4th Standard 3rd Term Tamil Book Solution | New Samacheer Syllabus 2025-2026

4th Standard 3rd Term Tamil Book Solution

Here you can find the 4th Standard 3rd Term Tamil Book Solution in Text format. And also we attached the 4th std all subject guide at the bottom of the page. we already posted 1st and 2nd term book-back questions.

We posted the answers lesson-wise, you can get the answer to which one you want. If you like our works give your credits on the comment box.

4th Standard 3rd Term Tamil Book Solution

Class 4 Tamil 3rd Term Chapter 2024-2025

4th Std Tamil Term-2 Solution – More Details

Lesson 1: உலா வரும் செயற்கைக்கோள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. மண்ணிலுள்ள இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மண்ணி + லுள்ள
  2. மண்ணில் + உள்ள
  3. மண் + உள்ள
  4. மண்ணில் + உள்ளே

விடை : மண்ணில் + உள்ள

2. நிழற்படம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நிழள் + படம்
  2. நிழை + படம்
  3. நிழல் + படம்
  4. நிலை + படம்

விடை : நிழல் + படம்

3. உண்மை என்ற சொல்லின் பொருள்?

  1. பொய்
  2. தவறு
  3. சரி
  4. மெய்

விடை : மெய்

4. நற்பயன் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நல்ல + பயன்
  2. நன்மை + பயன்
  3. நல் + பயன்
  4. நற் + பயன்

விடை : நன்மை + பயன்

5. அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்

  1. பக்கத்தில்
  2. எதிரில்
  3. அண்மையில்
  4. தொலைவில்

விடை : தொலைவில்

வினாக்களுக்கு விடையளிக்க

1. பறவைக் கப்பல் எனக் குறிப்பிடப்படுவது எது?

செயற்கைக்கோள்

2. செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக

  • மன்ணிலுள்ள வளங்களை கண்டறிதல்
  • தகவல் தொடர்புக்கு உதவுதல்

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் அமைந்துள்ள சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  • ட்டு- விட்டு
  • ண்ணில் – விண்ணில்
  • ருகில் – உருவில்
  • ல்லை – இல்லா
  • வாருங்கள் – பாருங்கள்

ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  • வந்திடுமே – பறந்திடுமே
  • எடுத்திடுமே – காட்டிடுமே
  • சொல்லிடுமே – இயங்கிடுமே
  • வாருங்கள் – பாருங்கள்
  • உணர்த்திடுமே – பாய்ந்திடுமே

பாடலை நிறைவு செய்வோம்

4th Standard 3rd Term Tamil Book Back Questionsபஞ்சு போன்ற மேகமே
பார்க்க நெஞ்சு மகிழுமே
காற்று வீசும் போதிலே
கலைந்தே தவழ்ந்து வந்து
மக்கள் உள்ளம் மகிழ
மழையாய் பொழிவாய் மேகமே!

4th Std Text Books (Tamil, English, Maths, Science, Social Science)

கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்

  1. கவல் – கவல்
  2. தாள்கள் – கோள்கள்
  3. ழை – மழை
  4. ப்பம் – வெப்பம்
  5. னிமம் – னிமம்

4th Std 3rd Term Tamil - Lesson 1 உலா வரும் செயற்கைக்கோள்

அறிந்து கொள்வோம்

இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் வானவியலிலும் கணிதவியலிலும் சிறந்து விளங்கியவர்கள்.

Lesson 2: மாசில்லாத உலகம் படைப்போம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. மாசு என்னும் பொருள் தராத சொல்

  1. தூய்மை
  2. தூய்மையின்மை
  3. அழுக்கு
  4. கசடு

விடை : தூய்மை

2. மாசு + இல்லாத இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. மாசிலாத
  2. மாசில்லாத
  3. மாசிஇல்லாத
  4. மாசுஇல்லாத

விடை : மாசில்லாத

3. அவ்வுருவம் என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

  1. அவ் + வுருவம்
  2. அந்த + உருவம்
  3. அ + உருவம்
  4. அவ் + உருவம்

விடை : அ + உருவம்

4. நெடிதுயர்ந்து என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

  1. நெடிது + உயர்ந்து
  2. நெடி + துயர்ந்து
  3. நெடிது + துயர்ந்து
  4. நெடிது + யர்ந்து

விடை : நெடிது + உயர்ந்து

5. குறையாத என்ற சொல்லின் எதிர்ச்சொல்

  1. நிறையாத
  2. குறைபாடுடைய
  3. குற்றமுடைய
  4. முடிக்கப்படாத

விடை : நிறையாத

வினாக்களுக்கு விடையளிக்க

1. ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் என்ன செய்தி இருந்தது?

நமது மாவட்டக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் “அறிவில் திருவிழா” அழைப்பிதழ் செய்தியாது ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் இருந்தது.

2. அறிவியல் விழாவில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை ஆசிரியர் எவ்வாறு ஊக்கப்படுத்தினார்?

  • “வழக்கமான ஆய்வுகள் போல் இல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள்.
  • பரிசு பெறுவதனை விட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுரிமை தாருங்கள்.
  • அதனையே செயல்படுத்துங்கள்” என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

3. அறிவியல் விழாவில் காணப்பட்ட நெடிதுயர்ந்த உருவத்தை எப்படி உருவாக்கினர்?

முழுவதும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் அறிவியல் விழா அரங்கின் வாசலில் நெடிதுயர்ந்து நின்றது ஓர் உருவம் செய்யப்பட்டிருந்தது.

4. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றன?

மின்னணுக் கழிவுகள்

5. நாம் பயன்படுத்திய மின்பொருள்களை என்ன செய்யவேண்டும்?

பயன்படுத்திய மின்னணுப் பொருள்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.

பாடுவோம் விடை கூறுவோம்: எது சரி? எது தவறு

1. கண்ட இடத்தில் குப்பையைக் கொட்டுவது

விடை : தவறு

2. குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவது

விடை : சரி

3. பயன்படுத்தாதபோதும் மின்விளக்கை எரிய விடுவது

விடை : தவறு

4. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது

விடை : சரி

5. சாலையின் ஓரமாக நடந்து செல்வது

விடை : சரி

6. பறவைகளையும் விலங்குகளையும் துன்புறுத்துவது

விடை : தவறு

தொடர் இரண்டு; விடை ஒன்று கண்டுபிடிப்போமா?

1. காலைக்குப் பின்னால் வரும்; கழுத்தில் வந்து விழும்

விடை:- மாலை

2. ஆடையுமாகும்; அறிவையும் தரும்

விடை:- நூல்

மொழியோடு விளையாடு: ஒரு சொல்லுக்கு இருபொருள் எழுதுக

1. அணி

விடை :- வரிசை, அணி கொள்ளுதல்

2. ஆடு

விடை:- ஆடுதல், ஒரு விலங்கு

3. நாடு

விடை:- விருப்பம், இந்திய நாடு

4. படி

விடை:- படித்தல், மாடிப்படி

5. ஓடு

விடை:- ஓடுதல், மண்டை ஓடு

6. மெய்

விடை:- உடம்பு, உண்மை

Lesson 3: காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி

புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!

1. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்?

விடை : மயில்

2. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்?

விடை : கொக்கு

3. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்?

விடை : வௌவால்

4. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்?

விடை : காகம்

5. பச்சைநிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்?

விடை : கிளி

4th Standard 3rd Term Tamil Book Back Questions

மீண்டும் மீண்டும் சொல்வோம்

  1. ஒரு குடம் எடுத்து அரைக்குடம் இறைத்துக் குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.
  2. துள்ளி எழுந்து பள்ளி சென்றாள் வள்ளி. அவளுடன் மெள்ள மெள்ள வந்து சேர்ந்து கொண்டாள் அல்லி.

அறிந்து கொள்வோம்

  • ஆண்மயிலுக்குத்தான் தோகை உண்டு.
  • ஆண் சிங்கத்துக்குத்தான் பிடரிமயிர் உண்டு.
  • மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.
  • புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.

Lesson 4: ஆனந்தம் விளையும் பூமியடி

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. இன்னல் இச்சொல்லின் பொருள்

  1. மகிழ்ச்சி
  2. கன்னல்
  3. துன்பம்
  4. இன்பம்

விடை : துன்பம்

2. கும்மியடி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. கும்மி + யடி
  2. கும் + மியடி
  3. கும் + மடி
  4. கும்மி + அடி

விடை : கும்மி + அடி

3. ஆனந்தம் இச்சொல்லின் எதிர்ச்சொல்

  1. மகிழ்ச்சி
  2. வருத்தம்
  3. அன்பு
  4. கோபம்

விடை : வருத்தம்

4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்

  1. தேசமடி – பூமியடி
  2. போற்றிடடி – காத்திடடி
  3. கும்மியடி – கோடி
  4. போனதடி – போற்றிடவே

விடை : போனதடி – போற்றிடவே

படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.

4th Std Book Back Answer - anantham vilayadum boomiyadi - Kumiattathai kurikum padam - Moylyodu villayadu

பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

4th Standard 3rd Term Tamil Book Back Questions

  • தேசமடி – பூமியடி – கும்மியடி – போனதடி
  • போற்றிடடி – காத்திடடி – வாழ்ந்திடடி

பொருத்துக

1. பாரதம், தேசம்இன்னல்
2. ஆனந்தம், சந்தோஷம்அன்னை
3. நெஞ்சம், உள்ளம்மகிழ்ச்சி
4. துன்பம், துயர்நாடு
5. தாய், அம்மாமனம்
விடை:- 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

அறிந்து கொள்வோம்

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.

Lesson 5: கணினி உலகம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி

  1. தொலைக்காட்சி
  2. கணினி
  3. கைப்பேசி
  4. மடிக்கணினி

விடை : கணினி

2. இப்போதெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இப்போது + எல்லாம்
  2. இப்போ + எல்லாம்
  3. இப்போதே + எல்லாம்
  4. இப்போ + வெல்லாம்

விடை : இப்போது + எல்லாம்

3. நினைவகம் இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை

  1. நினை + வகம்
  2. நினை + அகம்
  3. நினைவு + வகம்
  4. நினைவு + அகம்

விடை : நினைவு + அகம்

4. மின் + அஞ்சல் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. மின்அஞ்சல்
  2. மின்னஞ்சல்
  3. மினஅஞ்சல்
  4. மினஞ்சல்

விடை : மின்னஞ்சல்

5. பதிவேற்றம் இச்சொல்லின் பொருள்

  1. தகவல் ஆராய்தல்
  2. தகவல் வரிசைப்படுத்துதல்
  3. தகவல் பதிவுசெய்தல்
  4. தகவல் பெறுதல்

விடை : தகவல் பதிவுசெய்தல்

வினாக்களுக்கு விடையளிக்க

1. சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?

  • அடுக்குமாடிக் கட்டடங்கள்
  • மெரினா கடற்கரை
  • விமான நிலையம்
  • அண்ணா நூற்றாண்டு நூலகம்
  • உயிர்க்காட்சிச் சாலை
  • பொழுதுபோக்கு மையங்கள்
  • தகவல் தொழில்நுட்பப் பூங்கா

2. கணினியின் முதன்மைப் பகுதிகளை எழுதுக.

  • மையச் செயல்பாட்டுப் பகுதி (CPU)
  • கட்டுப்பாட்டகம் (Control unit)
  • நினைவகம் (Memory)
  • உள்ளீடு மற்றும் வெளியீடு (Input and output)

3. இணையம் என்றால் என்ன?

கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் ஆகும்.

4. மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?

மின்னஞ்சல் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?

4th Standard 3rd Term Tamil Book Back Questions

1. காட்சிகளைக் காண்பது

விடை : திரை

2. செய்தியை குறிக்கும் வேறு பெயர்

விடை : தரவு

3. படங்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது

விடை : புலனம்

4. கணினியின் தொடர்ச்சியான வலை அமைப்பு

விடை : வலைத்தளம்

5. தகவல்களைப் பதிவு செய்தல்

விடை : பதிவேற்றம்

மொழி விளையாட்டு கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?

4th Standard 3rd Term Tamil Book Back Questions
கைக்குட்டைகைத்தடிகையுறை

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிக் கடிதத்தை முழுமையாக்குவோம்

4th Std Term III Tamil_Lesson 5 Kadiththai Mulimaiaakuvom

4th Std Term III Tamil_Lesson 5 Kadiththai Mulimaiaakuvom

அ.சங்கர லிங்கம்
வெங்கடேஸ்வரபுரம்

அன்புள்ள அத்தை

நாங்கள் அனைவரும் நலம் அதுபோல உங்கள் அனைவரின் நலம் அறிய ஆவல்.

அடுத்த வாரம் எங்கள் ஊரில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதில் பல்வேறு புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும். அறிவு வளர்ச்சிக்கு பல்வேறு வகையான நூல்களை ஒரே கண்டு இடத்தில் மகிழலாம். கண்காட்சியில் கலந்து கொள்ள கதிரையும், கோமதியையம் அனுப்பினால் நாங்கள் அனைவரும் சேர்ந்து கண்காட்சியை பார்த்து மகிழ்வோம். பல வாங்கிப்
புத்தகங்கள் பயன் பெறுவோம்.

எனவே அனுப்பி கதிரையும், கோமதியையம் அனுப்பி அன்புடன் வைக்குமாறு வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள
அ.சங்கர லிங்கம்

பெறுநர் முகவரி

7/77, ஆர்.கே. காலணி தெரு,
சென்னை
அஞசல்குறியீட்டு எண் : 600054

அனுப்புனர் முகவரி

5/55, வெங்கடேஸ்வரபுரம்
திருநெல்வேலி
அஞசல்குறியீட்டு எண் : 627854

 

Lesson 6: மலையும் எதிரொலியும்

வினாக்களுக்கு விடையளிக்க

1. தந்தையும் மகனும் எங்குச் சென்று கொண்டிருந்தனர்?

தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

2. சிறுவன் பேசியபோது மலை என்ன செய்தது?

சிறுவன் பேசியபோது மலை அதே வார்த்தைகளை திரும்ப எதிரொலித்தது.

3. சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருந்தால் மலை என்ன சொல்லி இருக்கும்?

சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருந்தால் மலையும் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லி இருக்கும்.

4. இக்கதையின் மூலம் தந்தை மகனுக்குக் கூறிய அறிவுரை யாது?

  • நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது.
  • உன்னுடைய வாழ்க்கை எதிர் பாராமல் நடக்கும் ஒன்றன்று; அது உன்னுடைய எதிரொலிதான் என்று தந்தை மகனுக்கு அறிவுரை கூறினார்.

விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?

1. வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்?

விடை : தட்டு

2. உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?

விடை : மலை

3. நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன். தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?

விடை : ஆறு

4. நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?

விடை : கண்ணாடி

5. தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?

விடை : விமானம்

மொழியோடு விளையாடு

குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி

1. மூன்றெழுத்துச் சொல் நடு எழுத்து எடுத்து விட்டால் படுக்கச் சொல்லும் காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்

விடை : பட்டு

2. நான்கெழுத்துச் சொல் முதல் இரண்டு எழுத்து விடச்சொல்லும் கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார் முதலும் கடையும் வித்தாகும்.

விடை: விடுகதை

3. ஐந்தெழுத்துச் சொல் முதல் இரண்டும் இனிக்கும் கடைசி மூன்றும் பறக்கும் முதலும் கடையும் தேடும் அது என்ன?

விடை: தேன்சிட்டு

அறிந்துகொள்வோம்

  • உலகின் மிக உயரமான சிகரம் – இமயமலையில் உள்ள எவரெஸ்ட்
  • தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் – ஆனைமலையில் உள்ள ஆனைமுடி

எழுவாய், பயனிலை அறிவோமா?

எழுவாய், பயனிலை அறிமுகம்

சொற்கள் தொடர்ந்து அமைவதே தொடர். ஒரு தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருக்கும். இவற்றுள், செயப்படுபொருள் இல்லாமலும் எழுவாய் தோன்றாமலும்கூட வரலாம் ஆயினும், எழுவாயும் பயனிலையும் ஒரு தொடரில் இன்றியமையாத கூறுகளாக விளங்குகின்றன.

எழுவாய்

ஒரு தொடரில் யார், எவர், எது, எவை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவதே எழுவாய்.

பயனிலை

  • ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லே பயனிலை.

பயனிலை மூன்று வகைப்படும். அவையாவன:

பெயர்ப் பயனிலை

  • அவன் வளவன்
  • இத்தொடரில் அவன் என்பது எழுவாய், வளவன் என்பது பெயர்ப் பயனிலை.

வினைப் பயனிலை

  • குமரன் பாடினான்
  • இத்தொடரில், குமரன் என்பது, எழுவாய். பாடினான் என்பது, வினைப் பயனிலை.

வினாப் பயனிலை

  • நீ யார்?
  • இத்தொடரில், நீ என்பது, எழுவாய். யார் என்பது, வினாப் பயனிலை.

கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிக:

1. குழந்தை சிரித்தது.

விடை : குழந்தை

2. கண்ணன் படம் வரைந்தான்.

விடை : கண்ணன்

3. பூங்கோதை பள்ளி சென்றாள்.

விடை : பூங்கோதை

4. அண்ணன் தம்பிக்கு உதவினான்.

விடை : அண்ணன்

5. பறவைகள் வானில் பறந்தன.

விடை : பறவைகள்

6. பசு புல் மேய்ந்தது

விடை : பசு

கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளை கண்டறிக:

1. அவர் சிறந்த மருத்துவர்.

விடை : பெயர்ப் பயனிலை

2. என்னை அழைத்தவர் யார்?

விடை : வினாப் பயனிலை

3. அருளரசன் நல்ல மாணவன்.

விடை : பெயர்ப் பயனிலை

4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.

விடை : வினைப் பயனிலை

5. முக்கனிகள் யாவை?

விடை : வினாப் பயனிலை

6. புலி உறுமியது

விடை : வினைப் பயனிலை

அறிந்து கொள்வோம்

  • உலகின் மிக உயரமான சிகரம்  – இமயமைலயில் உள்ள எவெரஸ்ட்
  • தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்  –  ஆனைமலையில் உள்ள ஆனைமுடி

Lesson 7: நீதிநெறி விளக்கம்

சொல்பொருள்

  • மெய் – உடல்
  • விதிர்ப்பார் – நடுங்குவார்
  • கல்லார் – படிக்காதவர்
  • ஆகுலச்சொல் – பொருளற்ற ஆரவாரச் சொல்
  • நவை – குற்றம்
  • அஞ்சி – அச்சமுற்று
  • நல்கூர்ந்தார் – வறுமையுற்றார்
  • பூத்தல் – உண்டாதல்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. நவை என்னும் சொல்லின் பொருள்

  1. அச்சம்
  2. மகிழ்ச்சி
  3. வருத்தம்
  4. குற்றம்

விடை : குற்றம்

2. அவையஞ்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அவைய + அஞ்சி
  2. அவை + அஞ்சி
  3. அவை + யஞ்சி
  4. அவ் + அஞ்சி

விடை : அவை + அஞ்சி

3. இன்னலம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இன் + னலம்
  2. இன் + நலம்
  3. இனிமை + நலம்
  4. இனிய + நலம்

விடை : இனிமை + நலம்

4. கல்லார் இச்சொல்லின் எதிர்ச்சொல்

  1. படிக்காதவர்
  2. கற்றார்
  3. அருளில்லாதவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கற்றார்

வினாக்களுக்கு விடையளிக்க

1. கல்வி கற்றவரின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும்?

பலர் நிறைந்த அவையிலே, உடல் நடுங்கித் தம் கருத்தை எடுத்துக் கூறுமாறு கல்வி கற்றவரின் இயல்பு இருக்க வேண்டும்.

2. பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவர் யார்?

பொருளற்ற சொற்களை அவையினர் முன் கல்வியறிவில்லாதவர் தான் பேசுவர்.

3. பூத்தலின் பூவாமை நன்று என்று நீதிநெறி விளக்கம் எவற்றைக் குறிப்பிடுகிறது?

தன்னால் செய்ய முடியாத செயல்களைச் செய்ய முயல்வதை விட செய்யாமல் இருப்பதே நன்று

முதல் எழுத்து ஒன்றிவரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  1. வையஞ்சி – வையஞ்சா
  2. ல்வியும் – ல்லார்
  3. பூத்தலின் – பூவாம
  4. வையஞ்சி – ல்கூர்ந்தார்

மொழியோடு விளையாடு: குறிப்புகளைப் படி. சொல்லிலிருந்தே சொல்லைக் கண்டுபிடி

1. விலங்குகள் வாழுமிடம்

  • பாலைவனம் – வனம்

2. பூவின் வேறு பெயர்

  • பொன்மலர் – மலர்

3. பிறருக்குக் கொடுப்பது

  • கொடைக்கானல் – கொடை

4. விலங்குகளுக்கு மட்டும் உண்டு

  • வௌவால் – வால்

5. பால் தரும் வீட்டு விலங்கு

  • கடற்பசு – பசு

சங்கு சக்கரத்தைச் சுழற்றி கல்வியின் பெருமைகளை உணர்த்தும் சொற்றொடர்களை முறையாக எழுதுக

4th Standard 3rd Term Tamil Book Back Questions

1. கல்வி கண் போன்றது

2. கல்வி நிகிர் ஏதுமில்லை

3. கல்வியே அழியாச் செல்வம்

அறிந்து கொள்வோம்

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டா தவன்நல் மரம் பாடற்பொருளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்து கொள்க.

Lesson 8: உறவுமுறைக் கடிதம்

சிந்திக்கலாமா?

  • நவீன் தான் நினைப்பதையெல்லாம்
    தன் மாமாவிடம் சொல்ல நினைப்பான். ஆனால், அலைபேசியில் பேசும்போது அத்தனையும் மறந்துவிடுவான்.
  • குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தில் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள்

மேற்கண்ட சூழல்கள் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? எது சிறந்தது என நீ கருதுகிறாய்?

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. நற்பண்பு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. நல்ல + பண்பு
  2. நற் + பண்பு
  3. நல் + பண்பு
  4. நன்மை + பண்பு

விடை : நல்ல + பண்பு

2. பின்வருவனவற்றுள் எது உள்ளரங்க விளையாட்டு இல்லை?

  1. தாயம்
  2. ஐந்தாங்கல்
  3. பல்லாங்குழி
  4. கபடி

விடை : கபடி

3. பாரம்பரியம் இச்சொல்லுக்குரிய பொருளைத் தராத சொல்?

  1. அண்மைக்காலம்
  2. தொன்றுதொட்டு
  3. தலை முறை
  4. பரம்பரை

விடை : அண்மைக்காலம்

உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவன. சங்க காலத்தில் இளையரும் முதியவரும் பலவகையான விளையாட்டுகளிலும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டனர். அவற்றுள் ஒன்று, ஏறு தழுவுதல். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், கூரிய கொம்புகளை உடைய காளைகளை அடக்குவதனை வீர விளையாட்டாகக் கருதினர்.

1. ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன யாவை?

விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன

2. ஏறு தழுவுதல் என்றால் என்ன?

காளைகளை அடக்குதல் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் எனப்படும்

3. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள எதிர்ச்சொற்களை எழுதுக.

இளையரும் x முதியவரும்

4. ஏறு தழுவுதல் எந்த நிலத்துடன் தொடர்புடையது?

ஏறு தழுவுதல் முல்லை நிலத்துடன் தொடர்புடையது

5. நிரப்புக.

ஏறு தழுவுதல் என்பது, ———— விளையாட்டு. (உள்ளரங்க/ வெளியரங்க)

விடை : வெளியரங்க

வினாக்களுக்கு விடையளி

1. தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் எவை?

பாண்டியாட்டம்ஐந்தாங்கல்
கபடிகிட்டிப்புள்
பல்லாங்குழிபம்பரம்
தாயம்

2. உள்ளரங்க விளையாட்டுகளின் பெயர்களை எழுதுக.

பல்லாங்குழி, ஐந்தாங்கல்

3. கடிதத்தில் இடம்பெற்றுள்ள பழமொழியின் பொருள் யாது?

கரும்பு தின்னக் கூலியா?’ என்ற பழமொழியின் பொருள் தனக்கு
விருப்பமானதைச் செய்ய யாரும் வெகுமதியை எதிர்பார்ப்பதில்லை.

உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைக் கட்டத்தில் கண்டறிந்து எழுதுக.

Class 4th 3rd Term Tamil Book Back Questions

கிளித்தட்டுபம்பரம்பல்லாங்குழி
தாயம்சடுகுடுஆடுபுலி
ஐந்தாங்கல்கிட்டிப்புள்காயா பழமா

அறிந்து கொள்வோம்

கடிதத்தில் அனுப்புநர், பெறுநர் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இல்லையெனில் அனுப்பியவர்க்கே திரும்பி வந்துவிடும்.

Lesson 9: அறிவுநிலா

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. தினமும் என்ற சொல்லின் பொருள்

  1. நாள்தோறும்
  2. வேலைதோறும்
  3. மாதந் தோறும்
  4. வாரந்தோறும்

விடை : நாள்தோறும்

2. பனிச்சறுக்கு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பனி + சறுக்கு
  2. பனிச் + சறுக்கு
  3. பன + சறுக்கு
  4. பன் + சறுக்கு

விடை : பனி + சறுக்கு

3. வேட்டை + நாய் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. வேட்ட நாய்
  2. வேட்நாய்
  3. வேட்டைநாய்
  4. வேட்டநாய்

விடை : வேட்டைநாய்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் யார்?

ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் தம்பி

2. பெரியவர் சொன்ன புதிர்கள் எத்தனை?

மூன்று புதிர்களை பெரியவர் போட்டார்.

3. புதிருக்குச் சரியான பதிலளித்தவர் யார்?

புதிருக்குச் சரியான பதிலளித்தவர் தம்பி

4. பெரியவர் பசுவை யாருக்குக் கொடுத்தார்?

பெரியவர் பசுவை புதிருக்கு சரியான பதிலை கூறிய தம்பிக்கே கொடுத்தார்.

5. கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு என்ன?

சிட்டுக்குருவியை கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு ஆகும்.

எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?

1. குறையஇழைத்த
2. மெல்லியமுடியாத
3. முடியும்மெதுவாக
4. விரைவாகதடித்த
5. கொழுத்தநிறைய
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 4 – அ

மொழியோடு விளையாடு

1. புகைவண்டி

  1. புகை
  2. வடி
  3. வண்டி
  4. கை
  5. வகை
  6. கைவண்டி

2. கதைப்பாட்டு

  1. கதை
  2. பாட்டு
  3. பாடு
  4. தை
  5. பாதை
  6. பாப்பா

3. பருத்தி ஆடைகள்

  1. பருத்தி
  2. ஆடை
  3. கடை
  4. படை
  5. ஆதி
  6. கரு

கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.

4th Standard 3rd Term Tamil Book Back Questions

  1. சதம் – நூறு
  2. சித்திரம் – ஓவியம்
  3. நட்சத்திரம் – விண்மீன்

அறிந்து கொள்வோம்

விடுகதைகளுக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளன.

  1. புதிர்
  2. சொல் விளையாட்டு
  3. மாற்றெழுத்துப் புதிர்
  4. வினோதச் சொற்கள்
  5. எழுத்துக் கூட்டு
  6. விகடம்
  7. ஓவியப் புதிர்
  8. சொற்புதிர்
  9. நொடிவினா

விடும்.

அகர முதலி

  • அதிகம் – மிகுதி
  • அதிகரித்தல் – மிகுதல்
  • அபத்தமான பதில்கள் – பொய்யான விடைகள்
  • அவசியம் – தேவை
  • அற்புதம் – வியப்பு / புதுமை
  • ஆச்சரியம் – வியப்பு
  • ஆமோதித்தன – உடன்பட்டன
  • ஆர்வம் – ஈடுபாடு
  • ஆனந்தம் – மகிழ்ச்சி
  • இயைந்து – பொருந்தி
  • இரசிகர்கள் – சுவைஞர்கள் (இரசித்தல் – சுவைத்தல்)
  • இராகம் – இன்னிசை
  • இன்னல் – துன்பம்
  • உற்சாகம் – மகிழ்ச்சி / ஊக்கம்
  • எதிரொலி – ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்
  • கிரீடம் – மணிமுடி
  • கேலி – விளையாட்டுப் பேச்சு
  • சிந்தை – மனம்
  • சீர்கேடு – ஒழுக்கக் குறைவு
  • சுகம் – இன்பம் / நலம்
  • சுருதி – இசைவகை
  • செருமியது – இருமியது
  • தத்துவம் – உண்மை நிலை
  • தைரியம் – துணிவு
  • நிரூபித்தல் – மெய்ப்பித்தல்
  • நுண்மை – நுட்பம்
  • பழுதான – பயன்படுத்த முடியாத
  • பாதிப்புகள் – விளைவுகள்
  • பாரம்பரியம் – தொன்றுதொட்டு / பரம்பரை
  • புத்திசாலித்தனம் – அறிவுக்கூர்மை
  • மனமார்ந்த – மனம் நிறைந்த
  • மாசு – குற்றம் / அழுக்கு
  • லேசாய் – மெதுவாய்
  • வம்பு – வீண்பேச்சு
  • விசேஷம் – சிறப்பு
  • வெட்கம் – நாணம்

4th Std Tamil Term-2 Solution – More Details

Useful Links

Leave a Comment