6th Std Science Term 2 Solution | Lesson.7 கணினியின் பாகங்கள்

பாடம்.7 கணினியின் பாகங்கள்

கணினியின் பாகங்கள் பாட விடைகள் 2021 - 2022

பாடம்.7 கணினியின் பாகங்கள்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. உளளீட்டுக்கருவி அல்லாதது எது?

  1. சுட்டி
  2. விசைப்பலகை
  3. ஒலிப்பெருக்கி
  4. விரலி

விடை : ஒலிப்பெருக்கி

2. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

  1. ஈதர்வலை (Ethernet)
  2. வி.ஜி.ஏ. (VGA)
  3. எச்.டி.எம்.ஐ. (HDMI)
  4. யு.எஸ்.பி. (USB)

விடை : வி.ஜி.ஏ. (VGA)

3. கீழ்வருனற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?

  1. ஒலிப்பெருக்கி
  2. சுட்டி
  3. திரையகம்
  4. அச்சுப்பாெறி

விடை : சுட்டி

4. கீழ்வருவனற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சார்ந்தது எது? 

  1. ஊடலை
  2. மின்னலை
  3. வி.ஜி.ஏ
  4. யு. எஸ்.பி

விடை : ஊடலை

5. விரலி ____________ ஆக பயன்படுகிறது. 

  1. வெளியீட்டுக்கருவி
  2. உள்ளீட்டுக்கருவி
  3. சேமிப்புக்கருவி
  4. இணைப்புக்கருவி

விடை : சேமிப்புக்கருவி

II. பொருத்துக

1. காணொளிப் பட வரிசை (VGA)உள்ளீட்டுக்கருவி
2. அருகலைஇணைப்புவடம்
3. அச்சுப்பாெறிஎல்.இ.டி. (LED) தொலைக்காட்சி
4. விசைப்பலகைகம்பி இல்லா இணைப்பு
5. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)வெளியீட்டுக்கருவி
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – இ

III. மிகக் குறுகிய விடையளி

1. கணினியின் கூறுகள் யாவை?

  1. உள்ளீட்டகம் (Input Unit)
  2. மையச்செயலகம் (CPU)
  3. வெளியீட்டகம் (Output Unit)

மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகளை உடையது. சில குருத்தெலும்புகள், இணைப்பு இழைகள், தசை நார்கள் ஆகியவைற்றையும் எலும்பு மண்டலம் உள்ளடக்கியுள்ளது. இணைப்பு இழைகள் எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கின்றன. தசைநார்கள் எலும்புகளை தசைகளுடன் இணைக்கின்றன.

எலும்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

  • அச்சுச் சட்டகம்
  • இணையுறுப்புச் சட்டகம்.

2. உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

உள்ளீட்டகம் (Input Unit)

  • கணினிச் செயலாக்கத்துக்குத் தரவுகளையும் கட்டளைகளையும் உள்ளீடு செய்வதே உளளீட்டகம் (input Unit) அவ்வாறு தரவுகளை உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையே உளளீட்டுக்கருவிகள என்றழைக்கிறோம்.
  • விசைப்பலகை, சுட்டி, வருடி, பட்டைக் குறியீடு படிப்பான், ஒலிவாங்கி, இணைப்பு படக்கருவி, ஒளிபேனா போன்றவைதான் உளளீட்டுக்கருவிகள்.

வெளியீட்டகம் (Output Unit)

  • மையச் செயலகத்திலிருந்து ஈரடிமானக் குறிப்புகள் (Binary signals) பெறப்படுகின்றன. இக்குறிபபுகளைக் கணினியானது பயனருக்குக் கொண்டு செல்ல, வெளியீட்டகம் பயன்படுகின்றது.
  • கணினித்திரை, அச்சுப்பொறி, ஒலிப்பெருக்கி, வரைவி போன்றவை வெளியீட்டகத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன

3.  பல்வேறு இணைப்பு வடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக

இணைப்பு வடங்களின் வகைகள்

  • காணொளிப் பட வரிசை ( VGA)
  • மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)
  • பொதுவரிசை இணைப்பு (USB)
  • தரவுக்கம்பி (Data cable)
  • ஒலி வடம் (Audio Cable)
  • மின் இணைப்புக் கம்பி (Power cord)
  • ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic cable)
  • ஈதர் வலை இணைப்புக்கம்பி (Ethernet cable)

காணொளிப் பட வரிசை ( VGA)

கணினியின் மையச் செயலகத்தைத் திரையுடன் இணைக்க பயன்படுகிறது.

பொதுவரிசை இணைப்பு (USB)

அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.

மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)

உயர் வரையறை வீடியோ, டிஜிட்டல் ஆடியோ ஆகியவற்றை ஒரே கேபிள் வழியாக எல்.இ.டி. தொலைக்காட்சிகள், ஒளிவீழ்த்தி (projector), கணினித் திரை ஆகியவற்றை கணினியுடன் இணைக்க HDMI பயன்படுகிறது.

தரவுக்கம்பி

(Data cable) கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க, தரவுக் கம்பி பயன்படுகிறது.

ஒலி வடம் (Audio cable)

கணினியை ஒலிபெருக்கியுடன் இணைக்க ஒலி வடம் பயன்படுகிறது.

மின் இணைப்புவடம் (Power Cord)

மையச்செயலகம், கணினித்திரை, ஒலி பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.

ஒலி வாங்கி (Mic)

ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு ஒலி வாங்கி இணைப்புவடம் உதவுகிறது.

 

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்