3rd Std Tamil Book 1st Term Solution
You can find the solution for the Samacheer Kalvi 3rd Standard Tamil subject’s first term on this page. It has been clearly explained by a Tamil expert.
Table of Content |
|
3rd Standard Tamil Book – Download
பாடம் 1: நம் நினைவில்
என்னைப் பற்றி

| என் பெயர் | சந்தியா |
| எனக்குப் பிடித்தவரின் பெயர் | சரவணன் |
| எனக்குப் பிடித்த விளையாட்டு | கால்பந்து |
| என் வகுப்பில் எனக்குப் பிடித்தது | |
| வகுப்பில் மாற்ற விரும்புவது | |
| நான் விரும்பிச் செய்வது | |
| நான் கற்றுக்கொள்ள விரும்புவது |
இன்று எனது உணர்வு

என்னை எனக்குப் பிடிக்கும். ஏனெனில், நான்

பூக்களின் பெயர்களை வட்டமிட்டு எழுதுக
|
|
வட்டமிட்ட எழுத்துகளை எடுத்து எழுதுக. முறைப்படுத்தி எழுதினால் கிடைக்கும் பூக்களின் நண்பர்:
- வண்ணத்துப் பூச்சி
தேவைப்படும் பொருள்களை உரிய இடத்தில் எடுத்து எழுதுக. 
பழச்சாறு தயாரிப்பதற்கு
- சர்க்கரை, தண்ணீர், கத்தி, கிண்ணம்
தேநீர் தயாரிப்பதற்கு
- தண்ணீர், பால், தீப்பெட்டி, குவளை, அடுப்பு, தேயிலைத்தூள், வடிகட்டி
பள்ளி செல்வதற்கு
- உணவு, பை, புத்தகம், எழுதுகோல், தின்பண்டம்
சுற்றுலா செல்வதற்கு
- பை, துண்டு, உடைகள், பற்பசை, பல்துலக்கி, போர்வை, தின்பண்டம்
சொற்களை வண்ணமிட்டு எடுத்து எழுதுக.

|
|
தொடருக்கு ஏற்பச் சொல்லை மாற்றி எழுதுக.
1. செடியில் ஈக்கள் பூத்தன.
விடை: செடியில் பூக்கள் பூத்தன.
2. நான் செங்கல் உண்டேன்
விடை: நான் பொங்கல் பூத்தன.
3. என் வட்டம் பறந்தது.
விடை: என் பட்டம் பறந்தது.
4. ஆற்றில் தேன் துள்ளியது.
விடை: ஆற்றில் மீன் துள்ளியது.
5. தாழை இலையில் சாப்பிட்டேன்.
விடை: வாழை இலையில் சாப்பிட்டேன்.
|
|
நண்பர்கள் பந்து விளையாடினர். |
|
|
யானை கரும்பு தின்கிறது. |
|
|
அணில் மரம் ஏறுகிறது. |
|
|
சிறுமி ஊஞ்சல் ஆடுகிறாள். |
நிரப்புக

1. வானத்தில் _______ பறக்கின்றன.
விடை: வானத்தில் கிளிகள் பறக்கின்றன.
2. தேன்கூட்டில் இருந்து _______ செல்கின்றன.
விடை: தேன்கூட்டில் இருந்து தேனீக்கள் செல்கின்றன
3. புல் தரையில் _______ நடந்து வருகிறது.
விடை: புல் தரையில் பசு நடந்து வருகிறது.
4. பூவில் _______ அமர்ந்துள்ளது.
விடை: பூவில் வண்டு அமர்ந்துள்ளது.
கதிருக்கு என்ன உறவு? எழுதுக.
1. அம்மாவின் அண்ணன்
விடை: மாமா
2. அம்மாவின் அக்கா
விடை: பெரியம்மா
3. அம்மாவின் அம்மா
விடை: பாட்டி
4. அப்பாவின் தம்பி
விடை: சித்தப்பா
5. அம்மாவின் தங்கை
விடை: சித்தி
6. அப்பாவின் அண்ணன்
விடை: பெரியப்பா
7. அப்பாவின் தங்கை
விடை: அத்தை
1. வானத்தில் _______ பறக்கின்றன.
விடை: வானத்தில் கிளிகள் பறக்கின்றன.
2. தேன்கூட்டில் இருந்து _______ செல்கின்றன.
விடை: தேன்கூட்டில் இருந்து தேனீக்கள் செல்கின்றன
3. புல் தரையில் _______ நடந்து வருகிறது.
விடை: புல் தரையில் பசு நடந்து வருகிறது.
4. பூவில் _______ அமர்ந்துள்ளது.
விடை: பூவில் வண்டு அமர்ந்துள்ளது.
கதையை வரிசைப்படுத்தி எழுதுக.

- குருவி பருத்திச் செடியிடம் பஞ்சு கேட்டது.
- குருவிக் குஞ்சுகள் குளிரில் நடுங்கின.
- ஒரு நாள் பனி அதிகமாக இருந்தது.
- குஞ்சுகள் மகிழ்ந்து தூங்கின.
- குருவி, மெத்தை செய்தது.
- பருத்திச் செடி பஞ்சு தந்தது.
விடை:
- ஒரு நாள் பனி அதிகமாக இருந்தது.
- குருவிக் குஞ்சுகள் குளிரில் நடுங்கின.
- குருவி பருத்திச் செடியிடம் பஞ்சு கேட்டது.
- பருத்திச் செடி பஞ்சு தந்தது.
- குருவி, மெத்தை செய்தது.
- குஞ்சுகள் மகிழ்ந்து தூங்கின.

விடை:

பூங்காவில் இல்லாத நாய்க்குட்டி எது? வட்டமிடுக.
விடை:
3rd Standard Tamil Book – Download
பாடம் 2: கோழி தேடும் கோலி
பின்வரும் தொடரில் ஒவ்வொரு சொல்லிலும் உள்ள 1, 2, 3, 4 ஆவது எழுத்துகளை எடுத்து எழுத விடை கிடைக்கும்.
இன்று கீரை செய்தே உண்டிடலாம்.
விடை: இன்று கீரை செய்தே உண்டிடலாம். = இரை தேட
கதையில் பிடித்த சொற்களை எழுதுக
| கோழி | கோலி |
| நட்பு | விளையாட்டு |
| அழகு | நண்பர்கள் |
| குப்பை | கோலத்தில் |
| ஒளிந்து | உருண்டது |
பாடத்தில் அடிக்கோடிட்டு எழுதுக.
1. ஒரே ஓசையில் முடியும் சொற்கள் :
விடை: அங்கே, இங்கே, எங்கே
2. கதையில் இடம்பெற்ற விளையாட்டுகள்:
விடை: கோலிக்குண்டு
3. கதையில் பிடித்த தொடர்
விடை: கோழி, கோலியை எடுத்து வரும் அழகே அழகு!
படித்து விடை எழுதுக
| படித்தல் பலகை | ||
| ஓடி | அழகு | வந்தேன் |
| இருக்கிறாய் | கோலி | குரல் |
| வாங்கினான் | விளையாடும் | கோழி |
| நட்பு | கண்டுபிடித்து | உருண்டு |
1. இரண்டு எழுத்துச் சொற்கள்
விடை: கோலி, கோழி, ஓடி
2. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள்
விடை: ஓடி, அழகு, உருண்டு, இருக்கிறாய்
3. இரண்டு மெய் எழுத்து உள்ள சொற்கள்
விடை: வந்தேன், இருக்கிறாய், வாங்கினான், கண்டுபிடித்து
4. அதிக எழுத்துகள் உள்ள சொல்
விடை: கண்டுபிடித்து
பாடச்சுருக்கம் – படிக்க; விடையளிக்க.
கோழி தேடும் கோலி
(பொன்னியின் கற்பனைக் கதை)
பீட்டர் கோழி, கோலி வாங்கினான்.
நண்பர்களுடன் கோலி விளையாடுவான்.
கோழி, கோலியை எடுத்துத் தரும்.
இரண்டும் நட்பாக இருந்தன.
ஒரு நாள் கண்ணாமூச்சி ஆடின.
கோலி குப்பைத்தொட்டி அருகே ஒளிந்தது.
காற்று வேகமாக வீசியது.
கோலியின் மேல் குப்பைகள் விழுந்தன.
கோழி, கோலியைத் தேடியது.
குப்பையைக் கிளறியது.
இப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறது.
படிக்க எடுத்துக்கொண்ட நேரம்
- 30:00
- 20:00
- 15:00
1. இரண்டும் நட்பாக இருந்தன தொடரில் இரண்டும் என்ற சொல் எவற்றைக் குறிக்கிறது?
- பீட்டர். கோலி
- பீட்டர். கோழி
- கோழி, கோலி
விடை: கோழி, கோலி
2. குப்பைகள் ஏன் கீழே விழுந்தன?
விடை: காற்று வேகமாக வீசியதால்
தொடர்புடைய சொல்லை எடுத்து எழுதுக.
1. பூக்கள், தேன், வண்ணம்
விடை: வண்ணத்துப்பூச்சி
2. மீன், நண்டு, கப்பல்
விடை: கடல்
3. இனிப்பு, தோட்டம், யானை
விடை: கரும்பு
4. வானம், மேகம், குடை
விடை: மழை
தொடர்ந்து எழுதுக.
கிளி பறக்கும் வானம்
வானம் பார்க்கும் பாப்பா
பாப்பா ஆடும் ஊஞ்சல்
ஊஞ்சல் இருக்கும் மரம்
மரம் தரும் பழம்
பழம் தின்னும் கிளி
கிளி அமரும் மரம்
கேட்டு விடை கூறுக.
காற்றில் மணம்
மாறனின் குரல்கேட்டு விரைந்து வந்தார் அம்மா விமலாவும் மாறனும் ஒரு பொம்மைக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். விமலா, தம்பியை அழ வைக்காதே! சேர்ந்து விளையாடுங்கள் என்று கூறிய அம்மா சமையல் அறைக்குள் ஓடினார். பின்னாலேயே ஓடிய விமலாவுக்கு ஏதோ ஒரு வேறுபட்ட மணம் வருவது தெரிந்தது. இது என்ன மணம் அம்மா? என்று கேட்டாள் விமலா பால் பொங்கி அடுப்பு அணைந்துள்ளது. அதனால், எரிவாயு கசிந்து கொண்டிருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே எரிவாயுவை நிறுத்தினார் அம்மா. உடனே விமலா மின்விசிறியை இயக்கச் சென்றாள். வேண்டாம் விமலா.. இப்போது மின் சாதனங்களை இயக்கக் கூடாது; அது விபத்தை ஏற்படுத்தும் என்றார் அம்மா. உடனடியாகக் கதவு. சன்னல்களைத் திறந்துவிட்டார். அங்கிருந்து இருவரையும் வெளியே அழைத்து வந்தார். பதற்றம் இல்லாமல் எச்சரிக்கையுடன் செயல்பட்ட அம்மாவை அன்பாகப் பார்த்தாள் விமலா.
சரியான தொடர் எது? காரணம் கூறுக.
- விமலா, எரிவாயு கசியும்போது ஏற்படும் மணத்தை இப்போதுதான் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்டாள்.
- விமலா, எரிவாயு கசியும்போது ஏற்படும் மணத்தை முன்னரே கண்டுபிடிக்கத் தெரிந்திருந்தாள்.
விடை: விமலா, எரிவாயு கசியும்போது ஏற்படும் மணத்தை இப்போதுதான் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்டாள்.
சிந்தித்து விடையளிக்க.
- நான் ஒரு கோழி.
- இரையைக் கொத்தித் தின்கிறேன்.
- கூடை அருகில் இருக்கிறேன்.
மூன்று தொடர்களுக்கும் உரிய ஒரு படம் எது?
![]() |
விடை:
![]() |
படித்து விடை எழுதுக.
எங்கே போனது?
அட, எங்கே போனது? தாத்தா தேடினார். மேசையின் மீது பார்த்தார். அங்கு இல்லை. புத்தகங்களுக்கு அருகில் பார்த்தார். அங்கும் இல்லை. அறை முழுவதும் தேடினார். எங்குமே இல்லை. எங்கேதான் போனது? எனச் சோர்ந்து நாற்காலியில் அமர்ந்தார். பூவிழி அங்கே வந்தாள். என்ன ஆனது தாத்தா? எனக் கேட்டாள். என் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்றார். ஹா…ஹா… எனச் சிரித்தாள் பூவிழி. தாத்தா உங்கள் நெற்றிக்கு மேல் தொட்டுப் பாருங்கள் என்றாள். தலையைத் தொட்டுப் பார்த்தார் தாத்தா. அவருக்கும் சிரிப்போ சிரிப்பு. ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
1. தாத்தாவின் மூக்குக் கண்ணாடி எங்கே இருந்தது?
- மேசை மேல்
- புத்தகத்தின் மேல்
- தாத்தாவின் நெற்றிக்கு மேல்
விடை: தாத்தாவின் நெற்றிக்கு மேல்
2. சரியா? தவறா?
மூக்குக் கண்ணாடியைத் தாத்தாவே கண்டுபிடித்தார்.
- சரி
- தவறு
விடை: தவறு
பின்பற்றி எழுதுக.
பீட்டருக்குப் பிடித்தவை…
-
- சுட்டிக் கோழியைப் பிடிக்கும்.
- படம் வரையப் பிடிக்கும்.
- தாத்தா, பாட்டி வீட்டிற்குச் செல்லப் பிடிக்கும்.
எனக்குப் பிடித்தவை…
-
- நண்பர்களுடன் விளையாடப் பிடிக்கும்.
- சுற்றுலா செல்ல பிடிக்கும்.
- படம் வரையப் பிடிக்கும்.
- பள்ளி செல்ல பிடிக்கும்.
உயிரெழுத்துகள் – 12
- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
குறில் எழுத்துகள் – 5
ஓசையில் குறைந்து ஒலிப்பதால் குறில் எழுத்துகள் எனப்படும்.
- அ, இ, உ, எ, ஒ
நெடில் எழுத்துகள் 7
ஓசையில் நீண்டு ஒலிப்பதால் குறில் நெடில் எனப்படும்.
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
வண்ணமிட்டுப் பெயர் எழுதுக

| ஒன்று | அணில் | ஏணி |
| இலை | ஆடு | ஐந்து |
| எலி | ஈச்சமரம் | ஓணான் |
| உரல் | ஊஞ்சல் | ஒளவை |
வண்ணமிட்டு தொடர்கள் அமைத்து எழுதுக.

- வாத்து குளத்தில் நீந்துகிறது.
- தேள் மரத்தில் ஏறுகிறது.
- குரங்கு வாழைப்பழம் தின்கிறது.
- எறும்பு மற்றும் வண்டு புல்தரையில் ஊர்கிறது.
- செடியில் தக்காளிப் பழம் உள்ளது.
நீங்கள் விளையாடிய விளையாட்டுகளுக்கு √ செய்க

சொல்லிப் பழகுக.
- தென்னை மரத்தில் இளநீர்
தேங்காய் உள்ளே தண்ணீர்
- காற்றில் பறந்த கீற்று
சேற்று வயலில் நாற்று
- குழியில் விழுந்த வாளி
வாளிக்குள்ளே கோலி
பாடம் 3: மின்னி மின்னி
மின்னும் மின்மினி போலவே
மின்னி மின்னி வானத்தில்
என்னை உற்றுப் பார்த்திடும்
சின்னச் சின்ன மீன்களே
என்ன அங்கே செய்கின்றீர்?
எப்படித் தான் நிற்கிறீர்?
அன்னை கழுத்தில் அணிந்திடும்
அழகு வைர மாலையில்
மின்னும் மணிகள் போலவும்
வெள்ளை முத்தைப் போலவும்
பொன்னுப் பூவைப் போலவும்
மின்னிச் சிரிக்கும் மீன்களே
எட்ட நின்று பார்க்கிறீர்
இரவில் மேலே வருகிறீர்
பட்டப் பகலில் எங்குதான்
பறந்து செல்வீர் கூறுங்கள்!
-பெ. தூரன்.
பாடலில் பிடித்த சொற்களை எழுதுக
|
|
பாடலில் அடிக்கோட்டு எழுதுக
1. ஒரே ஓசையில் முடியும் சொற்கள்
விடை: நிற்கீறிர், செய்கின்றீர், பார்க்கிறீர், வருகிறீர்
சின்ன, என்ன
2. பாடலில் புதிதாகத் தெரிந்துகொண்ட சொற்கள்
விடை: அன்னை, வைரமாலை, மின்னும் மணிகள், வெள்ளை முத்து, பொன்னுப் பூ
தொடர் எழுதுக

தொடர்ந்து எழுதுக

தேடித் தேடித் தேனீ வந்தது.
பறந்து பறந்து பருந்து வந்தது.
வளைந்து வளைந்து வண்டு வந்தது.
மின்னி மின்னி மின்மினி வந்தது.
ஓடி ஓடி ஓணான் வந்தது
நகர்ந்து நகர்ந்து நத்தை வந்தது
ஆடி ஆடி ஆடு வந்தது
பாடிப் பாடிப் பாப்பா வந்தாள்.
சிந்தித்து விடையளிக்க.

அம்மா, வெள்ளரிக்காய் மிகவும் சுவையாக இருக்கிறது.
அப்படியா முகிலா, இதை நான் விளையும் இடத்திலேயே வாங்கினேன்.
1. அம்மா, வெள்ளரிக்காய் வாங்கிய இடம் எது?
- சந்தை
- காய்கறிக் கடை
- தோட்டம்
விடை: தோட்டம்
பின்பற்றி எழுதுக.
பாப்பாவின் பொழுதுபோக்கு…
- பாட்டுப் பாடுவேன்.
- பாட்டுக் கேட்பேன்.
- நடனம் ஆடுவேன்.
எனது பொழுதுபோக்கு…
- புத்தகம் படிப்பேன்.
- ஓவியம் வரைவேன்.
- செடி வளர்ப்பேன்.
- கவிதை எழுதுவேன்
பின்பற்றி எழுதுக.
சொல்லைக் கண்டுபிடிக்க.
- இது மூன்று எழுத்துப் பெயர்.
இறுதி இரண்டு எழுத்து நாய்.
இது ஒரு விலங்கு.
விடை: ஓநாய்
நீங்கள் கண்டுபிடியுங்கள்!
இது நான்கு எழுத்துப் பெயர்.
இறுதி இரண்டு எழுத்து நீர்.
தென்னை மரத்தில் கிடைக்கும்.
விடை: இளநீர்
உரிய எழுத்தை எழுதுக.
நாங்கள் எழுதினோம்.
| கு | ர் | இ | ம் |
மெல்லின மெய் எழுத்தை எழுதுக.
விடை: பழம்
நீங்கள் எழுதுங்கள்!
| ஆ | தெ | அ | த் |
நெடில் எழுத்தை எழுதுக.
விடை: ஆப்பம்
படத்திற்குப்
நானும் படிப்பேன்; வண்ணமிடுவேன்
பொருத்தமான தொடர்களை கண்டுபிடிக்க.

நானும் படிப்பேன்; வண்ணமிடுவேன்
நானும் படிப்பேன்; வண்ணமிடுவேன்
1. நெடில் எழுத்தில் தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.
- அடை
- ஏலக்காய்
- ஆவணி
- இடியாப்பம்
விடை: ஏலக்காய், ஆவணி
2. மூன்று தொடர்களுக்கும் பொருந்தும் ஒரே படம் எது?

தோட்டத்தில் செடி
செடியில் பூ
பூவில் வண்டு
3. விடை எழுதுக.

பூனைக்குப் பயந்து எலி பானைக்குள் நுழைந்தது.
அ) பானைக்குள் நுழைந்தது எது?
விடை: எலி
ஆ) பயந்தது எது?
விடை: எலி
4. அடுத்து வரும் தொடர் எது? எடுத்து எழுதுக.
மரம் தந்த பூ
பூ தந்த காய்
காய் தந்த பழம்
- பழம் தந்த மேகம்
- பழம் தந்த விதை
- பழம் தந்த வீடு
விடை: பழம் தந்த விதை
5. அடுத்து என்ன செய்யலாம்?

- மிதக்க விடலாம்.
- பறக்க விடலாம்.
- உருட்டி விடலாம்.
விடை: மிதக்க விடலாம்
உரிய இடத்திற்குக் கோடிட்டு இணைக்கலாம்.

பாடம் 4: மீனுவின் வண்டி
அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
ஒவ்வொரு தொடரிலும் உள்ள 1,2,3,4,5 ஆவது சொற்களுக்கு அடிக்கோடு இடுங்கள். விடை கிடைக்கும்.
- மீனு கேட்டது கிடைத்தது.
- அவள் ஓடிவந்து பார்த்தாள்.
- புதிய மிதிவண்டியைத் தொட்டுப்பார்த்து மகிழ்ந்தாள்.
- மீனு, அப்பா அம்மாவிற்கு டா… டா… கூறினாள்.
- நண்பர்களிடம் தனது புதிய மிதிவண்டியைக் காட்டினாள்.
விடை: மீனு ஓடிவந்து தொட்டுப்பார்த்து டா… டா… காட்டினாள்.
கதையில் பிடித்த சொற்களை எழுதுக
|
|
பாடத்தில் அடிக்கோடிட்டு எழுதுக.
அருகருகே வந்துள்ள ஒரே எழுத்து, ஒரே சொல்
- ஆ… ஆ…
- ஹி… ஹி…
- மே… மே…
- ஊ… ஊ…
- டிரிங்… டிரிங்…
- ஓடுது! ஓடுது!
- டுர்… டுர்…
- கிர்ர்ர்… கிர்ர்ர்…
படித்து விடை எழுதுக.
| படித்தல் பலகை | |||
| மிதிவண்டி | பாட்டி | செல்கிறேன் | கற்பனை |
| அப்பா | சேறு | ஆடு | சிரிப்பு |
| குதித்தாள் | நீச்சல் | மாமா | வளர்ந்து |
| மழை | நண்பன் | இரவில் | பொருள் |
1. இது ஒரு விலங்கு
விடை: ஆடு
2. தண்ணீருடன் தொடர்புடைய சொற்கள்
விடை: மழை, நீச்சல், சேறு
3. அதிக எழுத்துகளைக் கொண்ட சொற்கள்:
விடை: செல்கிறேன், குதித்தாள், மிதிவண்டி, கற்பனை
4. படித்தல் பலகையில் உள்ள பிடித்த சொல்லைக் கொண்டு தொடர் எழுதுக.
சொல்: பாட்டி
தொடர்: அப்பாவுடன் மிதிவண்டியில் செல்கிறேன்.
பாடச்சுருக்கம் படிக்க: விடையளிக்க.
மீனுவின் வண்டி
அது ஒரு மூன்று சக்கர வண்டி.
மீனு சிறு வயதில் ஓட்டினாள்.
ஒரு நாள் வண்டியுடன் விழுந்தாள்.
ஒரு நாள் மழை நீரில் கவிழ்ந்தாள்.
நண்பருடன் வேகமாக ஓட்டினாள்.
ஆட்டின் மேல் மோதினாள்.
இப்போது மீனு வளர்ந்து விட்டாள்.
புதிய மிதிவண்டி வாங்கினாள்.
மகிழ்ந்தாள்: துள்ளிக்குதித்தாள்.
அதை மூன்று சக்கர வண்டி பார்த்தது.
பழையதை நினைத்து மகிழ்ந்தது.
பழைய பொருள்கள் கடைக்குச் சென்றது.
1. படிக்க எடுத்துக்கொண்ட நேரம்
- 2.00 நிமிடம்
- 1.45 நிமிடம்
- 1.25 நிமிடம்
2.. நினைத்துப் பார்த்து மகிழ்ந்தது எது?
- மீனு
- மூன்று சக்கர வண்டி
- புதிய மிதிவண்டி
விடை: மூன்று சக்கர வண்டி
3. மூன்று சக்கர வண்டி, பழைய பொருள்கள் கடைக்குச் சென்றது ஏன்?
புதிய மிதிவண்டி இருந்தால், பழைய பொருள்கள் கிடைக்கும்.
சொல்லைக் கண்டுபிடிக்க.
- மரத்தின் ஓரம் உரல் – ர
- ஆமை பொம்மை அருமை – மை
- பொரித்த பொரி பொட்டலம் – பொ
- கரும்பு தின்னும் எறும்பு – ம்
- நாகத்தைக் கண்ட காகம் – க
- எட்டிப் பிடித்த காற்றாடி – டி
எழுத்துகளை முறைப்படுத்தினால் கிடைக்கும் சொல் – கரடி பொம்மை
தொடர்ந்து எழுதுக.
கூடை கூடை
என்ன கூடை?
பூக்கூடை
என்ன பூ?
சாமந்திப்பூ
என்ன சாமந்தி ?
மஞ்சள் சாமந்தி
என்ன மஞ்சள்?
கிழங்கு மஞ்சள்
என்ன கிழங்கு?
உருளைக்கிழங்கு
மயில் மயில்
என்ன மயில்?
வண்ண மயில்
என்ன வண்ணம்?
பல வண்ணங்கள்
பிடித்த வண்ணம் எது?
இலைப் பச்சை
பேசலாம்: எழுதலாம்

சிறுவன், சிறுமி பறவைகளுக்கு தண்ணீரும், தானியங்களும் வழங்கி, அவர்களும் அவைகள் உண்பதை ரசித்து கொண்டிருந்தன.
சிந்தித்து விடையளிக்க.
மீனு பள்ளிக்கு நடந்து சென்றாள். அவள் வீட்டு வயல் ஓரத்தில் பலா மரம் இருந்தது. அதில் பழங்கள் நிறைய இருந்தன. நாளை பறிக்கலாம் என நினைத்தாள்.
உரிய படத்தை செய்க

தொடர் அமைத்துக் கூறுக.

எதிர்ச்சொற்கள் அறிவோம்.
|
|
எதிர்ச்சொற்களை நிரப்புக.
- புதிய மிதிவண்டி வாங்கினாள். பழைய வண்டி பார்க்கிறது.
- பகல் நேரத்தில் விழித்திருப்பாய். 2. இரவு நீ தூங்குவாய்.
- மிதிவண்டியை வேகமாக ஓட்டினாள். மெதுவாக நிறுத்தினாள்.
- விழுந்தபோது, வண்டிக்கு அழுகை வந்தது. மீனுவுக்குச் சிரிப்பு வந்தது.
பொருத்தமானதை ✓ செய்து காரணம் கூறுக.
தண்ணீர்க் குடுவைக்கு உணர்வு இருந்தால் என்ன வெளிப்படுத்தி இருக்கும்? ஏன்?
- மகிழ்ச்சி
- வருத்தம்
- பயம்
விடை: வருத்தம்
இன்று முதல் நான் என் பொருள்களை,
| பாதுகாப்பாக வைத்துக்கொள்வேன். | ✓ |
| பயன்படுத்தியதும் உரிய இடத்தில் வைப்பேன். | ✓ |
| பிறருக்குக் கொடுத்து உதவுவேன். | ✓ |
| முழுமையாகப் பயன்படுத்துவேன். | ✓ |
பாடம் 5 பூங்காவில் ஒரு நாள்…


நிரப்பிப் படிக்கலாம்
(கு, வி, பு, பா, சை, க, ல், ப்)
- வரிசையில் நிற்கவும்
- விபத்துப் பகுதி
- புல் தரையில் நடக்காதீர்
- வாகனம் நிறுத்தும் இடம்
- பாதை வளைந்து செல்கிறது
- குப்பைகளை இங்கே போடவும்
நிரப்பிப் படிக்கலாம்.
|
|
பாடத்தில் அடிக்கோடிட்டு எழுதுக.
1. எளிமையாக என்பதன் எதிர்ச்சொல்:
விடை: எளிமையாக x கடினமாக
2. உங்களுக்குச் சிரிப்பை ஏற்படுத்திய தொடர்
விடை: தை வளைந்து செல்கிறது.
3. அறிவிப்பில் உள்ள மாதத்தின் பெயர்
விடை: ஆடி

| படித்தல் பலகை | |||
| குதி | பைகளை | பேசுகிறாய் | வரிக்குள் |
| பாதை | போட்டி | நிறுத்தும் | வளைந்து |
| பூங்காவிற்கு | கடினமாக | வேகமாக | செல்கிறது |
| வானம் | சொல்லுங்கள் | இடம் | வாகனங்கள் |
1. ‘வ’ எழுத்தில் தொடங்கும் சொற்கள்
- வானம்
- வாகனங்கள்
- வரிக்குள்
- வளைந்து
2. சொற்களைக் கொண்டு அறிவிப்பு ஒன்று எழுதுக.
வாகனங்கள் செல்லும் பாதை மிகவும் வளைந்து இருப்பதால், ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக இயக்காமல் நிறுத்தும் அளவிற்கு மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாடச்சுருக்கம் படிக்க:விடையளிக்க.
பூங்காவில் ஒரு நாள்…
மிதுனும் மீனுவும் பூங்காவிற்குச் சென்றனர். அறிவிப்புப் பலகைகளைப் படித்தனர். அங்கே அறிவிப்புகள் மாறியிருந்தன. பிறகு, அவை சரி செய்யப்பட்டன.
அறிவிப்புகள்
விபத்துப் பகுதி.
வாகனம் நிறுத்தும் இடம்.
வரிசையில் நிற்கவும்.
புல் தரையில் நடக்காதீர்.
குப்பைகளை இங்கே போடவும்.
பாதை வளைந்து செல்கிறது.
மெதுவாகச் செல்லுங்கள்.
படிக்க எடுத்துக்கொண்ட நேரம்
- 2.00 நிமிடம்
- 1.45 நிமிடம்
- 1.30 நிமிடம்
விரைவாகப் படித்து. ஒவ்வொரு முறையும் படித்த நேரத்தைக் குறிக்க வேண்டும்.
1. ‘ல்’ எழுத்தில் முடியும் சொற்கள்
விடை: வரிசையில், புல், தரையில்
2. செய்யக் கூடாததைக் குறிக்கும் அறிவிப்பு
விடை: புல் தரையில் நடக்காதீர்
3. ‘பை’ என்ற எழுத்து உள்ள அறிவிப்பு
விடை: குப்பைகளை இங்கே போடவும்.
தொடர்புடைய சொற்களை எழுதுக



தொடர்ந்து எழுதுக.
இனிக்கும் இனிக்கும் சாறு. கரும்பில் உள்ளது. சிரிக்கும் சிரிக்கும் பொம்மை, பாப்பாவிடம் உள்ளது. நீந்தும் நீந்தும் மீன், நீரில் உள்ளது.
மணக்கும், மணக்கும் மலர் செடியில் உள்ளது. தாவும், தாவும் குரங்கு மரத்தில் உள்ளது. பறக்கும்,பறக்கும் பறவை வானில் உள்ளது.

- சத்தம் போடாமல் இருக்கவும்.
- பூக்களைத் தொடாமல் பார்க்கவும்.
- தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள்.
படித்து விடை எழுதுக
மதி, தீபா, பரிதா ஆகிய மூவரும் தோழிகள். அவர்கள் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற இருந்தது. அதற்காகப் பல போட்டிகள் அறிவிக்கப்பட்டன. மூவரும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். தீபா இரண்டாம் பரிசு பெற்றாள். பரிதா பரிசு பெறவில்லை. அதனால், அவள் யாரிடமும் பேசவில்லை. மதியும் பரிசு பெறவில்லை. ஆனாலும், அடுத்தமுறை சிறப்பாக வரைவேன்; பரிசை வெல்வேன் எனக் கூறினாள்.
- பேச்சுப் போட்டி
- ஓவியப் போட்டி
- நடனப் போட்டி
விடை: ஓவியப் போட்டி
2. சரியா? தவறா? செய்க.
போட்டியில் தீபா இரண்டாம் பரிசு பெற்றாள். (சரி / தவறு)
விடை: சரி
3. மதி கூறியது சரியா? எப்படி? கூறுக.
- மதி கூறியது சரி
- தோல்வி என்பது வெற்றியின் முதல்படி
பின்பற்றி எழுதுக.
மிதுன் செல்லும் இடங்கள்…
- பூங்காவிற்குச் செல்வேன்.
- விளையாடும் இடத்திற்குச் செல்வேன்.
- பாட்டி வீட்டிற்குச் செல்வேன்.
- தோட்டத்திற்குச் செல்வேன்.
நான் செல்லும் இடங்கள்…
- பூங்காவிற்க்குச் செல்வேன்.
- தாத்தா வீட்டிற்குச் செல்வேன்.
- நண்பன் வீட்டிற்க்குச் செல்வேன்.
- விளையாட்டு திடலுக்குச் செல்வேன்.
சொல்லிப் பழகுக.
காற்று சுழன்று அடித்தது
சக்கரம் கழன்று விழுந்தது
பள்ளத்தில் விழுந்த பழம்
பழுத்த பலாப்பழம்
கல்லும் முள்ளும் கடந்த வண்டி
மெல்லச் செல்லும் தள்ளுவண்டி
பொருத்தமானதை செய்து காரணம் கூறுக.
1. பள்ளி நூலகத்தில்…
- நண்பருடன் பேசுவேன்.
- அமைதியாகப் படிப்பேன்.
- சத்தமாகப் பேசுவேன்.
விடை: அமைதியாகப் படிப்பேன்.
2. பூங்காவில்…
- பூக்களைப் பறிப்பேன்.
- பூக்களைப் பறிக்கமாட்டேன்.
- பூக்களை வாங்குவேன்.
விடை: பூக்களைப் பறிக்கமாட்டேன்.
3. சாலையில்…
- ஓடிக் கடப்பேன்.
- இருபுறமும் பார்த்துக் கடப்பேன்.
- ஒருபுறம் பார்த்துக் கடப்பேன்.
விடை: பூக்களைப் பறிக்கமாட்டேன்.
4. வகுப்பறையில் குப்பையை எடுத்தால்…
- குப்பைத் தொட்டியில் போடுவேன்.
- தரையில் போடுவேன்.
- வெளியே வீசுவேன்.
விடை: குப்பைத் தொட்டியில் போடுவேன்.
கற்றல் பயணம்
செயல்திட்டம் அறிவிப்புகளை உருவாக்கலாம்.
கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு உங்கள் பள்ளிக்குத் தேவையான அறிவிப்புகளை எழுதுங்கள். உரிய இடத்தில் காட்சிப்படுத்துங்கள்.
| பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைப்போம். | தூய்மையாக வைப்போம் |
| குடிநீரை வீணாக்காதீர். | வீணாக்காதீர் |
| பூக்களை பறிக்காதீர். | பறிக்காதீர் |
| மரங்களை பாதுகாப்போம். | பாதுகாப்போம் |
| மரக்கிளைகளை ஒடிக்காதீர். | ஒடிக்காதீர் |
| வரிசையில் நிற்கவும். | நிற்கவும் |
| குப்பைகளை தொட்டியில் போடவும். | தொட்டியில் போடவும் |
| அமைதியாக படிக்கவும் | படிக்கவும் |
| சுவர்களில் எழுதாதிர். | எழுதாதீர் |
| பள்ளி உடைமைகளை பாதுகாப்பீர். | பாதுகாப்பீர் |

வானத்தில் வானூர்தி மரத்தில் கூடு
கூவும் சேவல் நீந்தும் வாத்து
புல்லின்மீது முயல் கல்லின்மீது குருவி
படத்தை இணைத்துப் படியுங்கள். வினாவுக்கு விடை அளியுங்கள்.

| பொடி | செங்கல் |
| செங்கல் | |
| தோகை | தோசை |
| ஆசை | |
| வங்கி | வடை |
| கடை |
எனக்கு பிடித்த உணவுகள்: பணியாரம், ஆப்பம், உப்புமா
படத்தை இணைத்துப் படியுங்கள். வினாவுக்கு விடை அளியுங்கள்.

எங்கள் ஊரில் குளம் ஒன்று இருக்கிறது. நாங்கள் அங்கே சென்றோம். மீன்கள் துள்ளிக் குதித்தன.
கொக்கு மீன் பிடிக்கக் காத்திருந்தது. வண்ணத்துப்பூச்சி தேன் குடித்துவிட்டுப் பறந்தன. கரையில்
அதிகமான நண்டுகள் விளையாடின.
1. சரியான விடைக்கு குறியிடுக.
- குளக்கரையில் பூக்கள் இல்லை.
- குளக்கரையில் பூக்கள் இருந்தன.
விடை: குளக்கரையில் பூக்கள் இருந்தன.
2. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
குறைவான x அதிகமான













