Tamil Nadu 3rd Standard Tamil Term-III Book Back Questions 2025 – 2026 | Samacheer Kalvi Books

3rd Standard Tamil Book 3rd Term Solution

If you are looking for the 3rd term solution of a 3rd class Tamil book, you have come to the right place. we have attached the 3rd std Tamil Book Back questions answers below.

We have already shared solutions for the Term 1 and Term 2 books as well.

Table of content

1. உள்ளங்கையில் ஓர் உலகம்

2. தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்

3. வீம்பால் வந்த விளைவு

4. மழை நீர்

5. காகமும் நாகமும்

6. நல்வழி

7. தமிழ் மொழியின் பெருமை

8. அறவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்

9. படவிளக்க அகராதி

10. அகர முதலி

3rd Std Samacheer Books – Download

பாடம் 1: உள்ளங்கையில் ஓர் உலகம்

சொல் பொருள்

  1. தரணி – உலகம்
  2. சோர்வு – களைப்பு
  3. ஏற்றம் – உயர்வு

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. ஏற்றம் என்ற சொல்லின் பொருள் 

  1. சோர்வு
  2. தாழ்வு
  3. உயர்வு
  4. இறக்கம்

விடை : உயர்வு

2. என்று + இல்லை இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது 

  1. என்றில்லை
  2. என்றும்இல்லை
  3. என்றுஇல்லை
  4. என்றல்லை

விடை : என்றில்லை

3. முன்னே என்ற சொல்லின் பொருள் 

  1. எதிரே
  2. பின்னே
  3. உயரே
  4. கீழே

விடை : பின்னே

4. கணினி ___________ வழியே அனைவரையும் இணைக்கிறது.

  1. தகவல் களஞ்சியம்
  2. செய்தி
  3. கடிதம்
  4. இணையம்

விடை : இணையம்

வினாக்களுக்கு விடையளிக்க

1. தகவல்களை எதன் வழியே எளிமையாகப் பெற முடியும்?

தகவல்களை கணினியின் வழியே எளிமையாகப் பெறமுடியும்

2. கணிணியின் பயன்கள் குறித்து இப்பாடலின் வழியே நீ அறிந்து கொண்டவற்றைக் கூறுக

  • கடிதப்போக்குவரத்து விரைந்து செயல்படுகிறது.
  • சிறந்த தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது.
  • உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகக் செயல்படுகிறது.
  • உலகையே உள்ளங்கையில் தரவல்லது.

3. ஓரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுவோமா?

  1. காட்டிடுவேன் – தந்திடுவேன்
  2. சொல்லிடுவேன் – செய்திடுவேன்
  3. எனக்கில்லை – என்றில்லை
  4. கையில் – நொடியில்

விசைப்பலகையிலுள்ள எழுத்துக்களைக் கொண்ட சொற்கைளைக் கண்டறிவோமா?

ம்
திணைணி
னில்டிரை
  1. திரை
  2. தகவல்
  3. கணினி
  4. தரணி
  5. கடிதம்
  6. திணை
  7. கவனி
  8. இணையம்

திறன்பேசியோடு தொடர்புடைய சொற்களை உருவாக்குக

  1. திரை
  2. புலம்
  3. அழகாய்
  4. இணையம்
  5. கல்
  6. புதுமை

பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக

3rd Standard Tamil - ullangaiyil oor ulagam -பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக

அலைபேசியை முதன் முதலில் கண்டறிந்தவர் மார்ட்டின் கூப்பர்.

மின்னல் வெட்டும் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அலைபேசி இடிதாங்கிபோல் செயல்பட்டு மின்னலை உங்கள் பக்கம் ஈர்த்துவிடும்

பாடம் 2: தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமாே?

1. மரக்கிளையை உலுக்கியது

  1. தேனி
  2. ஒட்டகச்சிவிங்கி
  3. தவளை
  4. சிட்டுக்குருவி

விடை : ஒட்டகச்சிவிங்கி

2. மரத்தூள் என்ற சொல்லைப் பிர்த்து எழுதக் கிடைப்பது

  1. மரம் + தூள்
  2. மர + தூள்
  3. மர்த்து + தூள்
  4. மரத் + தூள்

விடை : மரம் + தூள்

3. திட்டம் + படி இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. திட்டபடி
  2. திட்டப்படி
  3. திட்டம்படி
  4. திட்டுபடி

விடை : திட்டப்படி

4. மிதிபட்டு இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மிதி + பட்டு
  2. மிதிப் + பட்டு
  3. மீதி + பட்டு
  4. மீதிப் + பட்டு

விடை : மிதி + பட்டு

5. இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்

  1. மகிழ்ந்து
  2. பிரிந்து
  3. சேர்ந்து
  4. சிறந்து

விடை : பிரிந்து

வினாக்களுக்கு விடையளிக்க

1. தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஏன் கத்தின?

தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையை உலுக்கியதால் பயந்து கத்தின.

2. தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார் யார்?

தவளை, தேனீ

3. தேனீ எதன் காதைக் கடித்தது?

தேனீ ஒட்டகச்சிவிங்கியின் காதைக் கடித்தது

4. இக்கதையின் மூலம் நீ அறியும் நீதிக்கருத்து யாது?

நல்லதை நினைப்போம்! நன்மை பெறுவோம்!

அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக

  1. புத்திசாலி – அறிவாளி
  2. அடாத செயல் – தகாத செயல்

குருவிக்கேற்ற கூட்டைத் தேர்ந்தெடுப்போமோ?

1. வந்தனர்மாணவர்கள்
2. நீந்தியதுமீன்
3. மேய்ந்ததுஆடு
4. பறந்தனபறவைகள்

சரியான சொல்லை நிரப்பிப் படித்து காட்டுக

1. தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ______ என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன. (கீச்… கீச்… / கூக்கு… கூக்கு)

விடை : கீச்… கீச்…

2. மரத்தின் அடியில் ______ ஒதுங்கியது (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)

விடை : ஒட்டகச்சிவிங்கி

3. தூக்கணாங்குருவிக்கு முதலில் ______ உதவிக்கு வந்தது ( மரங்கொத்தி / மீன்கொத்தி)

விடை : மரங்கொத்தி

4. ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த __________ தொப்பென்று விழந்தது. (ஆற்றில் / குளத்தில்)

விடை : குளத்தில்

V. வினை மரபினை அறிந்து கொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக

( மாத்திரை விழுங்குதல், உணவு உண்ணுதல், பழம் தின்னுதல், பால் பருகுதல், தண்ணீர் குடித்தல்)

மாத்திரை விழுங்குதல்

தண்ணீர் குடித்தல்

பால் பருகுதல்

உணவு உண்ணுதல்

பழம் தின்னுதல்

VI. ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!

1. வெயில் இச்சொல்லில் வெ வை மாற்றிவை நிரப்பு
ஆடும் பறவை வரும் ஆழகாய் இருக்கும்

விடை : மயில்

2. மரம் இச்சொல்லில் வை மாற்றி வை நிரப்பு
அறுக்க உதவும் கருவியை பெறுவாய்

விடை : அரம்

3. கூச்சம் இச்சொல்லில் கூ வை மாற்றி  வை நிரப்பு
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய்

விடை : மச்சம்

4. குருவி இச்சொல்லில் கு வை மாற்றி வை நிரப்பு
குளிந்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய் 

விடை : அருவி

5. பணம் இச்சொல்லில் வை மாற்றி  வை நிரப்பு
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய் –

விடை : மணம்

தலை கீழாகக் கூடு கட்டி வாழும் பறவை தூக்கணாங்குருவியாகும்

பாடம் 3: வீம்பால் வந்த விளைவு

வினாக்களுக்கு விடையளிக்க

1. வணிகன் எதில் சென்று வாணிகம் செய்தான்?

வணிகன் குதிரையில் சென்று வாணிகம் செய்தான்.

2. வணிகன் வீரனிடம் என்ன கூறினான்?

வணிகன், வீரனிடம், “தன் குதிரை முரட்டுத்தனமானது, அதனால் சற்று தள்ளிக் கட்டு” என்று கூறினான்.

3. வணிகனின் குதிரை வீரனின் குதிரையை என்ன செய்தது?

வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்தது.

4. வீம்பால் வந்த விளைவு இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?

வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.

படத்திற்கு பொருத்தமான படத்தை பொருத்துக

3rd Standard Tamil - Veembal Vandha Vilaiv - படத்திற்கு பொருத்தமான படத்தை பொருத்துக

1. பெரிய தேரைத்தாங்கும், ஒரு சிறிய பையன்

விடை : அச்சாணி

2. நான் இல்லை என்றால் நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்?

விடை : கண்

3. எதிரிகளை வீழ்த்துவான் நாட்டைக் காப்பான் – அவன் யார்?

விடை : போர்வீரன்

4. பந்தயத்தில் வேகமாய் ஒடுவான். பரிசுகள் பல வென்றிடுவான் – அவன் யார்?

விடை : குதிரை

கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.

வணிகன்குதிரைகால்
ஓய்வுவீரன்குணம்

விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.

1. வணிகன் _______ அயர்ந்துவிட்டான்

விடை : கண்

2. ______ படைத்த உனக்கு நஷ்டஈடு தரத் தேவையில்லை

விடை : வீம்புக் குணம்

3. வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ______ உதைத்துத் தள்ளிவிட்டது.

விடை : எட்டி

4. வணிகன், வாணிகம் செய்துவிட்ட ________ எடுக்க நினைத்தான்.

விடை : ஓய்வு

5. வீரனுடைய குதிரையின் ______ உடைந்து விட்டது.

விடை : கால்

கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக

துளசிபிரண்டை
வல்லாரைதூதுவளை
வெற்றிலைகற்றாழை
மணத்தக்காளி

எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பைத விடுபட்ட இடத்தில் நிரப்புக

மரம்கொடிசெடி
தென்னை மரம்
வாழை மரம்
பலா மரம்
வெற்றிலை
பூசணி
அவரை
கத்தரி
தக்காளி
வெண்டை

உயர்திணையும் அஃறிணையும்

திணை என்பது ஒழுக்கம். அதன் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை என இரண்டு வகைப்படும்.

வாளிகன்றுமீன்
வண்டுதேனீசெல்வி
சிறுமியர்நாற்காலிமேசை
முருகன்பசுகழுதை
ஒட்டகம்எறும்புகுழந்தை
மின்விசிறிசிறுவர்விலங்கு
குருவிமரங்கள்பறவை

உயர்திணை

முருகன், செல்வி, குழந்தை, சிறுமியர், சிறுவர்

அஃறிணை

வாளி, கன்று, மீன், பசு, கழுதை, குருவி, வண்டு, தேனீ, ஒட்டகம், எறும்பு, மரங்கள், நாற்காலி, மேசை, மின்விசிறி, விலங்கு, பறவை

பாடம் 4: மழை நீர்

ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிருந்து எழுதுக

  1. செல்லுதே – சேமித்தே – வரும்போதே
  2. ஓடியே, இல்லையே, தேவையே
  3. போலவே, செழிக்கவே, ஓங்கவே,

முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக

  1. பொன்னும் – பொழியும்
  2. ழைநீர் –ண்ணில்
  3. ழைப்பில் – யர்வாய்
  4. பொன்னும் – பொருளும்
  5. விண்ணின் – வியப்பு
  6. லமும் – ல்ல
  7. ழவும் – ற்ற
  8. ளமும் – ணங்கி

இரண்டாவது எழுத்து ஒன்றி வரும் சொற்கள் எழுதுக

  1. னிதர் – இனிவரும்
  2. விண்ணின் – மண்ணில்
  3. ர்வாய் – விப்பு
  4. ண்ண – வேண்டுமே
  5. கின் – நமும்
  6. னிதர் – வானின்

அகரமுதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக

  1. பொழியும் – பெய்யும்
  2. செம்மை – சிறப்பு
  3. ஓங்குதல் – உயர்தல்
  4. இல்லம் – வீடு

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தேக்குதல் என்ற சொல்லின் எதிர்ச்சொல்

  1. நீக்குதல்
  2. தெளிதல்
  3. சேமித்தல்
  4. பாதுகாத்தல்

விடை : நீக்குதல்

2. வானின் அமுதம் இச்சொல் குறிப்பது

  1. அமிழ்தம்
  2. அமிர்தம்
  3. சோறு
  4. மழைநீர்

விடை : மழைநீர்

3. மழையாகுமே இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மழை + யாகுமே
  2. மழையாய் + யாகுமே
  3. மழை + ஆகுமே
  4. மழையாய் + ஆகுமே

விடை : மழை + ஆகுமே

4. நினைத்தல் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

  1. கூறுதல்
  2. எண்ணுதல்
  3. மறத்தல்
  4. நனைத்தல்

விடை : மறத்தல்

பொன்னும் பொருளும் இது போன்ற உம் சேர்ந்துவரும் சொற்களைப் பாடலிருந்து எடுத்து எழுதுக

  1. வீடும் – நாடும்
  2. உழவும் – தாெழிலும்
  3. வளமும் – நலமும்
  4. ஓடும் – முழுதும்

பொருத்துவோமா?

1. நாடும் வீடும்வேண்டுமே
2. வளமும் நலமும்சேமிப்போம்
3. இல்லத்தின் நீரைமழையாகுமே
4. உற்ற துணைசெழிக்கவே
5. உயிராய் எண்ணநிறைந்திட
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படித்து பார்ப்போம். விடுபட்ட இடத்தை நிரப்பி மகிழ்வோம்.

மாலா போலாமா?குகு
யானை பூனையா?பாப்பா
மேளதாளமேதாத்தா
மாறுமாகாக்கா

பாடம் 5: காகமும் நாகமும்

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. காகம் ________வாழும்

  1. கூட்டில்
  2. வீட்டில்
  3. புற்றில்
  4. மண்ணில்

விடை : கூட்டில்

2. நண்பர்கள் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

  1. அன்பானவர்கள்
  2. உறவினர்கள்
  3. பகைவர்கள்
  4. நெருங்கியவர்கள்

விடை : பகைவர்கள்

3. முத்துமாலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. முத்து + மாலை
  2. முத்தும் + மாலை
  3. முத்தும் + ஆலை

விடை : முத்து + மாலை

4. மரம் + பொந்து இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. மரம்பொந்து
  2. மரப்பொந்து
  3. மரப்பந்து
  4. மரபொந்து

விடை : மரப்பொந்து

வினாக்களுக்கு விடையளிக்க

1. காகத்தின் முட்டைகளைப் பாம்பு என்ன செய்தது?

காகத்தின் முட்டைகளைப் உடைத்தது.

2. பாம்பை அழிப்பதற்காகக் காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது?

பாம்பை அழிப்பதற்காகக் காகம் நரியிடம் ஆலோசனை கேட்டது.

3. காகமும் நாகமும் கதை உணர்த்தும் நீதி என்ன?

பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்தல்

புதிருக்கு பாெருத்தமான படத்தை பொருத்துக

1. கரும்பே எனக்கு உணவாகும் கருமை எனது நிறமாகும் – நான் யார்?

விடை : யானை

Tamilnadu 3rd Standard Text Books Solution 2020
2. நான் ஒரு வீட்டு விலங்கு. இலை, தழைகளை உண்பேன். நான் யார்?

விடை : ஆடு

3. மரத்திற்கு மரம் தாவுவேன். வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்?

விடை : குரங்கு

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி தொடர் உருவாக்குக

1. ஒன்று கொக்கு இருந்தது குளக்கரையில்

விடை : கொக்கு ஒன்று குளக்கரையில் இருந்தது.

2. எண்ணியது சாப்பிட மீன்களைச்

விடை : மீன்களைச் சாப்பிட எண்ணியது

3. அனைத்தும் சென்றன விளையாடிச்

விடை : அனைத்தும் விளையாடிச் சென்றன.

எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு?

உயிரினம்பண்புகள்
ஒற்றுமை
சுறுசுறுப்பு
கூட்டமாக வாழும்
நன்றியுணர்வு
விடை: 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ
  1. நாய் – நன்றியுணர்வு
  2. யானை – கூட்டமாக வாழும்
  3. எறும்பு – சுறுசுறுப்பு
  4. காகம் – ஒற்றுமை

ஒவ்வோர் எழுத்தாகச் சேர்ப்போமா?

  1. தா – தாய் – தாய்மை
  2. வா – வாய்வாய்மை
  3. தூ – தூயதூயது
  4. கா – காடுகாடும்

பெயர் எது? செயல் எது?

பெயர்செயல்
குதிரை வேகமாக ஓடியதுகுதிரைஓடியது
ஆசிரியர் பாடம் நடத்தினார்ஆசிரியர்நடத்தினார்
குழந்தை சிரித்ததுகுழந்தைசிரித்தது

பாடம் 6: நல்வழி

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. உலகூட்டும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. உல + கூட்டும்
  2. உலகு + கூட்டும்
  3. உலகு + ஊட்டும்
  4. உலகூட்டு + உம்

விடை : உலகு + ஊட்டும்

2. அந்நாளும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அந் + நாளும்
  2. அ + நாளும்
  3. அந்நா + ளும்
  4. அந்த + நாளும்

விடை : அ + நாளும்

3. இசைந்து இச்சொல்லின் பொருள்

  1. மறுத்து
  2. பாடி
  3. ஒப்புக்கொண்டு
  4. உதவி

விடை : ஒப்புக்கொண்டு

இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்கைளப் பாடலிருந்து எழுதுக

  1. ற்று – ஊற்று – ஏற்றவர்க்கு
  2. பெருக்கற்று – பெருக்கால்
  3. ல்ல – இல்லை – நல்கூர்ந்தார்

வினாக்களுக்கு விடையளிக்க

1. நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?

ஒளவையார்

2. ஊற்று நீரைக் கொடுப்பது எது?

ஆற்று மண்

3. நல்ல குடிப்பிறந்தாரின் இயல்பு எத்தகையது?

நல்ல குடிப்பிறப்பில் தோன்றியவர்கள் வறுமை நிலையில் வாடினாலும், தம்மிடம் வந்து பொருள் தருக எனக் கேட்பவர்க்கு இல்லை எனக் கூறாது, தம்மால் முடிந்தவரை கொடுத்து உதவுவார்கள்.

பொருத்துக

1. நல்லமனம்
2. ஆற்றுகுணம்
3. மணல்நீர்
4. உதவும்வீடு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – இ, 4 – ஆ

இரண்டாம் எழுத்தை மாற்றிப் புதிய சொல் உருவாக்கலாமா?

  1. ம் – பம். பம், பம்
  2. ம் – நம், நம், நம்
  3. வு – உவு, உவு, உவு
  4. த்து – பந்து, பழுது
  5. குயில் – குல், குணால், குல்

எதிர்ச்சொல் எழுதுவோம்

1. பனிக்கட்டி ______ இருக்கும். நெருப்பு ______ இருக்கும்.

விடை : குளிர்ச்சியாய் / வெப்பமாய்

2. பூனை மேசையின் ______ இருந்தது. எலி மேசையின் ______ இருந்தது

விடை : மேல் / கீழ்

3. தங்கை ______ சென்றாள். அண்ணன் ______ வந்தான்

விடை : வெளியே / உள்ளே

4. சிறுவன் பேருந்தில் ______ சிறுமி பேருந்திலிருந்து ______

விடை : ஏறினான் / இறங்கினாள்

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்போமா?

  1. ஆற்றின் ஓரம் கரை. ஆடையின் இருப்பது கறை (கரை / கறை)
  2. காட்டில் வாழ்வது புலி. கடையில் விற்பது புளி (புலி / புளி)
  3. மனிதர் செய்வது அறம். மரத்தை அறுப்பது அரம் (அறம் / அரம்)
  4. மீனைப் பிடிப்பது வலை. கையில் அணிவது வளை (வளை / வலை)
  5. பொழுதை குறிப்பது வேளை. பொறுப்பாய்ச் செய்வது வேலை (வேலை / வேளை)
  6. ஒழுக்கத்தை குறிப்பது திணை. உணவு பயிரைக் குறிப்பது தினை (திணை / தினை)
  7. உயர்ந்து நிற்பது மலை. உனக்குப் பிடிக்கும் மழை (மலை / மழை)
  8. வீரத்தைக் குறிப்பது மறம். விறகைத் தருவது மரம் (மரம் / மறம்)
  9. விடிந்த பின் வருவது காலை. வீரத்தால் அடங்குவது காளை (காளை / காலை)
  10. சான்றோர் வெறுப்பது கள். சாலையில் கிடப்பது கல் (கல் / கள்)

VII. வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துக்களைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுக.

ள்ளம்ரும்புபார்த்திபன்ஆர்த்தி
விடை : பருத்தி
ருந்துட்டம்கசடு
விடை : பட்டு 
ம்பும்பரம்அப்ம்தக்காளி
விடை : கம்பளி

அறிந்து கொள்வோம்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு

– திருக்குறள்

ஐயம் இட்டு உண்

– ஆத்திச்சூடி

பாடம் 7: தமிழ் மொழியின் பெருமை

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தமிழுக்கு அழுது என்ற பேர் என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. கண்ணதாசன்
  3. கவிமணி
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

2. செம்மை + மொழி இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. செம்மொழி
  2. செம்மொலி
  3. செம்மொளி
  4. செமொழி

விடை : செம்மொழி

3. கீழடி அகழாய்வு நடந்த மாவட்டம்

  1. புதுக்கோட்டை
  2. தருமபுரி
  3. சிவகங்கை
  4. திருச்சி

விடை : சிவகங்கை

4. ஆதித்தமிழர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஆதி + தமிழர்
  2. ஆதி + தமிளர்
  3. அதி + தமிழர்
  4. ஆதீ + தமிழர்

விடை : ஆதி + தமிழர்

5. பொலிவு இச்சொல்லுக்குரிய பொருள்

  1. மெலிவு
  2. அழகு
  3. துணிவு
  4. சிறப்பு

விடை : அழகு

சரியா? தவறா?

1. இயல், இசை, நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின

விடை : சரி

2. தமிழ் மொழி ஆதித்தமிழர் மொழி இல்லை

விடை : தவறு

3. வீரம் தமிழரின் பண்புகளுள் ஒன்று

விடை : சரி

4. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் தொடர் ஆத்திசூடியில் உள்ளது

விடை : தவறு

5. சிவகங்கையிலுள்ள கீழடியில் அகழாய்வு நடைெபறவில்லை

விடை : தவறு

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக

  1. தொன்மை – பழைமை
  2. அகழாய்வு – நிலத்தை தோண்டி ஆராய்தல்
  3. ஆபரணம் – அணிகலன்
  4. கேளிர் – உறவினர்
  5. பொலிவு – அழகு

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லை முழுமையடைச் செய்க

1. இ _____ = கை / சை / நை

விடை : இசை

2. நா _____ கம் = ப / ள / ட

விடை : நாடகம்

3. பா _____ = ணை / றை / நை

விடை : பாறை

4. _____ ழடி = நீ / சீ / கீ

விடை : கீழடி

வினாக்களுக்கு விடையளிக்க

1. தமிழ்மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக

  • உலக மொழிகளுள் மிகவும் தொன்மையான மொழி.
  • இயல், இசை, நாடகமென முத்தமிழாய் விளங்கி மனித வாழ்விற்கு இலக்கணம் கண்ட மொழி.

2. கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?

  • பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள்,  அணிகலன்கள்
  • நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள்

3. தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

  • யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலை கணியன் பூங்குன்றனார் எழுதினார்.
  • இத்தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

4. தமிழ்மொழி செம்மொழி என்று ஏன் அழைக்கப்படுகிறது?

தமிழ்மொழி பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ளது. இதனால் தமிழ்மொழி செம்மொழி அழைக்கப்படுகிறது.

5. தமிழ்மொழி பற்றி நீவிர் அறிந்த கருத்தை எழுதுக.

நம் தாய்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நாளும் பொலிவுடன் வளர்தமிழாய் தன் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தி வருகிறது.

சரியான சொல்லைச் தெரிவு செய்து சொற்றொடர் உருவாக்குக

1. இயல் என்பதுஓவியம்

எழுத்து

பேச்சு

நடை
விடை : இயல் என்பது எழுத்து நடை
2. பிற மொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால் தமிழ் மொழிதென்மொழி

செல்வமொழி

செம்மொழி

ஆகும்
விடை : பிற மொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால் தமிழ் மொழி செம்மொழி ஆகும்
3. பாறை ஓவியங்களில் தமிழர்களின்பொழுதுபோக்கு

நடிப்பு

வீரம் சார்ந்த

விளையாட்டு பற்றிய செய்திகள் உள்ளன.
விடை : பாறை ஓவியங்களில் தமிழர்களின் வீரம் சார்ந்த விளையாட்டு பற்றிய செய்திகள் உள்ளன.
4. நடுவண் அரசு2006

2001

2004

ஆம் ஆண்டு தமிழைச் “செம்மொழி” என அறிவித்தது.
விடை : நடுவண் அரசு 2004 ஆம் ஆண்டு தமிழைச் “செம்மொழி” என அறிவித்தது.
லிங்குவா என்பது இலத்தின் மொழிச்சொல். இச்சொல் மூலம் லாங்கவேஜ் என்ற சொல் தோன்றியது. இதனைத் தமிழ் நாம் “மொழி” என அழைக்கிறோம்.

8. அறவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. விமானம் பறப்பது பற்றிய செய்தியை __________ வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்

  1. கணினி
  2. தொலைக்காட்சி
  3. வானொலி
  4. அலைபேசி

விடை : தொலைக்காட்சி

2. ஆர்வம் இச்சொல்லின் பொருள்

  1. வெறுப்பு
  2. மறுப்பு
  3. மகிழ்ச்சி
  4. விருப்பம்

விடை : விருப்பம்

3. உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்

  1. குட்டை
  2. நீளம்
  3. நெட்டை
  4. நீண்ட

விடை : குட்டை

4. தொலைக்காட்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. தொலை + காட்சி
  2. தொல்லை + காட்சி
  3. தொலைக் + காட்சி
  4. தொல் + காட்சி

விடை : தொலை + காட்சி

5. குறுமை + படம் இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. குறுபடம்
  2. குறுமைபடம்
  3. குறும்படம்
  4. குறுகியபடம்

விடை : குறும்படம்

வினாக்களுக்கு விடையளிக்க

1. பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?

பூங்குழலியும், இளவரசியும் வானத்தில் விமானத்தைக் கண்டனர்.

2. வானில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?

வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்.

3. இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாக கூறினாள்?

தொலைக்காட்சியில் பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை இளவரசி பார்த்ததாக கூறினாள்

பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புவோம்

  1. காகம் – கரையும்
  2. மயில் – அகவும்
  3. கிளி – பேசும்
  4. ஆந்தை – அலறும்
  5. சேவல் – கூவும்

பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்

(அவர்கள், அவன், அவள், அவை, அது)

ஒளிர்மதி தோட்டத்தில பூ பறிநத்துக்கொண்டு இருந்தாள். அவள் கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். அவன் கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. அவை பார்ப்தற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். அது சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, அவர்கள் மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.

வினாக்களுக்கு விடையளிக்க

1. உடல் நலம் குன்றிய நிலையில் எது இருந்தது?

விடை : தவளை

2. குட்டித்தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?

விடை : பாம்புகள்

3. குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?

விடை : பருந்து. கீரியார்

4. குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக்குறிக்கும்?

  1. பணிவு
  2. காலந் தவிர்க்காமை
  3. நேர்மை

விடை : காலந் தவிர்க்காமை

அறிந்து கொள்வோம்

  • தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் – ஜான் லெகி
    பெயர்டு
  • விமானத்தை கண்டறிந்தவர்கள் – ஆல்பர்ட் ரைட், வில்பர்ட் ரைட்
  • வானொலியைக் கண்டறிந்தவர் – மார்க்கோனி

பட விளக்க அகரமுதலி

பனிக்கரடி

  • இது உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும்.
  • இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாட வல்லது.
  • இதனைத் துருவக்கரடி எனவும் கூறுவர்.

பால்

  • சத்துமிக்க ஓர் உணவு.
  • இதில் கால்சியம், பொட்டாசியம், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.
  • உலகளவில் மிகுதியாகப் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.

பிண்ணாக்கு

  • தேங்காய், எள், கடலை போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை.
  • இது விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.

பீர்க்கங்காய்

  • நார்ச்சத்துமிக்க காய்களுள் ஒன்று.
  • இதன் தோல், நோயைக் குணப்படுத்தும்.

புறா

  • முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவைகளுள் ஒன்று.
  • இப்பறவைகள் குச்சிகள், குப்பைகள் கொண்டு கூடு கட்டுகின்றன.
  • இவை, தானிய வகைகளை இரையாக உட்கொள்கின்றன.

பூண்டு

  • மருத்துவப் பயன்மிக்க ஓர் உணவுப் பொருள்.
  • இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கக் கூடியது

பெங்குயின்

  • குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும்.
  • இது, பறவை இனத்தைச் சார்ந்து இருந்தாலும், பறக்க முடியாது.
  • மனிதர் நடப்பதுபோல இதன் நடை அமைந்திருக்கும்.
  • நீரில் நன்றாக நீந்திச் செல்லும்.

பேரிச்சம்பழம்

  • இது, பனைவகையைச் சார்ந்தது.
  • இது மருத்துவக் குணம் உடையது.
  • இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையை நீக்கும்.

பை

  • இது பொருள்களை எடுத்துச் செல்ல உதவுகிறது.
  • துணி முதலான பொருள்களைக்கொண்டு உருவாக்கப்படுகின்றது.
  • பல வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது.

பொங்கல் விழா

  • இவ்விழா, தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
  • உணவுப் பொருள்களை விளைவிக்க உதவுவது இயற்கை.
  • அதற்கு நன்றி செலுத்தும் வகையில் இதனைக் கொண்டாடுகின்றனர்.

போர்வாள்

பண்டைக் காலத்தில், மன்னர்கள் பயன்படுத்திய படைக்கருவிகளுள் ஒன்று. போரிடும் காலங்களில், வீரர்கள் இக்கருவியைப் பயன்படுத்துவர்.

பௌவம்

  • கடலைக் குறிக்கும் ஒரு சொல், பௌவம்.
  • பூமியின் பெரும்பகுதி கடலாலேயே சூழப்பட்டுள்ளது.
  • கடல் நீர் உப்புக் கரிக்கும். கடல் நமக்கு மீன், சிப்பி, நண்டு, முத்து, பவளம் முதலான வளங்களைத் தருகிறது.

அகரமுதலி

  • அகழாய்வு – நிலத்தைத் தோண்டி ஆராய்தல்
  • அசடு – பேதைமை
  • அடாத செயல் – தகாத செயல்
  • அடையாளம் – இனங்காணல்
  • அவசரம் – விரைவு
  • ஆதி – முதல்
  • ஆபரணம் – அணிகலன்
  • ஆர்வம் – விருப்பம்
  • இசைந்து – ஏற்றுக்கொண்டு
  • இல்லம் – வீடு
  • ஏராளமான – நிறைய
  • ஓங்குதல் – உயர்தல்
  • குற்றம் – மாசு/ தவறு
  • கேளாமல் – கேட்காமல்
  • கேளிர் – உறவினர்
  • கோபம் – சினம்
  • செம்மை – சிறப்பு
  • தகவல் – செய்தி
  • தொன்மை – பழைமை
  • நஷ்டம் – வருமானம் இழப்பு
  • நல்கூர்ந்தார் – வறுமையுற்றவர்
  • பதில் – விடை
  • பயம் – அச்சம்
  • பாதிப்பு – விளைவு
  • புத்திசாலி – அறிவாளி
  • பொலிவு – அழகு
  • பொழியும் – பெய்யும்
  • மௌனம் – அமைதி

Related Links

Leave a Comment