1. கோடிட்ட இடங்களில் > அல்லது < அல்லது = குறியீடுகளைக் கொண்டு நிரப்புக.
(i) 48792 _____ 48972
விடை: 48792 < 48972
(ii) 1248654 _____ 1246854
விடை: 1248654 > 1246854
(iii) 658794 _____ 658794
விடை: 658794 = 658794
2. சரியா, தவறா எனக் கூறுக.
(i) மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.
விடை: தவறு
(ii) 8, 6, 0, 9 என்ற எண்களை ஒரே ஒரு முறை மட்டும் யன்படுத்திக் கிடைக்கப்பெறும் மிகப் பெரிய 4 இலக்க எண் 9086 ஆகும்.
விடை: தவறு
(iii) நான்கு இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை 9000
விடை: சரி
3. 1386787215, 137698890, 86720560 என்ற எண்களில் எந்த எண் மிகப் பெரியது? எந்த எண் மிகச் சிறியது?
மிகப்பெரிய எண் = 1386787215
மிகச்சிறிய எண் = 86720560
4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக.
128435, 10835, 21354, 6348, 25840
விடை: 128435 > 25840 > 21354 > 10835 > 6348
5. பத்து லட்சம் இடத்தில் 6 என்ற எண்ணும் பத்தாயிரம் இடத்தில் 9 என்ற எண்ணும் உள்ளவாறு ஏதேனும் ஓர் எட்டு இலக்க எண்ணை எழுதுக.
| கோடி | பத்து இலட்சம் | இலட்சம் | பத்தாயிரம் |
| 0 | 6 | 0 | 9 |
| ஆயிரம் | நூறு | பத்து | ஒன்று |
| 0 | 0 | 0 | 0 |
6. இராஜன் 4, 7 மற்றும் 9 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி 3 இலக்க எண்களை எழுதுகிறான். எத்தனை எண்களை அவனால் எழுத முடியும்?
நூறாவது இடத்தில் 4 எண்ணை பயன்படுத்தி 479, 497 என இரு எண்களை எழுதலாம்.
நூறாவது இடத்தில் 7 எண்ணை பயன்படுத்தி 794, 749 என இரு எண்களை எழுதலாம்.
நூறாவது இடத்தில் 9 எண்ணை பயன்படுத்தி 947, 974 என இரு எண்களை எழுதலாம்.
ராஜன் 479, 497, 794, 749, 947, 974 என 6 எண்களை எழுதலாம்
7. என்னுடைய பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் 9, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் காண்க.
9, 4, 6 மற்றும் 8 ஆகியன கொடுக்கப்பட்ட இலக்க எண்கள் இதில் கிடைக்கப்பெற்ற மிகச்சிறிய எண் 4689. இது இரட்டைப்படை எண்ணான 4698 இருக்கலாம்.
எனவே எனது கடவுச்சொல் 4698
8. அஞ்சலகக் குறியீட்டு எண் 6 இலக்கங்களைக் கொண்டது. இதன் முதல் 3 இலக்க எண்கள் 6,3 மற்றும் 1 ஆகும். மேலும் 0, 3 மற்றும் 6 என்ற மூன்று இலக்கங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய அஞ்சலகக் குறியீட்டு எண்களை அமைக்க.
அஞ்சல் குறியீட்டு எண்ணில் முதல் மூன்று இலக்கங்கள் 6, 3, 1 எனில்
- மிகப்பெரிய அஞ்சல் குறியீட்டு எண் = 631603
- மிகச்சிறிய அஞ்சல் குறியீட்டு எண் = 631036
9. தமிழ்நாட்டிலுள்ள மலைகளின் உயரங்கள் (மீட்டரில்) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
| வ. எண் | மலைகள் | உயரம் (மீட்டரில்) |
| 1 | தொட்டபெட்டா | 2637 |
| 2 | மகேந்திரகிரி | 1647 |
| 3 | ஆனைமுடி | 2695 |
| 4 | வெள்ளியங்கிரி | 1778 |
(i) மேற்கண்ட மலைகளில் உயரமான மலை எது?
விடை: ஆனைமுடி
(ii) உயரத்தைக் கொண்டு மலைகளின் பெயர்களை மிகப் பெரியதிலிருந்து சிறியது வரை வரிசைப்படுத்தி எழுதவும்.
விடை: ஆனைமுடி > தொட்டபெட்டா > வெள்ளியங்கிரி > மகேந்திரகிரி
2695 m > 2637 m > 1778 m > 1647 m
(iii) ஆனைமுடி மற்றும் மகேந்திரகிரி ஆகிய மலைகளின் உயரங்களின் வேறுபாடு என்ன?
ஆனைமுடி மலையின் உயரம் = 2695 மீ
மகேந்திரகிரி மலையின் உயரம் = 1647 மீ
ஆனைமுடிக்கும் மகேந்திரகிரிக்கும் இடையிலான வேறுபாடு 2695 மீ – 1647 மீ = 1048 மீ
விடை: 2695 மீ – 1647 மீ = 1048மீ
புறவய வினாக்கள்
10. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?
- 1468, 1486, 1484
- 2345, 2435, 2235
- 134205, 134208, 154203
- 383553, 383548, 383642
விடை: 134205, 134208, 154203
11. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள். இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?
- 1489000 மற்றும் 1492540
- 1489000 மற்றும் 1490540
- 1490000 மற்றும் 1490100
- 1480000 மற்றும் 1490000
விடை: 1489000 மற்றும் 1490540
12. இந்திய நாளிதழ் படிப்பவர்கள் கணக்கீட்டின்படி, 2018இல் விற்ற நாளிதழ்களின் எண்ணிக்கையைக் காட்டும் அட்டவணை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் விடுபட்ட எண் என்னவாக இருக்கும்?
| நாளிதழின் பெயர் | தரம் | விற்பனை (இலட்சத்தில்) |
| A | 1 | 70 |
| B | 2 | 50 |
| C | 3 | ? |
| D | 4 | 10 |
- 8
- 52
- 77
- 26
விடை: 26