4th Standard Tamil Book 1st Term Solution
On this page, we have listed 4th Standard Tamil Book 1st Term Book Back Questions with Answers. We have given 4th Std Tamil Book answer by lesson wise.
Tamil is a very important subject for those who studied in Tamil Nadu. Hence, here we provide easy-to-access 4th class Tamil textbook solutions, organized in a chapter-wise, question-wise manner so that they can easily find out what they’re looking for.

Solutions for Class 4 Tamil 2022 – 2023
Lesson-1: அன்னைத் தமிழே!
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “அன்னை + தமிழே” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- அன்னந்தமிழே
- அன்னைத்தமிழே
- அன்னத்தமிழே
- அன்னைதமிழே
விடை : ஆ) அன்னைத்தமிழே
2. “பிறப்பெடுத்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- பிறப் + பெடுத்தேன்
- பிறப்பு + எடுத்தேன்
- பிறப் + எடுத்தேன்
- பிறப்ப + எடுத்தேன்
விடை : ஆ) பிறப்பு + எடுத்தேன்
3. “மறந்துன்னை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- மறந்து + துன்னை
- மறந் + துன்னை
- மறந்து + உன்னை
- மறந் + உன்னை
விடை : இ) மறந்து + உன்னை
4. “சிறப்படைந்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- சிறப்பு + அடைந்தேன்
- சிறப் + அடைந்தேன்
- சிற + படைந்தேன்
- சிறப்ப + அடைந்தேன்
விடை : அ) சிறப்பு + அடைந்தேன்
5. “என்னில்” என்ற சொல்லின் பொருள் ____________________
- உனக்குள்
- நமக்குள்
- உலகுக்குள்
- எனக்குள்
விடை : ஈ) எனக்குள்
2. இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.
- என்னை – என்னில்
- உன்னை – உலகில்
- சொல்லில் – சொல்லித் – சொல்ல
- வளர்ப்பவளே – வளர்பவளே
3. இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
- வளர்ப்பவளே – வளர்பவளே
- கலந்தவளே – தந்தவளே
- அன்னை – என்னை – உன்னை
4. சொல் உருவாக்கலாமா?
1. குழந்தை | 2. அன்னை |
3. கவியசர் | 4. தமிழ் மொழி |
4. அரசர் | 6. தந்தை |
Lesson-2: பனைமரச் சிறப்பு
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “வல்லமை” என்ற சொல்லின் பொருள் ____________________
- வலிமை
- எளிமை
- இனிமை
- புதுமை
விடை : அ) வலிமை
2. “உயர” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________
- மேலே
- நிறைய
- தாழ
- அதிகம்
விடை : இ) தாழ
3. “விழுந்து” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________
- நடந்து
- பறந்து
- எழுந்து
- நின்று
விடை : இ) எழுந்து
4. “கரையோரம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ____________________
- கரை + ஓரம்
- கரை + யோரம்
- கரைய + ஓரம்
- கர + ஓரம்
விடை : அ) கரை + ஓரம்
5. “அங்கெல்லாம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _________________
- அங் + கெல்லாம்
- அங்கு + எல்லாம்
- அங்கு + கெல்லாம்
- அங்கெ + ல்லாம்
விடை : ஆ) அங்கு + எல்லாம்
கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
- சாலையோரம் = சாலை + ஓரம்
- குருத்தோலை = குருத்து + ஓலை
உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மரத்தாலான பொருள்களைப் பட்டியலிடுக
கதவு | நாற்காலி |
முக்காலி | மேசை |
மரக்கரண்டி | மரக்கட்டில் |
ஊஞ்சல் | மரப்பாவை |
மண்வெட்டி | அரிவாள்மனை |
களைகொத்தி | பம்பரம் |
சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக
1. நிலவு – மதி, ஆதவன், திங்கள், கதிரவன், சந்திரன், பரிதி.
விடை : மதி, திங்கள், சந்திரன்
2. அம்மா – சேய், அன்னை, குழந்தை, தாய், மழலை, மாதா.
விடை : அன்னை, தாய், மாதா
3. மகுடம் – அரசன், மணிமுடி, தலை, கிரீடம், அணிகலன், அரசி.
விடை : மணிமுடி, கிரீடம், அணிகலன்
4. திரள் – கூட்டம், கடை, வீதி, நெருக்கம், மக்கள், கும்பல், நெரிசல்
விடை : கூட்டம், நெருக்கம், கும்பல்
இலக்கணம் – பால்
கீழ்க்காணும் சொற்களை வகைப்படுத்துக
அவள், சென்றனர், படித்தான், வந்தது, பறந்தன, ஓடினர், எழுதினான், விளையாடினர், குயவன், நாட்டிய மங்கை, மேய்ந்தன, வகுப்பறை, கற்கள், ஆசிரியர், மாணவர்கள், வீடு, பெற்றோர், தங்கை, அண்ணன், மரங்கள், செடி, மலர், பூக்கள்
ஆண்பால் | பெண்பால் | பலர்பால் |
படித்தான் | அவள் | சென்றனர் |
எழுதினான் | நாட்டிய மங்கை | ஓடினர் |
குயவன் | தங்கை | விளையாடினர் |
ஆசிரியர் | பெற்றோர் | |
அண்ணன் |
ஒன்றன்பால் | பலவின்பால் |
வந்தது | பறந்தன |
வகுப்பறை | மேய்ந்தன |
வீடு | கற்கள் |
செடி | மரங்கள் |
மலர் | பூக்கள் |
பொருத்துக
1. அவன் | ஆடினாள் |
2. அவள் | ஓடியது |
3. அவர்கள் | வரைந்தான் |
4. அது | பாடினார்கள் |
5. அவை | பறந்தன |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – உ |
Lesson-3: ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்
குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடி! மணிமகுடம் சூட்டிக்கொள்
1. மணக்கும் எழுத்து.
விடை : பூ
2. அரசரும், அமைச்சர்களும் கூடும் இடம்.
விடை : அரசவை
3. நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம்.
விடை : இரவு
4. நவரசங்களில் ஆச்சரியத்தைக் குறிக்கும்.
விடை : வியப்பு
5. சிக்கலைத் தீர்க்க உதவும் குணம்.
விடை : சாந்தம்
சொல்லின் இடையில் ஓர் எழுத்தைச் சேர்த்துப் புதிய செல்லை உருவாக்குக.
(எ. கா) கதை – கவிதை
1. படு – ………………………………….
விடை : பட்டு
2. குவி – ………………………………….
விடை : குழவி
3. பகு – ………………………………….
விடை : படகு
4. வசை – ………………………………….
விடை : வலசை
5. பாவை – ………………………………….
விடை : பார்வை
6. எது – ………………………………….
விடை : எழுது
7. அவை – ………………………………….
விடை : அவ்வை
8. ஆம் – ………………………………….
விடை : ஆரம், ஆழம்
9. கவி – …………………………………..
Lesson-4: முளைப்பாரி பாடல்
பொருள் தருக
1. முளைப்பாரி = ………………………………………..
விடை : முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்
2. தையலர் = ………………………………………..
விடை : பெண்கள்
3. ஓலைக்கொட்டான் = ………………………………………..
விடை : ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை
4. மாட்டாந்தொழு = ………………………………………..
விடை : மாடு கட்டும் இடம்
5. ஆட்டாந்தொழு = ………………………………………..
விடை : ஆடு கட்டும் இடம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “இரண்டெடுத்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………
- இரண் + டெடுத்து
- இரண்டு + எடுத்து
- இரண்டெ + டுத்து
- இரண்டெ + எடுத்து
விடை :இரண்டு + எடுத்து
2. “பொங்கலிட்டு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- பொங்கல் + இட்டு
- பொங்கல் + லிட்டு
- பொங்க + இட்டு
- பொங் + கலிட்டு
விடை பொங்கல் + இட்டு
3. “மணி + பயறு” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் …………………………..
- மணிபயறு
- மணபயறு
- மணப்பயறு
- மணிப்பயறு
விடை: மணிப்பயறு
4. “செவ்வாய் + கிழமை” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ……………………….
- செவ்வாய்கிழமை
- செவ்வாய்க்கிழமை
- செவ்வாகிழமை
- செவ்வாக்கிழமை
விடை: செவ்வாய்க்கிழமை
கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
- சோளத்தட்டு = சோளம் + தட்டு
- மாட்டெரு = மாடு + எரு
இப்பாடலில் ஒரே சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வருவதைக் கண்டறிந்து எழுதுக -அடுக்குத்தொடர்.
- கணுக்கணுவா
- சுளைசுளையா
இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
- நாளையிலே – கிழமையில
- ஊறவச்சி – முறிச்சிவச்சி
- கம்மந்தட்டை – சோளத்தட்டை
- மாட்டாந்தொழு – ஆட்டாந்தொழு
இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
- ஓலைக்கொட்டான் ஓடும்பிள்ளை
- வாங்கியாந்த – வாளியிலே
- கம்மந்தட்டை – கணுக்கணுவா
- மாட்டாந்தொழு – மாட்டெருவு
- ஆட்டாந்தொழு – ஆட்டெருவு
மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.
1. ஒசந்த | உயர்ந்த |
2. செவ்வா | செவ்வாய் |
3. வாங்கியாந்த | வாங்கி வந்த |
4. ஊறவச்சி | ஊறவைத்து |
5. முறிச்சி | முறித்து |
6. மொளபோட்ட | முளைக்க வைத்த |
Lesson-5: பண்படுத்தும் பழமொழிகள்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம் ……………………………
- கடைத்தெரு
- பக்கத்து ஊர்
- வாரச்சந்தை
- திருவிழா
விடை : வாரச்சந்தை
2. “யானைக்கொரு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- யானை + கொரு
- யானை + ஒரு
- யானைக்கு + ஒரு
- யானைக் + கொரு
விடை : யானைக்கு + ஒரு
3. “பழச்சாறு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
- பழம் + சாறு
- பழச் + சாறு
- பழ + ச்சா று
- பழ + சாறு
விடை : பழம் + சாறு
4. நாய் ………………….
- குரைக்கும்
- குறைக்கும்
- குலைக்கும்
- கொலைக்கும்
விடை : குரைக்கும்
5. “ஆசி” இச்சொல்லின் பொருள் …………………………
- புகழ்ந்து
- மகிழ்ந்து
- இகழ்ந்து
- வாழ்த்து
விடை : வாழ்த்து
கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
- வாரம் + சந்தை = வாரச்சந்தை
- பழைமை + மொழி = பழமொழி
பழமொழியை நிறைவு செய்க
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
குரைக்கின்ற நாய் கடிக்காது
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்
படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க.
- சிறுதுளி பெருவெள்ளம்.
- யானைக்கும் அடி சறுக்கும்.
- காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
விடை : காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்
1.
படிக்க நீயும் | விரும்பு |
பாறையை உடைப்பது | இரும்பு |
சுவைத்தால் இனிக்கும் | கரும்பு |
பூ மலரும் முன்பு | அரும்பு |
2.
கையின் மறுபெயர் | விரம் |
வயலுக்கு இடுவது | உரம் |
பூக்களைத் தொடுத்தால் | சரம் |
புன்னை என்பது | மரம் |
3.
நீர் இறைத்திடுவது | ஏற்றம் |
புயலோ இயற்கை | சீற்றம் |
தவறு இழைப்பது | குற்றம் |
வீட்டின் உள்ளே | தேற்றம் |
இணைத்து மகிழ்வோம்
- Talk less work more – குறைவாகப் பேசு அதிகம் வேலை செய்
- No pain no gain – உழைப்பின்றி ஊதியமில்லை
- Good council has no price – நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது
- Haste makes waste – பதறாத காரியம் சிதறாது
- All that glitters is not gold – மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Lesson-6: முயல் அரசன்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “பல்லாண்டு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- பல் + லாண்டு
- பல் + ஆண்டு
- பல + ஆண்டு
- பல + யாண்டு
விடை : பல + ஆண்டு
2. “செயலாக்கம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- செய + லாக்கம்
- செயல் + ஆக்கம்
- செயலா + ஆக்கம்
- செயல் + லாக்கம்
விடை : செயல் + ஆக்கம்
3. “இப்போது+ எல்லாம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
- இப்போதெல்லாம்
- இப்போது எல்லாம்
- இப்போல்லாம்
- இப்போயெல்லாம்
விடை : இப்போதெல்லாம்
4. “பேசி + இருந்தால்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________
- பேசியிருந்தால்
- பேசியிரு
- பேசிஇருந்தால்
- பேசவிருந்தால்
விடை : பேசியிருந்தால்
5. “வந்து + இருந்தது” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் __________
- வந்துஇருந்தது
- வந்திஇருந்தது
- வந்திருந்தது
- வந்தியிருந்தது
விடை : வந்திருந்தது
எதிர்ச்சொல்லால் சொற்றொடரை நிறைவுசெய்க
(பழைய, கவலை, மெதுவாக, தொடக்கம், தாழ்ந்த, பொய்)
1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் _______________ அடைவர்.
விடை : கவலை
2. எப்பொழுதும் உண்மை பேசவேண்டும், பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.
விடை : பொய்
3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின்
விடை : தொடக்கம்
4. கணினி மூலம் கல்வி கற்பது புதியமுறை . கரும்ப லகை மூலம் கல்விகற்றது முறை
விடை : பழைய
5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது குணம்
விடை : தாழ்ந்த
6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் பேச வேண்டும்.
விடை : மெதுவாக
சரி, தவறு எனச் சரியான குறியிடுக
1. புலி, முயலின் மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது.
விடை : சரி
2. முயல் புலிக்குக் கரும்பு கொடுத்தது.
விடை : தவறு
3. விலங்குகளின் கூட்டம் நடந்த போது புலி தூங்கிக் கொண்டிருந்தது.
விடை : தவறு
4. முயல் புலியிடம் காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் தன்னைக் கண்டு அஞ்சுவதாகக் கூறியது.
விடை : சரி
5. முயல் புலியைக் காட்டிலிருந்து ஆட்சி செய்ய. வேண்டும் எனக் கூறியது.
விடை : தவறு
சக்கரம் காட்டும் ஈரெழுத்துச் சொற்கள் என்ன என்பதை கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்க.
1. உலகம் என்பதன் வேறு சொல் ……………………………
விடை : பார்
2. திருவிழா என்றாலே இது இருக்கும் ……………………………
விடை : தேர்
3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் …………………………
விடை : ஊர்
4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை …………………………..
விடை : நீர்
5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் …………………………..
விடை : மோர்
6. மரம், செடி கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவும் …………………………..
விடை : வேர்
7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகளோடு செய்வது ……………………………
விடை : போர்
8. பூத்தொடுக்க உதவுவது …………………………..
விடை : நார்
எது முன்னே? எது பின்னே? அகர வரிசைப்படுத்துக.
(பௌத்தம், பெட்டி, போர்வை, படை, பூமி, பிண்ணாக்கு பீர்க்கு, புத்தகம், பைந்தமிழ், பொத்தான்.)
விடை : படை, பிண்ணாக்கு, பீர்க்கு, புத்தகம், பூமி, பெட்டி, பைந்தமிழ், பொத்தான். போர்வை, பௌத்தம்
காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக
(நெல், பால், அகழ், பள்ளி, மகிழ்ச்சி, வள்ளி, மல்லி, அகல், வாள், நாள், யாழ்)
1. பல்லினை மெல்லத் தொடு
விடை : பல்லி, நெல், பால், அல்லி, சொல், அகல்
2. நாவினை உள்ளே தள்ளு
விடை : வாள், தோள், நாள், பள்ளி, வள்ளி, வெள்ளி
3. நாவினைச் சுழற்றி முழக்கு
விடை : அகழ், வாழ், தமிழ், புகழ், யாழ், மகிழ்ச்சி
Lesson-7: சான்றோர் மொழி – வெற்றி வேற்கை
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “தெள்ளிய” இச்சொல்லின் பொருள் ………………………………
- மெல்லிய
- இளகிய
- முதிர்ந்த
- அழகிய
விடை : முதிர்ந்த
2. “ஆல்” இச்சொல்லின் பொருள் ……………………………
- வேலமரம்
- ஆலமரம்
- அரசமரம்
- வேப்ப மரம்
விடை : ஆலமரம்
3. “கயம்” இச்சொல்லின் பொருள் ……………………………………….
- நீர்நிலை
- பயம்
- வானிலை
- பருவநிலை
விடை : நீர்நிலை
4. “புரவி” இச்சொல்லின் பொருள் …………………………..
- யானை
- பூனை
- ஆள்
- குதிரை
விடை : குதிரை
5. “பெரும்படை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- பெருமை + படை
- பெரும் + படை
- பெரு + படை
- பெரிய + படை
விடை : பெருமை + படை
6. “நிழல் + ஆகும்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- நிழல்ஆகும்
- நிழலாகும்
- நிழல்லாகும்
- நிழலாஆகும்
விடை : நிழலாகும்
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக.
- ஆகா! என்ன சுகம் தெரியுமா?
- என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.
- ஆகா! இது என்ன பிரமாதம்?
- நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
- காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
1. வயலில் மேய்வது | ஆடு |
அழகாய் நடனம் | ஆடு |
2. மாதத்தின் மறுபெயர் | திங்கள் |
நிலவைக் குறிப்பது | திங்கள் |
3. வகுப்பில் பாடம் | படி |
மாடி செல்ல உதவும் | படி |
4. வளைந்து ஓடுவது | ஆறு |
6 – இந்த எண்ணின் பெயர் | ஆறு |
5. பூக்களைத் தொடுத்தால் | மாலை |
அந்தி சாயும் பொழுது | மாலை |
6. சோற்றின் மறுபெயர் | அன்னம் |
அழகிய பறவை | அன்னம் |
கூடையில் இருக்கும் சொற்களுள் முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து முதல் பழத்தில எழுதுக. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து இரண்டாம் பழத்தில் எழுதுக.
சிறுபழம் | தண்ணீர் |
சிறுமீன் | அண்ணம் |
சிலந்தி | நுண்ணியதே |
சிந்தனை | வண்ணம் |
சிலை | கிண்ணம் |
தட்டு | யானை |
தம்பி | பூனை |
தவளை | பானை |
தண்ணீர் | |
தலை |
Lesson-8: விடியும் வேளை
சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.
(தாமதப்படுத்துதல், முதிர்ந்த இலை, இளம் இலை, வேலை, நேரம், மெதுவாக, மூட்டை, தயார் செய்தல், பக்க அடுப்பு)
- வேளை – நேரம்
- பொதி – மூட்டை
- ஆயத்தப்படுத்துதல் – தயார் செய்தல்
- துளிர் – இளம் இலை
- கொடியடுப்பு – பக்க அடுப்பு
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “சாலையெங்கும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- சாலை + யெங்கும்
- சாலை + எங்கும்
- சால + எங்கும்
- சால + யெங்கும்
விடை : சாலை + எங்கும்
2. “சுண்டியிழுக்கும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- சுண்டி + யிழுக்கும்
- சுண் + டியிழுக்கும்
- சுண்டு + இழுக்கும்
- சுண்டி + இழுக்கும்
விடை : சுண்டி + இழுக்கும்
3. “ஓடி + ஆடி” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________________
- ஓடிஆடி
- ஓடியோடி
- ஓடியாடி
- ஒடியடி
விடை : ஓடியாடி
4. “காலை + பொழுது” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- காலைபொழுது
- கால்பொழுது
- காலைப்பொழுது
- காலப் பொழுது
விடை : காலைப்பொழுது
5. “வரகு + அரிசி” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
- வரகரிசி
- வரகுஅரிசி
- வரக்கரிசி
- வரகுகரிசி
விடை : வரகரிசி
6. “உணவு + அளிக்க” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
- உணவுஅளிக்க
- உணவளிக்க
- உணவுவளிக்க
- உணவ்வளிக்க
விடை : உணவளிக்க
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக
எ.கா: பச்சைப்பசேல் என்ற வயல்வெளி
- கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.
- வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்
- சிலுசிலுப்பான காற்ற கூடவே எழுந்தது
புதிய சொற்களை உருவாக்கலாமா?
1.நகம் | 2. முகம் |
3. கனம் | 4. ஊனம் |
5. கறி | 6. ஊக்கம் |
7. கன்னம் | 8. நன்றி |
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
சிறு தானிய உணவுகளே நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ணவேண்டும். இதைத் தான் நம் முன்னோர்” பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
சிறு தானிய உணவுகளை உண்போம்!
ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!
1. எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
சிறு தானிய உணவுகளே நமக்கு ஏற்புடையது
2. சிறு தானியங்களுள் ஏதேனும் நான்கினை எழுதுக.
குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி
3. துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?
துரித உணவுகளைச் சாப்பிடுவதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது
Lesson-9: கரிகாலன் கட்டிய கல்லணை
சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க
1. “துயரம்” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (மகிழ்ச்சி/துன்பம்)
விடை : துன்பம்
2. “வியத்தகு” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (மகிழ்வூட்டும்/ஆச்சரியம் தரும்)
விடை : ஆச்சரியம் தரும்
3. “முறியடித்து” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (தகர்த்து/பயந்து)
விடை : தகர்த்து
4. “சூழ்ச்சி” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (துன்பம்/தந்திரம்)
விடை : தந்திரம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “பெருவெள்ளம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- பெருமை + வெள்ளம்
- பெரு + வெள்ளம்
- பெரு + வுள்ளம்
- பெரிய + வெள்ளம்
விடை : பெருமை + வெள்ளம்
2. “தங்கியிருந்த” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- தங்கி + இருந்த
- தங்கி + யிருந்த
- தங்கியி + ருந்த
- தங்கு + இருந்த
விடை : தங்கி + இருந்த
3. “அமைந்துள்ளது” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- அமைந் + துள்ளது
- அமைந்து + உள்ளது
- அமைந்து + ள்ளது
- அமைந் + உள்ளது
விடை : அமைந்து + உள்ளது
4. “அரசு + ஆட்சி” என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் _________________
- அரசஆட்சி
- அரசாட்சி
- அரசுசாட்சி
- அரசுஆட்சி
விடை : அரசாட்சி
5. “நீர் + பாசனம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
- நீர்பாசனம்
- நீர்ப்பாசனம்
- நீரப்பசனம்
- நீரபாசனம்
விடை : நீர்ப்பாசனம்
பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?
- தொலைவில் x அருகில்
- எதிரிகள் x நண்பர்கள்
- பழைமை x புதுமை
- அடித்தளம் x மேல்தளம்
- பெரிய x சிறிய
சரியானதை எடுத்து எழுது
1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் _________________ (திருச்சி/ தஞ்சாவூர் )
விடை : தஞ்சாவூர்
2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு _______________________ (வைகை / கொள்ளிடம்)
விடை : கொள்ளிடம்
3. கல்லணையைக் கட்டிய அரசன் _________________ (கரிகாலன் / இராசராசன்)
விடை : கரிகாலன்
4. கல்லணை _______________ தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத்திகழ்கிறது (பழந்தமிழர் / இன்றைய)
விடை : பழந்தமிழர்
ஓர் எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்
ம | ல |
சமம் | நீலம் |
மரம் | வலம் |
மனம் | காலம் |
மருந்து | விலக்கு |
கு | வி |
குளம் | மாவிலை |
பழகு | விகுதி |
தொகுதி | விறகு |
குடம் | கருவி |
4th Std Tamil Term-2 Solution – More Details