
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) மிகச் சிறிய இயல் எண்ணிற்கும் மிகச் சிறிய முழு எண்ணிற்கும் இடையே உள்ள வித்தியாசம் __________.
விடை: 1
(ii) 17 × __________ = 34 × 17
விடை: 34
(iii) ஓர் எண்ணுடன் __________ஐக் கூட்டும்போது, அந்த எண் மாறாமல் இருக்கும்.
விடை: 0
(iv) __________ ஆல் வகுப்பது என்பது வரையறுக்கப்படவில்லை.
விடை: 0
(v) ஓர் எண்ணை __________ ஆல் பெருக்கும்போது அந்த எண் மாறாமல் இருக்கும்.
விடை: 1
2. சரியா தவறா எனக் கூறுக.
(i) முழு எண்களின் பெருக்கல் சமனி பூச்சியம் ஆகும்.
விடை: தவறு
(ii) இரு முழு எண்களின் கூடுதல் அதன் பெருக்குத் தொகையை விடக் குறைவானதாக இருக்கும்.
விடை: தவறு
(iii) முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை சேர்ப்புப் பண்புடையவை.
விடை: சரி
(iv) முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை பரிமாற்றுப் பண்புடையவை.
விடை: சரி
(v) முழு எண்களில் கூட்டலின் மீதான பெருக்கல் பங்கீட்டுப் பண்புடையது.
விடை: சரி
3. கீழ்க்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
(i) 75 + 34 = 34 + 75
விடை: கூட்டலின் பரிமாற்றுப் பண்பு
(ii) (12 × 4) × 8 = 12 × (4 × 8)
விடை: பெருக்கலின் சேர்ப்புப்பண்பு
(iii) 50 + 0 = 50
விடை: 0 கூட்டல் சமனி
(iv) 50 × 1 = 50
விடை: 1 பெருக்கல் சமனி
(v) 50 × 42 = 50 × 40 + 50 × 2
விடை: இது கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீடு
= 50 x 42
= 50 x (40 + 2)
= 50 x 40 + 50 x 2
4. முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
(i) 50 × 102
கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீடு
= 50 x (100+2)
= ( 50 x 100 ) + ( 50 x 2 )
= 5000
விடை: 5000
(ii) 500 × 689 − 500 × 89
கழித்தலின் மீதான பெருக்கலின் பங்கீடு
= 500 x (689 – 89)
= 500 x (600)
= 300
விடை: 300
(iii) 4 × 132 × 25
(4 × 132) × 25 = (132 × 4) × 25 (பெருக்கலின் பரிமாற்றுப் பண்பு)
= 132 × (4 × 25) (பெருக்கலின் சேர்ப்புப்ப் பண்பு)
= 132 × 100
= 13200
விடை: 13200
(iv) 196 + 34 + 104
(196+34) + 104 = (34 + 196)+ 104 (கூட்டலின் பரிமாற்றுப் பண்பு)
= 34 + (196 + 104) (கூட்டலின் சேர்ப்புப்ப் பண்பு)
= 34 + 300
= 334
விடை: 334
புறவய வினாக்கள்
5. (53 + 49) × 0 என்பது
- 102
- 0
- 1
- 53 + 49 × 0
விடை: 0
காரணம்: பூஜ்ஜியத்துடன் எதைப் பெருக்கினாலும் பூஜ்ஜியமே
6. 59/1 என்பது
- 1
- 0
- 1/59
- 59
விடை: 59
7. ஒரு பூச்சியமற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரியின் பெருக்குத் தொகை எப்போதும்
- ஓர் இரட்டை எண்
- ஓர் ஒற்றை எண்
- பூச்சியம்
- இவற்றுள் ஏதுமில்லை
விடை: ஓர் இரட்டை எண்
8. முன்னி இல்லாத ஒரு முழு எண்
- 10
- 0
- 1
- இவற்றுள் ஏதுமில்லை
விடை: 0
9. பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?
- 2 × 0
- 0 + 0
- 2 + 0
- 0 – 0
விடை: 2 + 0
10. பின்வருவனவற்றுள் எது உண்மை அல்ல?
- (4237 + 5498) + 3439 = 4237 + (5498 + 3439)
- (4237 × 5498) × 3439 = 4237 × (5498 × 3439)
- 4237 + 5498 × 3439 = (4237 + 5498) × 3439
- 4237 × (5498 + 3439) = (4237 × 5498) + (4237 × 3439)
விடை: 4237 + 5498 × 3439 = (4237 + 5498) × 3439