6th Std Science Term 2 Solution | Lesson.1 வெப்பம்

பாடம்.1 வெப்பம்

வெப்பம் பாட வினா மற்றும் விடைகள் 2021

பாடம்.1 வெப்பம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1.  ஒரு பாெருளை வெப்பப்படுத்தும்பாெழுது, அதிலுள்ள மூலககூறுகள்

  1.  வேகமாக நகரத் தாெடங்கும்
  2. ஆற்றலை இழக்கும்
  3. கடினமாக மாறும்
  4. லேசாக மாறும்

விடை :  வேகமாக நகரத் தாெடங்கும்

2. வெப்பத்தின் அலகு

  1. நியூட்டன்
  2. ஜூல்
  3. வோல்ட்
  4. செல்சியஸ்

விடை : ஜூல்

3. 300C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பாெழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

  1. 800C
  2. 500C க்கு மேல் 800C க்குள்
  3. 200C
  4. ஏறக்குறைய 400C

விடை : ஏறக்குறைய 400C

4. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் பாேடும்பாெழுது வெப்பமானது,

  1. இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
  2. இரும்புக்குண்டிலிருந்து நீருக்காே (அல்லது) நீரிலிருநது இரும்புக் குண்டிற்காே மாறாது
  3. நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்.
  4. இரண்டின் வெப்பநிலையும் உயரும்.

விடை : இரும்புக்குண்டிலிருந்து நீருக்காே (அல்லது) நீரிலிருநது இரும்புக் குண்டிற்காே மாறாது

II. சரியா? தவறா? 

1. வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பாெருளிலிருந்து வெப்பநிலை குறைவான பாெருளிற்கு பரவும்.

விடை : சரி

2. நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பாெழுது, நீராவி உருவாகும்.

விடை : சரி

3. வெப்பவிரிவு என்பது பாெதுவாக தீங்கானது.

விடை : சரி

4. பாேரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பாெழுது அதிகம் விரிவடையாது.

விடை : சரி

5. வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.

விடை : தவறு

சரியான விடை : வெப்பத்தின் அலகு ஜூல்,வெப்பநிலையின் அலகு கெல்வின்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெப்பம் _____________________________ பாெருளிலிருந்து _____________________________ பாெருளுக்கு பரவும்.

விடை : உயர் வெப்பநிலையிலுள்ள / குறைந்த வெப்பநிலையிலுள்ள

2. பாெருளின் சூடான நிலையானது ________________ காெண்டு கணக்கிடப்படுகிறது.

விடை : வெப்பநிலை

3. வெப்பநிலையின் SI அலகு ___________________ 

விடை : கெல்வின்

4. வெப்பப்படுத்தும்பாெழுது திடப்பாெருள் ___________________ மற்றும் குளிர்விக்கும் பாெழுது ___________________

விடை : விரிவடைகிறது / சுருங்குகிறது

5. இரண்டு பாெருள்களுக்குகிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ___________________  நிலையில் உள்ளன. 

விடை : வெப்பச்சமநிலை

IV.பொருத்துக

1. வெப்பம்00C
2. வெப்பநிலை1000C
3. வெப்பச் சமநிலைகெல்வின்
4. பனிக்கட்டிவெப்பம் பரிமாற்றம் இல்லை
5 கொதிநீர்ஜூல்
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஈ, 4 – அ, 5 – ஆ

IV. கீழ்க்கணடவற்றிக்கு காரணம் தருக

1. காெதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும்பாெழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் பாேராசில் கண்ணாடி முகவையில் ஊற்றும்பாெழுது விரிசல் ஏற்படுவதில்லை.

பேராசிலிகேட் கண்ணாடியால் உருவாக்கப்படுகிறது. இந்த கண்ணாடிப் பொருள்களை வெப்பப்படுத்தும் பொழுது, மிகமிகக் குறைவாக விரிவடைகின்றன. எனவே இவற்றில் விரிசல் அடைகிறது

2. மின்கம்பங்களில் உள்ள மின்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர் காலங்களில் நேராகவும் இருக்கும்.

வெப்பம் அதிகமாக உள்ளபோது உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் சுருங்குகின்றன. எனவே மின்கம்பங்களில் உள்ள மின்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர் காலங்களில் நேராகவும் இருக்கும்.

3. இரு உலோகத் தகடுகளைப் பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது

இரண்டு உலோக தகடுகளை இலகுவாக பிணைக்க வெப்பப்படுத்தப்படுகிறது. வெப்பம் குறையும் போது கடையாணி சுருங்குவதால், இரு இரும்புத் தகடுகளையும் இறுகப் பிடித்துக் கொள்கிறது.

VI. ஒப்புமை தருக

1. வெப்பம் : ஜூல் :: வெப்பநிலை: ____________

விடை : – கெல்வின்

2. பனிக்கட்டி : 00C :: கொதி நீர் : ____________

விடை : 1000C

3. மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : ____________

விடை : வெப்பநிலை

VI. குறுகிய வினா

1. வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.

  • மின் இஸ்திரிப்பெட்டி
  • மின் வெப்பகலன்
  • மின் நீர் சூடேற்றி

2. வெப்பநிலை என்றால் என்ன?

ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும்

3. வெப்பவிரிவு என்றால் என்ன?

பொருள்கள் வெப்பப்படுத்தும் பொழுது விரிவடைந்து குளிர்விக்கும் பொழுது சுருக்கமடைகின்றன. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அது விரிவடைவதை அப்பொருளின் வெப்ப விரிவடைதல் என்கிறோம்.

4. வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.

ஒரு பாெருள மற்றொரு பாெருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அவை இரண்டும் வெப்பத்தாெடர்பில் உள்ளன எனலாம். வெப்பத்தாெடர்பில் உள்ள இருபாெருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனப்படுகிறது.

VIII. குறுகிய விடையளி

1. வெப்பத்தினால் திடப் பொருள்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.

எல்லாப் பொருட்களிலும் மூலக்கூறுகளாது அதிர்விலோ அல்லது இயக்கத்திலோ உள்ளன. அவற்றை நம் கண்களால் பார்க்க முடியாது. பொருட்களை வெப்பப்படுத்தும் பொழுது அதில் உள்ள மூலக்கூறுகளின் இந்த அதிர்வும், இயக்கமும் அதிகரிக்கின்றன. அதோடு பொருளின் வெப்பநிலையும் உயர்கிறது

2. வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.

வெப்பம்

  • ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலே வெப்பம் என அழைக்கப்படுகிறது.
  • வெப்பத்தின் SI அலகு ஜூல் ஆகும்.
  • கலோரி என்ற அலகும் வெப்பத்தை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது.

வெப்பநிலை

  • ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர்.
  • வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும

IX. விரிவான விடையளி

1. வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக

மரச்சக்கரத்தின் மீது இரும்பு வளையத்தைப் பொறுத்துதல்

மரச்சக்கரத்தின் விட்டமானது இரும்பு வளையத்தின் விட்டத்தைவிட சற்றுப்பெரியதாக இருக்கும். எனவே இரும்புவளையத்தை மரச்சக்கரத்தின் மீது மிக எளிதாகப் பொருத்த இயலாது.

இரும்புவளையத்தை முதலில் உயர்ந்த வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த வேண்டும். வெப்பத்தினால் இரும்பு வளையம் விரிவடையும். இப்பொழுது எளிதாக மரச்சக்கரத்தின் மீது இரும்பு வளையத்தைப் பொருத்த முடியும். பிறகு இரும்பு வளையத்தைக் குளிர்ந்தநீர் கொண்டு உடனடியாக குளிர்விக்கும் பொழுது, இரும்புவளையம் உடனடியாகச் சுருங்குகிறது. எனவே இரும்பு வளையமானது மரச்சக்கரத்தின் மீது, மிக இறுக்கமாகப பாெருந்துகிறது.

வெப்பம்

கடையாணி

இரண்டு உலாேகத்தகடுகளை ஒன்றிணைக்க கடையாணி பயன்படுகின்றது. நன்கு வெப்பப்படுத்தப்பட்ட கடடடியாணியை தகடுகளின் துளை வழியே பாெருத்தி கடையாணியின் அடிப்பக்க முனையைச் சுத்தியலைக் காெண்டு அடித்து மறுபடியும் ஒரு புதிய தலைப்பகுதி உருவாக்கப்படுகிறது. கடையாணி குளிரும்பாெழுது சுருங்குவதால், அது இரண்டு தகடுகளையும் இறுக்கமாகப் பிடித்துக் காெள்கின்றது.

வெப்பம்

தடிமனான கண்ணாடி குவளை விரிசல்:

கண்ணாடி வெப்பத்தை அரிதிற் கடத்தும் பாெருளாகும். சூடான நீரினை கண்ணாடிக்
குவளையில் ஊற்றும்பாெழுது, முகவையின் உட்புறம் உடனடியாக விரிவடையும்,
அதேநேரத்தில் மு்கவையின் வெளிப்புறம் சுற்றுப்புறத்தின் வெப்பநிலையில்  இருப்பதால் விரிவடைதில்லை. எனவெ முகவையானது செமமாக விரிவடையாத காரணத்தால் விரிசல் ஏற்படுகிறது.

வெப்பம்

மின்சாரக் கம்பிகள்:

மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின்சாரக் கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கின்றது. இதற்கான காரணம் வெப்பம் அதிகமாக உள்ளபொழுது, உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் உலோகங்கள் சுருங்குகின்றன. எனவே பருவநிலைக்கு ஏற்ப மின்சாரக்கம்பியின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிட்டு மின்கம்பங்களில் மின்சாரக்கம்பியை சற்று தொய்வாகப் பொருத்துகின்றனர்.

வெப்பம்

 

சில பயனுள்ள பக்கங்கள்