4th Standard Tamil Book 2nd Term Solution
Today we have come with 4th Standard Tamil Book 2nd Term Book Back Questions with Answers. We already posted the 4th std 1st Term Solution – Check Here.
You can see our extraordinary work in here, we listed everything about the 4th Std 2nd Term Tamil Book. This Tamil Book has basic grammar, Short-Story, and Tamil Songs.
At the end of this page, we linked 4th Std Samacheer e-books, You can download the class 4th books by a single click.
Class 4 Tamil 2nd Term Solution 2021
4th Std Tamil Term-1 Solution – More Details
Lesson-1: காவல்காரர்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1.”பெயரில்லாத” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- பெயர் + இலாத
- பெயர் + இல்லாத
- பெயரில் + இல்லாத
- பெயரே + இல்லாத
விடை : பெயர் + இல்லாத
2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் ______________
- கீழே
- அருகில்
- தொலைவில்
- வளைவில்
விடை : கீழே
3. ‘சோளக்கொல்லைப் பொம்மை ’ என்பது ______________
- உயிருள்ள பொருள்
- உயிரற்ற பொருள்
- இயற்கையானது
- மனிதன் செய்ய இயலாதது
விடை : உயிரற்ற பொருள்
4. “அசைய + இல்லை” இச்சொற்களைச் சேர்த்து எழுதக்கிடைப்பது ___________
- அசையஇல்லை
- அசைவில்லை
- அசையவில்லை
- அசையில்லை
விடை : அசையவில்லை
5. “நித்தம்” இச்சொல்லுக்குரிய பொருள் _______________
- நாளும்
- இப்பொழுதும்
- நேற்றும்
- எப்பொழுதும்
விடை : நாளும்
முதலெழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக?
- சட்டை – சரிகை
- கூவி – கூட்ட
- காக்கை – காவல்
- வைக்கோல் – வைத்து
மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க.
இணைத்த சொற்களை கீழே எழுதுக.
- சரிகை வேட்டி
- கருப்பு கோட்டு
- வெள்ளை சட்டை
- சோளக்கொல்லை பொம்மை
- கனத்த மழை
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.
வினாக்கள்
1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?
வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவ ணவாகப் பயன்படுகின்றன
2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?
வாழைநார் பூக்களைத் தொடுக்க பயன்படுகிறது.
3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.
- செவ்வாழை
- பூவன் வாழை
- மலை வாழை
4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
வாழையிலை = வாழை + இலை
5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.
பலவகை x சிலவகை
Lesson-2: எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ”பாய்ந்தோடும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- பாய் + தோடும்
- பாய்ந்து + ஓடும்
- பயந்து + ஓடும்
- பாய் + ஓடும்
விடை : பாய்ந்து + ஓடும்
2. “காலை + பொழுது” இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது _________
- காலைப்பொழுது
- காலைபொழுது
- காலபொழுது
- காலப் பொழுது
விடை : காலைப்பொழுது
3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்ல?
- மலை
- காடு
- நெகிழி
- நிலம்
விடை : நெகிழி
4. “குனிந்து” இச்சொல் குறிக்கும் பொருள் _________________
- வியந்து
- விரைந்து
- துணிந்து
- வளைந்து
விடை : வளைந்து
5. “தன்+ உடைய” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
- தன்னுடைய
- தன்உடைய
- தன்னூடைய
- தன்உடையை
விடை : தன்னுடைய
அகரமுதலி பார்த்துப் பொருளறிக.
- மாசு = தூய்மையற்ற
- வேளாண்மை = உழவு
சொற்களை இணைத்துத் தொடரை நீட்டித்து எழுதுக.
எடுத்துக்காட்டு: படித்தேன்
- நான் படித்தேன்
- நான் நேற்று படித்தேன்
- நான் நேற்று பாடம் படித்தேன்
- நான் நேற்று தமிழ்ப்பாடம் படித்தேன்
வரைந்தாள்
- அவள் வரைந்தாள்
- அவள் நேற்று வரைந்தாள்
- அவள் நேற்று படம் வரைந்தாள்
- அவள் நேற்று ஆப்பிள் படம் வரைந்தாள்
நிறுத்தக் குறியிடுக
1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்
விடை : நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.
2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது
விடை : “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது”.
3. ஆகா பயிர் அழகாக உள்ளதே
விடை : ஆகா! பயிர் அழகாக உள்ளதே!
4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது
விடை : அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?
புதிய சொற்களை உருவாக்கலாமா?
பல் | பால் | கல் |
கலை | வாய் | நாய் |
ஒலை | காலை | காகம் |
ஊறு | ஊதல் | கண் |
வாடுதல் | தலை | பாய் |
நாகம் | காண் |
படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.
![]() |
1. ஒரு வீடு இரு வாசல்
விடை : மூக்கு |
2. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்
விடை : வெண்டைக்காய் |
அகர வரிசைப்படுத்துக
தளிர், தாளம், திட்பம், தீ, துடுப்பு, தூய்மை, தென்னை, தேன், தையல், தொகை, தோழமை, தெளவை
Lesson-3: யானைக்கும் பானைக்கும் சரி
பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக?
1. வணிகர் ________________________ சேர்ந்தவர்
விடை : அரபு நாட்டைச்
2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர் _____________
விடை : மரியாதை இராமன்
3. திருமண ஊர்வலத்தில் _______________ இறந்து விட்டது.
விடை : யானை
4. பழைய _______________ கீழே விழுந்து நொறுங்கின.
விடை : பானைகள்
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.
- யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டது
- பானைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன
- விசித்திரமான வழக்கை மரியாதை இராமன் எதிர்கொண்டார்
- பானைகள் கதவின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டன
குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?
இடமிருந்து வலம்
1. பழைமை என்பது இதன் பொருள்
விடை : தொன்மை
2. வீட்டின் முகப்பில் உள்ளது
விடை : வாசல்
3. தும்பிக்கை உள்ள விலங்கு
விடை : யானை
மேலிருந்து கீழ்
2. உடலின் ஓர் உறுப்பு
விடை : வாய்
4. வேளாண் தொழில் செய்பவர்
விடை : விவசாயி
Lesson-4: நன்னெறி
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘இன் சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- இன்+ சொல்
- இனிமை + சொல்
- இன்மை + சொல்
- இனிய+ சொல்
விடை : இனிமை + சொல்
2. “அதிர்கின்ற வளை ” – இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள் ___________
- உடைகின்ற
- ஒலிக்கின்ற
- ஒளிர்கின்ற
- வளைகின்ற
விடை : ஒலிக்கின்ற
3. “வியனுலகம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- வியன் + உலகம்
- வியல் + உலகம்
- விய + உலகம்
- வியன் + னுலகம்
விடை : வியன் + உலகம்
பொருத்துக
1. இன்சொல் | கதிரவனின் ஒளி |
2. வன்சொல் | நிலவின் ஒளி |
3. அழல்கதிர் | கடுஞ்சொல் |
4. தண்ணென் கதிர் | இனிய சொல் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக
1. நமது தாய்நாட்டின் திருப்பெயர்
இ | ந் | தி | யா |
2. அரசனின் வேறு பெயர்
ம | ன் | ன | ன் |
3. உடைமையை இப்படியும் சொல்லலாம்.
சொ | த் | து |
4. மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது
ம | ல் | லி | கை |
வட்டத்தில் எழுதிய எழுத்துகளைக் கீழே உள்ள கட்டத்தில் எழுதுக. இப்படிப் பேசினால் எல்லாருக்கும் பிடிக்கும்
இ | ன் | சொ | ல் |
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக
குடை | குளி | குதி |
குடம் | குட்டை | குளிர் |
குறி | குட்டம் | குறைவு |
Lesson-5: பனிமலைப் பயணம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது?
- மெதுவாக
- எளிதாக
- கடினமாக
- வேகமாக
விடை : மெதுவாக
2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
- என்னஎன்று
- என்னென்று
- என்னவென்று
- என்னவ்வென்று
விடை : என்னவென்று
3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- அந்த + காட்டில்
- அ + காட்டில்
- அக் + காட்டில்
- அந்தக் + காட்டில்
விடை : அ + காட்டில்
4. ” என்னவாயிற்று“ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- என்ன + ஆயிற்று
- என்னவா + ஆயிற்று
- என்ன + வாயிற்று
- என்னவோ + ஆயிற்று
விடை : என்ன + ஆயிற்று
உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?
- திடீரென்று – சற்றும் எதிர்பாராமல்
- தந்திரம் – ஏமாற்றுதல்
- பேணுதல் – பாதுகாத்தல்
- அலறுதல் – கூச்சலிடுதல்
விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக
- _____________ நண்பன் = நல்ல நண்பன்
- _____________ தூரம் = அதிக தூரம்
- _____________ மான் = அழகிய மான்
- _____________ பயணம் = தரைவழி பயணம்
- _____________ காடு = அடர்ந்த காடு
- _____________ குதிரை = கருப்பு குதிரை
கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.
குதிரை | மலை | நாய் |
அத்தை | தலை | வாய் |
படகு | பாம்பு | பாய் |
வலை | ஓநாய் | இலை |
அகரவரிசைப் படுத்துக.
மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மெளவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்
மகிழ்ச்சி | மாதம் | மிளகு |
மீன் | முறுக்கு | மூட்டை |
மெத்தை | மேகம் | மைதானம் |
மொழி | மோப்பம் | மௌவல் |
Lesson-6: ஆராய்ந்திட வேண்டும்
நிறுத்தக் குறியிடுக
அரசே அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா என்று கேட்டது
விடை:-
“அரசே , அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எங்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.
ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக
(எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது
1. தத்தித் தத்தி
விடை:- நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்றது
2. எழுதி எழுதி
விடை:- புரியாத பாடங்களை எழுதி எழுதி பார்க்கவேண்டும்
3. திரும்பித் திரும்பி
விடை:- வாகனமானது வளைவுகளில் திரும்பித் திரும்பி சென்றது
4. குனிந்து குனிந்து
விடை:- குகைகளில் குனிந்து குனிந்து செல்ல வேண்டும்
குறிப்பைப் படி! விடையைக் கொடு!
1. பேச உதவுவது வாய், படுக்க விரிப்பது பாய், கனிக்கு முந்தையது காய், காவல் காப்பது…………..?
விடை : நாய் |
|
2. வரியில் ஒன்று சுங்கம், கனிமத்தில் ஒன்று தங்கம், நாடுகளுள் ஒன்று வங்கம், தமிழுக்கு மூன்று……….?
விடை : சங்கம் |
|
3. உழவுக்கு உதவுவது ஏர், ஊர்கூடி இழுப்பது தேர், மரத்திற்கு தேவை வேர், நல்லதை உன்னிடம்……?
விடை : சேர் |
அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக
- போலி = ஒன்றைப்போல இருத்தல்
- பொறாமை = காழ்ப்பு
- சவாரி = பயணம்
- வருந்தியது = துன்பமடைந்தது
- மரியாதை = நேர்மையான ஒழுக்கம்
சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக.
- மண்னர் = மன்னர்
- குதிறைச் சவாரி = குதிரை சவாரி
- உர்சாகம் = உற்சாகம்
- சிறந்தவண் = சிறந்தவன்
- மக்கலெள்ளாம் = மக்களெல்லாம்
- கனைப்பொளி = கனைப்பொலி
- இறக்கக் குணம் = இரக்கக் குணம்
- கிராமங்கல் = கிராமங்கள்
விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.
1. கழுதை கனைக்கும் | 2. சிங்கம் முழங்கும் |
3. நாய் குரைக்கும் | 4. புலி உறுமும் |
5. யானை பிளிறும் |
Lesson-7: திருக்குறள் கதைகள்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘பொறை‘ என்பதன் பொருள் __________________
- முழுமை
- வளமை
- பொறுமை
- பெருமை
விடை : பொறுமை
2. “நிறையுடைமை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- நிறை + யுடைமை
- நிறை + உடைமை
- நிறைய + உடைமை
- நிறையும் + உடைமை
விடை : நிறை + உடைமை
3. ‘மெய் + பொருள்‘ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- மெய்பொருள்
- மெய்யானபொருள்
- மெய்ப்பொருள்
- மெய்யாய்ப்பொருள்
விடை : மெய்ப்பொருள்
4. “வெகுளாமை” இச்சொல்லின் பொருள் ______________
- அன்பு இல்லாமை
- பொறாமை கொள்ளாமை
- சினம் கொள்ளாமை
- பொறுமை இல்லாமை
விடை : சினம் கொள்ளாமை
5. போற்றி ஒழுகப்படும் பண்பு _____________
- சினம்
- பொறையுடைமை
- அடக்கமில்லாமை
- அறிவில்லாமை
விடை : பொறையுடைமை
பொருத்துக
1. பொறை | சொல் குற்றம் |
2. மெய்ப்பொருள் | துன்பப்படுவர் |
3. காவாக்கால் | பொறுமை |
4. சோகாப்பர் | காக்கா விட்டால் |
5. சொல்லிழுக்கு | உண்மைப் பொருள் |
விடை : 1 – இ, 2 -உ, 3 -ஈ, 4 – அ, 5 – ஆ |
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக.
1. ஆய்வகம் _____________ இருந்தது. (மேல் தளத்தில் / மேல் தலத்தில்)
விடை : மேல் தளத்தில்
2. வழியில் _____________ ஒன்று வந்தது. (குருக்குப்பாதை / குறுக்குப்பாதை)
விடை : குறுக்குப்பாதை
3. உனக்குக் காரணம் _____________ ( புறியவில்லையா / புரியவில்லையா)
விடை : புரியவில்லையா
4. எடிசன் மின் _____________ உருவாக்கினார். (விளக்கு / விலக்கு)
விடை : விளக்கு
5. குற்றம் ____ யாரிடம்தான் இல்லை. (குரை / குறை)
விடை : குறை
மொழியோடு விளையாடு பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக.
1. உன்னுடைய ஊரின் பெயர் _____________?
விடை : என்ன 2. உனக்குப் பிடித்த வண்ணம் _____________? விடை : எது 3. நீ பள்ளிக்கு _____________ வருகிறாய்? விடை : எப்படி 4. உன்னுடைய நண்பன் _____________? விடை : யார் 5. கோடை விடுமுறைக்கு _____________ சென்றாய்? விடை : எங்கு 6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் _____________? விடை : யாது 7. குறில் எழுத்துகள் _____________? விடை : யாவை 8. சாருமதி _____________ வீட்டிற்குச் சென்றாள்? விடை : யாருடைய |
![]() |
நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?
அன்பு | அடக்கம் |
அறிவு | ஈகை |
ஒழுக்கம் | வாய்மை |
செய்ந்நன்றி |
Lesson-8: பசுவுக்குக் கிடைத்த நீதி
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “இன்னல்” இச்சொல்லிற்குரிய பொருள்?
- மகிழ்ச்சி
- நேர்மை
- துன்பம்
- இரக்கம்
விடை : துன்பம்
2. “அரசவை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- அரச + அவை
- அர+அவை
- அரசு + அவை
- அரச + வை
விடை : அரசு + அவை
3. “மண்ணுயிர்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- மண்+ணுயிர்
- மண்+உயிர்
- மண்ண +உயிர்
- மண்ணு+உயிர்
விடை : பொறையுடைமை
அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக
- ஆற்றொணா – தாங்கமுடியாத
- வியனுலகம் – பரந்த உலகம்
- செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல்
- கொடியோன் – துன்புறுத்துபவன்
- பரம்பரை – தொன்றுதொட்டு
சொல் உருவாக்குக
இனிமை | தேர் | தீ |
கண் | தீமை | மாலை |
கலை | மலை | கலை |
வலை | நேர்மை | சோலை |
பெண் | புலி | வலி |
மண் | தீமை |
Lesson-9: வேலைக்கேற்ற கூலி
சொல் உருவாக்கப்புதிர் வடிவங்களைக்கொண்டு அவற்றிற்குரிய எழுத்துகளை எழுதிச் சொல் உருவாக்குக. ஒவ்வொரு வடிவமும் ஓர் எழுத்தைக் குறிக்கும்
விடைகள்:
1. வரி | 2. திரை | 3. குதி | 4. வரை |
5. குரை | 6. குதிரை | 7. வரிக்குதிரை |
சொல் எழுதுக சொற்றொடர் அமை
மனம்: மனிதருக்கு நல்ல மனம் வேண்டும்
மணம்: பூக்கள் மணம் வீசும்
கலை: சீதா பேச்சு கலையில் சிறந்தவள்
களை: பயிர்களுக்கு இடையில் தோன்றுவது களை
கழை: மூங்கில் மறுபெயர் கழை
கரை: கோகிலா கடற்கரையில் நடந்து வந்தாள்
கறை: துணியில் கறை படியாமல் விளையாட முடியாது
இலை: தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது
இளை: உணவு உண்ணாத மனிதன் உடம்பு இளைக்கிறது
இழை: ஆடை பருத்தி இழையால் ஆனது
விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க.
1. கரைந்து அழைப்பேன் நான் யார்?
விடை : காகம்
2. கடலில் கிடைப்பேன் நான் யார்?
விடை : சங்கு
3. சமையலுக்கு உதவுவேன் நான் யார்?
விடை : வெங்காயம்
4. இனிப்பாய் இருப்பேன் நான் யார்?
விடை : கரும்பு