5th Standard 3rd Term Tamil Book Solution | New Syllabus Samacheer Books 2022 – 2023

5th Standard 3rd Term Tamil Book Solution

Tamil Nadu 5th Standard 3rd Term Tamil Book Answers are available here. You can get the answer to the 5th Tamil 3rd Term New Book 2022 – 2023.

Finally, we come to the 5th Standard Tamil Solution. For better user experience, find the word which you want by search option. Because this page has 2200 words. If you use the Search option, you can get your needy quickly.

We have given the 5th Standard Tamil Book solution by lesson wise. This term has 3 lessons and some sub lessons.

5th Standard Tamil 3rd Term Book Back Solution

Table of Content

1. நாடு / சமூகம் / அரசு / நிருவாகம்

1.1 சிறுபஞ்சமூலம்

1.2 வாரித் தந்த வள்ளல்

1.3 தலைமைப் பண்பு

2. அறம்/தத்துவம்/சிந்தனை

2.1 கல்வியே தெய்வம்

2.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

2.4 மயங்கொலிச்சொற்கள்

3. மனிதம்/ ஆளுமை

3.1 அறநெறிச்சாரம்

3.2 புதுவை வளர்த்த தமிழ்

3.4 மரபுத் தொடர்கள்

5th Standard Text Books – Download

இயல் 1: நாடு / சமூகம் / அரசு / நிருவாகம்

1.1 சிறுபஞ்சமூலம்

I. சொல் பாெருள்

  1. வனப்பு – அழகு
  2. வேந்தன் – அரசன்
  3. கண்ணோட்டம் – இரக்கம்
  4. வாட்டான் – வருத்தமாட்டான்
  5. இத்துணை – இவ்வளவு
  6. பண் – இசை

II. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. “வனப்பு” இச்சொல்லின் பொருள் ____________

  1. அறிவு
  2. பொறுமை
  3. அழகு
  4. சினம்

விடை : அழகு

2. “நன்றென்றல்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………………………..

  1. நன் + றென்றல்
  2. நன்று + என்றல்
  3. நன்றே + என்றல்
  4. நன்றெ + என்றல்

விடை : நன்று + என்றல்

3. “என்று + உரைத்தல்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………………….

  1. என்றுஉரைத்தல்
  2. என்றுயுரைத்தல்
  3. என்றஉரைத்தல்
  4. என்றுரைத்தல்

விடை : என்றுரைத்தல்

4. கண்ணுக்கு அழகு ……………………………………………

  1. வெறுப்பு
  2. பொறுமை
  3. இரக்கம்
  4. பொறாமை

விடை : இரக்கம்

III. பொருத்துக

1. கண்ணுக்கு அழகு கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
2. காலுக்கு அழகு இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
3. ஆராய்ச்சிக்கு அழகு நாட்டு மக்களை வருத்தாமை
4. இசைக்கு அழகு பிறரிடம் சென்று கேட்காமை
5. அரசனுக்கு அழகு இரக்கம் காட்டல்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ

IV. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

  1. ண்வனப்பு – கண்ணோட்டம்
  2. கால்வனப்பு – செல்லாமை
  3. கேட்டார் – வாட்டான்
  4. ன்னோடு – என்றுரைத்தல்

1.2. வாரித் தந்த வள்ளல்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. “பொற்காசு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………….

  1. பொற் + காசு
  2. பொல் + காசு
  3. பொன் + காசு
  4. பொ + காசு

விடை : பொன் + காசு

2. “கொடைத்திறம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

  1. கொடை + திறம்
  2. கோடை + திறம்
  3. கொட + திறம்
  4. கொடு + திறம்

விடை : கொடை + திறம்

3. “களிறு” என்பது ………………………………………… யைக்குறிக்கும்

  1. குதிரை
  2. கழுதை
  3. யானை
  4. ஒட்டகம்

விடை : யானை

4. “தரணி” இச்சொல்லின் பொருள் …………………………………………..

  1. மலை
  2. உலகம்
  3. காடு
  4. வானம்

விடை : உலகம்

5. ‘சோறு’ இச்சொல்லுடன் பொருந்தாதது ……………………………………………

  1. உணவு
  2. அமுது
  3. அன்னம்
  4. கல்

விடை : கல்

II. பொருத்துக

1. பேழை வாசல்
2. மாரி கடன்
3. வாயில் பெட்டி
4. ஆணை மழை
5. இரவல் கட்டளை
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 -ஆ

III. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று எண்ணுவான். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. ஒருநாள், அவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது“ எனக்கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது“ என்றான். உடனே அவன் தந்தை, பட்டத்தின் நூலை அறுத்து விட்டார் பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன் இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது? ஆனால், அந்த  ல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போது என்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே இதுபோலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்“ என்று கூறினார்.

1. குப்பன் எந்த வகுப்பில் படிக்கிறான்?

குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்

2. பட்டத்தின் நூல் அறுந்ததும் அதன் நிலை என்னவாயிற்று?

பட்டத்தின் நூல் அறுந்ததும் தடுமாறிக் கீழே விழுந்தது.

3. இக்கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன?

நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்

IV. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கண்ணுக்கு அழகு பிறரிடம் ————-காட்டல்.

விடை : இரக்கம்

2. சிறுபஞ்ச மூலம் ___________ என்பவரால் எழுதப்பட்டது.

விடை : காரியாசான்

3. வாரி கொடுக்கும் வள்ளல்___________

விடை : வல்வில் ஓரி

4. நாட்டு மக்களை வருத்தாமை___________ க்கு அழகு

விடை : அரசனுக்கு

V. பிறமொழிச் சொற்கள் கலவாமால் எழுதுக

1. என்னுடைய புக் டேபிளில் உள்ளது.

விடை : என்னுடைய புத்தகம் மேசையில் உள்ளது

2. நான் டிவியில் நீயூஸ் பார்த்தேன்

விடை : நான் தாெலைக்காட்சியில் செய்திகள் பார்த்தேன்

3. தை மாதம் பர்ஸ்ட் நாள் பொங்கல் பெஸ்டிவெல் கொண்டாடினான்

விடை : தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாள் கொண்டாடினான்.

4. பாலன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டான்.

விடை : பாலன் சிற்றுண்டி சாப்பிட்டான்.

1.3. இணைச்சொற்கள்

I. கீழ்க்காணும் தொடர்களில் பொரு த்தமான இணைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

(ஈடும்எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக, இன்பமும்துன்பமும், கீரியும்பாம்பும்)

1. பானைகள் ———— வைக்கப்பட்டிருந்தன.

விடை : அடுக்கடுக்காக

2. நேற்றுவரை ———— போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.

விடை : கீரியும் பாம்பும்

3. தேர்வில் ———— படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.

விடை : கண்ணுங்கருத்துமாக

4. வாழ்வில் ———— உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.

விடை : இன்பமும் துன்பமும்

5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ———— இருக்கும்.

விடை : ஈடும் எடுப்புமாக

II. விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக

  1. இன்பமும்துன்பமும் x துன்பமும்இன்பமும்
  2. அன்றும்இன்றும் x இன்றும்அன்றும்
  3. அங்கும்இங்கும் x இங்கும்அங்கும்
  4. உயர்வும்தாழ்வும் x தாழ்வும்உயர்வும்
  5. விண்ணும்மண்ணும் x மண்ணும்விண்ணும்

III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. பொருளுதவி

விடை : ஏழைகளுக்கு பொருளுதவி செய்யலாம

2. திறமைசாலி

விடை : திறமை உள்ளவனை திறமைசாலிகள் என்பர்

3. நம்பிக்கை

விடை : வாழ்வின் நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் முக்கியம்

4. ஆராய்ச்சி

விடை : பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்திய பின் தான் மருந்துகள் மனித பயன்பாட்டுக்கு வருகிறது.

5. வான்புகழ்

விடை : வள்ளுவரை வான்புகழ் கொண்ட வள்ளுவர் என்ற பெயரும் உண்டு

IV. பொருத்தமான சொற்களைக்கொண்டு, தொடரை முழுமையாக்குக.

(பாணர், ஊர்த்தலைவர், வல்வில் ஓரி, பூவண்ணன், பாலன்)

1. கொடைத்திறத்தில் சிறந்தவர் 

விடை : வல்வில் ஓரி

2. மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தவர்

விடை : பாலன்

3. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தவர் 

விடை : பூவண்ணன்

4. இசைப் பாடல்களைப் பாடுபவர் 

விடை : பாணர்

5. மூதாட்டிபோல் வேடமிட்டவர்

விடை : ஊர்த்தலைவர்

மொழியோடு விளையாடு

I. சரியான எழுத்தை தேர்ந்தெடுத்து எழுதுக

  1. வல்வில் ஓரி வாரித் தரும் வள்ல் (ள், ல், ழ்)
  2. பாணரே! உம் வறுமையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
  3. களிறும் கொடையாய் நல்கும் வான்புகழ்வல்வில் ஓரி (ன், ண்/ல், ள், ழ் )
  4. மக்களுக்குப் பாலன் மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது (ற்/ர்)
  5. பூவண்ணன் மூதாட்டிக்கு உவு வாங்கிக் கொடுத்தான் (ண, ன, ந)

II. கொடுக்கப்பட்ட சொற்களையும், குறிப்புகளையும் கொண்டு புதிய சொல் உருவாக்குக.

1. விடுகதை – மரத்திற்கு ஆதாரம் __________

விடை : விதை

2. திருநெல்வேலி – பயிர்களைப் பாதுகாக்கும் __________

விடை : வேலி

3. நகர்ப்புறம் – விரலின் மணிமகுடம் __________

விடை : நகம்

4. இமயமலை – உண்கலம் __________

விடை : இலை

5. உருண்டை – நமது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று __________

விடை : உடை

III. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.

1. மதிவாணன் பலம் மிக்கவன் காற்றடித்ததால்

மரத்திலிருந்து பழம் விழுந்தது. (பழம்)

2. இந்த மரம் உயரமாக உள்ளது.

படைவீரகள் மறம் (வீரம்) கொண்டவர்கள் (மறம்)

3. நிலா தன் கையில் வளை அணிந்திருந்தாள்.

மீனவன் மீன் பிடிக்க வலை அவசியம் (வலை)

4. சூரியனில் இருந்து ஒளி கிடைக்கிறது.

இடி சத்தமாக ஒலித்தது (ஒலி)

5. பரிமளா கடையில் வெல்லம் வாங்கினார்.

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது (வெள்ளம்)

IV. கீழ்க்காணும் குறுக்கெழுத்துப் புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடிக்க.

5 ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம்

இடமிருந்து வலம்

1. அறிவியல் அறிஞர்கள் செய்வது ____________________

விடை : ஆராய்ச்சி

2. இரக்கம் என்ற சொல்லை இப்படியும் கூறலாம் ____________________

விடை : பரிவு

வலமிருந்து இடம்

1. உலகின் மற்றொரு பெயர் ____________________

விடை : தரணி

2. மக்களைக் காப்பவர் _______________

விடை : வேந்தன்

3. நவதானிய வகைகளுள் ஒன்று _____________

விடை : கம்பு

மேலிருந்து கீழ்

1. அரசரின் ஆலோசகர் ________________

விடை : அமைச்சர்

2. கொல்லிமலை நாட்டின் அரசன் ________________

விடை : வல்வில்

கீழிருந்து மேல்

1. இது வந்திட பத்தும் பறக்கும் ____________________

விடை : பசி

2. விரைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________________

விடை : மெதுவாக

3. இதைக் கேட்டால் மனம் மயங்கும் ___________________

விடை : இசை

VIII. வரிசைமாறியுள்ள தொடர்களை நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.

  1. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்
  2. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
  3. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்
  4. பாலன், பூவண்ணன் இருவரும் நிர்வாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
  5. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.

விடை :

  1. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
  2. பாலன், பூவண்ணன் இருவரும் நிர்வாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
  3. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்
  4. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
  5. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்

இயல் 2: அறம்/தத்துவம்/சிந்தனை

2.1. கல்வியே தெய்வம்

I. சொல்பொருள்

  1. விஞ்சும் – மிகும்
  2. அண்டும் – நெருங்கும்
  3. கசடற – குற்றம் நீங்க
  4. ஊறும் – சுரக்கும்
  5. திண்மை – வலிமை
  6. செழித்திட – தழைத்திட

II. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

  1. “கசடற” இச்சொல்லின் பொருள் …………………………….
  1. தவறான
  2. குற்றம் நீங்க
  3. குற்றமுடன்
  4. தெளிவின்றி

விடை : குற்றம் நீங்க

2. “வளமதை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

  1. வள + மதை
  2. வளமை + அதை
  3. வளம் + அதை
  4. வளம் + மதை

விடை : வளம் + அதை

3. “வெளிச்சம்” இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………

  1. இருட்டு
  2. வெளிப்படையான
  3. வெளியில்
  4. பகல்

விடை : இருட்டு

III. ஒன்றுபோல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.

முதலெழுத்து இரண்டாமெழுத்து
  1. ன்னையும் – றிந்திட
  2. ண்ணெனும் – ல்வியும்
  3. சடறக் – ற்றிட
  4. ல்லமை – ளமதை
  5. வெற்றிகள் – வெளிச்சமும்
  6. விண்ணையும் – விடியலாய்
  1. ன்னையும் நன்மையும்,
  2. வேண்டும் – கண்ணெனும்
  3. பொன்னையும் – மென்மையும்
  4. பெற்றிட – கற்றிட
  5. வெளிச்சமும் – தெளிவினை
  6. தைக் – அதைக்

 IV. எதிர்ச்சொல் எழுதுக.

  1. நன்மை X தீமை
  2. புகழ் X இகழ்
  3. வெற்றி X தோல்வி
  4. வெளிச்சம் X இருட்டு
  5. தோன்றும் X மறையும்

V. “உம்“ என முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

  1. அன்னையும் – தந்தையும்
  2. கல்வியும் – நீயும்
  3. நன்மையும் – மென்மையும்
  4. சேரும் – கூடும்
  5. விண்ணையும் – திண்மையும்
  6. விஞ்சும் – கொஞ்சும்

2.2. நீதியை நிலைநாட்டிய சிலம்பு

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. புறாவிற்காகத் தன் உடலையே தந்த மன்னன் _____________

  1. மனுநீதிச்சோழன்
  2. பாண்டியன்
  3. சிபி மன்னன்
  4. அதியமான்

விடை : சிபி மன்னன்

2. கண்ணகியின் சிலம்பு _____________ ஆல் ஆனது

  1. முத்து
  2. மாணிக்கம்
  3. பவளம்
  4. மரகதம்

விடை : மாணிக்கம்

3. “அறநெறி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

  1. அறி + நெறி
  2. அற + நெறி
  3. அறம் + நெறி
  4. அறு + நெறி

விடை : அறம் + நெறி

4. “கால் + சிலம்பு” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____________

  1. காற்சிலம்பு
  2. கால்சிலம்பு
  3. கற்சிலம்பு
  4. கல்சிலம்பு

விடை : காற்சிலம்பு

5. “தண்டித்தல்” இச்சொல்லின் பொருள் _____________

  1. புகழ்தல்
  2. நடித்தல்
  3. வழங்குதல்
  4. ஒறுத்தல்

விடை : ஒறுத்தல்

II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  1. அ + ஊர் = அவ்வூர்
  2. தகுதி + உடைய = தகுதியுடைய

III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. கள்வனல்லன் = கள்வன் + அல்லன்
  2. செங்கோல் = செம்மை + கோல்

2.4. மயங்கொலிச்சொற்கள்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. சாலையில் பள்ளம் இருந்ததால், ——— பேருந்தை மெதுவாக ஓட்டிச்சென்றார்.

  1. ஓட்டுநர்
  2. ஓட்டுனர்
  3. ஓட்டுணர்

விடை : ஓட்டுநர்

2. கடவூருக்குச் செல்ல எந்த ———ப் போக வேண்டும்?

  1. வலியாக
  2. வளியாக
  3. வழியாக

விடை : வழியாக

3. கூண்டிலிருந்த ———யைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டான் எழிலன்.

  1. கிலி
  2. கிளி
  3. கிழி

விடை : கிளி

4. நீரில் துள்ளி விளையாடுகிறது ——— மீன்

  1. வாளை
  2. வாலை
  3. வாழை

விடை : வாலை

5. தாய்ப்பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ——–ப்போனது.

  1. இழைத்து
  2. இளைத்து
  3. இலைத்து

விடை : இளைத்து

6. கடல்——-யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.

  1. அளை
  2. அழை
  3. அலை

விடை : அலை

II. பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களைப் படித்துக்காட்டுக

1. நடனம் என்பது, ஒரு —————- (களை/ கலை/ கழை)

விடை : கலை

2. சோளம் என்பது, ஒரு ————— (தினை/ திணை)

விடை : தினை

3. பெட்ரோல் என்பது, ஓர்————– (எரிபொருள்/ எறிபொருள்)

விடை : எரிபொருள்

4. ஒட்டகம் என்பது ஒரு ————— (விளங்கு/ விலங்கு)

விடை : விலங்கு

5. தென்னை என்பது, ஒரு ————- (மறம்/ மரம்)

விடை : மரம்

III. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.

1. ஆற்றின் ஓரம் ———. ஆடையில் இருப்பது ———.

விடை : கரை / கறை

2. மடியைக் குறிப்பது ———. மரத்தில் தாவுவது ———.

விடை : குறங்கு / குரங்கு

3. பரந்து இருப்பது ———. பறந்து செல்வது ———.

விடை : பரவை / பறவை

4. மரத்தை அறுப்பது ———. மனிதர் செய்வது ———.

விடை : அரம் / அறம்

5. சுவரில் அடிப்பது ———. மாதத்தில் ஒன்று ———.

விடை : ஆணி / ஆனி

IV. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. ஆயிரம்

விடை : என்னிடம் ராமு ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினான்.

2. உண்மை

விடை : நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்

3. புகார் நகரம்

விடை : புகார் நகரம் சோழநாட்டின் துறைமுகமாக இருந்தது,

4. ஆடுகள்

விடை : ஆடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

V. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

கல்வி கண் போன்றது
நீதி தவறாதவன் அரசன்
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்
தீங்கு செய்தால் தீமை விளையும்

1. தீங்கு செய்தால் என்ன நேரிடும்?

தீங்கு செய்தால் தீமை நேரிடும்

2. சிலம்பின் பரல் எவற்றால் ஆனது?

சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது

3. கல்வி எதனைப் போன்றது?

கல்வி கண் போன்றது

4. நீதி தவறாதவன் யார்?

நீதி தவறாதவன் அரசன்

5. பணப்பையுடன் வந்தது யார்?

ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்

VI. வினாக்களுக்கு விடையளிக்க.

புறநானூறு என்னும் நூலில் அறப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அரசன் ஒருவன் மற்றொரு நாட்டு அரசன்மீது போர் தொடுக்கும் முன்பு, பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளர்களையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இச்செய்தி முதுகுடுமிப்பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்னும் புலவர் பாராட்டுகிறார். மேலும், படையெடுத்து வரும் பகைவன் மீது, மறைந்துநின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ‘ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

1. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் யாது?

புறநானூறு

2. நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் யார்?

முதுகுடமிப்பெருவழதி

3. ‘ஞாயில்கள்’ என்றால் என்ன?

மறைந்து நின்று அம்பு எய்தும் நிலையங்கள்

4. பகைவன் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

நண்பன்

5. ‘பிணி’ என்பதன் பொருள்

நோய்

VII. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க

(சொல்லி, மீனவன், கடலிலே, பார்த்ததே, வலையில் விட்டதே, செய்ததே)

துள்ளி குதிக்கும் மீன் கடலிலே
வெள்ளியை வானத்தில் பார்த்ததே
மீனவன் வலை போட்டானே
வலையில் சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி செய்ததே
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி விட்டதே
மீன் நன்றி சொல்லி சென்றதே

VIII. ஒரு சொல்லில் இரு தொடரை உருவாக்குவோம்.

திங்கள் வாரத்தின் இரண்டாம் நாள்.

நிலவுக்கு திங்கள் என்றும் பெயர் உண்டு

திங்கள்
சூரியனுக்கு ஞாயிறு என்ற பெயர் மறுபெயர் உண்டு.

ஞாயிறு வாரத்தின் முதல் நாள்

ஞாயிறு

IX. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் எழுதுக.

1. கல்விக் கண் திறந்தவர் போற்றப்படுகிறார் எனக் காமராசர்

விடை : கல்விக்கண் திறந்தவர் எனக் காமராசர் போற்றப்படுகிறார்.

2. கற்றிட வேண்டும் கல்வியைக் கசடறக்

விடை : கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்

3. மனுநீதிச் சோழன் மன்னர் சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த

விடை : சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த மன்னர் மனுநீதிச் சோழன்

4. காற்சிலம்பு உடையது கண்ணகியின் மாணிக்கப்பரல்கள்

விடை : கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் உடையது

5. தந்தையும் தெய்வம் அன்னையும்

விடை : அன்னையும் தந்தையும் தெய்வம்

X. சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?

நெய்தல், வயது நெல், வயல் நெல் வயல்
கல்வி, கண் கவி, கண் கண்கவி
தலைவன், மீனவர் மீன், தலை மீன் தலை
மரகதம், பல்லாண்டு மரம், பலா பலாமரம்
பாண்டியர், மனைவி பார். மனை மனைபார்

இயல் 3: மனிதம்/ஆளுமை

3.1. அறநெறிச்சாரம்

I. சொல் பொருள்

  1. காய்விடத்து – வெறுப்பவரிடத்து
  2. சாற்றுங்கால் – கூறுமிடத்து
  3. சால – மிகவும்
  4. தலை – முதன்மை

II. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. ‘சொல்லாடல்‘ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சொல் + லாடல்
  2. சொல + ஆடல்
  3. சொல் + ஆடல்
  4. சொல்லா + ஆடல்

விடை : சொல் + ஆடல்

2. ‘பொழுதாற்றும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பொழு + தாற்றும்
  2. பொழுது + ஆற்றும்
  3. பொழு + ஆற்றும்
  4. பொழுது + தூற்றும்

விடை : பொழுது + ஆற்றும்

3. “வேற்றுமை” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ______________

  1. பிரிவு
  2. வேறுபாடு
  3. பாகுபாடு
  4. ஒற்றுமை

விடை : அலை

III. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

  1. தூ – ஆ
  2. ன்மையும் – துன்பங்கள்
  3. ற்றலும் – வேற்றுமை – சாற்றுங்கால்
  4. காய்விடத்து – மெய்ம்மையும்

IV. எதிர்ச்சொல் எழுதுக.

  1. துன்பம் X இன்பம்
  2. வேற்றுமை X ஒற்றுமை
  3. மெய்ம்மை X பொய்மை

3.2 புதுவை வளர்த்த தமிழ்

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. ‘குயில்பாட்டு’ நூலை எழுதியவர் யார் ______________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. வாணிதாசன்
  4. புதுவை சிவம்

விடை : பாரதியார்

2. ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனப் பாடியவர் ______________

  1. பாரதிதாசன்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. பிரபஞ்சன்

விடை : பாரதிதாசன்

3. “பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆடடா“ எனப் பாடியவர் ______________

  1. பாரதிதாசன்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. திருமுருகன்

விடை : வாணிதாசன்

4. “பாட்டிசைத்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________ 

  1. பாட்டு + இசைத்து
  2. பாடல் + இசைத்து
  3. பா + இசைத்து
  4. பாட + இசைத்து

விடை : பாட்டு + இசைத்து

5. “மூன்று + தமிழ்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________

  1. மூன்றுதமிழ்
  2. முத்துத்தமிழ்
  3. முதுதமிழ்
  4. முத்தமிழ்

விடை : முத்தமிழ்

II. பொருத்துக

1. பாரதிதாசன் கொடி முல்லை
2. தமிழ்ஒளி பாஞ்சாலி சபதம்
3. பாரதியார் பாவலர் பண்ணை
4. வாணிதாசன் மாதவி காவியம்
5. திருமுருகன் இருண்ட வீடு
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

3.4. மரபுத் தொடர்கள்

I. கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 நாங்கள்—————உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/ விடிவெள்ளியாக)

விடை : வாழையடி வாழையாக

2. அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும்கிடையாது. அவன் ஒரு——(அவசரக்குடுக்கை/புத்தகப்பூச்சி)

விடை : புத்தகப்பூச்சி

3. பாரதிதாசன் கவிதை உலகில்———-ப்பறந்தார். (பற்றுக்கோடாக/ கொடி கட்டி)

விடை : கொடி கட்டி

II. பொருத்துக.

1. கயிறு திரித்தல் பொய் அழுகை
2. ஓலை கிழிந்தது விடாப்பிடி
3. முதலைக் கண்ணீர் இல்லாததைச் சொல்லல்
4. குரங்குப்பிடி மறைந்து போதல்
5. நீர் மேல் எழுத்து வேலை போய்விட்டது
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

III. ‘காலை வாரிவிடுகிறது‘ – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத்தொடருக்குப் பொருத்தமாக அமையும்?

  1. காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக்———————-.
  2. காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைக்———————-.
  3. மறதி நம்மை அடிக்கடி ———————-
  4. இளமைக்காலம் நம்மை அடிக்கடி———————-.

விடை : மறதி நம்மை அடிக்கடி

IV. மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க

  1. மாயச்செயல்
  2. கதை விடுதல்
  3. மாற்றம் பெறுதல்
  4. பயனில்லாது இருத்தல்

விடை : மாற்றம் பெறுதல்

V. சொற்களை த் தொடரில் அமைத்து எழுதுக.

1. பொறுமை _________

விடை : வாழ்வில் முன்னேற பொறுமை அவசியம்

2. நூல்கள் _________

விடை : தமிழ் நூல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை

3. தமிழ்மொழி _________

விடை : செம்மொழிகளுள் தமிழ் மொழி ஒன்று

4. அன்பு _________

விடை : அம்மா என் மீது அன்பாக இருப்பார்

5. கவிஞர் _________

விடை : பாரதியார் ஒரு தேசியக் கவிஞர் ஆவார்

VI. பொருத்துக

1. பாரதியார் என் தமிழ் இயக்கம்
2. பாரதிதாசன் கொடி முல்லை
3. வாணிதாசன் குயில் பாட்டு
4. திருமுருகன் வானம் வசப்படும்
5. பிரபஞ்சன் தமிழியக்கம்
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

VII. பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.

அழகன், பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால், அவன் மிகவும் டையர்டாக இருந்தான்.

விடை:-

அழகன், நண்பர்களோடு விளையாட்டு திடலுக்கு சென்றான். அங்கு அனைவருடனும் சந்தோஷமாகக் மட்டைபந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் களைப்பாக இருந்தான்.

VIII. பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

கபடி விளையாட்டு மன்றம்

அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கும் ஒரு நற்செய்தி

இடம் அண்ணா விளையாட்டு மைதானம், சென்னை.
காலம் மாணவர் காலை 9 மணிமுதல் 11 மணிவரை
மாணவியர் காலை 11 மணிமுதல் 12 மணிவரை

1. நீங்கள் மேலே படித்தது என்ன?

  1. பாடல்
  2. கதை
  3. விளம்பரம்

விடை : விளம்பரம்

2. பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?

  1. மட்டைப்பந்து
  2. கபடி
  3. சதுரங்கம்

விடை : கபடி

3. மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?

  1. 1 மணி
  2. 2 மணி
  3. 3 மணி

விடை: 2 மணி

4. மைதானம் – இந்தச்சொல்லுக்குரிய பொருள் எது?

  1. பூங்கா
  2. அரங்கம்
  3. திடல்

விடை : திடல்

5. விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?

  1. கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
  2. கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
  3. கபடிவிளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம

விடை : கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.

மொழியோடு விளையாடு

I. குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்

விடை : பாரதியார்

2. இது வெண்ணிறப் பறவை 

விடை : புறா

3. தூக்கத்தில் வருவது

 விடை : கனவு

கீழிருந்து மேல்

1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்

விடை : நூல்

வலமிருந்து இடம்

1. பாராட்டி வழங்கப்படுவது

விடை : விருது

2. மக்கள் பேசுவதற்கு உதவுவது

விடை : மொழி

3. சுதந்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்

விடை : விடுதலை

குறுக்கும் நெடுக்குமாக

1. முத்தமிழுள் ஒன்று

விடை : நாடகம்

II. குறிப்புகள் கொண்டு விடை எழுதுக

1. தலைகீழாய் என் வீடு 

விடை : தூக்கணாங்குருவி

2. என் பார்வை கூர்நோக்கு 

விடை : கழுகு

3. நானும் ஒரு தையல்காரி 

விடை : சிட்டுக்குருவி

4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன் 

விடை : கொக்கு

5. எனக்கு வீடு கட்டத் தெரியாது 

விடை : குயில்

III. சொல்லிருந்து புதிய சொல்

1. பாரதியார்

விடை : பாரதியார், பார், ரதி

2. மணிக்கொடி

விடை : மணி, கொடி, மடி,

3. பாவேந்தர்

விடை : பார், வேந்தர், வேர், பா

4. நாடகம்

விடை : நாகம், கடம், நாம்

5. விடுதலை

விடை : விடு, தலை, விலை, தவிடு

IV. சொற்களைக் கொண்டு புதிய தொடர் உருவாக்குக.

1. உண்மை

விடை : நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்

2. பெருமை

விடை : தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்

3. பாடல்

விடை : பாரதிதாசனின் பாடல் வரிகள் புரட்சி மிகுந்ததாக உள்ளது.

4. நாடகம்

விடை : இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்ததே முத்தமிழ் ஆகும்

5. தோட்டம்

விடை : எங்கள் தோட்டத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகமாக உள்ளது

6. பரிசு

விடை : விளையாட்டடில் வெற்றி பெற்றவரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது

V. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடரமைக்க.

1. பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.

விடை : பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

2. பறவை அழகான புறா

விடை : புறா அழகான பறவை

3. தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்

விடை : தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது

4. போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த

விடை : உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்