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது | 1) 2009 |
ஆ) இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது | 2) 1970 |
இ) தாமரைத்திரு விருது | 3) 1992 |
- 3, 1, 2
- 2, 1, 3
- 2, 3, 1
- 1, 2, 3
விடை : 2, 1, 3
5. ஐராவதம் மகாதேவன் பணிகளில் குறிப்பிடத் தக்கன
அ) பதிற்றுப்பத்தில் இடம் பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தது.
ஆ) இலக்கியத்தையும், கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது
இ) பாறைகளிலிருந்து பழங்கல்வெட்களைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கியது
- அ, ஆ இரண்டும் சரி
- ஆ, இ இரண்டும் சரி
- அ, இ இரண்டும் சரி
- அ, ஆ, இ மூன்றும் சரி
விடை : அ, ஆ, இ மூன்றும் சரி
6. மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக்கல்வெட்டுகள் யாருடையை, எந்நூற்றாண்டைச் சார்ந்தவை என்று குறிப்பிடுகிறார் ஐராவதம் மகாதேவன்?
- பாண்டியன் நெடுஞ்செழியன், 2-ம் நூற்றாண்டு
- பாண்டியன் அறிவுடைநம்பி, 2-ம் நூற்றாண்டு
- சோழன் நல்லங்கிள்ளி, 2-ம் நூற்றாண்டு
- சோழன் நெடுங்கிள்ளி, 2-ம் நூற்றாண்டு
விடை : பாண்டியன் நெடுஞ்செழியன், 2-ம் நூற்றாண்டு
7. 1965 நவம்பர் 3-ம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக்கூறும் நூல்
- தமிழக கல்வெட்டியல்
- கல்வெட்டு
- நூற்றாண்டு மாணிக்கம்
- இவற்றில் எதுவுமில்லை
விடை : நூற்றாண்டு மாணிக்கம்
8. சங்கக் காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதை கண்டறிய ஆய்வு முன்னோடி
- ஐராவதம் மகாதேவன்
- தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
- வி. கிருஷ்ணமூர்த்தி
- தேனுகா
விடை : ஐராவதம் மகாதேவன்
9. எர்லி தமிழ் எபிகிராபி என்னும் நூலின் ஆசிரியர்
- ஜி.யு. போப்
- ஜார்ஜ் எல். ஹார்ட்
- ஐராவதம் மகாதேவன்
- தேனுகா
விடை : ஐராவதம் மகாதேவன்
10. ஆற்றூர் என்னும் இடத்தை சேர்ந்த செங்காய்பன் ……………. ஆவார்
- பெளத்தத்துறவி
- சமணத்துறவி
- அமைச்சர்
- புலவர்
விடை : சமணத்துறவி
11. கரூரை அடத்து புகளூர் ஆற் நாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிக்கப்பெறும் மன்னர்கள்
அ) கோ ஆதன் செல்லிரும்பொறை | ஆ) பெருங்கடுங்கோன் |
இ) இளங்கடுங்கோ | ஈ) இளங்கோ |
- அ மட்டும் சரி
- அ, இ மட்டும் சரி
- ஆ, இ மட்டும் சரி
- நான்கும் சரி
விடை : நான்கும் சரி
12. பதிற்றுபத்தில் குறிக்கப்பெறும் மன்னர்களில் புகளூர் கல்வெட்டால் அறியப்படுபவர்கள்
அ) 6, 7, 8-வது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஐராவதம் மகாதேவனின் கூற்று சரியானது.
ஆ) 7, 8, 9-வது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஒரு மாணவரின் கூற்று சரியானது.
- அ மட்டும் சரி
- ஆ மட்டும் சரி
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
விடை : ஆ மட்டும் சரி
13. புகளூர் கல்வெட்டின் காலம் ……………… நூற்றாண்டு
- முதலாம்
- இரண்டாம்
- நான்காம்
- ஐந்தாம்
விடை : இரண்டாம்
14. தமிழ்நாட்டிலுள்ள பிராம்மி கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
- ஐராவதம் மகாதேவன்
- தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
- வி. கிருஷ்ணமூர்த்தி
- கே.வி. சுப்பிரமணியார்
விடை : கே.வி. சுப்பிரமணியார்
15. மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் ________ நூற்றாண்டைச் சேர்ந்தது
- 3ஆம் நூற்றாண்டு
- 2ஆம் நூற்றாண்டு
- 4ஆம் நூற்றாண்டு
- 5ஆம் நூற்றாண்டு
விடை : 2ஆம் நூற்றாண்டு
16. தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் _______ வரிவடிவத்துடன் தமிழி, தரமிழி, திராவிடி என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
- கியூனிபாரம்
- தேவகரி
- பிராம்மி
- வட்டெழுத்து
விடை : பிராம்மி
குறுவினா
1. ஐராவதம் மகாதேவன் – குறிப்பு வரைக
- ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணி அலுவராக இருந்தவர்.
- தொல்லியலிலும், எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார்.
- தனக்கு மிகுவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டார்.
- சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
- ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970), இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
- பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை இவர் கண்டுபிடித்தது, இலக்கியத்தையும், கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது.
- பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி இவர் தந்தது, இமயப்பணி.
சில பயனுள்ள பக்கங்கள்