3rd Std Tamil Book 2nd Term Solution
On this page, you can access the solutions for the Second Term of the Samacheer Kalvi 3rd Standard Tamil subject. The solutions have been provided by a Tamil expert and are explained in a clear and comprehensive manner. By referring to these solutions, you will be able to enhance your understanding of the subject and effectively prepare for your exams.
பாடம் 1 – உண்மையே உயர்வு பாடம் 2 – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாடம் 3 – கல்வி கண் போன்றது பாடம் 4 – திருக்குறள் கதைகள் பாடம் 5 – வாலு போயி கத்தி வந்தது! டும்… டும்… டும்… டும் பாடம் 6 – எழில் கொஞ்சும் அருவி பாடம் 7 – நாயும் ஓநாயும் பாடம் 8 – நட்பே உயர்வு |
பாடம் 1: உண்மையே உயர்வு
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. சுமந்து இச்சொல்லின் பொருள்
- தாங்கி
- பிரிந்து
- சேர்ந்து
- விரைந்து
விடை : தாங்கி
2. வேண்டுமென்று இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- வேண்டு + மென்று
- வேண்டும் + என்று
- வேண் + டுமென்று
- வேண்டி + என்று
விடை : வேண்டும் + என்று
3. நினைத்தது இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
- மறந்தது
- பேசியது
- எண்ணியது
- வளர்ந்தது
விடை : மறந்தது
இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
- வந்தது – விழுந்தது
- போய்விடும் – தள்ளிடும் – கொண்டிடும்
- எண்ணினார் – ஏற்றினார் – ஓட்டினார்
- என்றுதான் – உழைப்புத்தான்
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.
குடை | தடை | உடை |
ஓடை | எடை | கடை |
படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?
புன்னகை | அழுகை | சிந்தனை |
பயம் | கவலை | சினம் |
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
1. கூவுற கோழி கொக்கரக் கோழி
கொக்கரக் கோழி கொழு கொழு கோழி
கொழு கொழு கோழி கொத்தற கோழ
2. தோணி மேலே கோணி
கோணி மேலே அணில்
அணில் கையில் கன
பாடம் 2: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஒத்துக்கொள்கிறோம் இச்சொல்லின் பொருள்
- விலகிக் கொள்கிறோம்
- ஏற்றுக் கொள்கிறோம்
- காத்துக் கொள்கிறோம்
- நடந்து கொள்கிறோம்
விடை : ஏற்றுக் கொள்கிறோம்
2. வேட்டை+ ஆட இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- வேட்டையட
- வேட்டையாட
- வேட்டைஆடு
- வெட்டையாட
விடை : வேட்டையாட
3. மரங்களிடையே இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மரம் + இடையே
- மரங்கள் + இடையே
- மரங்கள் + கிடையே
- மரங்கல் + இடையே
விடை : மரங்கள் + இடையே
4. அங்குமிங்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அங்கு + மிங்கும்
- அங்கும் + இங்கும்
- அங்கு + இங்கும்
- அங்கும் + இங்கு
விடை : அங்கும் + இங்கும்
5. மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம் என்று கூறியது
- சிங்கம்
- புலி
- முயல்
- மான்
விடை : மான்
வினாக்களுக்கு விடையளி
1. மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன
2. காட்டைவிட்டு எவை வெளியேறின?
விலங்குகள் காட்டை விட்டு வெளியேறின
3. விலங்குகளுக்கும் மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?
யார் உயர்ந்தவர் என்ற காரணத்தினால் விலங்குகளுக்கும் மரங்களுக்கும் போட்டி ஏற்பட்டது.
4. கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.
- யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை
- அனைவரும் சமமானவர்கள்
- அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.
1. என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித் துள்ளி ஓடுவேன். நான் யார்? விடை : மான் | |
2. வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். – நான் யார்? விடை : மரம் | |
3. காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான்- அவன் யார்? விடை : சிங்கம் |
எந்த மரத்திலிருந்து என்ன பொருள்? பொருத்துவோமா?
III. குழுவில் சேராததை வட்டமிடுக.
1. மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை : புலி
2. ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை : மலை
3. தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து
விடை : மட்டைப்பந்து
4. வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை : மென்மை
5. கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை : தென்னை
IV. சொல் விளையாட்டு
பாலம் | பாடம் | பாசம் |
பாரம் | பாதம் |
பாடம் 3: கல்வி கண் போன்றது
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. துன்பம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
- இன்பம்
- துயரம்
- வருத்தம்
- கவலை
விடை : இன்பம்
2. உதவித் தொகை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- உதவ + தொகை
- உதவிய + தொகை
- உதவு + தொகை
- உதவி + தொகை
விடை : உதவி + தொகை
3. யாருக்கு + எல்லாம் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- யாருக்கு எலாம்
- யாருக்குல்லாம்
- யாருக்கல்லாம்
- யாருக்கெல்லாம்
விடை : யாருக்கெல்லாம்
4. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
- பணம்
- பொய்
- தீமை
- கல்வி
விடை : கல்வி
5. தண்டோரா என்பதன் பொருள் தராத சொல்
- முரசுஅறிவித்தல்
- தெரிவித்தல்
- கூறுதல்
- எழுதுதல்
விடை : எழுதுதல்
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.
- ஆவல் – விருப்பம், ஆசை
- தபால் – அஞ்சல்
- தண்டோரா – முரசறைந்து செய்தி தெரிவித்தல்
- நெறிப்படுத்துதல் – வழிகாட்டுதல்
சரியான சொல்லால் நிரப்புக.
1. மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ____________ (களந்து/கலந்து) கொள்ள வேண்டும்.
விடை : கலந்து
2. கல்வி ___________ (கன்/கண்) போன்றது.
விடை : கண்
3. நான் மிதிவண்டி __________ (பளுதுபார்க்கும்/பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.
விடை : பழுதுபார்க்கும்
4. ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ___________ (அரிவுரை/அறிவுரை) கூறினார்.
விடை : அறிவுரை
குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். இதனை வலியுறுத்தும் விதமாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புநாள் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. |
எதனை, எங்கே செய்வோம்?
- கல்வி கற்கச் செல்வோம் – பள்ளிக்கூடம்
- பாதுகாப்பு தேடிச் செல்வோம் – காவல் நிலையம்
- மருத்துவம் பார்க்கச் செல்வோம் – மருத்துவமனை
- அஞ்சல்தலை வாங்கச் செல்வோம் – அஞ்சல் நிலையம்
- பயணம் செய்யச் செல்வோம் – பேருந்து நிலையம்
சொல் விளையாட்டு
மயில் தோகையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.
- சுற்றம்
- தோல்வி
- ஆற்றல்
- மாற்றம்
- தோற்றம்
- ஏர்
- மாசு
- வில்
- தோல்
- ஏற்றம்
உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்
![]() |
|
பாடம் 4: திருக்குறள் கதைகள்
ஆசிரியர் குறிப்பு
- திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
- இவர் இயற்றிய இந்நூல், எக்காலத்துக்கும் ஏற்ற அறவுரைக் கருத்துகளைக் கொண்டுள்ளது.
- இந்நூலில் அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகள் உள்ளன.
- 133 அதிகாரங்களும் அதிகாரத்திற்குப் பத்துக் குறளென 1330 குறட்பாக்களும் உள்ளன.
- ஒவ்வொரு குறட்பாவும் ஈரடியால் ஆகிய வெண்பாவாகும்.
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஞாலம் இச்சொல்லுடன் பொருந்தாத சொல்
- உலகம்
- வையகம்
- புவி
- மலை
விடை : மலை
2. கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது
- அறம்
- தீமை
- கொடை
- ஈகை
விடை : அறம்
3. என்பு இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்
- முகம்
- எலும்பு
- கை
- கால்
விடை : எலும்பு
4. நல்ல + செயல் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- நல்லசெயல்
- நல்செயல்
- நற்செயல்
- நல்லச்செயல்
விடை : நற்செயல்
5. இன்சொல் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- இனிமை + சொல்
- இன் + சொல்
- இன்மை + சொல்
- இனிமை + சொல்
விடை : இனிமை + சொல்
குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
- ஞாலம் – காலம்
- என்பி – அன்பி
- பணிவுடையன் – அணியல்ல
- மற்றை – மற்று
முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக
இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு ஆதல்
பிற மற்றுப் அணியல்ல
விடை :
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
தகவிலர் தக்கார் அவரவர் என்பது
படும் எச்சத்தாற் காணப்
விடை :
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
பாடி மகிழ்வோம்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது.
கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட
முட்ட கட்ட முட்ட
இலந்தப் பழத்திற்கு ஆசப்பட்ட கொழந்த
வாழப்பழம் தின்றது.
பாடம் 5: வாலு போயி கத்தி வந்தது டும்… டும்… டும்… டும்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. விறகெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- விறகு + எல்லாம்
- விறகு + கெல்லாம்
- விற + கெல்லாம்
- விறகு + எலாம்
விடை : விறகு + எல்லாம்
2. படம் + கதை இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- படம்கதை
- படக்கதை
- படகதை
- படகாதை
விடை : படக்கதை
3. – இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக.
- ஓனான்
- ஓநான்
- ஓணான்
- ஓணன்
விடை : ஓணான்
4. தோசை இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது?
- ஆசை
- மேசை
- பூசை
- இசை
விடை : இசை
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
1. ஊர்கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன் நான் யார்? விடை : தேர் |
2. இடிஇடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது அது என்ன? விடை : பட்டாசு |
3. நிழல் தருவேன், காய் தருவேன், பழம் தருவேன் நான் யார்? விடை : மரம் |
4. கலை என்ற சொல்லில் முதல் எழுத்து படம் என்ற சொல்லில் இடை எழுத்து மடல் என்ற சொல்லில் இறுதி எழுத்து நான் யார்? விடை : கடல் |
சொல் விளையாட்டு
ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.
பா த ம் – தங் க ம் – க த வு – தலை வ ர் – தகதவ
இதே போன்று ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை போன்ற சொற்களைத் தொடக்கமாக
வைத்துச் சொற்களை உருவாக்குக.
ஒட்ட க ம், கு ரு வி, சிங் க ம், க வி தை – கருகவி
உலக கதைசொல்லல் நாள் – மார்ச் 20 |
பாடம் 6: எழில் கொஞ்சும் அருவி
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.
- தங்கத்தை
- வெள்ளியை
- இரும்பை
- கற்பாறையை
விடை : வெள்ளியை
2. ஒகேனக்கல் என்ற சொல்லின் பொருள்
- பவளப்பாறை
- வழுக்குப்பாறை
- பனிப்பாறை
- புகைப்பாறை
விடை : புகைப்பாறை
3. வெண்புகை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- வெண் + புகை
- வெ + புகை
- வெண்மை + புகை
- வெம்மை + புக
விடை : வெண்மை + புகை
4. பாதை + அமைத்து இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- பாதைஅமைத்து
- பாதையமைத்து
- பாதம்அமைத்து
- பாதயமைத்து
விடை : பாதையமைத்து
5. தோற்றம் இச்சொல்லின் எதிர்ச் சொல்
- தொடக்கம்
- மறைவு
- முதல்
- ஆரம்பம்
விடை : மறைவு
சரியா? தவறா?
1. ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. | தவறு |
2. அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும் | சரி |
3. கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது | சரி |
அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக
- எழில் – அழகு
- களிப்பு – மகிழ்ச்சி
- நீராடலாம் – குளிக்கலாம்
- பரவசம் – மகிழ்ச்சி
பொருத்தமான சொல்லால் நிரப்புக.
1. கடற்கரையில் ________ (மனல்/மணல்) வீடு கட்டி விளையாடலாம்.
விடை : மணல்
2. மரத்தில் பழங்கள் ________ (குரைவாக/குறைவாக) உள்ளன.
விடை : குறைவாக
3. வலப்பக்க சுவரின் மேல் ________ (பல்லி/பள்ளி) இருக்கிறது.
விடை : பல்லி
4. ஆதிரைக்கு நல்ல ________ (வேலை/வேளை) கிடைத்துள்ளது.
விடை : வேலை
படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?
![]() | ![]() | தேன் + நீர் = தேநீர் |
![]() | ![]() | பனி + பாறை = பனிப்பாறை |
![]() | ![]() | பூ + மாலை = பூமாலை |
![]() | ![]() | இடி + ஆப்பம் = இடியாப்பம் |
பாடலிலிருந்து உணவுப் பொருள்களின் பெயர்களை எழுதுக
பருப்பு அடை பாரம்மா
பதமாய் எடுத்து உண்ணம்மா
இனிப்புப் பணியாரம் வேணுமா
இங்கு வந்து பாரம்மா
வெள்ளை நிற உப்புமா
வேண்டும் மட்டும் தின்னும்மா
கரக் முரக் முறுக்கையே
கடித்துத் தின்னு நொறுக்கியே
சுவை மிகுந்த கொழுக்கட்டை
சூடாய் இருக்கு தட்டிலே !
வெல்லம் தேங்காய் சேர்த்துமே
வெண்ணெய் பிட்டும் ஈர்க்குமே!
- பருப்பு அடை
- இனிப்பு பணியாரம்
- உப்புமா
- முறுக்கு
- கொழுக்கட்டை
- வெண்ணெய் பிட்டு
இன எழுத்துகள்
உயிரெழுத்துகள்
உயிர்க்குறில் எழுத்துகளுக்கு உயிர்நெடில் எழுத்துகள் இனமாக வரும்.
அ – ஆ | இ – ஈ |
உ – ஊ | எ – ஏ |
ஒ – ஓ | |
ஐ – இ | ஒள – உ |
மெய்யெழுத்துகள்
வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள்தாம் இனமாக வரும்.
க் – ங் | ச் – ஞ் |
ட் – ண் | த் – ந் |
ப் – ம் | ற் – ன |
ய், ர், ல், வ், ழ், ள் இவை ஆறு எழுத்துகளும் இடையினம். இவற்றிற்கு இன எழுத்துகள் இல்லை. ஓர் எழுத்திற்கு அருகில் அதே எழுத்து வந்தாலும் அவை இன எழுத்துகள் அல்ல
உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்
மங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்
விடுபட்ட இடங்களில் சரியான இனஎழுத்துகளை நிரப்பலாமா?
செம்பருத்தி, குன்று, சுண்டல், தொட்டிபாலம், இஞ்சி, ஆந்தை
பாடம் 7: நாயும், ஓநாயும்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. மகிழ்ச்சி இச்சொல் உணர்த்தும் பொருள்
- இன்பம்
- துன்பம்
- வருத்தம்
- அன்பு
விடை : இன்பம்
2. ஒன்றுமில்லை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- ஒன்று + இல்லை
- ஒன்றும் + இல்லை
- ஒன்றுமே + இல்லை
- ஒன்று + மில்லை
விடை : ஒன்றும் + இல்லை
3. அப்படி+ ஆனால் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- அப்படியானால்
- அப்படியனால்
- அப்படியினால்
- அப்படிஆனால்
விடை : அப்படியானால்
4. விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
- வெறுப்பு
- கருப்பு
- சிரிப்பு
- நடிப்பு
விடை : வெறுப்பு
அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக
- விதவிதமான – வகை வகையான
- சுதந்திரம் – விடுதலை
- வருடுதல் – தடவுதல்
- பிரமாதம் – பெருஞ்சிறப்பு
- சந்தேகம் – ஐயம்
சரியா? தவறா?
1. ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது. | சரி |
2. நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது. | தவறு |
3. ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது. | தவறு |
4. ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை. | தவறு |
5. ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்தது. | சரி |
சரியான சொல்லால் நிரப்புக
(கருப்புப்பட்டை, சுதந்திரமாக, அழகாக, ஓநாய், அன்பாக)
1. நீ எவ்வளவு ________ இருக்கிறாய்?
விடை : அழகாக
2. நாயின் கழுத்தில் ________ இருந்தது.
விடை : கருப்புப்பட்டை
3. வீட்டுக்காரர்கள் நாயை ________ வருடிக்கொடுப்பார்கள்
விடை : அன்பாக
4. வீட்டில் மாட்டிக்கொள்வதை விட ________ காட்டில் அலைவதே மேல்.
விடை : சுதந்திரமாக
5. என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று ________ கூறியது.
விடை : ஓநாய்
சொல்லக்கேட்டு எழுதுவோம்
1. நல்ல உணவு கிடைக்கும்
2. கழுத்தில் பட்டை எப்படி வந்தது?
3. நாய் மகிழ்ச்சியாய் ஓடிவந்தது.
4. ஆகா! என்ன சுகம் தெரியுமா!
சொற்களை இணைத்து எழுதுவோம்.
1. நல்ல எண்ணம், 2. நல்ல உணவு, 3. நல்ல புத்தகம்புத்தகம்
1. மெலிந்த சிறுவன், 2. மெலிந்த உடல், 3. மெலிந்த ஓநாய்
உன்னை அறிந்துகொள் |
நாம் பொருள் உணர்ந்து படிப்பதற்கு நிறுத்தக்குறிகள் உதவுகின்றன.
|
சொல் விளையாட்டு
![]() | ![]() |
கரும்பு, கரடி, கடல் | தலை, கலை, விலை, தங்கம் |
![]() | ![]() |
பட்டு, படு, பழம், பற, பறவை | தளம், குளம், மடம், குடம், தடம் |
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குக.
எ.கா. சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு
விடை : என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்
1. கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பையும்.
விடை : ஓநாய் நாயின் கொழு, கொழு அழகையும் உடம்பையும் புகழ்ந்தது.
2. பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும்.
விடை : நாய் வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை : நான் என்ன வேலை செய்ய வேண்டும் ?
1. ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை : ஆகா! என்ன சுகம் தெரியுமா?
2. ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது
விடை : ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?
3. என்ன கட்டிப் போடுகிறார்களா
விடை : என்ன, கட்டிப் போடுகிறார்களா!
4. நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்.
விடை : நம் விருப்பம் போல போக முடியாது. அது என்ன பிரமாதம்?
5. நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது
விடை : “நல்ல உணவு உனக்கும் கிடைக்கும்” என்று சொன்னது.
சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்க.
(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)
1. பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது
விடை : மகிழ்ச்சி
2. மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது
விடை : வியப்பு
3. கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது
விடை : சிரிப்பு
4. நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது
விடை : வருத்தம்
5. திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது
விடை : அச்சம்
பாடம் 8: நட்பே உயர்வு
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. இரை என்ற சொல்லின் பொருள்
- உணவு
- இருப்பிடம்
- மலை
- இறைவன்
விடை : உணவு
2. மகிழ்ச்சியுடன் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மகிழ்ச்சி + யுடன்
- மகிழ்ச்சி + உடன்
- மகிழ் + உடன்
- மகிழ்ச் + சியுடன்
விடை : மகிழ்ச்சி + உடன்
3. சொல்லி + கொண்டு இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- சொல்லிக்கொண்டு
- சொல்கொண்டு
- சொல்லக்கொண்டு
- சொல்லிகொண்டு
விடை : சொல்லிக்கொண்டு
4. முதுமை என்ற சொல்லின் எதிர்ச்சொல்
- தீமை
- சிறுமை
- பெருமை
- இளமை
விடை : இளமை
5. சூழ்ச்சி என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு
- மான்
- முயல்
- நரி
- சிங்கம்
விடை : நரி
வினாக்களுக்கு விடையளி
1. முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?
முயல் நரியுடன் நண்பனாகப் பழகியது
2. மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?
மானை விட்டுவிடுவதற்காக நரி முயலுக்கு ஆபத்து வந்ததாக கூறியது.
3. மான் எதனால் மாட்டிக்கொண்டது?
முயல் தூரத்தில் வருவதைப் பார்த்த நரி, முயலை மான் பார்த்துவிடக்கூடாதென்பதற்காக பேச்சு கொடுத்தவாறே வேகத்தை அதிகரித்தது.
4. மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்தன?
நரி தந்திரம் மிக்க விலங்கு அதனால் மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை தவிர்த்தன.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
1. உணவை எடுத்திடுவாள் உண்ணாமல் வைத்திடுவாள் உடல் மெலிந்த பெண் அவள் யார்?
விடை : அகப்பை
2. வெள்ளையாம் வெள்ளைக்குடம் விழுந்தால் சல்லிக்குடம் அது என்ன?
விடை : முட்டை
3. கொடிகொடியாம் பூங்கொடியாம் கிளிதின்னும் பழம் இதுவாம் அது என்ன?
விடை : கோவைபழம்
4. தட்டு தங்கத் தட்டு தகதகக்கும் வெள்ளித்தட்டு தலைக்குமேல் உலாவரும் அது என்ன?
விடை : நிலா
5. ஆயிரம் அறை கொண்ட மிகப்பெரிய மிட்டாய் கடை அது என்ன?
விடை : தேன்கூடு
முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி எழுதுக.
1. செல்லலாம் இரை தேடச் புல்வெளியில்
விடை : புல்வெளியில் இரை தேடச் செல்லலாம்
2. அழைத்துச் நண்பனை செல்கிறாய் எங்கு
விடை : நண்பனை எங்கு அழைத்துச் செல்கிறாய்
3. கட்டை முதுமையில் உயரம் இளமையில்
விடை : இளமையில் உயரம் முதுமையில் கட்டை
நெடிலைக் குறில் ஆக்குக
- கானல் – கனல்
- வாடை – வடை
- ஆடை – அடை
- தோடு – தொடு
- கோடு – கொடு
- பால் – பால்
மீண்டும் மீண்டும் சொல்லிப்பழகுவோம்
1. விண்ணுக்கும் மண்ணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்கும் டண்ணகரம்
2. உளி கொண்டு சிலையொன்று வடித்தான்.
உலகின் தலைசிறந்த கலையென்று மலைத்தான்.
3. குட்டை மரமும் நெட்டைமரமும் மொட்டைத்தலையைத் தடவிக்கொண்டன.
ஒரு சொல் பல பொருள் அறிக
1. கார்
நிறம் | அழகு |
நீர் | நெல் |
பருவம் | குளிர்ச்சி |
2. களம்
நிலம் | நிலம் | |
இருள் | கறுப்பு | |
உள்ளம் | போர்க்களம் | |
நெற்களம் |
அகர முதலி
- அடாத செயல் – தகாத செயல்
- அதிகம் – மிகுதி
- அமர்ந்த – உட்கார்ந்த
- ஆணவம் – செருக்கு
- ஆபரணங்கள் – அணிகலன்கள்
- ஆலோசனை – கருத்து
- ஆவல் – விருப்பம்
- ஆனந்தம் – மகிழ்ச்சி
- இலாபம் – வருமானம்
- என்பு – எலும்பு
- எழில் – அழகு
- ஏய்த்தல் – ஏமாற்றுதல்
- களிப்பு – மகிழ்ச்சி
- சத்தம் – ஒலி
- சந்தேகம் – ஐயம்
- சுகம் – நலம்
- சுதந்திரம் – விடுதலை
- செல்வந்தன் – பணக்காரன்
- செல்வாக்கு – சொல்லுக்கு மதிப்பு
- ஞாலம் – உலகம்
- தண்டோரா – முரசறைந்து செய்தி தெரிவித்தல்
- தந்திரம் – சூழ்ச்சி
- தபால் – அஞ்சல்
- நிபந்தனை – கட்டளை
- நீராடலாம் – குளிக்கலாம்
- நெறிப்படுத்துதல் – வழிகாட்டுதல்
- பரவசம் – மகிழ்ச்சி
- பிரதிமாதம் – பெருஞ்சிறப்பு
- புத்திசாலி – அறிவாளி
- வருடுதல் – தடவுதல்
- விதவிதமான – வகை வகையான
- வியாபாரி – வணிகர்
- விவசாயி – உழவர்
- விவாதம் – தருக்கம்