6th Std Social Science Term 2 Solution | Lesson.5 தேசியச் சின்னங்கள்

பாடம்.5 தேசியச் சின்னங்கள்

தேசியச் சின்னங்கள் பாட விடைகள் - 2021

பாடம்.5 தேசியச் சின்னங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. தேசியப்பாடலான வந்தேமாதரத்தை இயற்றியவர்___________

  1. பிங்காலி வெங்கையா
  2. ரவீந்திரநாத் தாகூர்
  3. பங்கிம் சந்திர சட்டர்ஜி
  4. காந்திஜி

விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி

2. இந்தியாவின் தேசியகீதம் _______

  1. ஜன கண மன
  2. வந்தேமாதரம்
  3. அமர் சோனார் பாங்கலே
  4. நீராடுங் கடலுடுத்த

விடை : ஜன கண மன

3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்____________

  1. அக்பர்
  2. ரவீந்திரநாத் தாகூர்
  3. பங்கிம் சந்திர சட்டர்ஜி
  4. ஜவஹர்லால் நேரு

விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி

4. __________ பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்.

  1. மகாத்மா காந்தி
  2. சுபாஷ் சந்திரதபோஸ்
  3. சர்தார் வல்லபாய் பட்டேல்
  4. ஜவஹர்லால் நேரு

விடை : மகாத்மா காந்தி

5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் _________

  1. வெளிர் நீலம்
  2. கருநீலம்
  3. நீலம்
  4. பச்சை

விடை : கருநீலம்

6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது.

  1. சென்னை கோட்டை
  2. டெல்லி
  3. சாரநாத்
  4. கொல்கத்தா

விடை : சென்னை கோட்டை

7. தேசியகீதத்தை இயற்றியவர் ___________

  1. தேவேந்திரநாத் தாகூர்
  2. பாரதியார்
  3. ரவீந்திரநாத் தாகூர்
  4. பாலகங்காதர திலகர்

விடை : ரவீந்திரநாத் தாகூர்

8. தேசியகீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு __________

  1.  50 வினாடிகள்
  2. 52 நிமிடங்கள்
  3. 52 வினாடிகள்
  4. 20 வினாடிகள்

விடை : 52 வினாடிகள்

9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தமாதரம் பாடலைப் பாடியவர்_______

  1. பங்கிம் சந்திர சட்டர்ஜி
  2. ரவீந்திரநாத் தாகூர்
  3. மகாத்மா காந்தி
  4. சரோஜினி நாயுடு

விடை : சரோஜினி நாயுடு

10. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________

  1. பிரதம அமைச்சர்
  2. குடியரசுத் தலைவர்
  3. துணைக் குடியரசுத் தலைவர்
  4. அரசியல் தலைவர் எவரேனும்

விடை : பிரதம அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய தேசிய இலச்சினை ________________ -ல் உள்ள அசாேகத் தூணிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விடை : சாரநாத்

2.  இந்தியாவின் தேசியக்கனி________________.

விடை: மாம்பழம்

3. இந்தியாவின் தேசியப் பறவை ________________.

விடை: மயில்

4. இந்தியாவின் தேசியமரம் ________________

விடை: ஆலமரம்

5. 1947 விடுதலை நாளின் பாேது ஏற்றப்பட்ட கொடி ________________ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.

விடை : குடியாத்தம்

6. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ________________

விடை : பிங்காலி வெங்கையா

7.  சக ஆண்டு முறையைத் துவக்கியவர் பேரரசர் ________________

விடை: கனிஷ்கர்

8. இந்தியாவின் மிக நீளமான ஆறு ________________

விடை: கங்கை

9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் ________________

விடை: D. உதயகுமார்

10. தேசியக் கொடியில் உள்ள அசாேகச் சக்கரம் _________ ஆரங்களைக் காெண்டது.

விடை : 24

III. விடையை தேர்ந்தெடுக்கவும்

1. நான்முகச் சிங்கம் தற்பாது ________________ அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)

விடை: சாரநாத்

2. தேசியகீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ________________ (1950 / 1947)

விடை: 1950

3. ________________ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது..

(லாக்டோ பேசில்லஸ் / ரைசோபியம்)

விடை : லாக்டோ பேசில்லஸ்

IV. நிரப்புக.

1. காவி – தைரியம் ; வெள்ளை – ________________

விடை : அமைதி, தூய்மை

2. குதிரை – ஆற்றல் ; காளை – ________________

விடை : உழைப்பு

3. 1947 – விடுதலை நாள் ; 1950 – ________________

விடை : குடியரசு நாள்

V. பொருத்துக

1. ரவீந்திரநாத் தாகூர்தேசியப்பாடல்
2. பங்கிம் சந்திர சட்டர்ஜிதேசியக்கொடி
3. பிங்காலி வெங்கையாவான் இயற்பியலாளர்
4. மேக்னாத் சாகாதேசிய கீதம்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

VI. பொருத்தியபின் பொருந்தாதது எது?

  1. தேசிய ஊர்வன – புலி
  2. தேசிய நீர்வாழ் விலங்கு – லாக்டோ பசில்லஸ்
  3. தேசிய பாரம்பரிய விலங்கு – ராஜநாகம்
  4. தேசிய நுண்ணுயிரி – டால்பின்

விடை: 1. ராஜநாகம் 2. டால்பின் 3. லாக்டோ பசில்லஸ்

பொருந்தாதது: 3. தேசிய பாரம்பரிய விலங்கு – புலி

குறிப்பு : புலி தேசிய விலங்காகும். யானை தேசிய பாரம்பரிய விலங்காகும்.

VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

1.

  1. தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
  2. அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது.
  3. அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.

விடை : அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.

2.

  1. பிங்காலி வெங்கையா தேசியக் கொடிகய வடிவமைத்தார்.
  2. விடுதலை நாளில் ஏற்பப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
  3. விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.

விடை : விடுதலை நாளில் ஏற்பப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.

VIII. சொற்றொடரைத் தெரிவுசெய்

  1. ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
  2. நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
  3. அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

விடை : ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

IX. விடையளிக்கவும்:

1. தேசியக் காெடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?

  • காவி நிறம் – தைரியம், தியாகம்
  • பச்சை நிறம் – செழுமை, வளம்
  • வெள்ளை நிறம் – நேர்மை, அமைதி, தூய்மை
  • கருநீலநிறத்தில் அமைந்துள்ள அசாேகச் சக்கரம் – அறவழி, அமைதி

2. தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?

  • சாரநாத் அசாேகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஜனவரி 26, 1950இல் ஏற்றுக் காெள்ளப்பட்டது.
  • இதன் அடிப்பகுதியில் ‘சத்யதமேவ ஜெயதே எனப் பாெறிக்கப்பட்டுள்ளது. ‘வாய்மையே வெல்லும்’ என்பதே இதன் பாெருளாகும்.
  • தேசிய இலச்சினை மேல்பகுதி, அடிப்பகுதி என இரண்டு பகுதிகளைக் காெண்டது.
  • மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்காென்று பின்பக்கமாக பாெருந்தியிருக்குமாறு வட்டவடிவமான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  • நமது இலச்சினையில் மூன்று சிங்க உருவங்களை மட்டுமே காண இயலும்.
  • அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.
  • இவ்வுருவங்களுக்கிடையே தர்ம சக்கரம் அமைந்துள்ளது.

3. தேசிய கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?

‘ஜன கண மன……’ நமது தேசிய கீதமாகும். இது ஒந்தியாவின் இறையாண்மை என்னும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இப்பாடல் ரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்தகாள்ளப்பட்டது.

பாடும்பாேது பின்பற்ற வேண்டியன:

  • இக்கீதத்தை சுமார் 52 வினாடிகளில் பாட/இசைக்க வேண்டும்.
  • பாடும்பாேது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
  • பாெருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்.

4. இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்னத வரைந்து வரையறுக்கவும்.

  • இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணத்தின் பெயர் ரூபாய்.
  • 16-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெண்ணி நாணயத்துக்கு ‘ருபியா’ என்று பெயர்.
  • அதுவே ரூபாய் என்று மருவியுள்ளது.
  • ரூபாய்க்கான சின்னத்தை 2010-ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார்.

5. தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?

தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

6. தேசிய உறுதி மாெழியை எழுதியவர் யார்?

“இந்தியா எனது தாய்நாடு . . . . .” எனத் தொடங்கும் நமது தேசிய உறுதி மொழியைப் பிரதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர் தெலுங்கில் எழுதினார்.

7. தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?

தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன. இவ்வுருவங்களுக்கிடையே தர்ம சக்கரம் அமைந்துள்ளது.

8. இயற்கை தேசிய சின்னங்கள் எவை?

புலி, யானை, டால்பின், மயில், கருநாகம், ஆலமரம், மாம்பழம், கங்கை, தாமலை ஆகியவை இயற்கை தேசியச் சின்னங்களாகும்.

9. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?

தமிழ்நாட்டில் புதுக்காேட்டை மாவட்டத்தில் உள்ள விராலி மலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்