4th Standard 3rd Term Tamil Book Solution | New Samacheer Syllabus 2022 – 2023

4th Standard 3rd Term Tamil Book Solution

Here you can find the 4th Standard 3rd Term Tamil Book Solution in Text format. And also we attached the 4th std all subject guide at the bottom of the page. we already posted 1st and 2nd term book-back questions.

We posted the answers lesson-wise, you can get the answer to which one you want. If you like our works give your credits on the comment box.

4th Standard 3rd Term Tamil Book Solution 2021

Class 4 Tamil 3rd Term Chapter 2022 – 2023

4th Std Tamil Term-2 Solution – More Details

Lesson 1: உலா வரும் செயற்கைக்கோள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “மண்ணிலுள்ள” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. மண்ணி + லுள்ள
  2. மண்ணில் + உள்ள
  3. மண் + உள்ள
  4. மண்ணில் + உள்ளே

விடை : மண்ணில் + உள்ள

2. “நிழற்படம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நிழள் + படம்
  2. நிழை + படம்
  3. நிழல் + படம்
  4. நிலை + படம்

விடை : நிழல் + படம்

3. “உண்மை” என்ற சொல்லின் பொருள்?

  1. பொய்
  2. தவறு
  3. சரி
  4. மெய்

விடை : மெய்

4. “நற்பயன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. நல்ல + பயன்
  2. நன்மை + பயன்
  3. நல் + பயன்
  4. நற் + பயன்

விடை : நன்மை + பயன்

5. “அருகில்” என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

  1. பக்கத்தில்
  2. எதிரில்
  3. அண்மையில்
  4. தொலைவில்

விடை : தொலைவில்

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் அமைந்துள்ள சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  • ட்டு- விட்டு
  • ண்ணில் – விண்ணில்
  • ருகில் – உருவில்
  • ல்லை – இல்லா
  • வாருங்கள் – பாருங்கள்

ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  • வந்திடுமே – பறந்திடுமே
  • எடுத்திடுமே – காட்டிடுமே
  • சொல்லிடுமே – இயங்கிடுமே
  • வாருங்கள் – பாருங்கள்
  • உணர்த்திடுமே – பாய்ந்திடுமே

பாடலை நிறைவு செய்வோம்

4th Standard 3rd Term Tamil Book Back Questions பஞ்சு போன்ற மேகமே
பார்க்க நெஞ்சு மகிழுமே
காற்று வீசும் போதிலே
கலைந்தே தவழ்ந்து வந்து
மக்கள் உள்ளம் மகிழ
மழையாய் பொழிவாய் மேகமே!

4th Std Text Books (Tamil, English, Maths, Science, Social Science)

கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்

  1. கவல் – கவல்
  2. தாள்கள் – கோள்கள்
  3. ழை – மழை
  4. ப்பம் – வெப்பம்
  5. னிமம் – னிமம்

4th Std 3rd Term Tamil - Lesson 1 உலா வரும் செயற்கைக்கோள்

Lesson 2: மாசில்லாத உலகம் படைப்போம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘மாசு‘ என்னும் பொருள் தராத சொல்?

  1. தூய்மை
  2. தூய்மையின்மை
  3. அழுக்கு
  4. கசடு

விடை : தூய்மை

2. ‘மாசு + இல்லாத‘ இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

  1. மாசிலாத
  2. மாசில்லாத
  3. மாசிஇல்லாத
  4. மாசுஇல்லாத

விடை : மாசில்லாத

3. ‘அவ்வுருவம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது?

  1. அவ் + வுருவம்
  2. அந்த + உருவம்
  3. அ + உருவம்
  4. அவ் + உருவம்

விடை : அ + உருவம்

4. ‘நெடிதுயர்ந்து’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது?

  1. நெடிது + உயர்ந்து
  2. நெடி + துயர்ந்து
  3. நெடிது + துயர்ந்து
  4. நெடிது + யர்ந்து

விடை : நெடிது + உயர்ந்து

5. ‘குறையாத’ என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

  1. நிறையாத
  2. குறைபாடுடைய
  3. குற்றமுடைய
  4. முடிக்கப்படாத

விடை : நிறையாத

பாடுவோம் விடை கூறுவோம்: எது சரி? எது தவறு

1. கண்ட இடத்தில் குப்பையைக் கொட்டுவது

விடை : தவறு

2. குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவது

விடை : சரி

3. பயன்படுத்தாதபோதும் மின்விளக்கை எரிய விடுவது

விடை : தவறு

4. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது

விடை : சரி

5. சாலையின் ஓரமாக நடந்து செல்வது

விடை : சரி

6. பறவை, விலங்குகளைத் துன்புறுத்துவது

விடை : தவறு

தொடர் இரண்டு; விடை ஒன்று கண்டுபிடிப்போமா?

1. காலைக்குப் பின்னால் வரும்; கழுத்தில் வந்து விழும்

விடை:- மாலை

2. ஆடையுமாகும்; அறிவையும் தரும்

விடை:- நூல்

மொழியோடு விளையாடு: ஒரு சொல்லுக்கு இருபொருள் எழுதுக

1. அணி

விடை :- வரிசை, அணி கொள்ளுதல்

2. ஆடு

விடை:- ஆடுதல், ஆடு ஒரு விலங்கு

3. நாடு

விடை:- விருப்பம், இந்திய நாடு

4. படி

விடை:- படித்தல், மாடிப்படி

5. ஓடு

விடை:- ஓடுதல், மண்டை ஓடு

6. மெய்

விடை:- உடம்பு, உண்மை

Lesson 3: காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி

புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!

1. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்?

விடை : மயில்

2. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்?

விடை : கொக்கு

3. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்?

விடை : வௌவால்

4. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்?

விடை : காகம்

5. பச்சைநிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்?

விடை : கிளி

4th Standard 3rd Term Tamil Book Back Questions

Lesson 4: ஆனந்தம் விளையும் பூமியடி

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “இன்னல்” இச்சொல்லின் பொருள்?

  1. மகிழ்ச்சி
  2. கன்னல்
  3. துன்பம்
  4. இன்பம்

விடை : துன்பம்

2. “கும்மியடி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. கும்மி + யடி
  2. கும் + மியடி
  3. கும் + மடி
  4. கும்மி + அடி

விடை : கும்மி + அடி

3. “ஆனந்தம்” இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. மகிழ்ச்சி
  2. வருத்தம்
  3. அன்பு
  4. கோபம்

விடை : வருத்தம்

4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்?

  1. தேசமடி – பூமியடி
  2. போற்றிடடி – காத்திடடி
  3. கும்மியடி – கோடி
  4. போனதடி – போற்றிடவே

விடை : போனதடி – போற்றிடவே

பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

4th Standard 3rd Term Tamil Book Back Questions

  • தேசமடி – பூமியடி – கும்மியடி – போனதடி
  • போற்றிடடி – காத்திடடி – வாழ்ந்திடடி

பொருத்துக

1. பாரதம், தேசம் இன்னல்
2. ஆனந்தம், சந்தோஷம் அன்னை
3. நெஞ்சம், உள்ளம் மகிழ்ச்சி
4. துன்பம், துயர் நாடு
5. தாய், அம்மா மனம்
விடை:- 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

Lesson 5: கணினி உலகம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. சார்லஸ் கண்டறிந்த அறிவியல் கருவி?

  1. தொலைக்காட்சி
  2. கணினி
  3. கைப்பேசி
  4. மடிக்கணினி

விடை : கணினி

2. “இப்போதெல்லாம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. இப்போது + எல்லாம்
  2. இப்போ + எல்லாம்
  3. இப்போதே + எல்லாம்
  4. இப்போ + வெல்லாம்

விடை : இப்போது + எல்லாம்

3. “நினைவகம்” இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை?

  1. நினை + வகம்
  2. நினை + அகம்
  3. நினைவு + வகம்
  4. நினைவு + அகம்

விடை : நினைவு + அகம்

4. “மின் + அஞ்சல்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

  1. மின்அஞ்சல்
  2. மின்னஞ்சல்
  3. மினஅஞ்சல்
  4. மினஞ்சல்

விடை : மின்னஞ்சல்

5. “பதிவேற்றம்” இச்சொல்லின் பொருள்?

  1. தகவல் ஆராய்தல்
  2. தகவல் வரிசைப்படுத்துதல்
  3. தகவல் பதிவுசெய்தல்
  4. தகவல் பெறுதல்

விடை : தகவல் பதிவுசெய்தல்

குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?

4th Standard 3rd Term Tamil Book Back Questions

1. காட்சிகளைக் காண்பது

விடை : திரை

2. செய்தியை குறிக்கும் வேறு பெயர்

விடை : தரவு

3. படங்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது

விடை : புலனம்

4. கணினியின் தொடர்ச்சியான வலை அமைப்பு

விடை : வலைத்தளம்

5. தகவல்களைப் பதிவு செய்தல்

விடை : பதிவேற்றம்

மொழி விளையாட்டு கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?

4th Standard 3rd Term Tamil Book Back Questions
கைக்குட்டை கைத்தடி கையுறை

 

Lesson 6: மலையும் எதிரொலியும்

விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?

1. வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்?

விடை : தட்டு

2. உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?

விடை : மலை

3. நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன். தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?

விடை : ஆறு

4. நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?

விடை : கண்ணாடி

5. தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?

விடை : விமானம்

மொழியோடு விளையாடு: குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி

1. மூன்றெழுத்துச் சொல் நடு எழுத்து எடுத்து விட்டால் படுக்கச் சொல்லும் காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்

விடை : பட்டு

2. நான்கெழுத்துச் சொல் முதல் இரண்டு எழுத்து விடச்சொல்லும் கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார் முதலும் கடையும் வித்தாகும்.

விடை: விடுகதை

3. ஐந்தெழுத்துச் சொல் முதல் இரண்டும் இனிக்கும் கடைசி மூன்றும் பறக்கும் முதலும் கடையும் தேடும் அது என்ன?

விடை: தேன்சிட்டு

கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிக:

1. குழந்தை சிரித்தது.

விடை : குழந்தை

2. கண்ணன் படம் வரைந்தான்.

விடை : கண்ணன்

3. பூங்கோதை பள்ளி சென்றாள்.

விடை : பூங்கோதை

4. அண்ணன் தம்பிக்கு உதவினான்.

விடை : அண்ணன்

5. பறவைகள் வானில் பறந்தன.

விடை : பறவைகள்

6. பசு புல் மேய்ந்தது

விடை : பசு

கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளை கண்டறிக:

1. அவர் சிறந்த மருத்துவர்.

விடை : பெயர்ப் பயனிலை

2. என்னை அழைத்தவர் யார்?

விடை : வினாப் பயனிலை

3. அருளரசன் நல்ல மாணவன்.

விடை : பெயர்ப் பயனிலை

4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.

விடை : வினைப் பயனிலை

5. முக்கனிகள் யாவை?

விடை : வினாப் பயனிலை

6. புலி உறுமியது

விடை : வினைப் பயனிலை

Lesson 7: நீதிநெறி விளக்கம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘நவை’ என்னும் சொல்லின் பொருள்?

  1. அச்சம்
  2. மகிழ்ச்சி
  3. வருத்தம்
  4. குற்றம்

விடை : குற்றம்

2. ‘அவையஞ்சி’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. அவைய + அஞ்சி
  2. அவை + அஞ்சி
  3. அவை + யஞ்சி
  4. அவ் + அஞ்சி

விடை : அவை + அஞ்சி

3. “இன்னலம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இன் + னலம்
  2. இன் + நலம்
  3. இனிமை + நலம்
  4. இனிய + நலம்

விடை : இனிமை + நலம்

4. ‘கல்லார்’ இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. படிக்காதவர்
  2. கற்றார்
  3. அருளில்லாதவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கற்றார்

முதல் எழுத்து ஒன்றிவரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  1. வையஞ்சி – வையஞ்சா
  2. ல்வியும் – ல்லார்
  3. பூத்தலின் – பூவாம
  4. வையஞ்சி – ல்கூர்ந்தார்

மொழியோடு விளையாடு: குறிப்புகளைப் படி. சொல்லிலிருந்தே சொல்லைக் கண்டுபிடி

விலங்குகள் வாழுமிடம் பாலைவனம் வனம்
பூவின் வேறு பெயர் பொன்மலர் மலர்
பிறருக்குக் கொடுப்பது கொடைக்கானல் கொடை
விலங்குகளுக்கு மட்டும் உண்டு வௌவால் வால்
பால் தரும் வீட்டுவிலங்கு கடற்பசு பசு

சங்கு சக்கரத்தைச் சுழற்றி கல்வியின் பெருமைகளை உணர்த்தும் சொற்றொடர்களை முறையாக எழுதுக

4th Standard 3rd Term Tamil Book Back Questions

1. கல்வி கண் போன்றது

2. கல்வி நிகிர் ஏதுமில்லை

3. கல்வியே அழியாச் செல்வம்

Lesson 8: உறவுமுறைக் கடிதம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. |“நற்பண்பு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. நல்ல + பண்பு
  2. நற் + பண்பு
  3. நல் + பண்பு
  4. நன்மை + பண்பு

விடை : நல்ல +பண்பு

2. பின்வருவனவற்றுள் எது உள்ளரங்க விளையாட்டு இல்லை?

  1. தாயம்
  2. ஐந்தாங்கல்
  3. பல்லாங்குழி
  4. கபடி

விடை : கபடி

3. “பாரம்பரியம்” இச்சொல்லுக்குரிய பொருளைத் தராத சொல்?

  1. அண்மைக்காலம்
  2. தொன்றுதொட்டு
  3. தலை முறை
  4. பரம்பரை

விடை : அண்மைக்காலம்

உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவன. சங்க காலத்தில் இளையரும் முதியவரும் பலவகையான விளையாட்டுகளிலும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டனர். அவற்றுள் ஒன்று, ஏறு தழுவுதல். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், கூரிய கொம்புகளை உடைய காளைகளை அடக்குவதனை வீர விளையாட்டாகக் கருதினர்.

1. ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன யாவை?

விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன

2. ஏறு தழுவுதல் என்றால் என்ன?

காளைகளை அடக்குதல் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் எனப்படும்

3. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள எதிர்ச்சொற்களை எழுதுக.

இளையரும் x முதியவரும்

4. ஏறு தழுவுதல் எந்த நிலத்துடன் தொடர்புடையது?

ஏறு தழுவுதல் முல்லை நிலத்துடன் தொடர்புடையது

5. நிரப்புக.

ஏறு தழுவுதல் என்பது, ———— விளையாட்டு. (உள்ளரங்க/ வெளியரங்க)

விடை : வெளியரங்க

மொழியோடு விளையாடு: உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைக் கட்டத்தில் கண்டறிந்து எழுதுக.

Class 4th 3rd Term Tamil Book Back Questions

கிளித்தட்டு பம்பரம் பல்லாங்குழி
தாயம் சடுகுடு ஆடுபுலி
ஐந்தாங்கல் கிட்டிப்புள் காயா பழமா

Lesson 9: அறிவுநிலா

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘தினமும்’ என்ற சொல்லின் பொருள்?

  1. நாள்தோறும்
  2. வேலைதோறும்
  3. மாதந் தோறும்
  4. வாரந்தோறும்

விடை : நாள்தோறும்

2. “பனிச்சறுக்கு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. பனி + சறுக்கு
  2. பனிச் + சறுக்கு
  3. பன + சறுக்கு
  4. பன் + சறுக்கு

விடை : பனி + சறுக்கு

3. “வேட்டை + நாய்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

  1. வேட்ட நாய்
  2. வேட்நாய்
  3. வேட்டைநாய்
  4. வேட்டநாய்

விடை : வேட்டைநாய்

எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?

1. குறைய இழைத்த
2. மெல்லிய முடியாத
3. முடியும் மெதுவாக
4. விரைவாக தடித்த
5. கொழுத்த நிறைய
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 4 – அ

மொழியோடு விளையாடு

1. புகைவண்டி

  1. புகை
  2. வடி
  3. வண்டி
  4. கை
  5. வகை
  6. கைவண்டி

2. கதைப்பாட்டு

  1. கதை
  2. பாட்டு
  3. பாடு
  4. தை
  5. பாதை
  6. பாப்பா

3. பருத்தி ஆடைகள்

  1. பருத்தி
  2. ஆடை
  3. கடை
  4. படை
  5. ஆதி
  6. கரு

கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.

4th Standard 3rd Term Tamil Book Back Questions

 

  1. சதம் – நூறு
  2. சித்திரம் – ஓவியம்
  3. நட்சத்திரம் – விண்மீன்