5th Standard 2nd Term Tamil Book Solution
Tamil Nadu 5th Standard 2nd Term Tamil Book Answers are available here. You can get the answer to the 5th Tamil 2nd Term New Book 2022 – 2023.
Download Links of 5th Tamil Books – Click Here
1. அறிவியல்/ தொழில்நுட்பம்
1.1. எதனாலே, எதனாலே? 1.2. அறிவின் திறவுகோல் 1.3. நானும் பறக்கப் போகிறேன் 1.4. மூவிடப்பெயர்கள் 2. நாகரிகம்/ பண்பாடு 2.1. திருக்குறள் 2.3. கங்கை கொண்ட சோழபுரம் 2.4. இணைப்புச்சொற்கள் 3. தொழில்/ வணிகம் 3.1. உழவுப் பொங்கல் 3.2. விதைத் திருவிழா 3.3. நேர்மை நிறைந்த தீர்ப்பு |
இயல் 1: அறிவியல்/தொழில்நுட்பம்
1.1 எதனாலே, எதனாலே?
I. பொருத்துக
1. விண்மீன் | உதிரும் |
2. ரோஜாப்பூ | பறக்கும் |
3. மேகம் | ஒளிரும் |
4. இலை | சிவக்கும் |
5. பறவை | கறுத்திருக்கும் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ |
1.2 அறிவின் திறவுகோல்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. “அறிவியலறிஞர்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- அறிவியல் + அறிஞர்
- அறிவு + அறிஞர்
- அறிவியல் + லறிஞர்
- அறிவியல் + அறிஞர்
விடை : அறிவியல் + அறிஞர்
2. “பேருண்மை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- பேர் + உண்மை
- பெரிய + உண்மை
- பேரு + உண்மை
- பெருமை + உண்மை
விடை : பெருமை + உண்மை
3. “பத்து + இரண்டு” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____________
- பன்னிரெண்டு
- பன்னெண்டு
- பன்னிரண்டு
- பன்னண்டு
விடை : பன்னிரெண்டு
4. “வேகமாக” இச்சொல்லுக்குரிய பொருள் ____________________
- மெதுவாக
- விரைவாக
- கவனமாக
- மெலிதாக
விடை : விரைவாக
5. “மரப்பலகை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________
- மரப் + பலகை
- மர + பலகை
- மரம் + பலகை
- மரப்பு + பலகை
விடை : மரம் + பலகை
II. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
- நீராவி = நீர் + ஆவி
- புவியீர்ப்பு = புவி + ஈர்ப்பு
III. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
- சமையல் + அறை = சமையலறை
- இதயம் + துடிப்பு = இதயத்துடிப்பு
IV. பொருத்துக.
1. ஐசக் நியூட்டன் | நீராவி இயந்திரம் |
2. இரேனே லென்னக் | புவியீர்ப்பு விசை |
3. ஜேம்ஸ் வாட் | ஸ்டெதஸ்கோப் |
விடை : 1 – ஆ, 2 -இ, 3 – அ |
1.4 மூவிடப்பெயர்கள்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. __________ எங்குச் சென்றீர்கள்?
- நீ
- நாங்கள்
- நீங்கள்
- அவர்கள்
விடை : நீங்கள்
2. செடியில் பூக்கள் பூத்திருந்தன. ——— அழகாக இருந்தன.
- அது
- அவை
- அவள்
- அவர்
விடை : அவை
3. இந்த வேலையை ———- செய்தேன்.
- அவன்
- அவர்
- நான்
- அவள்
விடை : நான்
II. பொருத்துக.
1. தன்மைப் பெயர் | அவர்கள் |
2. முன்னிலைப் பெயர் | நாங்கள் |
3. படர்க்கைப் பெயர் | நீங்கள் |
விடை : 1 – ஆ, 2 -இ, 3 – அ |
III. உரைப்பகுதியில் பொருத்தமான இடப்பெயர்களை நிரப்புக.
தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது. ——- எல்லாரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை ——–க்கண்டதும் ———– யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் ——— அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் —– யார்? இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.
விடை :-
தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது. அது எல்லாரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை அவர்களைக்கண்டதும் நீீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் நாங்கள் அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.
IV. தொடர்களிலுள்ள பெயர்ச்சொற்களைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என வகைப்படுத்துக.
1. நீங்கள் எங்குச் சென்றீர்கள்?
விடை : நீங்கள் – முன்னிலை
2. குழலி படம் வரைந்தாள்.
விடை : குழலி – படர்க்கை
3. கதிர் நேற்று வரவில்லை.
விடை : கதிர் – படர்க்கை
4. நான் ஊருக்குச் சென்றேன்.
விடை : நான் – தன்மை
5. மயில் ஆடியது.
விடை : மயில் – படர்க்கை
V. தொடரில் அமைத்து எழுதுக.
1. பறவை
விடை : வானில் பறவை பறந்து சென்றது.
2. விமானம்
விடை : சென்னைக்கு விமானம் மூலம் பயணம் செய்தோம்.
3. முயற்சி
விடை : முயற்சி இல்லையெனில் முன்னேற்றம் இல்லை.
4. வானவில்
விடை : மழைக்கு முன்னும், பின்னும் வானவில் தோன்றும்.
5. மின்மினி
விடை : மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிர்கின்றன.
VI. பொருத்துக
1. மின்மினி | சிறகு |
2. இறகின் தொகுப்பு | ஹைட்ரஜன் அணுக்கள் |
3. வானவில் | பறவையின் இறகு |
4. காற்றுப்பைகள் | லூசிஃபெரேஸ் என்சைம் |
5. விண்மீன் | நீர்த்துளி எதிரொளிப்பு |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ |
VI. வண்ண எழுத்திலுள்ள பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் எழுதுக.
1. நான் தபால் நிலையத்திற்குச் சென்றேன்.
விடை : அஞ்சலகம்
2. ஓய்வு நேரத்தில் ரேடியோ கேட்பேன்.
விடை : வானொலி
3. பஞ்சாயத்துக் கூட்டம் நாளை கூடுகிறது.
விடை : கிராமசபை
4. ஹோட்டலில் உணவு தயாராக உள்ளது.
விடை : உணவகம்
5. அலமாரியில் துணிகள் உள்ளன.
விடை : அடுக்கறை
மொழியோடு விளையாடு
I. ஒரே ஓசையில் முடியும் பெயர்களைக் கொண்ட படங்களை இணைக்க.
![]() |
![]() |
![]() |
வலை | வெற்றிலை | மலை |
![]() |
![]() |
![]() |
கரம் | அரம் | மரம் |
![]() |
![]() |
![]() |
பூனை | யானை | பானை |
II. சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குவோம்
பட்டுக்கோட்டை
- பட்டு
- கோட்டை
- கோடை
- படை
- படு
- கோடு
- பட்டை
III. குறிப்புகளைப் படித்து, விடை கண்டறிக
1. பறக்கவிட்டு மகிழ்வோம்.
விடை : பட்டம்
2. நீல நிறத்தில் காட்சியளிக்கும்.
விடை : வானம்
3. கடற்பயணத்திற்கு உதவும்.
விடை : கப்பல்
4. படகு செலுத்த உதவும்.
விடை : துடுப்பு
5. உயிரினங்களுள் ஒன்று.
விடை : குதிரை
6. இதன் உதவியால் வானில் பயணிக்கலாம்.
விடை : விமானம்
7. பறவைகள் இதுபோன்ற உடலமைப்பு கொண்டுள்ளது.
விடை : படகு
8. ஏழு நிறங்கள் கொண்டது.
விடை : வானவில்
9. இராமன் இதன் மூலம் எதிரொளிப்பு விளையாட்டு விளையாடினான்.
விடை : வில்
10. பொழுது விடிவது ……..
விடை : காலை
IV. பாடப்பகுதியில் ‘சுற்றும்முற்றும், ஓட்டமும்நடையுமாய்‘ என்று சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு இணைச்சொற்கள் என்று பெயர். இவைபோன்று நான்கு சொற்கள் எழுதுக.
- கையும்களவுமாய்
- கூத்தும்கும்மாளமுமாய்
- எலியும்பூனையுமாய்
- குறுக்கமறுக்க
V. ஒரே ஓசையுடைய சொற்களின் பொருள் எழுதுக.
1. தேநீர் = தேயிலையைக் கொண்டு கொதிக்க வைத்த நீர் (டீ)
தேனீர் = தேனும் நீரும் கலந்த நீர்
2. பரவை = கடலின் மறுபெயர் பரவை
பறவை = புறா பறவை இனத்தை சேர்ந்தது
3. கோரல் = ஒரு செய்தியை கூறுவதை கோரல் என்பர்
கோறல் = விலங்கினை கொல்லுவதை கோறல் என்பர்
4. வன்னம் = எழுத்தை குறிக்கும் வேறொரு பெயர்
வண்ணம் = நிறத்தினை வண்ணம் என்பர்
5. எதிரொலி = எதிரொலி மூலம் கடல் மட்டத்தை கணக்கிடலாம்
எதிரொளி = பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி
VI. ஒரு சொல்லைப் பிரித்து இரு பொருள் எழுதுக.
1. பலகை = மரப்பலகை
பல + கை = பல கைகள்
2. அந்தமான் = அந்தமான் தீவு
அந்த + மான் = அந்த மான் அழகாக உள்ளது
3. தாமரை = தாமரை மலர்
தா + மரை = தாவுகின்ற மான்
4. பழம்பால் = பழமையான பால்
பழம் + பால் = பழமும், பாலும் உடலுக்கு நல்லது
5. மருந்துக்கடை = நாட்டு மருந்துக்கடை
மருந்து + கடை= மருந்து கடைகளில் கிடைக்கும்
இயல் 2: நாகரிகம்/பண்பாடு
2.1 திருக்குறள்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. ‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள் …………………………
- உயர்ந்த
- பொலிந்த
- அணிந்த
- அயர
விடை : உயர்ந்த
2. “பெருஞ்செல்வம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
- பெருஞ் + செல்வம்
- பெரும் + செல்வம்
- பெருமை + செல்வம்
- பெரு + செல்வம்
விடை : பெருமை + செல்வம்
3. “பண்புடைமை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. …………………………
- பண் + புடைமை
- பண்பு + புடைமை
- பண்பு + உடைமை
- பண் + உடைமை
விடை : பண்பு + உடைமை
4. “அது + இன்றேல்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………..
- அதுஇன்றேல்
- அதுயின்றேல்
- அதுவின்றேல்
- அதுவன்றேல்
விடை : அதுஇன்றேல்
5. பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் …………………………
- நயன்
- நன்றி
- பயன்
- பண்பு
விடை : நயன்
II. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
- இவ்விரண்டும் = இ + இரண்டும்
- மக்கட்பண்பு = மக்கள் + பண்பு
III. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.
- அன்புடைமை
- ஆசை
- இசை
- ஈகை
- உளி
- ஊதல்
- எறும்பு
- ஏணி
IV. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
- நயனொடு – பயனுடையார்,
- அரம்போலும் – மரம்போல்வர்,
- அன்புடைமை – என்னும் ,
- பண்பு – மண்புக்கு
V. அன்புடைமை, பண்புடைமை போல் ஈற்றில் ‘மை‘ என முடியும்படி நான்கு சொற்கள் எழுதுக.
- சொல்லாமை
- கேளாமை
- பொல்லாமை
- அறிவுடைமை
2.2 தமிழர்களின் வீரக்கலைகள்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது ………………………..
- சிலம்பம்
- மற்போர்
- மட்டைப்பந்து
- நீர் விளையாட்டு
விடை : மட்டைப்பந்து
2. ‘மஞ்சு விரட்டு‘ என்பதைக் குறிக்கும் விளையாட்டு ………………………….
- மற்போர்
- ஏறுதழுவுதல்
- சிலம்பாட்டம்
- வில்வித்தை
விடை : ஏறுதழுவுதல்
3. “மற்போர்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………….
- மற் + போர்
- மள் + போர்
- மல் + போர்
- மறு + போர்
விடை : மறு + போர்
4. “தன் + காப்பு” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ………………………
- தன்காப்பு
- தண்காப்பு
- தனிகாப்பு
- தற்காப்பு
விடை : தற்காப்பு
5. ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ……………………….
- சிலம்பாட்டம்
- வில்வித்தை
- ஏறுதழுவுதல்
- வழுக்கு மரம் ஏறுதல்
விடை : வில்வித்தை
II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
- சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம்
- வீரம் + கலை = வீரக்கலை
III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
- தனக்கென்று = தனக்கு + என்று
- கொடைத்திறம் = கொடை + திறம்
IV.. பொருத்துக
1. காளை | கம்பு |
2. சிலம்பம் | மூங்கில் |
3. சிறுவாரைக்கம்பு | திமில் |
4. தாளாண்மை | உழவு |
5. வேளாண்மை | முயற்சி |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – -உ, 5 – ஈ |
V. எதிர்ச்சொல் உருவாக்குக.
- இன்பம் x துன்பம்
- இயற்கை x செயற்கை
- வாழ்தல் x வீழ்தல்
- இன்சொல் x வன்சொல்
- குறைந்த x நிறைந்த
- போற்றும் x தூற்றும்
2.4 இணைப்புச்சொற்கள்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. ‘அதனால்‘ என்பது __________
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- உரிச்சொல்
- இணைப்புச்சொல்
விடை : இணைப்புச்சொல்
2. கருமேகங்கள் வானில் திரண்டன __________________ மழை பெய்யவில்லை. இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல்
- எனவே
- ஆகையால்
- ஏனெனில்
- ஆயினும்
விடை : ஆயினும்
3. கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ___________ அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்
- அதனால்
- ஆதலால்
- இருந்தபோதிலும்
- ஆனால்
விடை : இருந்தபோதிலும்
II. கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக.
1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்)
விடை : நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம்.
2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை. (ஆனால்)
விடை : வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை.
3. பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்)
விடை : பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின
4. முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்)
விடை : முகில் பள்ளிக்குச் செல்லவில்லை ஏனெனில் அவனுக்கு உடல்நலமில்லை.
5. அறிவுவளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே)
விடை : அறிவுவளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும்.
III. கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச்சொற்களை இணைத்து எழுதுக
(ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, பிற)
அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ________, சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ________, அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. ________, அதனைக் கண்டு ________ விலங்குகள் அஞ்சின. ________ அது தனியாகக் குகையில் வசித்தது. ________, அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. ________, குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் ________ விலங்குகள் அஞ்சியோடின. ________, அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா
விடை:-
அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆனால், சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. அதனால், அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. ஆகையால் அது தனியாகக் குகையில் வசித்தது. அதனால், அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. எனவே, குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. ஏனெனில், அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா!
IV. தொடரில் அமைத்து எழுதுக.
1. வெற்றி
விடை : ராமு கபாடி விளையாட்டில் வெற்றி பெற்றான்.
2. நாகரிகம்
விடை : ஆற்றாங்கரை நாகரிகம் வளர காரணம்
3. உழவுத்தொழில்
விடை : உழவுத்தொழில் கிராமங்களில் மக்கள் அதிகமாக செய்யப்படும் தொழில்
4. கலையழகு
விடை : நடனக்கலை கலையழகு உள்ளது.
V. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. மக்களுக்கு உரிய பண்பில்லாதவர் ____________________ போன்றவர் என வள்ளுவர் கூறுகிறார்.
விடை : மரம்
2. கங்கை கொண்ட சோழபுரம் ____________________ என்று புலவர்களால் போற்றப்பட்டது.
விடை : கங்காபுரி, கங்காபுரம்
3. கம்பைக் குறிக்கும் வீரக்கலை ____________________ ஆகும்.
விடை : சிலம்பாட்டம்
VI. பிறமொழிச் சொற்களையும் பேச்சுத்தமிழையும் நீக்கிச் சரியாக எழுதுக.
1. டுமாரோ ஈவினிங் என் ஸிஸ்டர் ஊருக்குப் போவா.
விடை : நாளை மாலை என் தங்கை ஊருக்குச் செல்வாள்.
2. ஷேர் ஆட்டோவில் பைவ் பாசஞ்சர்ஸ் இருக்காங்க.
விடை : பகிர் தானியங்கியில் ஐந்து பயணிகள் உள்ளனர்.
3. என் வீட்டில் வாசிங் மிஷின் ரிப்பேராக இருக்கு.
விடை : என் வீட்டில் துணி துவைக்கும் இயந்திரம் பழுதாக உள்ளது.
VII. பொருத்துக.
தொடர்வண்டி | ![]() |
மிதிவண்டி | |
தானியங்கி | |
இருசக்கர வண்டி | |
மகிழ்ந்து | |
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ |
மொழியோடு விளையாடு
I. சுழலட்டையைப் பயன்படுத்திக் குறிப்புகளுக்கு விடை எழுதுக.
1. உடலுறுப்புகளுள் ஒன்று
விடை : கண்
2. உப்பு நீர் அதிகம் உள்ள இடம்
விடை : கடல்
3. அழியாத செல்வம்
விடை : கல்வி
4. பொருள்கள் வாங்கும் இடம்
விடை : கடை
5. சமையலுக்குப் பயன்படுவது
விடை : கடுகு
6. வீடு கட்டப் பயன்படுவது
விடை : கல்
7. ஓவியம் என்பது
விடை : கலை
8. பாரதியார் இயற்றியவை
விடை : கவிதை
II. நீக்குவோம்! சேர்ப்போம்!
1. விதையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
விதை, கதை = விடுகதை
2. சபையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
கரம், சபை = கரம்பை
3. விலையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
தலை, விலை = தலைவி
4. ஆசையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
ஆசை, மரம் = ஆலமரம்
5. கடையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
காரம், கடை = காரவடை
IX. கீழ்க்காணும் குறட்பாக்களிலுள்ள சொற்களைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
உயிர் எழுத்து இடம்பெறாத சொற்கள்
நயனொடு, நன்றி, புரிந்த, பயனுடையார், பண்பு, பாராட்டும், குடிப்பிறத்தல், வழக்கு
மெய் எழுத்து இடம்பெறாத சொற்கள்
உலகு, உடைமை, நயனொடு
இயல் 3: தொழில்/வணிகம்
3.1 உழவுப் பொங்கல்
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “வையகம்” என்பதன் பொருள்
- ஊர்
- வயல்
- உலகம்
- கிராமம்
விடை : உலகம்
2. “நலனெல்லாம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- நலன் + எல்லாம்
- நல + னெல்லாம்
- நலன் + னெல்லாம்
- நலம் + எல்லாம்
விடை : நலன் + எல்லாம்
3. “நிறைந்தறம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- நிறைந்து + அறம்
- நிறைந்த + அறம்
- நிறை + அறம்
- நிறை + தறம்
விடை : நிறைந்து + அறம்
4. ‘இன்பம்‘ இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________
- மகிழ்ச்சி
- களிப்பு
- கவலை
- துன்பம்
விடை : துன்பம்
II. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக.
- உணவு – உயிரோ,
- பணமும் – பயிர்கள்
- உண்டு – உழவு
- இன்றேல் – இல்லால்
III. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
- இல்லால் – செல்லாது
- பழகும் – உழவு
- அணியவரும் – துணிந்திடுவோம்
- உண்டு – கொண்டு
IV. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
- உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம்
- பொங்குகவே – தங்குகவே
- உணவுதரும் – அணியவரும்
- விழலாகும் – விருந்தாகும்
3.2 விதைத் திருவிழா
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “அனுமதி” இச்சொல் குறிக்கும் பொருள் ________________
- கட்டளை
- இசைவு
- வழிவிடு
- உரிமை
விடை : இசைவு
2. “விளம்பரத்தாள்கள்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- விளம்பர + தாள்கள்
- விளம்புரத்து + தாள்கள்
- விளம்பரம் + தாள்கள்
- விளம்பு + தாள்கள்
விடை : விளம்பரம் + தாள்கள்
3. “ஆலோசித்தல்” இச்சொல்லுக்குரிய பொருள் _______________
- பேசுதல்
- படித்தல்
- எழுதுதல்
- சிந்தித்தல்
விடை : சிந்தித்தல்
4. “தோட்டம் + கலை” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________
- தோட்டம்கலை
- தோட்டக்கலை
- தோட்டங்கலை
- தோட்டகலை
விடை : தோட்டக்கலை
5. “பழங்காலம்” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்———————–
- பழைய காலம்
- பிற்காலம்
- புதிய காலம்
- இடைக்காலம்
விடை : பழைய காலம்
II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
- வழிபாடு + கூட்டம் = வழிபாட்டுக்கூட்டம்
- வீடு + தோட்டம் = வீ ட்டுத்தோட்டம்
III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
- அழைப்பிதழ் = அழைப்பு + இதழ்
- விதைத்திருவிழா = விதை + திருவிழா
IV. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை——-.
விடை : 27
2. விதைகள்——– ஆனவையாக இருத்தல் வேண்டும
விடை : தரம்
3. கொண்டைக்கடலை என்பது, ———-ஒன்று
3.4 அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி
I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
1. அடிபட்ட கால் _________ என வலித்தது
- கடகட
- விண்விண்
- படபட
- கணகண
விடை : விண்விண்
2. காலைப்பொழுது _________ வென புலர்ந்தது.
- பலபல
- தடதட
- புலபுல
- மளமள
விடை : புலபுல
3. குயில் _________ எனக் கூவியது.
- கீச்கீச்
- கூகூ
- கொக்கொக்
- பக்பக்
விடை : கூகூ
4. மணமக்களை _________ என வாழ்த்தினர்
- வருக வருக
- வாழ்க வாழ்க
- வீழ்க வீழ்க
- வளர்க வளர்க
விடை : வாழ்க வாழ்க
II. பொருத்துக
1. கலகலவென | விரைவுக்குறிப்பு |
2. நறநறவென | ஒலிக்குறிப்பு |
3. தடதடவென | சினக்குறிப்பு |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ |
III. கீழ்க்காணும் உரைப்பகுதிக்குப் பொருந்துமாறு இரட்டைக்கிளவி/ அடுக்குத்தொடர்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
(தபதப, துள்ளித் துள்ளி, கூட்டங்கூட்டம், படபட, சலசல, சடசட, கருகரு, பளபள, மடமட, தாவித் தாவி, பொத்து பொத்து)
அடர்ந்த காடு. ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்த குரங்குகள், திடீரெனக் குரலெழுப்பியவாறு, ஒவ்வொரு மரமாக ஏறியும்இறங்கியும் கிளைக்குக் கிளை தாவித் தாவிச் சென்றன. அவை எழுப்பிய ஓசையினால், பறவைகள் தத்தம் சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டு பறந்தன. அருகிலிருந்த சிற்றாற்றில், நீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நீர்நிலை தேடிக் கூட்டங்கூட்டமாக வந்த யானைகள், அந்த ஆற்றைக்கண்டு, களிநடனமிட்டன. அருகில் வளர்ந்திருந்த தென்னை மரமொன்றிலிருந்த தேங்காய்கள், பொத்து பொத்து எனக் கீழே விழுந்தன. அந்த ஓசையைக் கேட்டு, மிரண்ட யானைக்கன்று படபடவென ஓட, அருகிலிருந்த மான்கள் அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடின. சூல்கொண்ட மேகங்கள், கருகருவெனத் திரள, பளபளவென மின்னல் மின்னியது. சற்றுநேரத்தில், சடசட வென மழை பெய்ய, குரங்குகள் மரத்தின் மீது மடமடவென ஏறின.
IV. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
1. திருவிழா
விடை : எங்கள் ஊரில் கோவில் திருவிழா நடைபெறுகிறது
2. இரசாயன விதை
விடை : இரசாயன விதை மண்ணின் தன்மை கெடுக்கிறது
3. விளம்பரப் பலகை
விடை : விளம்பரப் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.
4. வீட்டுத் தோட்டம்
விடை : இந்த காய்கறிகள் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பறிக்கப்பட்டவை
5. பழங்காலம்
விடை : மனிதன் பழங்காலத்தில் இலைதழைகளை ஆடையாக உடுத்தினான்
V. ஒருபொருள் தரும் பல சொற்களை எழுதுக
- வயல் = செய், கழனி
- உழவு = உழுதல், பயிர்தொழில்
- மகிழ்ச்சி = உவகை, சந்தோஷம்
- வீடு = மறுப் பிறவியின்மை, இல்லம்
- பேசு = பேசுதல், திட்டுதல்
VI. உழவுத் தொழிலுடன் தொடர்புடைய பழமொழிகளின் சொற்கள் இடம் மாறியுள்ளன. அவற்றை முறைப்படுத்தி எழுதுக
- பட்டம், தேடி, ஆடிப், விதை, = ஆடிப்பட்டம் தேடி விதை
- தேடு, ஏரைத், தேடின், சீரைத் = சீரைத் தேடின் ஏரைத் தேடு
- உழுவதை, அகல, விட, உழு, ஆழ = அகல உழுவதை விட ஆழ உழு
VII. கீழ்க்காணும் பாடலிலுள்ள தொகைச்சொற்களை விரித்து எழுதுக. இருவினை அறிந்து கொள்வோமே!
முத்தமிழ் கற்றுத் தேர்வோமே!
நாற்றிசை தேடிச் செல்வோமே!
ஐந்திணை சுற்றி வருவோமே!
அறுசுவை உண்டு மகிழ்வோமே!
- இருவினை = நல்வினை, தீவினை
- முத்தமிழ் = இயல், இசை, நாடகம்
- நாற்றிசை = கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
- ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
- அறுசுவை = துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு
VIII. குறிப்புகளைப் படித்துத் ‘தை‘ என முடியும் சொற்களை எழுதுக.
1. மெதுவாக ஊர்ந்து செல்லும் ஓர் உயிரி
விடை : நத்தை
2. பொதி சுமக்கும் விலங்கு
விடை : கழுதை
3. பகலில் கண் தெரியாப் பறவை
விடை : ஆந்தை
4. காய், கனியில் இருக்கும்
விடை : விதை
IX. கீழ்க்காணும் தொடரைப் பல தொடர்களாக மாற்றுக.
1. மணமலர் படம் வரைந்தாள்
- மணமலர் படம் வரைந்தாளா?
- மணமலரா படம் வரைந்தாள்?
- மணமலர் படம் வரை
- மணமலர் படம் வரைவாயா?
2. கதிரவன் வீட்டுக்குச் சென்றான்
- கதிரவன் வீட்டுக்குச் சென்றானா?
- கதிரவன் வீட்டுக்குச் செல்
- கதிரவனா வீட்டுக்குச் சென்றான்!
- கதிரவன் வீட்டுக்குச் செல்வாயா?
- கதிரவன் வீட்டுக்குச் சென்றாயா?
X. புதிய சொற்களை உருவாக்குக.
1. விளையாட்டுத் திடல்
விளை | விளையாட்டு |
விடல் | விடு |
வில் | விட்டு விட்டு |
விடுதி | திடல் |
2. பல்கலைக்கழகம்
பல் | கலை |
கழகம் | பழம் |
கல் | கபம் |
3. கவிதைத்திரட்டு
கவிதை | கவி |
தை | திரட்டு |
திட்டு | கட்டு |
கதை | விதை |