6th Std Science Term 3 Solution | Lesson.5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

பாடம்.5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட விடைகள் 2021

பாடம்.5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

  1. வாத்து
  2. கிளி
  3. ஓசனிச்சிட்டு
  4. புறா

விடை : ஓசனிச்சிட்டு

2. இயற்கையான கொசு விரட்டி

  1. ஜாதிக்காய்
  2. மூங்கல்
  3. இஞ்சி
  4. வேம்பு

விடை : வேம்பு

3. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

  1. உருளைக்கிழங்கு
  2. கேரட்
  3. முள்ளங்கி
  4. டர்னிப்

விடை : உருளைக்கிழங்கு

4. பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?

  1. நெல்லி
  2. துளசி
  3. மஞ்சள்
  4. சோற்றுக் கற்றாழை

விடை : நெல்லி

5. இந்தியாவின் தேசிய மரம் எது?

  1. வேப்பமரம்
  2. பலா மரம்
  3. ஆலமரம்
  4. மாமரம்

விடை : ஆலமரம்

II. சரியா? தவறா? 

1. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப் படுகின்றன.

விடை : தவறு

சரியான விடை : அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரங்கள் என அழைக்கப் படுகின்றன.

2. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.

விடை : சரி

3. அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

விடை : தவறு

சரியான விடை : காய்கறி தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

4. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

விடை : தவறு

சரியான விடை : கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றது.

5. கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.

விடை : தவறு

சரியான விடை : காட்டாமணக்கு தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ______________ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாப்படுகிறது.

விடை : 16

2.  ______________ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்

விடை : பருத்தி

3.  நான் தமிழ்நாட்டின் மாநில மரம். நான் யார்? __________________

விடை : பனைமரம்

4. ________________ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

விடை : துளசி

5.அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக் கூடிய விதைகள் ___________ எனப்படுகின்றன.

விடை : பருப்புகள்

IV.பொருத்துக

1. நார்தரும் தாவரம்கிருமி நாசினி
2. வன்கட்டைநறுமணப் பொருள்
3. வேம்புசணல்
4. ஏலக்காய்தானியம்
5. கம்புதேக்கு
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

V. ஒப்பிடுக

1. மாம்பழம் : கனி : : மக்காச்சோளம் : ______________?

விடை : தானியம்

2. தென்னை : நார் : : ரோஜா : ______________?

விடை :  மலர்

3. தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் : : மண்புழு : ______________?

விடை :  உரம் உற்பத்தியாளர்

VI. மிகக் குறுகிய விடையளி

1. உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?

மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாகத் தாவரங்கள் விளங்குகின்றன. நமக்கு உணவு தரும் தாவரங்களை நாம் உணவுத் தாவரங்கள் என்கிறோம்.

2. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

நம்மைச் சுற்றிக் காணப்படும் தாவரங்களில் சில தாவரங்கள் நமது நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. இவற்றினை நாம் மருத்துவத் தாவரங்கள் என அழைக்கிறோம்.

3. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?

வன்கட்டைகள்

  • நிலவாழ் பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் மிகப் பெரும் பிரிவினைச் சார்ந்த தாவரங்களிலிருந்து வன்கட்டைகள் பெறப்படுகின்றன.
  • உயர்தர மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் மரக்கட்டுமானங்கள் வன்கட்டையினைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன.
  • (எ.கா) தேக்கு, பலா

மென்கட்டைகள்

  • இவை பொதுவாகப் பூவாத்தாவரங்களான ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன. ஒரு சில ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களும் மென்கட்டைகளைத் தருகின்றன.
  • இவை பொதுவாக ஒட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • (எ.கா) கடம்பு, பைன்

4. நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?

நறுமணப் பொருள்கள் உணவிற்கு சுவையூட்டவும், நிறமூட்டியாகவும், உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும் பயன்படுகின்றன.

5. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  • வேம்பு
  • கற்றாழை
  • துளசி

6. மரக்கட்டைகளின் பயன்கள் யாவை?

  • வீடு கட்டுவதற்கும், மரப்பொருள்கள் தயாரிப்பதற்குமான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன.
  • மரக்கட்டைகளின் நீடித்தத்தன்மை, அழகு மற்றும் வெப்பத்தினைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு நாம் மரக்கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்.

VII. குறுகிய விடையளி

1. அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக?

  • அழகியல் காரணங்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்படுகின்றன.
  • மலர் தரும் தாவரங்களை வளர்க்கும் மலர்வளர்ப்பு தோட்டக்கலையின் முக்கியப் பிரிவாக இருக்கிறது.

எ.கா

  • மல்லிகை
  • ரோஜா
  • செவ்வந்தி
  • கார்னேஷன்
  • ஜெர்பரா.

2. வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக?

வேம்பின் மரப்பட்டை, இலை, மற்றும் விதைகள் கிருமி நாசினியாகவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

3. எவையேனும் ஐந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

நாம் தாவரத்தின் பல்வேறு பாகங்களில் இருந்து காய்கறிகளைப் பெறுகிறோம்.

வேர்கள்

  • பீட்ரூட்
  • கேரட்

இலைகள்

  • கீரைகள்,
  • முட்டைக்கோஸ்
  • கறிவேப்பிலை.

தண்டுகள்

  • கரும்பு
  • உருளைக்கிழங்கு
  • கருணைக்கிழங்கு.

மலர்கள்

  • வாழைப்பூ
  • காலிபிளவர்.

கனிகள்

  • நெல்லி,
  • கொய்யா

VIII. விரிவான விடையளி

1. மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.

  • வீடு கட்டுவதற்கும், மரப்பொருள்கள் தயாரிப்பதற்குமான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன.
  • மரக்கட்டைகளின் நீடித்தத்தன்மை, அழகு மற்றும் வெப்பத்தினைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு நாம் மரக்கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்.

அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட விடைகள் 2021

வணிகரீதியாகப் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன

வன்கட்டைகள்

  • நிலவாழ் பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் மிகப் பெரும் பிரிவினைச் சார்ந்த தாவரங்களிலிருந்து வன்கட்டைகள் பெறப்படுகின்றன.
  • உயர்தர மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் மரக்கட்டுமானங்கள் வன்கட்டையினைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன.
  • (எ.கா) தேக்கு, பலா

மென்கட்டைகள்

  • இவை பொதுவாகப் பூவாத்தாவரங்களான ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன. ஒரு சில ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களும் மென்கட்டைகளைத் தருகின்றன.
  • இவை பொதுவாக ஒட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • (எ.கா) கடம்பு, பைன்

2. விலங்கு- தாவர இடைவினையின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக

விலங்கு – தாவர இடைவினைகள்

விலங்குகள் தனது உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்குத் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்த தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றித் தாவரங்களும் பயனடைகின்றன. இத்தகைய தொடர்பு பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

உதாரணமாகப் பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக எடுத்துக்கொண்டு மல்பெரி தாவரத்தில் வசிக்கின்றன. ஒரு புழுவிற்கும் தாவரத்திற்குமான இந்தத் தொடர்பு பொருளாதார ரீதியில் நமக்குப் பட்டு உற்பத்திக்குப் பயன்படுகின்றது.

அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட விடைகள் 2021

தாவரங்களின் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு விலங்குகள், பூச்சிகள், மற்றும் பறவைகளின் பங்கு மிக அவசியமாகும்.

மலர்களின் பிரகாசமான வண்ணங்கள், மணம் மற்றும் தேன் ஆகியவை பூச்சிகளை ஈர்க்கின்றன. ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு இப்பூச்சிகள் செல்லும்போது தங்கள் உடலில் ஒட்டியுள்ள மகரந்தத்தூள்களை விட்டுவிட்டுச் செல்கின்றன. இதனால் மகரந்தச்சேர்க்கை நடைபெற்றுக் காய்கறிகள் மற்றும் பழங்கள் உருவாகின்றன.

அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட விடைகள் 2021

சிறந்த விளைச்சலைப் பெற இத்தகைய அயல் மகரந்தச்சேர்க்கைச் செய்யும் பூச்சிகளையும், பறவைகளையும் பாதுகாத்தல் அவசியமாகும்.

தேனீக்கள் அயல்மகரந்தச்சேர்க்கைக்கு உதவுவதோடு, தேனையும் நமக்கு அளிக்கின்றன.

அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட விடைகள் 2021

கடலில் பவளப்பாறைகளில் வாழும் பாசிகளும் தாவரங்களும் பெரும்பான்மையான மீன்களின் உணவாக இருக்கின்றன. அப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் சிறப்பாக நடைபெறுகின்றது.

அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட விடைகள் 2021

பல்வேறு தாவரங்களின் விதைகள் பரவ விலங்குகளும் பறவைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. பறவைகளின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்கள் விதைகளின் மேலுறையை மிருதுவாக்கி அவைகளை எளிதாக முளைக்கத் தகுந்ததாக மாற்றுகின்றன.

விலங்குகளுக்கும் தாவரங்களுக்குமான இத்தகைய இயற்கையான தொடர்புகள் பாதிப்படையும்போது பொருளாதாரரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்