பாடம்.2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

பாடம்.2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
கலைச்சொற்கள்
- கால இயந்திரம் – Time machine
- பரிணாம வளர்ச்சி – Evolution
- இரை பிடித்துண்ணி – Predator
- காலடிச் சுவடு – Foot prints
- பதப்படுத்தப்பட்ட விலங்கின் தோல் – Hides
- ஒரு மில்லியன் (10 இலட்சம்) – Million
- நாடோடி – Nomad
- பண்டமாற்று முறை – Barter
- இரை – Prey
சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பரிணாமத்தின் வழிமுறை _________
- நேரடியானது
- மறைமுகமானது
- படிப்படியான
- விரைவானது
விடை : நேரடியானது
2. தான்சானியா _________கண்டத்தில் உள்ளது.
- ஆசியா
- ஆப்பிரிக்கா
- அமெரிக்கா
- ஐரோப்பா
விடை : ஆப்பிரிக்கா
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம் : தட்பவெப்பநிலை மாற்றமே
- கூற்று சரி
- கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது
- கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
2. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் – இரு கால்களால் நடப்பது
- ஹேமோ ஹபிலிஸ் – நிமிர்ந்து நின்ற மனிதன்
- ஹேமோ எரல்டஸ் – சிந்திக்கும் மனிதன்
- ஹேமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.
விடை : b, c மற்றும் d
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்ககால மனிதர்களின் காலடித்தடங்களை _________ உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.
விடை: மானிடயியலாளர்கள்
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _________ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை: நாடோடி
3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _________ மற்றும் _________ ஆகும்.
விடை: வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்
4. _________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது
விடை: (ஏர்) கலப்பை
5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _________ என்னுமிடத்தில் காணப்படுகின்றன
விடை: பொரிவரை – கரிக்கையூர்
6. _________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது.
விடை: சக்கரம்
7. _________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது.
விடை: மானிடவியல்
8. நகரங்களும் பெரு நகரங்களும் _________ ஆகியவற்றால் தோன்றின.
விடை: வர்த்தகம் மற்றும் வணிகம்
சரியா? தவறா?
1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
விடை: தவறு
2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
விடை: சரி
3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
விடை: சரி
4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
விடை: சரி
ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும்
1. அகழாய்வில் கிடைக்கும் பாெருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
ரேடியாே கார்பன் முறை
2. தாெடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள்?
- இலைகள்
- தாேல்
- மரப்பட்டை
3. தாெடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
குகைகள்
4. நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
காளை
5. மனிதர்கள் எப்பாேது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
வேளாண்மையை அறிந்த பின்னர்
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி
1. பரிணாமம் என்றால் என்ன?
இயற்கையில் ஏதேனும் ஒரு திடீர் மாற்றம் ஏற்படும் பாேது, உயிரினங்கள் அந்த மாற்றத்திற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் காெண்டு, உயிர் பிழைக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் காலத்திற்கு ஏற்றவாறு பல மில்லியன் ஆண்டுகளாகத் தங்களைத் தகவமைத்துக் காெண்டு வளர்ச்சி அடைவதே ‘பரிணாமம’ எனப்படுகிறது
2. ஹோமாே சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுது.
ஹோமாே சேப்பியன்ஸ் என்ற மனித இனத்தவர் வேட்டையாடுவதிலும் உணவு சேகரிப்பதிலும் திறமை பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் மிகவும் கரடுமுரடான கற்கருவிகளை பயன்படுத்தினர்.
3. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
நமது மூதாதையர்கள் சிறு குழுக்களாக குகைகளில் வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் உணவு தேடுதலுக்காக இடம் பெயர்ந்து காெண்டிருந்தனர்.
4. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக்க கூறுவும்.
பழங்காலத்தில் வேட்டையாடுதல்தான் பிரதான தாெழிலாக இருத்தது. பெரிய விலங்குகளை கற்கள் மற்றும் கம்புகள் காெண்டு வீழ்த்துவது மிக கடினமாக இருந்தது. ஆதலால் நாளடைவில் மனிதர்கள் வேட்டைக் கருவிகளை நன்கு கூர்மையாக்கத் தாெடங்கினர்.
5. காேடாரிகள் ஏன் உருவாக்கப்பட்டனர்?
காேடாரிகள் மரங்களை வெட்டுவதற்கும், பள்ளங்கள் தாேண்டுவதற்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்கும் தாேலை அகற்றுவதற்கும் உருவாக்கப்பட்டன.
6. தாெல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
தாெல்லியல் என்பது வரலாற்றுக்கு முந்தய மனிதர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாெருட்களைப் பற்றிய அகழ் பாெருட்களின் ஆய்வே ஆகும்.
7. மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன?
மனிதர்களையும், அவர்களின் பரிணாம வளர்ச்சிசையும் பற்றிப் படிப்பது மானுடவியல் ஆகும். மானுடவியல் ஆய்வாளர்கள் மனித குலத்தின் வளர்ச்சியையும், அவர்களது நடத்தையும் ஆராய்கின்றனர்
கட்டக வினாக்கள்
| _________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது. விடை : சக்கரம் | பண்டப்பரிமாற்ற முறை என்பது _________ ஆகும் விடை : பொருட்களின் பரிமாற்றம் | தொடக்க கால மனிதர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களின் இரண்டைக் கூறு விடை : கற்கருவிகள், மரக்கிளைகள், எலும்புகள் |
| ஆயுதம் செய்வதற்கு ஏற்ற கல் எது? விடை : சிக்கி-முக்கி கல் | நகரங்களும், பெரு நகரங்களும் _________ மற்றும் _________ ஆகியவற்றால் தோன்றின விடை : வர்த்தகம் மற்றும் வணிகம் | மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எது விடை : சக்கரம் |
| பாறை ஓவியங்களில் உள்ள உருவகங்களை அடையாளம் காணவும் விடை : | தாெடக்க கால மனிதர்களின் முதன்மையான தொழில் எது? விடை : வேட்டையாடுதல் | குகை ஓவியங்கள் மூலம் நாம் என்ன அறிந்து காெள்கிறாேம்? விடை : அன்றாட நிகழ்வுகள். |
| தாெடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்? விடை : குகைகள் | _________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது விடை : அகழ்வாராய்ச்சி | தாெடக்க கால மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் இரண்டைக் குறிப்பிடு. விடை : நாய், காளை |
6th Science Book Link – Download
சில பயனுள்ள பக்கங்கள்