6th Std Social Science Term 2 Solution | Lesson.1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

பாடம் 1. வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் பாட விடைகள்

பாடம் 1. வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. ஆரியர்கள் முதலில் ________ பகுதியில் குடியமர்ந்தனர்.

  1. பஞ்சாப்
  2. கங்ககச் சமவெளியின் மத்தியப் பகுதி
  3. காஷ்மீர்
  4. வடகிழக்கு

விடை: பஞ்சாப்

2. ஆரியர்கள் ________ லிருந்து வந்தனர்

  1. சீனா
  2. வடக்கு ஆசியா
  3. மத்திய ஆசியா
  4. ஐராேப்பா

விடை: மத்திய ஆசியா

3. நம் நாட்டின் தேசியக் குறிக்காேள் வாய்மையே வெல்லும் ________ லிருந்து எடுக்கப்பட்டது.

  1. பிராமணா
  2. ஆரண்யகா
  3. வேதம்
  4. உபநிடதம்

விடை: மத்திய ஆசியா

4. வேத காலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

  1. 1/3
  2. 1/6
  3. 1/8
  4. 1/9

விடை: 1/6

கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு

1 கூற்று : வேத காலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் ற்றும் பயன்பாட்டு பாெருள் சான்றுகள் கிடைத்துள்ளன

காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

  1. கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  2. கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
  3. கூற்று சரி; காரணம் தவறு
  4. கூற்று தவறு; காரணம் சரி

விடை: கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

1 கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ராேம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன்மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் மையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

  1. கூற்று 1 தவறானது.
  2. கூற்று 2 தவறானது.
  3. இரண்டு கூற்றுகளும் சரியானவை
  4. இரண்டு கூற்றுகளும் தவறானவை

விடை: கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

3. வேத கால சமூகம் தொடர்பான கிழே காெடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?

  1. ஒரு கைம்பெண் மறுமணம் செய்து காெள்ளலாம்.
  2. குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.
  3. தந்தையின் சாெத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்.
  4. உடன்கட்டை ஏறுதல் தெரியாது.

விடை: குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பாெறுத்தமட்டில் சரியானது?

  1. கிராமா< குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
  2. குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
  3. ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
  4. ஜனா < கிராமா < குலா < ஜனா < ராஸ்டிரா

விடை: குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வேதப்பண்பாடு ___________ இயல்பைக் காெண்டிருந்தது.

விடை: ரத்த உறவு

2. வேத காலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.

விடை: பாலி

3. __________ முறையானது பண்டைய கால கல்வி கற்கும் முறையாகும்.

விடை: குருகுலக் கல்வி

4. ஆதிச்சநல்லூர் ___________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

விடை: தூத்துக்குடி

சரியா? தவறா?

1. பல இடங்களில் கிடைத்துள்ள ராேமானியத் தொல் பாெருட்கள் இந்திய-ராேமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.

விடை: தவறு

2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்

விடை: சரி

3. படைத் தளபதி ‘கிராமணி’ என அழைக்கப்பட்டார்.

விடை: தவறு

4. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும். 

விடை: சரி

5. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன

விடை: சரி

பொருத்துக

1. கீழடிசெப்புத்தகடுகள் ஓவியங்கள்
2. பொருந்தல்கொழு முனைகள்
3. கொடு மணல்சுழல் அச்சுக்கள்
4. ஆதிச்சநல்லூர்தங்க ஆபரணங்கள்
விடை : 1 – அ, 2 ஆ, 3 – இ, 4 – ஈ

ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • ரிக் வேதம்
  • யஜூர் வேதம்
  • சாம வேதம்
  • அதர்வண வேதம்

2. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?

  • குதிரைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், காளைகள், நாய்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தப்பட்டன.
  • பின் வேதகாலத்தில் ஆரியர்கள் பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை மட்டுமல்லாமல் யானைகளையும் பழக்கப்படுத்தினர்.

3. பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது கிரேக்கச் சாெல்லாகும். ‘Mega’ என்றால் பெரிய, ‘lith’ என்றால் ‘கல்’ என்று பாெருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் காெண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.

4. கற்திட்டைகள் என்பது என்ன?

இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். இவை ‘கற்திட்டைகள்’ எனப்படுகின்றன.

5. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?

முதுமக்கள் தாழிகள் என்பன இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள் ஆகும்.

6. வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக. 

வேத காலத்தில் நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.

7. தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினனவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • முதுமக்கள் தாழிகள்
  • கற்திட்டைகள்
  • நினைவுக் கற்கள்
  • நடுக்கற்கள்

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

1. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  • கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
  • பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.
  • தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • நூல் சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.

2. வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

  • ரிக் வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
  • பெண்கள் தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
  • குழந்தைத் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
  • விதவை மறுமணத்திற்கு தடை இல்லை.
  • சொத்துரிமையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
  • பின் வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.

பெருமிதமும் மகிழ்ச்சியும் உண்மைகளை நாம் கண்டறிவோம்

தொல் பொருள் ஆய்விடங்கள்தொல்லியல் கண்டுபிடிப்புகள்உண்மைகள்
ஆதிச்சநல்லூர்தமிழ்-பிராமி எழுத்துக்கள்வரலாற்றுக்கு முந்திய பண்பாடு இருந்துள்ளது
கீழடிரோமானிய தொல் பொருட்கள்இந்தோ – ரோமானிய வணிகத் தொடர்புக்கு சான்று
பையம்பள்ளிஇரும்புக் கருவிகள்இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்று
பொருந்தல்அரிசி நிரப்பப்பட்ட பானைமக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்ததற்கான சான்று
கொடுமணல்சுழல் அச்சுக்கள்நெசவுத் தொழில் நடைபெற்றதற்கான சான்று

கட்டக வினாக்கள்

இரண்டு இதிகாசங்களை குறிப்பிடவும்

விடை: ராமாயணம், மகாபாரதம்

இறந்தவர்களின் நினைவாக நடப்படும் ஒற்றைக் கல்தூணின் பெயர்

விடை: மென்ஹிர் (Menhir)

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சங்க காலத்தைத் சேர்த்த நகரத்தின் பெயர்

விடை: கீழடி

தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது இரண்டு இரும்புகால வாழ்விடங்களின் பெயர்களைக் கூறுக

விடை: ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி

தொடக்ககால ஆரியர்கள் பின்பற்றிய வேளாண்முறை

விடை:அழிநத்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண்மை

வேதகாலத்தில் உருவான இரண்டு பெரிய நகரங்களின் பெயரென்ன?

விடை: அயோத்தியா, இந்திர பிரதேஷ்

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்