5th Standard 2nd Term Tamil Book Solution | New Syllabus 2024 – 2025

5th Standard 2nd Term Tamil Book Solution

Tamil Nadu 5th Standard 2nd Term Tamil Book Answers are available here. You can get the answer to the 5th Tamil 2nd Term New Book 2024 – 2025.

5th Standard Tamil Book 2nd Term Solution | New Syllabus Books

Download Links of 5th Tamil Books – Click Here

1. அறிவியல்/ தொழில்நுட்பம்

1.1. எதனாலே, எதனாலே?

1.2. அறிவின் திறவுகோல்

1.3. நானும் பறக்கப் போகிறேன்

1.4. மூவிடப்பெயர்கள்

2. நாகரிகம்/ பண்பாடு

2.1. திருக்குறள்

2.2. தமிழர்களின் வீரக்கலைகள்

2.3. கங்கை கொண்ட சோழபுரம்

2.4. இணைப்புச்சொற்கள்

3. தொழில்/ வணிகம்

3.1. உழவுப் பொங்கல்

3.2. விதைத் திருவிழா

3.3. நேர்மை நிறைந்த தீர்ப்பு

3.4. அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

3.5. அகர முதலி

இயல் 1: அறிவியல்/தொழில்நுட்பம்

1.1 எதனாலே, எதனாலே?

I. பொருத்துக

1. விண்மீன்உதிரும்
2. ரோஜாப்பூபறக்கும்
3. மேகம்ஒளிரும்
4. இலைசிவக்கும்
5. பறவைகறுத்திருக்கும்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

II. வினாக்களுக்கு விடையளிக்க.

1. வானவில் எப்படி தோன்றுகிறது?

வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.

2. கடலில் ஏன் அலைகள் உண்டாகின்றன?

பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.

1.2 அறிவின் திறவுகோல்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. அறிவியலறிஞர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. அறிவியல் + அறிஞர்
  2. அறிவு + அறிஞர்
  3. அறிவியல் + லறிஞர்
  4. அறிவியல் + அறிஞர்

விடை : அறிவியல் + அறிஞர்

2. மணித்துளி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. மணித் + துளி
  2. மணி + துளி
  3. மண் + துளி
  4. மனி + துளி

விடை : மணி + துளி

3. பத்து + இரண்டு இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. பன்னிரெண்டு
  2. பன்னெண்டு
  3. பன்னிரண்டு
  4. பன்னண்டு

விடை : பன்னிரெண்டு

4. வேகமாக இச்சொல்லுக்குரிய பொருள் _________

  1. மெதுவாக
  2. விரைவாக
  3. கவனமாக
  4. மெலிதாக

விடை : விரைவாக

5. மரப்பலகை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. மரப் + பலகை
  2. மர + பலகை
  3. மரம் + பலகை
  4. மரப்பு + பலகை

விடை : மரம் + பலகை

6. பேருண்மை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. பேர் + உண்மை
  2. பெரிய + உண்மை
  3. பேரு + உண்மை
  4. பெருமை + உண்மை

விடை : பெருமை + உண்மை

II. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. நீராவி = நீர் + ஆவி
  2. புவியீர்ப்பு = புவி + ஈர்ப்பு

III. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

  1. சமையல் + அறை = சமையலறை
  2. இதயம் + துடிப்பு = இதயத்துடிப்பு

IV. பொருத்துக.

1. ஐசக் நியூட்டன்நீராவி இயந்திரம்
2. இரேனே லென்னக்புவியீர்ப்பு விசை
3. ஜேம்ஸ் வாட்ஸ்டெதஸ்கோப்
விடை : 1 – ஆ, 2 -இ, 3 – அ

V. வினாக்களுக்கு விடையளிக்க.

1. மனிதனின் சிந்தனையால் எது வளரத் தொடங்கியது?

மனிதனின் சிந்தனையால் அறிவியல் வளரத் தொடங்கியது.

2. ஐசக் நியூட்டன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிய எந்த நிகழ்ச்சி காரணமாக இருந்தது?

  • ஐசக் நியூட்டன் சிறுவனாக இருக்கும்போது தன் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மரத்தினடியில் உட்கார்ந்திருந்தார்.
  • அப்போது, மரத்திலிருந்த ஒரு பறவை சிறகடித்துப் பறந்து செல்ல, திடீரென ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது.
  • நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? “ஆகா, நமக்கு ஓர் ஆப்பிள் கிடைத்ததே“ என்று மகிழ்ச்சியோடு உண்ணத் தொடங்கியிருப்போம் அல்லவா?
  • ஆனால், அவர், அப்படி நினைக்கவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே மேலே வானத்தை நோக்கிப் போகாமல் கீழிறங்கி வந்து விழுகிறது? என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்.
  • இதில் ஏதோ ஓர் இயற்கைச் சக்தி இருக்கவேண்டும் என எண்ணினான். இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தன் பிறந்தநாளில் முடிவு செய்தார்.
  • அன்று தன் பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். அன்று சிந்திக்கத் தொடங்கிய அவர் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்துப் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற சர் ஐசக் நியூட்டன்.
  • அவர், பூமிக்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவியல் அறிஞர் ஆவார்.

3. ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமான நிகழ்வு எது?

பூங்கா ஒன்றில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தார் மருத்துவர் ஒருவர். சிறுவனொருவன், ‘ஸீஸா‘ என்ற ஒருவகை மரப்பலகையின் மீது ஒரு முனையில் குண்டூசியால் கீறிக்கொண்டிருந்தான். லகையின் மறுமுனையில் தன் காதைப் பொருத்தி, எழும் ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்தான் மற்றொரு சிறுவன். பலகையின் ஒரு முனையில் குண்டூசியால் மெதுவாகக் கீறும்போது எழுந்த ஒலி, மறுமுனையில் மிகத் தெளிவாகக் கேட்பதைக் கண்டு அந்தச் சிறுவன் வியப்படைந்தான்.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அந்த மருத்துவர், சிறுவர்களின் செய்கையைக் கண்டார். அவர் உள்ளத்தில் மின்னல்போல் ஓர் ஒளிக்கீற்று தோன்றியது. ஏனெனில், நோயாளியின் இதயத் துடிப்பை எவ்வாறு துல்லியமாகக் கேட்கமுடியும் என்றுதானே
அவர் கவலைப்பட்டார்.  இந்நிகழ்வே ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

4. நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட் ஆவார்.

5. அறிவியலறிஞர்களிடம் உற்றுநோக்கும் திறன் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • ஐசக் நியூட்டன் ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் ஏன் மேலே நோக்கி செலலாமல் கீழே விழுந்தது என்பதை உற்று நோக்கியதால் புவிஈர்ப்பு விசையை கண்டறிந்தார்.
  • இரேனே லென்னக்,  பூங்கா ஒன்றில் சிறுவர்கள் “ஸீஸா” என்ற ஒருவகை மரப்பலகையின் மீது குண்டுசியால் கீறி விளையாடுவதை உற்று நோக்கியதால் தான் “ஸ்டெதஸ்கோப்” கருவியை கண்பிடிக்க முடிந்தது,
  • ஜேம்ஸ் வாட் சிறுவனாக இருந்தபோது, சமையலறையில் தேநீர் தயாரிப்பதற்காகக் கெட்டிலில் நீர் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். நீராவியன் உந்துதல் காரணமாக, கெட்டிலின் மூடி மேலெழும்பத் தொடங்கி. இதனை உற்று நோக்கியதால் தான் நீராவி என்ஜினையும் புகைவண்டியையும் கண்டுபிடிக்க முடிந்தது.

1.3 நானும் பறக்கப் போகிறேன்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. தன்னால் பறக்க முடியாததற்கு அமுதா கூறிய காரணம் என்ன?

பறவையை விட அதிக எடையுடன் நான் இருப்பதனால் தன்னால் பறக்க முடியாது அமுதா கூறினாள்.

2. பறப்பதற்கு ஏற்றவகையில் பறவையின் உடலமைப்பு எவ்வாறு உள்ளது?

பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. எடை குறைவாக உள்ளது. பறவைகளின் பின்புற வால்துடுப்பு போல் செயல்பட்டு திசைமாறிப் பறக்க உதவுகிறது. காற்றைக் கிழித்து மேலே பறக்க இறக்கைகளை உதவுகின்றன. இவ்வாறு பறப்பதற்கு ஏற்ற வகையில் பறவையின் உடலமைப்பு அமைந்துள்ளது.

3. பறக்கும் விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார், யார்?

பறக்கும் விமானத்தை ரைட் சகோதரர்களான வில்பர்ட் ரைட் மற்றும் ஆர்வில் ரைட் கண்டறிந்தார்கள். 

1.4 மூவிடப்பெயர்கள்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. ________ எங்குச் சென்றீர்கள்?

  1. நீ
  2. நாங்கள்
  3. நீங்கள்
  4. அவர்கள்

விடை : நீங்கள்

2. செடியில் பூக்கள் பூத்திருந்தன. ________ அழகாக இருந்தன.

  1. அது
  2. அவை
  3. அவள்
  4. அவர்

விடை : அவை

3. இந்த வேலையை ________ செய்தேன்.

  1. அவன்
  2. அவர்
  3. நான்
  4. அவள்

விடை : நான்

II. பொருத்துக.

1. தன்மைப் பெயர்அவர்கள்
2. முன்னிலைப் பெயர்நாங்கள்
3. படர்க்கைப் பெயர்நீங்கள்
விடை : 1 – ஆ, 2 -இ, 3 – அ

III. உரைப்பகுதியில் பொருத்தமான இடப்பெயர்களை நிரப்புக.

தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது. _____ எல்லாரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை _____ க்கண்டதும் _____ யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் _____ அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் _____ யார்? இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.

விடை :-

தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது. அது எல்லாரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை அவர்களைக்கண்டதும் நீீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் நாங்கள் அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.

IV. தொடர்களிலுள்ள பெயர்ச்சொற்களைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என வகைப்படுத்துக.

1. நீங்கள் எங்குச் சென்றீர்கள்?

விடை : நீங்கள் – முன்னிலை

2. குழலி படம் வரைந்தாள்.

விடை : குழலி – படர்க்கை

3. கதிர் நேற்று வரவில்லை.

விடை : கதிர் – படர்க்கை

4. நான் ஊருக்குச் சென்றேன்.

விடை : நான் – தன்மை

5. மயில் ஆடியது.

விடை : மயில் – படர்க்கை

V. தொடரில் அமைத்து எழுதுக.

1. பறவை

விடை : வானில் பறவை பறந்து சென்றது.

2. விமானம்

விடை : சென்னைக்கு விமானம் மூலம் பயணம் செய்தோம்.

3. முயற்சி

விடை : முயற்சி இல்லையெனில் முன்னேற்றம் இல்லை.

4. வானவில்

விடை : மழைக்கு முன்னும், பின்னும் வானவில் தோன்றும்.

5. மின்மினி

விடை : மின்மினி பூச்சிகள் இரவில் ஒளிர்கின்றன.

VI. பொருத்துக

1. மின்மினிசிறகு
2. இறகின் தொகுப்புஹைட்ரஜன் அணுக்கள்
3. வானவில்பறவையின் இறகு
4. காற்றுப்பைகள்லூசிஃபெரேஸ் என்சைம்
5. விண்மீன்நீர்த்துளி எதிரொளிப்பு
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ

VI. வண்ண எழுத்திலுள்ள பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் எழுதுக.

1. நான் தபால் நிலையத்திற்குச் சென்றேன்.

விடை : அஞ்சலகம்

2. ஓய்வு நேரத்தில் ரேடியோ கேட்பேன்.

விடை : வானொலி

3. பஞ்சாயத்துக் கூட்டம் நாளை கூடுகிறது.

விடை : கிராமசபை

4. ஹோட்டலில் உணவு தயாராக உள்ளது.

விடை : உணவகம்

5. அலமாரியில் துணிகள் உள்ளன.

விடை : அடுக்கறை

மொழியோடு விளையாடு

I. ஒரே ஓசையில் முடியும் பெயர்களைக் கொண்ட படங்களை இணைக்க.

லைவெற்றிலைலை
ரம்ரம்ரம்
பூனையானைபானை


II. சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குவோம்

பட்டுக்கோட்டை

  • பட்டு
  • கோட்டை
  • கோடை
  • படை
  • படு
  • கோடு
  • பட்டை

III. குறிப்புகளைப் படித்து, விடை கண்டறிக

1. பறக்கவிட்டு மகிழ்வோம்.

விடை : பட்டம்

2. நீல நிறத்தில் காட்சியளிக்கும்.

விடை : வானம்

3. கடற்பயணத்திற்கு உதவும்.

விடை : கப்பல்

4. படகு செலுத்த உதவும்.

விடை : துடுப்பு

5. உயிரினங்களுள் ஒன்று.

விடை : குதிரை

6. இதன் உதவியால் வானில் பயணிக்கலாம்.

விடை : விமானம்

7. பறவைகள் இதுபோன்ற உடலமைப்பு கொண்டுள்ளது.

விடை : படகு

8. ஏழு நிறங்கள் கொண்டது.

விடை : வானவில்

9. இராமன் இதன் மூலம் எதிரொளிப்பு விளையாட்டு விளையாடினான்.

விடை : வில்

10. பொழுது விடிவது ……..

விடை : காலை

IV. பாடப்பகுதியில்சுற்றும்முற்றும், ஓட்டமும்நடையுமாய் என்று சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு இணைச்சொற்கள் என்று பெயர். இவைபோன்று நான்கு சொற்கள் எழுதுக.

  • கையும்களவுமாய்
  • கூத்தும்கும்மாளமுமாய்
  • எலியும்பூனையுமாய்
  • குறுக்கமறுக்க

V. ஒரே ஓசையுடைய சொற்களின் பொருள் எழுதுக.

1. தேநீர் = தேயிலையைக் கொண்டு கொதிக்க வைத்த நீர் (டீ)
தேனீர் = தேனும் நீரும் கலந்த நீர்

2. பரவை = கடலின் மறுபெயர் பரவை
பறவை = புறா பறவை இனத்தை சேர்ந்தது

3. கோரல் = ஒரு செய்தியை கூறுவதை கோரல் என்பர்
கோறல் = விலங்கினை கொல்லுவதை கோறல் என்பர்

4. வன்னம் = எழுத்தை குறிக்கும் வேறொரு பெயர்
வண்ணம் = நிறத்தினை வண்ணம் என்பர்

5. எதிரொலி = எதிரொலி மூலம் கடல் மட்டத்தை கணக்கிடலாம்
எதிரொளி = பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி

VI. ஒரு சொல்லைப் பிரித்து இரு பொருள் எழுதுக.

1. பலகை = மரப்பலகை
    பல + கை = பல கைகள்

2. அந்தமான் = அந்தமான் தீவு
    அந்த + மான் = அந்த மான் அழகாக உள்ளது

3. தாமரை = தாமரை மலர்
    தா + மரை = தாவுகின்ற மான்

4. பழம்பால் = பழமையான பால்
    பழம் + பால் = பழமும், பாலும் உடலுக்கு நல்லது

5. மருந்துக்கடை = நாட்டு மருந்துக்கடை
    மருந்து + கடை= மருந்து கடைகளில் கிடைக்கும்

இயல் 2: நாகரிகம்/பண்பாடு

2.1 திருக்குறள்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. ஆன்ற இச்சொல்லின் பொருள் …………………………

  1. உயர்ந்த
  2. பொலிந்த
  3. அணிந்த
  4. அயர

விடை : உயர்ந்த

2. பெருஞ்செல்வம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

  1. பெருஞ் + செல்வம்
  2. பெரும் + செல்வம்
  3. பெருமை + செல்வம்
  4. பெரு + செல்வம்

விடை : பெருமை + செல்வம்

3. பண்புடைமை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. …………………………

  1. பண் + புடைமை
  2. பண்பு + புடைமை
  3. பண்பு + உடைமை
  4. பண் + உடைமை

விடை : பண்பு + உடைமை

4. அது + இன்றேல் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………..

  1. அதுஇன்றேல்
  2. அதுயின்றேல்
  3. அதுவின்றேல்
  4. அதுவன்றேல்

விடை : அதுவின்றேல்

5. பாடலில் நேர்மை என்னும் பொருள் தரும் சொல் …………………………

  1. நயன்
  2. நன்றி
  3. பயன்
  4. பண்பு

விடை : நயன்

II. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. இவ்விரண்டும் = இ + இரண்டும்
  2. மக்கட்பண்பு = மக்கள் + பண்பு

III. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.

  • ன்புடைமை
  • சை
  • சை
  • கை
  • ளி
  • தல்
  • றும்பு
  • ணி

IV. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

  1. னொடு – பனுடையார்,
  2. ம்போலும் – மம்போல்வர்,
  3. ன்புடைமை – என்னும் ,
  4. ண்பு – மண்புக்கு

V. அன்புடைமை, பண்புடைமை போல் ஈற்றில் ‘மை‘ என முடியும்படி நான்கு சொற்கள் எழுதுக.

  • சொல்லாமை
  • கேளாமை
  • பொல்லாமை
  • அறிவுடைமை

VI. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பண்புடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் யாவை?

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்கு உரிய நல்ல வழியாகும்.

2. ‘மரம் போன்றவர்‘ எனத் திருக்குறள் யாரைக் குறிப்பிடுகிறது?

அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவரே ஆவர்.

3. பண்பில்லாதவன் பெற்ற செல்வம் எவ்வாறு பயனிலாது போகும்?

பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்றதாகும்.

2.2 தமிழர்களின் வீரக்கலைகள்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது ________

  1. சிலம்பம்
  2. மற்போர்
  3. மட்டைப்பந்து
  4. நீர் விளையாட்டு

விடை : மட்டைப்பந்து

2. மஞ்சு விரட்டு என்பதைக் குறிக்கும் விளையாட்டு ________

  1. மற்போர்
  2. ஏறுதழுவுதல்
  3. சிலம்பாட்டம்
  4. வில்வித்தை

விடை : ஏறுதழுவுதல்

3. மற்போர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. மற் + போர்
  2. மள் + போர்
  3. மல் + போர்
  4. மறு + போர்

விடை : மறு + போர்

4. தன் + காப்பு இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________

  1. தன்காப்பு
  2. தண்காப்பு
  3. தனிகாப்பு
  4. தற்காப்பு

விடை : தற்காப்பு

5. ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ________

  1. சிலம்பாட்டம்
  2. வில்வித்தை
  3. ஏறுதழுவுதல்
  4. வழுக்கு மரம் ஏறுதல்

விடை : வில்வித்தை

II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  1. சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம்
  2. வீரம் + கலை = வீரக்கலை

III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. தனக்கென்று = தனக்கு + என்று
  2. கொடைத்திறம் = கொடை + திறம்

IV. பொருத்துக

1. காளைகம்பு
2. சிலம்பம்மூங்கில்
3. சிறுவாரைக்கம்புதிமில்
4. தாளாண்மைஉழவு
5. வேளாண்மைமுயற்சி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – -உ, 5 – ஈ

V. வினாக்களுக்கு விடையளிக்க.

1. தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக.

தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டு சிலம்பாட்டமும், மற்போரும் ஆகும்.

2. ஏறுதழுவுதல் என்றால் என்ன?

ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும்.

3. சிலம்பாட்டம்- பெயர்க்காரணம் தருக.

சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக்கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் இதற்கு உண்டு.

4. வல்வில் ஓரியின் வில்லாற்றல் சிறப்பைக் கூறுக.

  • கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ‘வல்வில் ஓரி’ வில்லாற்றலில்
    சிறந்து விளங்கியவர்.
  • அவர், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பெரிய  னையொன்று எதிர்ப்பட, அதன்மீது அம்பெய்தினார்.
  • அந்த அம்பானது, அப்பெரிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீர்த்தது என்று புறநானூற்றுப் பாடல்வழி அறிகிறோம்.
  • படைத்திறமும் கொடைத்திறமும் கொண்டு விளங்கியவர் வல்வில் ஓரி.

5. மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது?

படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டே மற்போர். மல் என்பது, வலிமையைக் குறிக்கும். இருவர் கைகோத்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும்

VI. எதிர்ச்சொல் உருவாக்குக.

  1. இன்பம் x துன்பம்
  2. இயற்கை x செயற்கை
  3. வாழ்தல் x வீழ்தல்
  4. இன்சொல் x வன்சொல்
  5. குறைந்த x நிறைந்த
  6. போற்றும் x தூற்றும்

2.3 கங்கை கொண்ட சோழபுரம்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. முதலாம் இராசேந்திர சோழனை ஏன் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்?

முதலாம் இராசேந்திர சோழன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான். அதன் அடையாளமாகத்தான் அவனைக் கங்கை கொண்டான் என்று அழைக்கிறோம்.

2. சிங்கமுகக் கிணறு – குறிப்பு எழுதுக

கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிங்கமுகக் கிணறு என்பது சிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கும் கிணறு ஆகும்.

3. சோழ கங்கப் பேரேரிக்கு நீர் எங்கிருந்து வருகிறது?

மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவு வரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைக்கின்றன. சோழ கங்கப் பேரேரி இன்றி பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

4. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலுள்ள வாயில்களின் பெயர்களைக் கூறுக.

தெற்கு பக்க நுழைவாயில், வடக்குப் பக்க நுழைவாயில்

2.4 இணைப்புச்சொற்கள்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. அதனால் என்பது ______

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. உரிச்சொல்
  4. இணைப்புச்சொல்

விடை : இணைப்புச்சொல்

2. கருமேகங்கள் வானில் திரண்டன ______ மழை பெய்யவில்லை. இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல்

  1. எனவே
  2. ஆகையால்
  3. ஏனெனில்
  4. ஆயினும்

விடை : ஆயினும்

3. கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ___________ அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்

  1. அதனால்
  2. ஆதலால்
  3. இருந்தபோதிலும்
  4. ஆனால்

விடை : இருந்தபோதிலும்

II. கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக.

1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்)

விடை : நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம்.

2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை. (ஆனால்)

விடை : வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை.

3. பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்)

விடை : பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின

4. முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்)   

விடை : முகில் பள்ளிக்குச் செல்லவில்லை ஏனெனில் அவனுக்கு உடல்நலமில்லை.

5. அறிவுவளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே)

விடை : அறிவுவளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும்.

III. கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச்சொற்களை இணைத்து எழுதுக

(ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, பிற)

அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ______, சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ______, அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. ______, அதனைக் கண்டு ______ விலங்குகள் அஞ்சின. ______அது தனியாகக் குகையில் வசித்தது. ______, அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. ______, குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் ______ விலங்குகள் அஞ்சியோடின. ______, அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா

விடை:-

அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆனால், சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. அதனால், அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. ஆகையால் அது தனியாகக் குகையில் வசித்தது. அதனால், அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. எனவே, குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. ஏனெனில், அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா!

IV. வினாக்களுக்கு விடையளிக்க.

1. இணைப்புச் சொற்கள் எதற்குப் பயன்படுகின்றன?

தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர்.

2. இணைப்புச்சொற்களுள் நான்கு எழுதுக.

அதனால், அப்படியானால், அவ்வாறெனில், ஆனால், அல்லது, ஆகையால்

3. இணைப்புச்சொற்களைப் பயன்படுத்தி, எவையேனும் இரண்டு தொடர்களை எழுதுக

  • குமார் படித்து விட்டான். ஆனால் அவன் எழுதவில்லை.
  • மேகத்தினுள் சூரிய ஒளி புக முடியாது. ஆகவே மேகங்கள் கருமையாக தெரிகின்றன.

V. தொடரில் அமைத்து எழுதுக.

1. வெற்றி

விடை : ராமு கபாடி விளையாட்டில் வெற்றி பெற்றான்.

2. நாகரிகம்

விடை : ஆற்றாங்கரை நாகரிகம் வளர காரணம்

3. உழவுத்தொழில்

விடை : உழவுத்தொழில் கிராமங்களில் மக்கள் அதிகமாக செய்யப்படும் தொழில்

4. கலையழகு

விடை : நடனக்கலை கலையழகு உள்ளது.

VI. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. மக்களுக்கு உரிய பண்பில்லாதவர் ________ போன்றவர் என வள்ளுவர் கூறுகிறார்.

விடை : மரம்

2. கங்கை கொண்ட சோழபுரம் ________ என்று புலவர்களால் போற்றப்பட்டது.

விடை : கங்காபுரி, கங்காபுரம்

3. கம்பைக் குறிக்கும் வீரக்கலை ________ ஆகும்.

விடை : சிலம்பாட்டம்

VII. பிறமொழிச் சொற்களையும் பேச்சுத்தமிழையும் நீக்கிச் சரியாக எழுதுக.

1. டுமாரோ ஈவினிங் என் ஸிஸ்டர் ஊருக்குப் போவா.

விடை : நாளை மாலை என் தங்கை ஊருக்குச் செல்வாள்.

2. ஷேர் ஆட்டோவில் பைவ் பாசஞ்சர்ஸ் இருக்காங்க.

விடை : பகிர் தானியங்கியில் ஐந்து பயணிகள் உள்ளனர்.

3. என் வீட்டில் வாசிங் மிஷின் ரிப்பேராக இருக்கு.

விடை : என் வீட்டில் துணி துவைக்கும் இயந்திரம் பழுதாக உள்ளது.

VIII. பொருத்துக

தொடர்வண்டி
மிதிவண்டி
தானியங்கி
இருசக்கர வண்டி
மகிழ்ந்து
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

மொழியோடு விளையாடு

I. சுழலட்டையைப் பயன்படுத்திக் குறிப்புகளுக்கு விடை எழுதுக.

1. உடலுறுப்புகளுள் ஒன்று

விடை : கண்

2. உப்பு நீர் அதிகம் உள்ள இடம்

விடை : கடல்

3. அழியாத செல்வம்

விடை : கல்வி

4. பொருள்கள் வாங்கும் இடம்

விடை : கடை

5. சமையலுக்குப் பயன்படுவது

விடை : கடுகு

6. வீடு கட்டப் பயன்படுவது

விடை : கல்

7. ஓவியம் என்பது

விடை : கலை

8. பாரதியார் இயற்றியவை

விடை : கவிதை

II. நீக்குவோம்! சேர்ப்போம்!

1. விதையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.

விதை, கதை = விடுகதை

2. சபையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.

கரம், சபை = கரம்பை

3. விலையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.

தலை, விலை = தலைவி

4. ஆசையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.

ஆசை, மரம் = ஆலமரம்

5. கடையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.

காரம், கடை = காரவடை

III. கீழ்க்காணும் குறட்பாக்களிலுள்ள சொற்களைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு

உயிர் எழுத்து இடம்பெறாத சொற்கள்

நயனொடு, நன்றி, புரிந்த, பயனுடையார், பண்பு, பாராட்டும், குடிப்பிறத்தல், வழக்கு

மெய் எழுத்து இடம்பெறாத சொற்கள்

உலகு, உடைமை, நயனொடு

இயல் 3: தொழில்/வணிகம்

3.1 உழவுப் பொங்கல்

சொல்பொருள்

  • எங்கணும் – எங்கும்
  • ஏர்த்தொழில் – உழவுத்தொழில்
  • விழலாகும் – வீணாகும்
  • களித்து – மகிழ்ந்து
  • இசைந்து – ஏற்றுக்கொண்டு
  • வையகம் – உலகம்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. வையகம் என்பதன் பொருள்

  1. ஊர்
  2. வயல்
  3. உலகம்
  4. கிராமம்

விடை : உலகம்

2. நலனெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நலன் + எல்லாம்
  2. நல + னெல்லாம்
  3. நலன் + னெல்லாம்
  4. நலம் + எல்லாம்

விடை : நலன் + எல்லாம்

3. நிறைந்தறம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நிறைந்து + அறம்
  2. நிறைந்த + அறம்
  3. நிறை + அறம்
  4. நிறை + தறம்

விடை : நிறைந்து + அறம்

4. இன்பம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

  1. மகிழ்ச்சி
  2. களிப்பு
  3. கவலை
  4. துன்பம்

விடை : துன்பம்

II. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக.

  1. ணவு – யிரோ,
  2. ணமும் – யிர்கள்
  3. ண்டு – ழவு
  4. ன்றேல் – ல்லால்

III. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

  1. ல்லால் – செல்லாது
  2. கும் – உவு
  3. ணியவரும் – துணிந்திடுவோம்
  4. ண்டு – கொண்டு

IV. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

  1. உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம்
  2. பொங்குகவே – தங்குகவே
  3. உணவுதரும் – அணியவரும்
  4. விழலாகும் – விருந்தாகும்

V. வினாக்களுக்கு விடையளிக்க.

1. அனைவரும் இன்பமுடன் தெம்பு தரும் தொழில் எது?

அனைவரும் இன்பமுடன் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில் ஆகும்

2. உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது. பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.

3. பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?

  • பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே.
  • ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம். 

3.2 விதைத் திருவிழா

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. அனுமதி இச்சொல் குறிக்கும் பொருள் _______

  1. கட்டளை
  2. இசைவு
  3. வழிவிடு
  4. உரிமை

விடை : இசைவு

2. விளம்பரத்தாள்கள் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. விளம்பர + தாள்கள்
  2. விளம்புரத்து + தாள்கள்
  3. விளம்பரம் + தாள்கள்
  4. விளம்பு + தாள்கள்

விடை : விளம்பரம் + தாள்கள்

3. ஆலோசித்தல் இச்சொல்லுக்குரிய பொருள் _______

  1. பேசுதல்
  2. படித்தல்
  3. எழுதுதல்
  4. சிந்தித்தல்

விடை : சிந்தித்தல்

4. தோட்டம் + கலை இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______

  1. தோட்டம்கலை
  2. தோட்டக்கலை
  3. தோட்டங்கலை
  4. தோட்டகலை

விடை : தோட்டக்கலை

5. பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் _______

  1. பழைய காலம்
  2. பிற்காலம்
  3. புதிய காலம்
  4. இடைக்காலம்

விடை : புதிய காலம்

II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

  1. வழிபாடு + கூட்டம் = வழிபாட்டுக்கூட்டம்
  2. வீடு + தோட்டம் = வீ ட்டுத்தோட்டம்

III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. அழைப்பிதழ் = அழைப்பு + இதழ்
  2. விதைத்திருவிழா = விதை + திருவிழா

IV. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை _______

விடை : 27

2. விதைகள் _______ ஆனவையாக இருத்தல் வேண்டும

விடை : தரம்

3. கொண்டைக்கடலை என்பது _______ ஒன்று

விடை : தின்பொருள்களில்

V. வினாக்களுக்கு விடையளிக்க.

1. மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்?

மாணவர்களை அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர்
கூறினார்.

2. ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் என்ன செய்தி இருந்தது?

ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் விதைத் திருவிழா குறித்த செய்தி இருந்தது.

3. ‘பாதிப்பு‘ என்று எழுதப்படட அரங்கத்தில் என்ன செய்தி சாெல்லப்பட்டது?

‘பாதிப்பு‘ என்று எழுதப்படட அரங்கத்தில் இரசாயன விதைகள், இரசாயன பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய செய்தி சாெல்லப்பட்டது.

4. நவதானியங்களுள் ஐந்தின் பெயரை எழுதுக.

நெல், துவரை, அவரை, எள், கடலை

3.4 நேர்மை நிறைந்த தீர்ப்பு

வினாக்களுக்கு விடையளிக்க.

1. அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது?

“செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர். நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். அவரவர்க்கும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் அந்தப் பஞ்சாயத்து தலைவர்.

2. முருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்?

“நான்  ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக்கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள். அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள். ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தா பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்.”என்று சொன்னார் முருகேசன்.

3. விவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன?

முதிய விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான் எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்’’ என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை வழங்கினார் மங்கையர்க்கரசி. அவரது தீர்ப்பைக் கேட்டு, மக்கள் எல்லாரும் அவரை வாழ்த்தினர்.

3.4 அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. அடிபட்ட கால் _____ என வலித்தது

  1. கடகட
  2. விண்விண்
  3. படபட
  4. கணகண

விடை : விண்விண்

2. காலைப்பொழுது _____ வென புலர்ந்தது.

  1. பலபல
  2. தடதட
  3. புலபுல
  4. மளமள

விடை : புலபுல

3. குயில் _____ எனக் கூவியது. 

  1. கீச்கீச்
  2. கூகூ
  3. கொக்கொக்
  4. பக்பக்

விடை : கூகூ

4. மணமக்களை _____ என வாழ்த்தினர்

  1. வருக வருக
  2. வாழ்க வாழ்க
  3. வீழ்க வீழ்க
  4. வளர்க வளர்க

விடை : வாழ்க வாழ்க

II. பொருத்துக

1. கலகலவெனவிரைவுக்குறிப்பு
2. நறநறவெனஒலிக்குறிப்பு
3. தடதடவெனசினக்குறிப்பு
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

III. கீழ்க்காணும் உரைப்பகுதிக்குப் பொருந்துமாறு இரட்டைக்கிளவி/ அடுக்குத்தொடர்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

(தபதப, துள்ளித் துள்ளி, கூட்டங்கூட்டம், படபட, சலசல, சடசட, கருகரு, பளபள, மடமட, தாவித் தாவி, பொத்து பொத்து)

அடர்ந்த காடு. ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்த குரங்குகள், திடீரெனக் குரலெழுப்பியவாறு, ஒவ்வொரு மரமாக ஏறியும்இறங்கியும் கிளைக்குக் கிளை தாவித் தாவிச் சென்றன. அவை எழுப்பிய ஓசையினால், பறவைகள் தத்தம் சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டு பறந்தன. அருகிலிருந்த சிற்றாற்றில், நீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நீர்நிலை தேடிக் கூட்டங்கூட்டமாக வந்த யானைகள், அந்த ஆற்றைக்கண்டு, களிநடனமிட்டன. அருகில் வளர்ந்திருந்த தென்னை மரமொன்றிலிருந்த தேங்காய்கள், பொத்து பொத்து எனக் கீழே விழுந்தன. அந்த ஓசையைக் கேட்டு, மிரண்ட யானைக்கன்று படபடவென ஓட, அருகிலிருந்த மான்கள் அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடின. சூல்கொண்ட மேகங்கள், கருகருவெனத் திரள, பளபளவென மின்னல் மின்னியது. சற்றுநேரத்தில், சடசட வென மழை பெய்ய, குரங்குகள் மரத்தின் மீது மடமடவென ஏறின.

IV. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. திருவிழா

விடை : எங்கள் ஊரில் கோவில் திருவிழா நடைபெறுகிறது

2. இரசாயன விதை

விடை : இரசாயன விதை மண்ணின் தன்மை கெடுக்கிறது

3. விளம்பரப் பலகை

விடை : விளம்பரப் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

4. வீட்டுத் தோட்டம்

விடை : இந்த காய்கறிகள் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பறிக்கப்பட்டவை

5. பழங்காலம்

விடை : மனிதன் பழங்காலத்தில் இலைதழைகளை ஆடையாக உடுத்தினான்

V. ஒருபொருள் தரும் பல சொற்களை எழுதுக

  1. வயல் = செய், கழனி
  2. உழவு = உழுதல், பயிர்தொழில்
  3. மகிழ்ச்சி = உவகை, சந்தோஷம்
  4. வீடு = மறுப் பிறவியின்மை, இல்லம்
  5. பேசு = பேசுதல், திட்டுதல்

VI. உழவுத் தொழிலுடன் தொடர்புடைய பழமொழிகளின் சொற்கள் இடம் மாறியுள்ளன. அவற்றை முறைப்படுத்தி எழுதுக

  1. பட்டம், தேடி, ஆடிப், விதை, = ஆடிப்பட்டம் தேடி விதை
  2. தேடு, ஏரைத், தேடின், சீரைத் = சீரைத் தேடின் ஏரைத் தேடு
  3. உழுவதை, அகல, விட, உழு, ஆழ = அகல உழுவதை விட ஆழ உழு

VII. கீழ்க்காணும் பாடலிலுள்ள தொகைச்சொற்களை விரித்து எழுதுக. இருவினை அறிந்து கொள்வோமே!

முத்தமிழ் கற்றுத் தேர்வோமே!
நாற்றிசை தேடிச் செல்வோமே!
ஐந்திணை சுற்றி வருவோமே!
அறுசுவை உண்டு மகிழ்வோமே!

  • இருவினை = நல்வினை, தீவினை
  • முத்தமிழ் = இயல், இசை, நாடகம்
  • நாற்றிசை = கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
  • ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
  • அறுசுவை = துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு

VIII. குறிப்புகளைப் படித்துத் ‘தை‘ என முடியும் சொற்களை எழுதுக.

1. மெதுவாக ஊர்ந்து செல்லும் ஓர் உயிரி

விடை : நத்தை

2. பொதி சுமக்கும் விலங்கு

விடை : கழுதை

3. பகலில் கண் தெரியாப் பறவை

விடை : ஆந்தை

4. காய், கனியில் இருக்கும்

விடை : விதை

IX. கீழ்க்காணும் தொடரைப் பல தொடர்களாக மாற்றுக.

1. மணமலர் படம் வரைந்தாள்

  1. மணமலர் படம் வரைந்தாளா?
  2. மணமலரா படம் வரைந்தாள்?
  3. மணமலர் படம் வரை
  4. மணமலர் படம் வரைவாயா?

2. கதிரவன் வீட்டுக்குச் சென்றான்

  1. கதிரவன் வீட்டுக்குச் சென்றானா?
  2. கதிரவன் வீட்டுக்குச் செல்
  3. கதிரவனா வீட்டுக்குச் சென்றான்!
  4. கதிரவன் வீட்டுக்குச் செல்வாயா?
  5. கதிரவன் வீட்டுக்குச் சென்றாயா?

X. புதிய சொற்களை உருவாக்குக.

1. விளையாட்டுத் திடல்

விளைவிளையாட்டு
விடல்விடு
வில்விட்டு விட்டு
விடுதிதிடல்

2. பல்கலைக்கழகம்

பல்கலை
கழகம்பழம்
கல்கபம்

3. கவிதைத்திரட்டு

கவிதைகவி
தைதிரட்டு
திட்டுகட்டு
கதைவிதை

 

3.5 அகர முதலி

  • அஞ்சா நெஞ்சம் – மனஉறுதி
  • அதிகரித்தல் – மிகுதியாதல்
  • அனு­மதி – இசைவு
  • ஆயுதங்கள் – கருவிகள்
  • ஆவல் – விருப்பம்
  • ஆவேசமாக – சினங்காெண்டு
  • ஆனந்தம் – மகிழ்ச்சி
  • உகந்த நிலம் – ஏற்ற நிலம்
  • எழிலான – அழகான
  • களித்தாள்  – மகிழ்ந்தாள்
  • கனிவான பேச்சு – இனிமயான பேச்ச
  • கெட்டில் – காெதிக்க வைக்கும் கலம்
  • கோழை – வீரமில்லாதவன்
  • சாதனை – வெற்றி
  • சாதாரணம் – எளிய
  • செல்வந்தர் – பணக்காரர்
  • சேகரித்தல் – திரட்டுதல்
  • சாேர்ந்து – களைத்து
  • தாழ்மை – தாழ்வு
  • தாளாண்மை – முயற்சி
  • திடமான – உறுதியான
  • பாதிப்பு – விளைவு
  • பிரதேசம் – நாடு
  • பாெலிவு – அழகு
  • மிளிர்தல் – ஒளிர்தல்
    மைதானம் – திடல்
  • வாளாண்மை – வாளைக் கையாளும் திறமை
  • வியாபாரி – வணிகர்
  • விவசாயி – உழவர்
  • வேளாண்மை – உழவு
Exit mobile version